ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அரகரா முருகையா என்ற சந்தம்
அனுதினமும் முருகையா நான் மறவேன்
சிவ சிவா முருகையா என்ற சந்தம்
சிந்தையிலே முருகையா நான்மறவேன்
ஓதிவைத்தமுருகையா என்குருவே
ஒருநாளும் முருகையா நான்மறவேன்
பாடி வைத்த முருகையா என்குருவே
பல நாளும் நான்மறவேன்
திருசெந்தூர்முருகையாநெடுபாதயிலே
தினம்தினமும்முருகையா காவடிகள்
அபிசேக முருகையா காவடிகள்
ஆடுது பார் முருகையா உன் சந்நிதியில்
சாமந்திப்பூ முருகையா மாலை கட்டி
சண்முகனே முருகையா கொண்டுவாரோம்
ஆறுதப்பு முருகையா நூறுபிழை
அடியார்கள் முருகையா செய்ததெல்லாம்
கோடி தப்பு முருகையா நூறுபிழை
குழந்தை நாங்கள் முருகையா செய்ததெல்லாம்
ஆதரித்தே முருகையா ரக்ஷிப்பாயே
ஆரையாமுருகையா எனக்கு துணை
ஆதரிப்பாய் முருகையா வேலவனே --------காவடி பாட்டு எங்கள் பாட்டுடை தலைவன்முருகனை எங்கள் பாட்டன்முதல் முப்பாட்டன் களும் பாடி பரவசமான சிந்து கவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

1 கருத்து:

சிவ பராக்கிரமம்

*நற்றுணை நல்கும் நாதனே எம்பெருமானே*  இறைவன் யாரென உணராத உயிர்க்கு அநாதி கேவலம் முதல் ஆனந்தம் நல்கும் சுத்த நிலை வரை உடனிருந்து துணை நல்குபவன...