வெள்ளி, 25 நவம்பர், 2016




தன்வந்திரி போற்றி 


  1. அம்ரித கலச நாதனே போற்றி
  2. ஆயுர்வேத தலைவனே
  3. இருள் போக்கும் இனியனே
  4. ஈயும் குணம் படைத்தோனே போற்றி
  5. உடலை சீராக்கும் உத்தமனே போற்றி
  6. ஊனம் அறுப்பவனே போற்றி
  7. எல்லா உயிரும் துதிக்கும் அய்யனே
  8. ஏகாந்தம் அருளும் எந்தையே
  9. ஐந்தும் ஆனாய்
  10. ஓர் குருமருந்தாய்
  11. ஓதற்கு உகந்தாய்
  12. ஒளஷத பிரியாய்
  13. அக்கினி ஸ்வரூபனே போற்றி
  14. மருத்துவ சித்தனே போற்றி
  15. மாசறுக்கும் மலையானே போற்றி
  16. பிணி தீர்க்கும் பிடகனே
  17. அப்புவாய் நின்றநாதனே போற்றி
  18. சீந்தில் கோடி ஏந்தியவனே
  19. வாகடத்தின் நாதனே போற்றி
  20. மருந்தின் மூத்தோனே போற்றி
  21. தன்வந்த்ரியே போற்றி
  22. நாத சித்தனே போற்றி
  23. வைத்தீஸ்வரனே போற்றி
  24. நீராம்சம் கொண்ட மாலனே
  25. உயிராற்றல் பெருக்கும்
  26. அவுஷத தலைவனே
  27. பிறப்பிற்கு அதிபனே
  28. காக்கும் அதிபனே
  29. எல்லா உயிரும் வேண்டுபவன்
  30. நோய் தீர்க்கும் அமுதே
  31. பீடை போக்கும் புண்ணியன்
  32. தேவர்களை காத்தவனே
  33. முப்பின் தலைவனே
  34. பூரண குணம் அருளுபவனே
  35. வேண்டுவோர்க்கு தயாநிதியே
  36. அம்ரித பாகம் தாங்குபவனே
  37. முத்து குமரனின் அம்சமே
  38. அசுரர்களை வதைக்கும் தேவசேனனே
  39. அண்டம் காக்கும் ஆரமுதே
  40. மூலிகைகளின் மூலனே
  41. தாதுக்களை காக்கும் தாமோதரனே
  42. பாஷாணத்தின் புருஷோத்தமனே
  43. ஆரோகியத்தின் அரசனே
  44. அனவ்ரத ஆசி தருபவனே
  45. பிணி நாசம் செய்யும் நாதனே
  46. இந்திரிய குறைகள் போக்கும் இனியவனே
  47. மயக்கும் தீர்க்கும் மாயனே
  48. வேள்வி பிரியனே
  49. சர்வரோக நிவாரனே
  50. சஞ்சீவிகளின் தலைவனே
  51. புண்ணியதீர்த்தமாய் பாவம் போக்கும்
  52. சோதியில் நின்றாய் போற்றி
  53. சன்மார்க்க பிரியனே
  54. ஆயுள் நீட்டும் அருமையனே
  55. நேத்திர நோய் போக்குபவனே
  56. சூலை நோயிலிருந்த காக்கும் விருத்தமே
  57. மந்திர சுத்தியே போற்றி
  58. கைவல்யம் தரும் சித்தனே போற்றி
  59. உலோகத்தின் நாதனே போற்றி
  60. ரசவாதத்தின் மன்னனே போற்றி
  61. புஸ்டி அருளும் பூநாதனே
  62. ரசமணி கட்டும் சித்தனே
  63. வாசியின் மாயாவியே போற்றி
  64. உன்னத யந்திரமே போற்றி
  65. கர்ம நோய் அகற்றும் கந்தனே போற்றி
  66. கடும் பீடையும் விரட்டும் குருவே போற்றி
  67. மாசற்ற கொழுந்தே
  68. ஓம் ஒளிபொருந்திய உடலுடைய
  69. அஃஞானம் போக்கும் அப்பனே
  70. விண்ணோரும் போற்றும் வீரனே
  71. பலம் பல தரும் பகவானே
  72. மறைகள் போற்றும் மருத்துவனே
  73. மகத்தான உயர் மாமருந்தே
  74. என்றும் இளமையான யோகியே
  75. ஓம் சிலேத்தும நோய்கள் அழிக்கும் சின்மயனே
  76. வாத நோய் ஒழிக்கும் வாசுதேவனே
  77. மல குற்றம் தகர்த்தும் மாயனே
  78. ஓம் நித்தியமாய் காக்கும் நாதனே
  79. புத்தியை ஓங்குவிக்கும் சதுர்வேதனே
  80. அட்டையை கொண்டு அருளும் அத்தனே
  81. சங்கு தாங்கும் ஒலியின் சித்தனே
  82. சக்கிரம் ஏந்தும் ஒளியின் முத்தனே
  83. மதுமேகம் அகற்றும் மதுசூதனே
  84. இருதய இன்னல் போக்கும் ஹரியே
  85. சப்ததாது குற்றம் நீக்கும் சப்தகிரி நாதனே
  86. ஈளை ஸ்வாச குற்றம் ஒழிக்கும் நாதா
  87. சிரசு உபாதை களையும் சௌந்தராஜனே
  88. அழகிய வதனம் அருளும் கள்ளழகரே
  89. அனந்தம் அருளும் அனந்தபத்மநாதரே போற்றி
  90. குலம் காக்கும் குலசேகரனே
  91. சேய் பாக்கியம் அருளும் சந்தானகோபாலனே
  92. பவித்ரனே
  93. குணம் தரும் குணசீலனே
  94. மருந்தின் வல்லபனே
  95. திரிலோக நாதனே
  96. ஓம் ஆயுர்வேத குருபரம்பரை தலைவனே
  97. தானியங்கள் காக்கும் பதியே
  98. பசுக்களை காக்கும் அச்சுதனே
  99. நிவாரணம் தரும் நவநிதியே
  100. உறுதியான உடல்கூறுகளை தரும் ஒப்பிலியே
  101. அபயம் தரும் ஆதிகேசவனே
  102. ஆற்றல் தரும் ஆனந்த கிருஷ்ணனே போற்றி
  103. சுத்த வாகடம் தரும் சுந்தரா போற்றி
  104. புடம் போடும் சூர்யா நாராயணனே
  105. மருந்தின் பலம் கூட்டும் பாலகிருஷ்ணா
  106. சூரிய கலை நாதனே
  107. சந்திர கலை நாதனே
  108. மருதேரியின் சூட்சும மருந்தே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.