ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில்
காணப்படுவது. பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும் எண்ணற்ற ஸ்தல
புராணங்களும் உண்டு.
இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை
நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில் ஒரு விசேஷ வழிபட்டு
மூர்த்தி இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி' என்பது அவருடைய பெயர்.
சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம்
'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து வழிபடலாம்.
இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும்
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய பலனைப் பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு நாமங்கள் இருக்கின்றன.
இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம் வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.
தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின் சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில் 'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா?
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல் செய்து
படிக்கவேண்டும்.
நாரத உவாச -
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே
தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.
ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை
முகத்தவரே!
லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்
சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!
நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்
நெற்றியில் சந்திரனை உடையவரே! கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!
த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ
இந்தப் பன்னிரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.
வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்
கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.
ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள் சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:
எட்டு கணேச பக்தர்களுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.
இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.