ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஒப்புடன் முகம் மலர்ந்தே யுபசரித்துண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும்
முப்பழம் மொடுபா லன்ன முகம் கடுத்தி டுவராயின்
கப்பிய பசியினோடு பிய பசியினோடுகடும் பசி யாகும்தானே-
விவேக சிந்தாமணி



வேதமோதிய வேதியர்கோர் மழை
நீதி மன்னர்நெறியினுக் கோர் மழை
மாதர் கற்புடை மங் கையர்கோர் மழை
மாத மூன்று மழையெனப் பெய்யுமே-விவேகசிந்தாமணி





அரிசி விற்றிடு மந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர் மழை
வருஷ மூன்று மழையென பெய்யுமே -விவேகசிந்தாமணி


ஆபத்துக்குக் குதவா பிள்ளை யரும்பசிக்குக் குதவா வன்னம்
தாபத்தைத் தீராதண்ணீர் தரித்திரமறியா பெண்டீர்
கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாசீடன்
பாபத்தைத் தீரா தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே-விவேக சிந்தாமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக