ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி :
ஓம் அகத்தீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்
அகத்தியர் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம:
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
கொங்கணர் அருளிய அகத்தியர் துதி
அகத்திய மகரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே"
அகத்தியர் துதி
ஓம் நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழிற் சூழ் தில்லைமூதூர்
சிலம்பொலிபோல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமும் இல்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றி உண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியரை அருள் குருவை மனதில் வைப்பாம்
அகத்தியரின் நாமம் மகிமை பெற்றது அகத்தியர் நாமம் தீவினை அகற்றவல்லது அழியாத ஞான அனுபூதி தரவல்லபமானது
அகத்தீசா என்ற நாமத்தில் ஒவ்வொரு எழுத்தும் நாதபலம் உடையது மந்திர பூர்வமான நாமம் ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம என்று சொல்லும் போதே அகத்தில் ஞான ஒளி தோன்றி வழிகாட்டும்
அகத்தியருக்கு அஷ்டலஷ்மி கடாக்ஷாய என்ற சிறப்பு நாமம் உண்டு எண்ணணையாள் எனும் அஷ்டலட்சுமிகளின் அருளை பெற்றவர் அகத்தியர்
அகத்தியர் தன்னை நாடி நாமம் ஜபம் செய்பவர்களை அருள் பொருள் இரண்டிலும் உயர்த்துவார்
முருகனின் அம்சம் அகத்தியர் ஆதலால் பச்சை நிற ஆடை அவருடைய பகதர்கள் பச்சை உடுத்தி அடியவர் அடையாளபடுத்துகிறார்கள்
உலகத்தில் அறமும் ஒழுக்கமும் தருமம் தாழும் போதெல்லாம் அகத்தியர் புவனம் வந்து உலக தாழ்வை போக்கி அருள்செய்வார் என்கிறது குருஞான நிகண்டு
அகத்தியர் ராஜகுரு பல அரச தருமத்தை அறிந்து தலைமை ஏற்று அரசர்களுக்கு ஞானமும் நிதியையும் அளித்தவர் அகத்தியர் என்கிறது அகத்தியர் பிரபந்தம்
வழிபாடு
கிழக்கு நோக்கி அகலில் நெய் தீபமேற்றி தீபத்திற்கு முன்பு அமர்ந்து மிதமான சப்தத்தில் ஓம் அகத்தீசாய நம என்று நிதானத்துடன் இருபத்தோரு முறை தொடங்கி படிப்படியாக உயர்த்தி நூற்றெட்டு முறை செபிக்கலாம்
பசுந்தொழுவம் நதிகரை சமுத்திரகரை நல்வனம் ஆலயம் ஆசிரமம் என்று பொது சாலைகளில் செபிக்க பெரும்பயன் உண்டு என்கிறது ஜெபவிதி
ஆயில்யம் சதயம்.... ஞாயிறு. வியாழ கிழமைகளில் காலை நேரம் பூஜை ஜபம் பலனளிக்க வல்லது
அறம் செய்பவரை அகத்தியர் உயர்த்திட ஆசி செய்வார்
- சாலை அமைத்தல்,
- ஓதுவார்க்கு உணவு,
- அறுசமயத்தாருக்கும் உணவு,
- பசுவுக்குத் தீனி,
- சிறைச் சோறு,
- ஐயம்,
- தின்பண்டம் நல்கல்,
- அநாதைகளுக்கு உணவு,
- மகப்பெறுவித்தல்,
- மகவு வளர்த்தல்,
- சிசுக்களுக்குப் பால் நல்கல்,
- அநாதைப் பிணம் சுடுதல்,
- அநாதைகளுக்கு உடை,
- சுண்ணாம்பு பூசல்,
- நோய்க்கு மருந்து,
- வண்ணார் தொழில்,
- நாவிதத் தொழில்,
- கண்ணாடி அணிவித்தல்,
- காதோலை போடுதல்,
- கண் மருந்து,
- தலைக்கு எண்ணெய்,
- ஒத்தடம் தருதல்,
- பிறர் துயர் காத்தல்,
- தண்ணீர்ப் பந்தல்,
- மடம் கட்டுதல்,
- தடாகம் அமைத்தல்,
- சோலை வளர்த்தல்,
- தோல் பதனிடல்,
- மிருகங்களுக்கு உணவு,
- ஏர் உழுதல்,
- உயிர் காத்தல்,
- கன்னிகாதானம்
இதில் ஏதாவது ஒரு அறத்தோடு அன்பு பூண்டு செய்யும் பூஜையே பலிதமான பூஜை
ஓம் லோபமித்ரை சமேத அகத்தியர் திருவடிகளே போற்றி
அகத்திய முனிவர் விருத்தம்
அகத்தியரே ஆனந்த வடிவம் – அருள் ஒளி பரவும் தவமாமுனியே
சகலாகலைக் கற்றுத் தந்தார் – சித்த மருந்தின் தலைவனுமானார்.
தமிழ் மொழியின் இலக்கணம் தந்தார் இவர் – தாய் மொழிக்கு உயிர் புகுத்தி,
யோக விதியின் விளக்கமாகி – உயிர் குணமளிக்கும் குருமருந்துஆனார்.
வேத சாஸ்திரம் விளக்கிய முனிவர்– விண்ணகமெல்லாம் புகழ்ந்து போற்றும்
சித்த மரபின் சிகரமாகி – சிவனருள் பெற்ற தெய்வம் ஆனார்.
அவர் பெரிய திருவடி போற்றி தொழுவோம்
அகத்தியர் துதி
கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!
வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !
காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !
குரு தட்சிணாமூர்த்தி துதி பொதுவான குருதுதி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)
விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்
---
பாடல் பொருள்
இப்பாடலில், இறைவனின் அருளும், அவரின் பரிபூரண ஞானமும் விளக்கப்படுகிறது.
* நான்கு வேதங்களும் ஆறு வேதாங்கங்களும் கற்ற பாண்டிதர்களுக்கும் இறைவன் தம் கருணையால் **அதிகமான அறிவை** அளிக்கின்றான்.
* அவர் மறைவுகளுக்குப் புறம்பானவராய், எல்லாவற்றையும் ஆகியும், எதுவுமல்லாதவராய், இயல்பாகவே இருந்து கொண்டு காண்பிக்கிறார்.
* சொல்லாமல் சொல்லுபவர்; நினைக்காமல் நினைக்க வைப்பவர்.
* இவ்வாறான தெய்வீக சத்தியத்தை உணர்ந்தால், பவத்தொடக்கமான பிறவி வேதனைகளைக் கடந்து வெல்லலாம்.
---
இறைவனே குருவாக வந்து மௌன உபதேசம் செய்கிறார்
* **இறை அருள் அறிவுக்கு எல்லை இல்லை**: எவ்வளவு வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றாலும், அது மனுஷ்ய அறிவின் வரம்புக்குள் தான். ஆனால் இறைவனின் கருணை வரும்போது, நம்முடைய உள்ளம் அதற்கும் அப்பாற்பட்டு உண்மையை அறிகிறது.
* **இறைவன் சொல்லாமல் சொல்லுபவர்**: எவ்வித வார்த்தைகளும் தேவையில்லை; அவர் இருக்கும் நிலையையே உணர்ந்தால், மனம் விழித்து விடுகிறது. இதுவே ஆன்மீகத்தில் "அனுபவம்" எனப்படுகிறது.
* **அனைத்தும் அவரே; எதுவுமல்ல அவரே**: உலகிலுள்ள அனைத்தும் அவர் வடிவே; அதே நேரத்தில், எந்த வடிவிலும் சிக்கிக் கொள்ளாதவரும் அவர் தான். இந்த உண்மை நமக்கு வாழ்வில் சமநிலை, அமைதி, வலிமை தருகிறது.
* **நினைவின் ஆழம்**: இறைவனை நினைக்காமல் இருந்தாலும், உள்ளுக்குள் நினைவாகும். அது நம்முடைய ஆன்மாவின் இயல்பு என்பதைக் காட்டுகிறது.
* **பவத்தொடக்கம் வெல்லும் பாதை**: இவ்வுண்மையை உணர்ந்தவுடன், பிறவிப் பந்தங்கள் கட்டுப்படுத்த முடியாது. நாம் விடுதலையையும் ஆனந்தத்தையும் அடைய முடியும்.
---
– **அறிவும், அனுபவமும், விடுதலையும், எல்லாம் இறை அருளாலே பெறப்படும். அவரை நினைவில் வைத்தால், வாழ்க்கையின் துன்பங்களை கடந்து, ஆனந்தத்தை அடையலாம்.**
---
இறை அருளாலே அறிவும் விடுதலையும் பெறுகிறேன்.”
இதுவே முடிவான பிரார்த்தனை
அகத்தியர் வழிபாட்டின் அங்கமே மனம் முழுவதும் வணங்கபடும் அகத்திய குருவின் கீர்த்திகளை சிந்தித்து உள்வாங்கி செய்வது ஒரு தபஸ் தமிழில் வாழ்த்துக்கள் துதிகளால் குருவின் பரிபூரண ஆசியை இந்த தேகம் ஏற்கும்
எல்லாம் இறை செயல்
அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக