வெள்ளி, 5 செப்டம்பர், 2025

மகா லட்சுமி அருள் பெற


 மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன்  ஆசி


மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற்றை வைத்து, நெய் விளக்கேற்றி, துளசி, வெற்றிலை பாக்கு மற்றும் பச்சை கற்பூரமும் ஏலக்காய் கிராம்பு ஜாதிபத்ரி கலந்த நீரில் சிறிது துளசியுடன். கற்கண்டு பால் பாயாசம் இதில் ஏதாவது ஒன்றை வைத்து படைத்து, மந்திரங்களை உச்சரித்து, தினசரி அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறந்தது.

செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். 

 விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும்.

 எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.

திருமறு மார்பன் விஷ்ணுவின் மார்பில் பாதசுவடாக நித்யமாக வாசம் செய்வதாக திருமறை புகழ்கிறது

 மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதற்கு பூஜை அறையில் அவரது திருபாதங்களை வரைந்து வைக்கலாம். வெள்ளியில் இரு பாதங்களை வாங்கி வைத்து வழிபடலாம்.

மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக வாசம் செய்யக் கூடியவள் திருமகள். அதனால் இது மகாவிஷ்ணுவையும் நம்மடைய வீட்டிற்கு அழைத்து வர வைக்கும். இவர்கள் இருவரின் ஆசிகளும் கிடைத்து விட்டால் அனைத்து விதமான பாவங்களும், சாபங்களும் நீங்கி விடும். செல்வ வளமும், அமைதியும் வீட்டில் நிலவும்.

ஸ்ரீம் மகாலட்சுமியின் பீஜாட்சரம் ஆகும் ஸ்ரீம் (Shreem)  சக்தி மார்க்கத்தில் செல்வம், செழிப்பு மற்றும் மிகுதியின் தெய்வமான மகாலட்சுமி தேவிக்கான சக்திவாய்ந்த பீஜ மந்திரம் ஆகும். இது ஒரு எழுத்து ஓசை வடிவிலான "விதை" மந்திரம், இது அண்ட ஆற்றலுடன் நம்மை இணைத்து, மனதை ஒருமுகப்படுத்தி, உலகளாவிய உணர்வை அடைய உதவுகிறது. 

ஸ்ரீம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் செல்வம் பெருகும் மற்றும் பொருள் ஆதாயம் கிடைக்கும் என்பது பக்தி ஞான நம்பிக்கை
  • மன அமைதி:
    தியானத்தின் போது மனதை அமைதிப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் இந்த மந்திரம் உதவுகிறது.
  • வியாதிகள் மற்றும் கவலை நீக்கம்:
    இந்த மந்திரத்தை ஜபிப்பது வியாதிகளையும் கவலைகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. 

அஷ்ட லட்சுமி துதி :

தன லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,
வணங்குகிறேன்

வித்யா லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

தான்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

வீர லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஸௌபாக்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

சந்தான லட்சுமி :

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

காருண்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஆதி லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

மகாலட்சுமி வடமொழி துதி

ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

#மகாலட்சுமி_ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9.ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை
ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:



 மகாலக்ஷ்மி பாடல் விருத்தம் (சுருக்க வடிவம்)

🌺
சுத்தமும் புத்தியும் செல்வமும் தந்திடும்,
சௌபாக்ய வளம் தரும் தாயே லக்ஷ்மி!
அஷ்டைசுவர்ய அருள் பரவாய்,
மஹாலக்ஷ்மி உனை நமஸ்கரிக்கிறேன்!

🌺
வசனமும் கவிதையும் கலைப்பெரும் தந்திடும்,
அன்பருள் அன்பான லக்ஷ்மி தாயே!
ராஜ்யமும் கீர்த்தியும் தேஜமும் கொடுக்கும்,
மஹாலக்ஷ்மி உனை புகழ்ந்து பாடுவேன்!

🌺
தான்யமும் அன்னமும் தர்மமும் காப்பவள்,
மனம் நிறை ஆனந்த லக்ஷ்மி தாயே!
வேதாந்த ஞானமும், சந்தான வளமும்,
மஹாலக்ஷ்மி உனை வணங்குகின்றேன்!

🌺
யோகம் தரும் புண்யமும்,  பார்கடலில்,
விளங்கும் மங்கையாய் மகாலக்ஷ்மி தாயே!
மூவுலக அரசியும், நிதிபலம் தருவளே,
மஹாலக்ஷ்மி உனை நமஸ்கரிக்கிறேன்!


மகா லட்சுமி மகா மந்திரம் ஜபத்திற்கானது

மகாலட்சுமி காயத்ரியை 108 முறை ஜபிக்கவும்

ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே
விஷ்ணு பத்நியைச்ச தீமஹே
தன்னோ லக்ஷ்மி பிரச்சோதயாத்.


மகாலட்சுமி மூல மந்திரத்தை 108 முறை சொல்லவும்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ்மியை நம: 

திருமகள் துதி ( பாரதியார் )

ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,திருவே!

ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்!
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண் டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ
நாடு மணிச் செல்வ மேல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங் களியே, திருவே!

மகா லட்சுமி நூற்றெட்டு தமிழ் நாமாவளி


1. ஓம் அகில லட்சுமியே போற்றி

2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி

3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி

4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி

5. ஓம் அமர லட்சுமியே போற்றி

6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி

7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி

8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி

9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி

10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி

12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி

13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி

15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி

16. ஓம் இதய லட்சுமியே போற்றி

17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி

18. ஓம் உதய லட்சுமியே போற்றி

19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி

20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

21. . ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி

24. ஓம் கருணா லட்சுமியே போற்றி

25. ஓம் கனக லட்சுமியே போற்றி

26. ஓம் கபில லட்சுமியே போற்றி

27. ஓம் கமல லட்சுமியே போற்றி

28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி

29. ஓம் கஜ லட்சுமியே போற்றி

30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

31. 31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி

32. ஓம் குண லட்சுமியே போற்றி

33. ஓம் குரு லட்சுமியே போற்றி

34. ஓம் கோமள லட்சுமியே போற்றி

35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி

36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி

37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி

38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி

39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி

40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

41. ஓம் சகல லட்சுமியே போற்றி

42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி

43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி

45. ஓம் சீதா லட்சுமியே போற்றி

46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி

47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி

48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி

49. ஓம் சுப லட்சுமியே போற்றி

50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

51. 51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி

52. ஓம் ஞான லட்சுமியே போற்றி

53. ஓம் தங்க லட்சுமியே போற்றி

54. ஓம் தயா லட்சுமியே போற்றி

55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி

56. ஓம் தன லட்சுமியே போற்றி

57. ஓம் தவ லட்சுமியே போற்றி

58. ஓம் தான லட்சுமியே போற்றி

59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி

60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

61. 

61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி

62. ஓம் தீப லட்சுமியே போற்றி

63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி

64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி

65. ஓம் நாக லட்சுமியே போற்றி

66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி

67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி

68. ஓம் நீல லட்சுமியே போற்றி

69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி

70. ஓம் பவள லட்சுமியே போற்றி

71. 71. ஓம் பக்த லட்சுமியே போற்றி

72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி

73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி

74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி

75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி

77. ஓம் பால லட்சுமியே போற்றி

78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி

79. 79. ஓம் புவன லட்சுமியே போற்றி

80. ஓம் புனித லட்சுமியே போற்றி

81. ஓம் பொன் லட்சுமியே போற்றி

82. ஓம் போக லட்சுமியே போற்றி

83. ஓம் மகா லட்சுமியே போற்றி

84. ஓம் மதன லட்சுமியே போற்றி

85. ஓம் மதுர லட்சுமியே போற்றி

86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி

87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி

88. ஓம் மகா லட்சுமியே போற்றி

89. ஓம் மகுட லட்சுமியே போற்றி

90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி

92. ஓம் மாதா லட்சுமியே போற்றி

93. ஓம் முத்து லட்சுமியே போற்றி

94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி

95. ஓம் யோக லட்சுமியே போற்றி

96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி

97. ஓம் ராம லட்சுமியே போற்றி

98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி

99. ஓம் வரலட்சுமியே போற்றி

100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

101. ஓம் விஜய லட்சுமியே போற்றி

102. ஓம் விமல லட்சுமியே போற்றி

103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி

104. ஓம் வீர லட்சுமியே போற்றி

105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி

106. ஓம் வேணு லட்சுமியே போற்றி

107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி

108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

...........................சுபம்............

மகாலட்சுமி பஜனை

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

மகா லட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் மகா லட்சுமி என்றாலே ஆரோக்யம் சுத்தம் நறுமனம் சுவை மணம் அழகு நல்நிறம் மங்களம் திருமகள்  எங்கும் நிறைந்திருக்கிறாள்.  திருமகள் வாசம் செய்யும் பொருட்களை வீணடிக்காமல் அவமதிப்பு செய்யாமல் மிகுந்த பவித்ரமாக கருதிட வேண்டும்

இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம். வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங் கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.



வெள்ளிகிழமை சுக்ரனின் உலக நலம் தரும் சுக்கிரனை திருமகளோடு வணங்க நன்னமை உண்டாகும்


சுக்கிர பகவான் மந்திரம்

"ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தநுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

வெள்ளிகிழமை வழிபாடு சுக்ரவழிபாடாக புனிதமான இறைவணக்க நாளாக பிறமத மார்க்கமும் பிரார்த்தனை செய்வதை அறிவோம்

வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர் உள்ளத்தனையது உயர்வு நீரின் உயர்வுக்கு ஒப்ப தாமரை உயர்வதுபோல உள்ளத்தில் எண்ணும் எண்ணத்திற்கேற்ப உலகியல் வாழ்வில் உயர்வு உண்டாகும் இதனை தாரணா என்பர்

திருமகளின் பீஜ மந்திரம் ஸ்ரீம் அதை உச்சரிக்கும் போதே முகத்தில் ஒரு சிரிப்பு இழையோடும்

சிரிப்பு ஆழ்மனத்தின் அமைதி ஆனந்த அனுபவம் அது நிறைவு பூரணம்

திருமகளை வெள்ளிகிழமை தீபம் ஏற்றி வணங்கி அன்னையின் பேரருளை பெற்று வாழ்வாங்கு வாழ அந்த பார்க்கவி தேவி ஆசி செய்யட்டும்

எல்லாம் இறைசெயல்

அடியேன். 

இராமய்யா. தாமரைச்செல்வன்

அன்பான வேண்டுகோள் பிறகுழுமங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் நன்றி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...