சனி, 11 அக்டோபர், 2014

மகிழம்பூ
மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்றும் அன்பாகாது.மென்மை அறிவு தரும்; வன்மை நம்மை அழித்துவிடும். மென்மை போற்றுதலுக் குரியது; வன்மை தூற்றுதலுக்குரியது. மென்மை மேலானது; வன்மை கீழான து. மென்மை சாந்தம் வளர்ப்பது; வன் மை அகங்காரம் வளர்ப்பது. மென்மை நம்மை வளர்ப்பது; ஆனால் வன்மை நம்மைத் தடுப்பது.
அதனால்தான் மென்மையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். மலர்களின் மென்மையில்தா ன் இறைவன் இருக்கிறான். அந்த மலரே- அந்த மலருக்குள் இருக்கு ம் இறையே நமக்கு இரையாகி, நம க்குள் இருக்கும் இறையைப் போஷிக் கிறது. இது ஒரு காலச்சக்கரம். இதில் நாம் வன்மையடைய ஒன்றுமில்லை.
மென்மைக்கு இலக்கணமான மகிழ ம்பூவில் வீற்றிருக்கும் எம் பெருமான் சிவனை வணங்கி வேண்டுவோம். நல்ல உடல்நலம் பெற, கோவை சங்கமேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரத்தினை நடமாடும் சிவனாய் பாவித்து வேண் டுவோம்.
உஷ்ணம் தணிய…
கோடை வெயிலின் கடுமையைத் தணி ப்பதில் மகிழம்பூ முன்னோடி யாயத் திக ழ்கிறது. நான்கு மகிழம்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரி லிட்டு (இரவில்) மூடி வைக்கவும். மறுநாள் காலையில் பூக்க ளை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகி வரவும். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும்.
வியர்க்குருக்கள் மறைய…
புத்தம் புதிய மகிழம்பூக்களை ஒரு கைப் பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கைய ளவு பாசிப்பயறு, மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர் த்தரைத்து உடம்பெ ல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும் தொடர்ந்து பயன்படுத்திவர அழு க்குத் தேமல் அடியோடு மறையும்.
பாலுணர்வு சக்தி மேம்பட…
மகிழம்பூ மனதை மயக்கி புத்துண ர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண் ணங்களை அறவே களைந்து நேர் மறை எண்ணங்களை அதிகப்படு த்தும். அதனால்தான் தெய்வீகத் திருத்தலங்களில் மகிழமரம் நீங் கா இடம் பெற்றுள்ளது. மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போ ட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இய க்கும் நாளமில்லா சுரப்பிக ளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல் லமை மகிழ மரத்திற்கே உண்டு.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம் ளர் நீரிலிட்டு நன்கு கொதிக்க வை த்து வடிகட்டிவிடவும். பின்னர் இத் தண்ணீருடன் பால் சேர்த்து கொதி க்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறு க்கேற்றி பாலுணர்வு சக்தியை இரு பாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம் முறையை 48 நாட்கள் தொடர்ந் து பயன்படுத்தி வர வேண்டும்.
நல்ல தூக்கம் உண்டாக…
நான்கு மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனி யா விதை (கொத்த மல்லி) ஆகியவற்றைச் சேர் த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவி ல் சாப்பிட்டு வாருங்கள். நிம்மதியான தூக்கம் உண்டாகும்.
மன பயம் விலக…
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்கா ய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தை யும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள். இதி ல் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மன பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போ ன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையா கப் பாதிக்கப்பட்டவர்கள் தொட ர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப் பரிய பலன்களைப் பெறலாம்.
கற்றாழை நாற்றம் விலக…
மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடு க்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் , சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவ ற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித்தூள் செய்து கொள்ளவும். இதனை உடம் பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றி லும் விலகிவிடும்.
தலைமுடி வளர…
மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடு த்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படு ம்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்து வரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறை யைப் பின்பற்றினால் பலன் நிச்சய ம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த் தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.
வெள்ளைப்படுதல் குணமாக…
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிரா ம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை – மாலை இரு வேளையும் அரை தேக் கர ண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப் படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புக ளில் உண்டாகும் புண் குணமாகும்.
படை, அரிப்பு தீர…
மகிழம்பூ 1/2 கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள் ளுக்குச்சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்து வர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிக ளை முழுமையாகக் குணப்படுத் தும்.
தலைவலி குணமாக…
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜா ப்பூ, ஏலக்காய், அதி மதுரம், சித்தரத்தை ஆகிய வற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இரு வேளை யும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள் பட்ட தலைவலி, தலை பாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறை பாடுக ள் தீரும்.
உடல் வலுவடைய…
மகிழம்விதை, நாயுருவி விதை ஆகியவற்றை வகைக்கு 100 கிரா ம் எடுத்து சேர்த்தரைத்துக் கொள் ளவும். இதில் அரை தேக் கரண்டிய ளவு காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டுவர உடல் வலுவடை யும். ஆண்மை சக்தி உண்டாகும்.
வெட்டைநோய் தீர…
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூமிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டி னால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும். முகப்பொலிவிழந் து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட் சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச் சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வண ங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.
மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பி ட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.