வெள்ளி, 10 அக்டோபர், 2014

bagalamugi manthiram

தொழில் விருத்திக்கு ஸ்ரீ பகளாமுகி மந்திரம்
ஓம் ஐம் ஹ்லீம்|
வியாபார விருத்திம்|
ஹ்லீம் ஐம் ஓம் ||
...
ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு முகமாக விளக்கேற்றி மேற்கு நோக்கி அமர்ந்து விளக்கின் முன்னால் மஞ்சள் பட்டுத்துணி வைத்து விளக்கிற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி 18 தடவை மஞ்சள் அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும்.பின்னர் மஞ்சள் பட்டுத்துணியில் மஞ்சளால் (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) கீழ்நோக்கிய முக்கோணம் ஒன்று வரைந்து அதனுள் ஹ்லீம் என்று எழுதி முக்கோணத்தின் மூலைகளிலும் நடுவிலும் குங்குமம் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயும் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபித்து மஞ்சள் துணியில் தேங்காயை முடிந்து கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் முதலாளி அமரும் இடத்தில் உள்ள விளக்கின் அருகில் வைக்க எதிரிகளின் தொல்லை,திருஷ்டி இவை நீங்குவதுடன் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.
வெள்ளி,செவ்வாய்,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் செம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீடு ,கடை,அலுவலகங்களில் தெளிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Sri Mahalakshmiye Varuga - Juke Box