ஸ்ரீ கொங்கணர் குருவிழா ஜீவ நாடி வாக்கு
துர்முகி வருடம் சித்திரை மாதம் 16 நாள் வெள்ளி கிழமை (29-4-2016)
ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரி
1) ஓங்கார ஒளியுருவே வணங்கி உன்னை
ஒதிடுவேன் பிருகுயான் சீவ வாக்கு
பாங்குடன் ராதாகிருஷ்ணன் அறியமேலாய்
பற்றி வரும் சன்மார்க்க குடிலம் தொட்டு
2)தொட்டுவரும் கயல் திங்கள் இருபானை பாகை
தக்கவே பூசைவிழா விளக்கம் கூற
சூட்சமமாய் கதிருட்சம் காலம் தன்னில்
சித்தர்களை வரவேற்கும் பொருட்டுமே தான்
3)தானுயர்வாய் நின்றதொரு சீவ சித்தன்
தரணியிலே அயகலைகள் கற்றோன் தான்
மேன்மைப்பட போகனுடைய பூரண சீடன்
மனமழகாய் கொங்கணரின் சோதி கொள்வீர்
4) சோதியது சித்திரையாம் திங்கள் தன்னில்
சிறப்புடைய உத்திராடம் பளிங்கன் வாரம்
ஆதியந்தம் இல்லாத அருணை தலத்தான்
அற்புதமாய் கௌதமனின் ஆசி கொண்டான்
5) கொண்டதொரு தவனிஷ்டை சித்தி கொண்டான்
குருபக்தி மேலோங்கிய சித்து தானே
பின்னமில்லா அரிவிட்னு மலையானும் தானும்
பூரணமாய் கிரிகாப்பு கொண்டோன் தானே
6) தானென்ற அகந்தையது மயக்கம் தொட்டு
தர்கித்து நின்றோர்க்கு அகந்தை நீக்கி
ஊனமில்லா அருள்ஞானம் அளிக்க வல்ல
உயர்கதியாம் வருவோர்க்கு அருள் பொருளும்
7) பொருளான விக்கினத்தை விளக்கி வைத்து
பூஷணங்கள் தான் அளித்து அலங்காரமாய்
விருத்தியதை தானளிக்க வல்லதாய் இருக்க
வகையான சுகந்தநீர் துளசி கூட்டி
8) கூட்டியே ரசிதமதில் நீர்பாத்திரம் கொண்டு
சுகமான நீர்பாத்திரம் வைத்து ஆசி
மாட்சிமையாய் தனம்பொருளும் விருத்தி காண
மங்களமாய் தாமரை திரி கொண்டு ஏற்றி
9) ஏற்றியுமே நெய்யதுவால் வேங்கடேசன் நாமம்கூறி
இயம்பினோம் முத்தேவர் ஆசி யுடன்
குற்றமற அன்னஔஷத தர்மம் நிலைக்க
குறைவாரா சதபேர்க்கு குன்றா அன்னம்
10) அன்னமது சித்திரஅன்னம் வகையிலே
அருள்நிலையில் இணைந்துமே ஆசி ஈய
உன்னதமாய் வாலையுடன் பராபரை ஆசி
ஒருசேர வாய்க்கும்அப்போ சீவம் முற்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக