சனி, 20 டிசம்பர், 2014

Siddha Medicine of Bhrigu Guru Pooja by Agathiar thru Nandi


For the Bhrigu Guru-Pooja on 2nd January-2015 following is the Nandi on Medicine per Agasthiar Vaaku

2nd January - பிருகு குரு பூசைக்காக நந்திதேவர், அகத்தியரின் மருந்து வாக்கு அருளல். அனைவரும் வந்து மருந்தாகிய அமிர்தத்தை உட்கொள்ள அழைகின்றோம்



 


 
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான் 
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு 
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள் 
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை 
 
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா 
அழகான கமலமது திண்ணத் தொப்ப 
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல 
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு 
 
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி 
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி 
தஞ்சமென பலமளவு தூக்களவு 
 
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி 
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம் 
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம் 
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து 
 
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும் 
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே 
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம் 
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர் 
 
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும் 
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே 
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி 
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை 
 
மேலான ஓர்பகுதி நீரும் நன்று 
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண 
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா 
நிர்மலமாய் சமதர்ம நியதி படி

வெள்ளி, 17 அக்டோபர், 2014

Naadi readings on -குரு பிருகு-மகரிஷி-திருவிழா (2015)-Jan2nd   maruderi


இந்த பிருகு மகரிஷி குரு திருவிழா (2015) சித்தரிஷிகள் ஆசி

Guru Bhrigu Maharishi is an amsam of Rudhran, Perumal and Brahma. It is very rare to see a siddhaguru who is associated with all Tri-moorthy. This blogs covers on what Lord Nandidevar, Suga Brahmar, Aghora Veerabhandra, Brahma-Saraswathi and Veda Vyasar have to say about Gurumuni Bhrigu nathar and the Pooja day (Rohini of Dhanur - 2nd Jan-2015). We believe all of you will reach there on this day after seeing the messages of great sages below. 



காட்டவே ஈசனார் தன் குணத்தில்
  குருவாக அவதரிப்பார் பிருகு அம்சம்
சூட்சமாய் மன மாயை களிப்பும் நீங்கி
  சுக மளிக்க ஏகாந்த மார்கம் ஒன்றே

Thus Easunaar (Lord Shiva) with his characteristics
    Takes avatar of guru as Bhrigu Amsam
Using Sookshma helps us win  mind maya and desire
    And provide bliss with Ekantha maarga   -------- Lord Nandi


ஞானமதின் நிலை தொட்ட பிரம்ம மைந்தன்
   ஞாலமதில் தனது புகழ் பரிமளிக்க
வாணியவள் அம்சம்தாய் எழந்து அருளி
    வாகீஸ்வரி தன் மைந்தன் பொருட்டாசி 

Guru in peak of gnana is Brahma's son
   for his fame to grow with Vividness
Ascends as Saraswathi's amsam
   The Vageeswari who blesses her son (Bhrigu)   ----Brahma-Saraswathi 

வாக்கு இயம்ப பூரணமாய் மகிழ்ச்சி கொண்டு
   வேதமதின் வித்தான வம்ச மூத்தோன்
மிக்கவே கலிதர்மம் காக்க மீண்டும்
   மார்கமதை அருளிசெய்த பிதாமகன் தான்

With complete happiness I (Suga-brahma Rishi ) express my verses
  On the eldest of sages (Bhrigu) the seed of Vedha
Has come again to guard dharma of Kaliyuga
   Who shows us the-path as Pithamagan (father for paths)   -    Suga-brahma Rishi

தான் என்ற  மனம் இயற்றும் சூச்சமத்தை
தாரணியில் முன்னுணர்ந்த எண்ணம் முதலாய்
தன் சிந்தை அறிந்து அபயம் அளிக்கும்
தச பிறப்பும் அவதாரம் கொண்ட மாலோன்

The mind that builds ego and vanity
   with thoughts filled for ages and births
He (Bhrigu) blesses us with ability to deal without fear
  The ten births avatar of lord Maalan  (Thirumal)  -  Suga-brahma Rishi

மாலனின் அம்சமாய் நின்ற சோதி
   மாதவத்தோர் ஏற்றும் தீர்க்க ஞானி
கலியதில் அவலத்தை வேர் அறுக்கும்
   குருபிதாவை அந்நாளில் வணங்கி நிற்போம்

 As Maalan's Amsam one who stood as Jyothi
   Revered sages too pay obeisance to this strong Gnani (Bhrigu)
 Who in Kaliyuga removes the roots of pains and sins
   On gurupuja (2nd Jan-2015) O' father of paths we pay respects to you . - Suga-brahma Rishi     
வணங்கியே அகோரனும் வீர பத்ரன்
   வாக்கதுவே அமரத்தோர் லோகம் தன்னில்
விண்ணமில்லா நடந்ததையே சிந்தித்து ஓங்கி
   விதி தர்மம் மாறாத குருமுனி என்றார்

With respect Aghora Veerabhadharan
   verses from the planes of Heavens
recall the incidents with great deep thinking and understanding
  the Gurumuni who never deviates from Dharma  -   Aghora Veerabhadharan

குருமுனியே வேத தர்ம நியதிப்படி
   குரு தட்சணை  ஈந்தோர்க்கு வாக்கு மாறா
வருத்தங்கள் சோதனைகள் சபம் வந்தாலும்
   வாக்கு அதனை மாறாத சப்தவரிஷி தான்

Gurumuni per dharma of Vedas
  Doesn't deviate from his word after taking Guru dakshna
Regardless of pains, tests and curses he is
  The Saptharishi who doesn't go back on his words  -   Aghora Veerabhadharan


தானென்ற அகந்தைக்கும் இணக்கம் காட்டி
   தக்கனென்ற அகங்காரம் தர்க்கம் தன்னை
மேன்மையுள்ள ஈசனின் பெருமை தன்னை
   முடிவில்லா பெருவழியை காட்டி வித்தார்

Who cajoles ego and vanity initially
   With thakkan which is the pride and vanity
helped show the truth and power of Easwaran
   via which he showed endless divine-path to all  -   Aghora Veerabhadharan
  

காட்டிவித்த அருள் கருணை ரிசியுமாவார்
   குருநிமித்தம் எல்லை வந்து ஆசி ஈவார்
சூட்சமங்கள் நிறைந்ததொரு பாரதத்தை
   சுகமாக செப்பியதோர் வியாசரும் தான்

A Benign rishi who showed this path
   as guru comes to boundary to bless all  -  Aghora Veerabhadharan
(i.e.,The Aghora Veerabhadra temple of hanumantapuram is close to Bhrigu Kudil- Maruderi) 

The Mahabharata which is filled with Sookshma
   who recited it with tranquility says


தான் இயம்ப கலிமாந்தர் போற்றும் வண்ணம்
   தேசமதில் உண்டாகும் மறைப்பு ஞானம்
துன்பங்கள் துட்டரால் மிலேச்சர் தன்னால்
   தோன்றும் வினை அகற்றிடவே மாந்தர்க்கு ஆசி

Says in a way the people of Kaliyuga deeply praise
   When on world the Gnana gets hidden and
When good ones suffer from dangerous people and criminals
  He blesses and removes these Karma with ease                    --   Veda Vyasa


ஆசிபட பேரொளியில் பிறந்த வரே
    அகம்புறம் சோம ஒளி ததும்பி நின்ற
மாசில்லா திருஞான குன்றே உந்தன்
    மலரடியை போற்றுகின்றோம் என்று செப்பி

 O' the one born of supreme light with blessings
    filled inside-out in full with the gracious light of Soma (Moon)
As flawless mount peak of great Gnana
    my obeisance to lotus feet - thou shall we say      --   Veda Vyasa


செப்பியே ஒளியேற்ற கிரக சுடர்கள்
     சங்கமித்து அணுக்குள்ளும் ஆடும் அய்யன்
இப்பிறவி சித்தரேல்லாம் ஓர் ஒளியில் தோன்றி
     ஏகாந்தநிலை ஆடல் கண்டோர் எல்லாம்

Say and light Agandam then unites Jyothi radiance of nine planets
   Together in Agandan and inside Atom dances the Ayyan (Natrajar)
The Siddhas all join together in this Aganda Jyothi
   who get to see this dance go to Ekaantha state --   Veda Vyasa


எல்லோர்க்கும் சன்மார்க்க நிதி ஒப்பாய்
     இருளென்ற நிலை போக்கி குருவின் தீட்சை
ஆல் போல தழைத்து ஒங்க அருளும் செய்தார்
     அப்பனே ஆசிரம நியதி சொல்வோம்

To all who have darshan of this Jyothi is equal to Sanmaarga nithi (true margam)
   That drives out darkness with Deeksha (Deetchai) of Guru
The blessings is to grow and have rooted growth like Banyan tree
   Now let me tell about Rules of Ashram ---- --   Veda Vyasa


தொட்டதொரு இருடிவர்க்க மூத்த ஆசான்
    தரணியிலே யுகசேவை தொடங்க வேண்டி
ஆட்கொண்ட மானச சீவன் நிற்கும்
    அதிசிறப்பாய் சித்தம் கொண்டார்

The eldest sage (Bhrigu Maharishi) of Irudis
    In this world to start his service in Kaliyuga
Comes and Stands in Maanasa seevan  (In Maruderi)
  Who has made his chittam exceptional for this place  -  Guru Nandidevar

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி )
கீழா நெல்லி ( PHYLLANTHUS – NIRURI )
இந்தக் கீழா நெல்லி இலைக்குக் கீழ் காய் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என்றழைக்கப்பட்டு பின்னாளில் கீழ் வாய் நெல்லி என்றும் கீழா நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
இது அஷ்ட கர்ம மூலிகைகளில் ஒன்று.இது மாந்தீரீக கர்மங்களில் மையோட்டம் பார்க்கும் போது வெற்றிலையில் கீழாநெல்லிச் சாறு பூசி அஞ்சனம் தடவிப் பார்க்க ஈரேழு பதினான்கு லோகங்களையும் காணலாம்.
மேலும் யாராவது கர்ப்பிணிப் பெண்கள் நம் வீட்டில் இருந்தால் அவர்கள் பெயரை ஒரு மஞ்சள் தடவிய துண்டுச் சீட்டில் எழுதி மஞ்சள் நூலில் கட்டி அவர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கீழா நெல்லி செடிக்கு காப்பு கட்டி தூப தீபம் காட்டி பூஜை செய்து அப்படியே விட்டு வைக்க வேண்டும்.பிறகு அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கும் போது அந்த கீழா நெல்லிச் செடியை நசி மசி என்று மந்திரம் சொல்லி தண்ணீர் ஊற்றி வேர் அறாமல் பிடுங்கி எடுத்து வந்து அந்தப் பெண்ணின் இடது கால் பெரு விரலில் கீழாநெல்லி வேர் படும்படி கட்ட சுகப் பிரசவம் ஆகும்.
பல்வலித்தால் காலையில் கீழா நெல்லியை வேருடன் பிடுங்கி தலைகீழாய் வேர் மேலும் இலைப் பகுதி கீழுமாக நட்டு வைத்து ,மாலையில் மீண்டும் அதை நேராய் நட்டு வைக்க பல்வலி குணமாகும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது .
மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லியையும் , சின்ன வெங்காயம் , சீரகம் , அரைத்து மோரில் கொடுக்க , மூன்று நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும் . இதே மருந்தை பாராசிட்டமால் போட்டு கல்லீரலும் மண்ணீரலும் கெட்டுப் போன நிலையில் இருப்பவர்கள் சாப்பிட்டால் கல்லீரல் மண்ணீரல் வீக்கங்கள் சரியாகி நலம் பெறுவர்.
கிராமத்தில் ஒரு பேச்சு வழக்கில் சொல்வார்கள்.“எனக்கு இந்த கொடுமையான விடயத்தைக் கேட்கும் போது என்னுடைய ஈரக் கொலையெல்லாம் பதறுகிறது “ என்பார்கள். அதாவது அதிர்ச்சி , கவலை , பயம் இவற்றில் ஈரக்கொலை என்றழைக்கப்படும் கல்லீரலும் மண்ணீரலும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை சர்வ சாதாரணமாக சரி செய்யும் கீழா நெல்லி ஒரு அற்புத மூலிகை.
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!
- குணபாடம் -
கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தா – தேனழலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்
தக்கவிர ணங்கெடுக்குந் தான்.
கீழா நெல்லிக்கு ஆமக் கட்டு , அக்கினி , கீடவிஷம் , நேத்திர ரோகங்கள் ( கண் சம்பந்தமான ரோகங்கள் ) , பூத முதலிய சங்கை தோஷம் ( பேய் பிடித்தவர்கள் குணமாவார்கள் ), ரத்தாதி சாரம் , மதுப் பிரமேக மூத்திரம் ( சர்க்கரை வியாதி ) , காமாலை ( மஞ்சட்காமாலை ,ஊது காமாலை , மற்றும் பல காமாலைகளை குணமாக்கும் ) , சப்த தாது சுரம் , சரும தாது வெப்பம் , நாட்பட்ட மேகப் புண் ஆகிய இவை போகும் .
செய்கை:- மூத்திர வர்த்தனகாரி ( DIURETIC ) , சங்கோசனகாரி , சோபா நாசினி , சீதளகாரி.
கீழ்வாய் நெல்லிக் கற்கம்:- இதன் சமூலத்தை ( முழுச் செடியும் வேர் உட்பட ) அரைத்து ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் பசுவின் பாலில் கலக்கிச் சாப்பிட்டு வர சோகை , காமாலை , பாண்டு , வாத பித்த ரோகங்கள் குணமாகும் .இரத்தம் அதிகப்படும்.கண் குளிரும் .
ஈரலில் எந்தெந்த மூலிகைகள் வேலை செய்யுமோ அவை கண்களிலும் வேலை செய்யும். எனவே கண் பார்வைக் குறைவையும் கீழா நெல்லி போக்கும்.காரணமற்ற கவலை கவலையில்லையே என்ற கவலை போன்றவை ஈரல் கெட்டுப் போன நிலையைக் காட்டுவன. அவற்றை இந்த கீழா நெல்லி போக்கும்.எனவே மனம் சம்பந்தமான விடயங்களில் மிக அற்புதமாக வேலை செய்யும்.
காமாலைக் கியாழம்:- கீழா நெல்லி , கரிசலாங்கண்ணி , பேய்ப் புடல் , வெண்மிளகு , சோம்பு , வில்வ வேர் , வகைக்குப் பலம் 1/4 வீதம் ( 8.75 கிராம் ) , வீதம் இடித்து ஒரு குடுவையில் போட்டு 1/2 படி தண்ணீர் விட்டு 1/16 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 30 மில்லி வீதம் 3 முதல் 5 நாட்கள் வரை உட்கொள்ள பாண்டு , சோகை , காமாலை முதலிய ரோகங்கள் போகும்.
உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி
எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வ...ேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்
சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இர...ண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

kundalini yogam

அது என்ன குண்டலினி..?
யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக மு...க்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.
இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.
சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.
முதலில் மூலாதாரம்.
இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது சுவாதிஷ்டானம்.
இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
மூன்றாவது மணிப்பூரகம்.
இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.
நான்காவது அனாகதம்.
இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)
ஐந்தாவது விசுக்தி.
இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை).
இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்).
இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங்களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்துவத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும்தான்!!?)
பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.
சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.
உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகுக்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

baba

Help others is serve  to god

thila gomam

தில ஹோமம்
தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் - ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் - நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.
திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்வி ?.
நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.
திலா ஹோமம் முடித்தவுடன் - சோளிங்கர் சென்று யோக நரசிம்ஹர் ஆலயம் வந்து , தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது. சோளிங்கர் - திருத்தணி , அரக்கோணம் அருகில் இருக்கும் ஸ்தலம். யோக நரசிம்ஹர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் சின்ன மலையிலும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.
பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.
எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து -
அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.
ஜாதகப்படி - யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?
எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் " ல" என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் - 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் - நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
இதை செய்த ஆறு மாதங்களில் - நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.
கிட்டத்தட்ட ஐந்து - ஆறு மணி நேரம் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் இடுப்பளவு தண்ணீரில் நிற்க வேண்டும். ஆதலால் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நாளில் இதை செய்வது நல்லது. உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 11 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.
யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து - 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் - யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் - குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை - உங்களுக்கு யோகமான நாள்.
ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் - ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் - திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.
ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் - வாழ்வில் ஒரே ஒரு முறை - திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.
மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின் பெற்றோர்கள், மணமகளின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1) ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்ப்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் , கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும் , கணவனிடம் நல்ல பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள் . வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் . சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .
2 ) ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும் , தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்ப்படும் , இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள் , சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு
அமைந்திருக்கும் , தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள், குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும் , எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள் இதுவே இவர்களின் சிறப்பு அம்சம் .
3 ) ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும் , கற்பு நெறியில் சிறந்து விளங்குபவளாகவும் , சகல வசதிகளையும் , நிறைவான மனமும் , மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் , சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள் , தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள் , குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள், அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .
4 ) ஜாதகிக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால்
மட்டுமே , பிறக்கும் குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும் , தனக்கு பிறக்கும் குழந்தை பல உயரிய பண்புகளையும் , இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும் , ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் , நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார் .
5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும் , கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும் , தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார் , குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார் , கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள் , களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் . சமுதாயத்தில் தனது கணவனை மிகசிரந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள் .
6 ) ஜாதகிக்கு 8 ம் வீடு தனது கணவனின் உடல்நிலையையும் , மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை இந்த பாவக வழியில் இருந்தே செயல் படும் , ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான் , ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின் உயிரை காப்பாற்றி வைப்பதே இந்த பாவகம் தான் என்பதை, பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் ஆண்கள் அனைவரும் உணர வேண்டும் .
7 ) ஜாதகிக்கு 12 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள் .
மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு ஜாதகிக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும்
---------------------------------------------------------------------------------------
.மணமகனை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
திருமண பொருத்தம் !
திருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .
வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :
1) ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான் , ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும்.
2 ) ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம் , இனிமையாக பேசும் தன்மை , மனைவியை உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை , நல்ல பாரம்பர்ய குடும்பத்தை சார்ந்த அமைப்பு , மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும் தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.
3 ) ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் . மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும் பல பேர் உதவி செய்வார்கள் .
( சில பேர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில்
கொள்க .)
4 ) ஜாதகனுக்கு சத்துரு ஸ்தானம் எனும் ஆறாம் வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல நிலையில் இருக்கு அமைப்பை பெற்ற ஜாதகன் தனது மனைவியை எந்த நிலையிலும் கைவிட மாட்டான் , மேலும் வாழ்க்கையின் இறுதிவரை தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலை தரும் .
5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் ஜாதகருக்கு தனது மனைவி தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் , மற்ற பெண்களை தனது தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராக காணப்படுவார் , தனது வாழ்க்கை துணைக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கொண்டவராக இருப்பார் , கணவனும் மனைவியும் அன்யோநியமாக குடும்பம் நடத்தும் தன்மை அமையும் , இல்லற வழக்கை எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கும் .
6 ) ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தனது மனைவியின், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் ஜாதகருக்கு ஏற்ப்படும் , திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம் பெற இந்த ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருப்பது முக்கியம் , மேலும் நிரந்தர தொழில் அமையும் நல்ல குண இயல்பை ஜாதகர் கொண்டிருப்பார் .
மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு ஜாதகனுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகனை 100 சதவிகிதம் நம்பி தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம் , அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்
நம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்...!!!
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ....
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
முகம் அழகுபெற திராட்சை பழம்.
அஜீரணத்தை போக்கும் புதினா.
“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.
முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி
சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில்
காணப்படுவது. பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும் எண்ணற்ற ஸ்தல
புராணங்களும் உண்டு.
இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை
நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில் ஒரு விசேஷ வழிபட்டு
மூர்த்தி இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி' என்பது அவருடைய பெயர்.
சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம்
'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து வழிபடலாம்.
இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும்
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய பலனைப் பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு நாமங்கள் இருக்கின்றன.
இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம் வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.
தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின் சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில் 'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா?
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல் செய்து
படிக்கவேண்டும்.
நாரத உவாச -
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே
தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.
ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை
முகத்தவரே!
லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்
சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!
நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்
நெற்றியில் சந்திரனை உடையவரே! கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!
த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ
இந்தப் பன்னிரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.
வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்
கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.
ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள் சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:
எட்டு கணேச பக்தர்களுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.
இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
Sivasakthi Nadi's photo.
ஓம் என்னும் மூலமந்திரம்
ஓங்காரம்(பிரணவம்)
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.
ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்
அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.
4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.
5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.
8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .
22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

anuman

On Anjaneyaya Namaha
Photo

நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும் :

அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி

அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
...
ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்

இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

ஓமம் - கண்நோய், கபம், விக்கல்

கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

கருவேப்பிலை - இரத்த பித்தம்

கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்

குங்குலியம் – பாண்டு நோய், காதுவலி

கொடிவேலி - கிரஹணி, வீக்கம்

கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்

சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.

திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்

நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு

பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்

பூண்டு - இதய நோய், இருமல்

பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்

பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்

பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி

மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்

மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி

முள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்

வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

வல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்

வாகை - வீக்கம், அக்கி, இருமல்

வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

வில்வம் - வாதம், கபம்

விளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்

வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு

ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

othimalai murugan

கல்லீரலை வலுவாக்கும் துளசி
கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.
ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.
கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.
முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.
இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.
தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.
கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.
ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.
கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.
முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.
இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.
தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்
கரும்புள்ளி பயிற்சி
கரும்புள்ளி பயிற்சி மிக குறைந்த எண்ணிக்கையுடைய மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இப்பயிற்சியில் நம்முடைய உயிராற்றல் சக்தி செலவாகிறது
இப்பயிற்சி ஒருவரை அவருடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைப்பதற்காகவும் மற்றவர்களை வைத்து தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை தனக்கு அடிமையாக வேலை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இது பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற செயல்கள் செய்பவர்களின் ஆரம்ப நிலை பயிற்சியாக இருந்து வருகிறது மனிதர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற பலன்கள் உடனே கிடைத்து விடுகிறது
இந்த பயிற்சியை செய்பவர்கள் சக்தி அவர்கள் உள்ளேயே இருக்கும் வெளியே சென்று இயங்காது கரும்புள்ளி பயிற்சி மூலம் கிடைத்த சக்தியை சோதனை செய்ய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சியின் ரகசியத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
மந்திரம் என்பது கரும்புள்ளி பயிற்சி அட்டை
யந்திரம் என்பது பயிற்சி செய்பவர்
தந்திரம் என்பது தான் சூட்சுமம்
கரும்புள்ளி பயிற்சி செய்வதால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகிறது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் உடலில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வருத்தமுடன் இருப்பது போலவே தோன்றும் கவலையாக இருப்பதற்குரிய அறிகுறிகள் முகத்தில் தோன்றும்;
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் சாலையில் நடந்து செல்லும் போதும் வீட்டில் சில நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அடிக்கடி தவறி விழுந்து விடுவார்கள் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு
குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பயிற்சியை செய்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
கரும்புள்ளி அட்டை செய்யும் விதம்
1 பாஸ்போர்ட் கார்ட் அளவு உள்ள ஒரு வௌளை அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2 அதன் மையத்தில் ஒரு 25 பைசா வைத்து அதனைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும்
3 வரையப்பட்ட அந்த 25 பைசா வட்டத்திற்குள் கருப்பு நிற மையினால் வர்ணம் அடிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி செய்வதற்கு உரிய கரும்புள்ளி அட்டை தயாராகி விட்டது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
1 கரும்புள்ளி பயிற்சியை அதிகாலை 03.00 மணியிலிருந்து 08.00 மணிக்குள் செய்ய வேண்டும்
2 அதிகாலை 03.00 மணியிலிருந்து 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்
3 அதிகாலை 08.00 மணிக்கு மேல் கண்டிப்பாக கரும்புள்ளி பயிற்சி செய்யக் கூடாது
4 கரும்புள்ளி பயிற்சியை தனியாக அமர்ந்து தனி அறைக்குள் தான் செய்ய வேண்டும்
5 கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல்கட்டு போன்ற கட்டு மந்திரங்களை தன்னைச் சுற்றி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி முறை 1
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும்
4 பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்
5 மேற்கண்ட செயல்முறையை மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி முறை 2
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 தியானம் தெரிந்தவர்கள் நெற்றிக்கண்ணில் தனது நினைவை செலுத்த வேண்டும் நெற்றிக் கண்ணில் உறுத்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்
4 பிறகு கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 20 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை பார்க்க வேண்டும்
5 கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும் அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி உள்ளே கவனிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செய்யப்பட்டாலும் அதில் உள்ள சிறந்த இரண்டு முறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவர நமது உடலில் சக்தி படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும் வளர்ந்த சக்தியை ஒவ்வொரு படிநிலையிலும் பரிசோதனை செய்ய சில செயல்முறைகள் உள்ளன
முதல் படிநிலையில் அடைந்த சக்தியை சோதனை செய்ய கீழ்க்கண்ட பரிசோதனையை செய்து பார்க்கலாம்
சோதனை முறை
நாம் பேருந்திலோ இரயிலிலோ பயணம் செய்கிறோம் அவ்வாறு பயணம் செய்யும் போது நமக்கு முன்னால் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ள வேண்டும்
அவருடைய முதுகு பக்கத்தை தொடர்ந்து பார்த்து நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து நமது மனதுக்குள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு தொடர்ந்து சொல்லி வரும்பொழுது அவர் திரும்பி நம்மை பார்ப்பார்
இச் சோதனை முதல் படிநிலையில் வளர்ந்த சக்தியை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளுக்கான பல்வேறு சோதனைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சி முறை தவறானவர்களால் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்படுவதால் மற்ற சோதனை முறைகள் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது
மனித இனம் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி முறைகள் தவறாக பயன் படுத்தப் பட்ட காரணத்தால் பல்வேறு பயிற்சி முறைகள் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்
அறிந்து கொண்ட பயிற்சி முறைகளை நல்ல காரியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்
மௌன வித்தை ( பேசா மந்திரம் )
மௌன வித்தை ( பேசா மந்திரம் )
மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள்.
பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.
1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.
“கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக், கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம்பிடித்து பணிந்திட்டாரே”
“தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து, ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று கொங்கணர் வேண்டினார.;
“பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன் பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய், மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த, கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட புத்திகொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங்கண்டிலேனே”
கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார்.
”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா;, ஒண்டிபேநாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்படிதானாச்சு, கன்டிலேனிவரைப் போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே”
இது எவ்வளவு பெரிய ஆச்சரியம. இந்த ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப்படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான்இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது.
”மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு சொன்னா; மகத்தானபோகருந்தானுனக்குச் சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே”
கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டுகொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்கமுடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்கமுடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனேஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிறார்.
மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன:
”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப் பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்னகாசிக்கு மாகாது சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம் பொய்யென்பாரே”
மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய்போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்றபுனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,; வேதங்களே பொய் என்பர்.
”பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்றுயோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியாவிட்டால் விருதமாடே”
மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார்.
”நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந்தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே”
மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்திஅடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள்எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடையமுடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும்,கடவுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார்.
”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு, மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே”
மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல்இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளைசொல்லுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும் போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,; மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்துகொண்டே இரு. காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.
மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌனவித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.
முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமேஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும்
புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
திருமூலர் ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்”என்கிறார்.
நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவதுஇறப்பை வெல்ல முடியாது.
நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன்பொருள்
வராஹ மந்திரம்
கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்...
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

- வராஹ ஸ்லோகம்
சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை ஒத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.
இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர கொடிய நோய்கள் விலகும்; திருஷ்டி தோஷங்கள் தொலையும்
வள்ளலார் ஞான மூலிகை ::
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).
...
இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும்அனைத்து நோய்களும் குணமாகும்
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும். சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.அனைத்து நோய்களும் குணமாகும்
நெற்றிக் கண்
மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலும் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது.
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது.
...
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள் மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர்.
பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.
வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர்.
பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர்.
இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர்.
யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலும் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.
நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை:
நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல் மாணலாக இருக்கும். வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும்.
அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள் பு+ரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .
சங்கரன் கோவிலில் அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து நோன்பு நோக்கின்றனர். இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர்.
குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம். இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.
தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்
சளி தொல்லை நீங்க
தும்பைப் பூவை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
...
குறட்டை குணமாக
50 மில்லி நல்லெண்ணெய்
50 எண்ணிக்கை தும்பை பூ
இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.
மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக
100 மில்லி தேன்
50 எண்ணிக்கை தும்பை பூ
50 நித்திய கல்யாணி பூ
இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டிவிதம் சாப்பிட குணமாகும்.
கருப்பை கட்டி கரைய
20 தும்பை பூ உடன்
5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
இதுமட்டும் அல்லாது பல வேலைகளை செய்யும் இந்த தும்பை பூ
See More
கட்டு மந்திரம்
நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்
நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்
மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது
ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது
கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது
ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது
பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பு+மியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச்
சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து
செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்