நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு.
நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.
நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.
ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும்.
ஆடிப்பட்டம் பயிர் செய்.
ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர்.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது.
மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை.
மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.
தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும்.
கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்.
விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும்.
உழவுக்குப் பகை எருவில் தீருமோ?
உழவின் பகை எருவிலும் தீராது.
உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.
உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்.4280
- (ஏற விளையும்.)
உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.
- (விளைவு அற விளையும்.)
உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.
உழவுக்கு ஏற்ற கொழு.4285
உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.
- (ஊணுக்கு முன்னே வரும். )
உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.
- (சரி.)
உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.
உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.
உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.4290
உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?
உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.
உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.
உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?
- (என்றால், ஊரிலே.)
உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.4295
உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.
உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.
உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
- (குண்டை-எருது.)
உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.
விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக