சந்திரகிரகணம் 07.09.2025
இந்த ஆண்டின் இரண்டாவதும், கடைசியுமான சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது
இந்த சந்திர கிரகண முழுமையான சந்திர கிரகணமாக நிகழ உள்ளது.
செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 10.59 துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
பவுர்ணமி நாளில் தான் நிகழும். இந்த முறை ஆவணி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
இந்த கிரகணத்தின் சூதக் காலம் செப்டம்பர் 7, 2025 அன்று மதியம் 12:57 மணிக்கு தொடங்கி கிரகணம் முடியும் வரை தொடரும்.
07.09.2025ஞாயிறு அன்று பௌர்ணமி (45.59) இரவு 12.24 வரை
விசுவாவசு வருஷம் ஆவணி 22ம் தேதி ஞாயிற்று கிழமை
சதயம் (42.43) இரவு (11.05) க்குமேல் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப இராசியில் சந்திரன் வரும் போது பூரண சந்திர கிரகணம் சதயம் நாலாம் பாதத்தில் தொடங்கி பூரட்டாதி முதல்பாதம் வரை தொடர்கிறது
🌕 **சந்திர கிரகணம் (ஆன்மீக பார்வையில்)**
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வந்தால், பூமியின் நிழல் சந்திரன் மீது படுகிறது. இதுவே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆன்மீக ரீதியில் பார்த்தால்
* சூரியன் அறிவையும், உண்மையையும் குறிக்கிறது.
* சந்திரன் மனதையும், உணர்ச்சிகளையும் குறிக்கிறது.
* பூமி கர்மா (வினை) யைக் குறிக்கிறது.
கர்மா (பூமி) நம்முடைய மனதை (சந்திரன்) உண்மையின் ஒளியிலிருந்து (சூரியன்) தற்காலிகமாக மறைக்கிறது. ஆனால் அது எப்போதும் தற்காலிகமே. நிழல் நீங்கியதும், சந்திரன் மீண்டும் ஒளிர்வது போல நமது மனமும் இறைவன் அருளால் மீண்டும் தெளிவடைகிறது.
சந்திர கிரகண ஆசி
அண்டமுழுவதும் அருளொளி பாய,
அகிலம் முழுதும் இயற்கை தாள,
சந்திரன் மங்கும் நன்நிசி நேரம்,
சக்தியின் மாயை யாவரும் காண.
இருள் திரையினில் ஒளி மறைந்தும்,
ஈசன் லீலையில் அருள் நிறைந்தும்,
கர்ம பிரமைகள் களைந்து செல்லும்,
கிரகண வேளையாம் யோகமாய் மாறும்
பூமி நிழலினில் நன்னிலை பெருக
புண்ணிய தேவர்கள் சிந்தையில் ஞான
மந்திர ஓசைகள் விண்வரை ஓங்க,
மானுட வாழ்வினில் மாற்றம் ஓங்கவும்
சந்திரன் இருளினில் தோன்றும் வேளையில்,
சக்தி பெருக்கிடும் ஜபதப மலர்களில்,
பாவபிணிகள் அனைத்தும் கழியும்,
பக்தியுடன் உள்ளம் பூரணமாய் நிறையும்
அண்ட கோடிகள் விளங்கொலி சூழ
அருள்சக்தி ஒளியாய் எங்கும் மிளிரும்
சந்திர கிரகணம் சக்தியின் காட்சி,
சதாசிவன் அருள்பெற ஜோதியும் ஏற்றி
ஜோதியை கண்டு சிவ செபம் புறிக
ஜோதியே நன்மை தோத்திரமே சித்தி
ஆதியை போற்றும் அரியதிருநாள்
அகத்தியன் ஆசி அருள்வழி வாக்கிதுவே
............................சுபம்...........................
சந்திரபகவான்
சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியை மனதுக்குள் உச்சரித்து, சந்திரனைப் பிரார்ர்த்தனை செய்வது, இன்னும் இன்னும் மனதிலும் புத்தியிலும் தெளிவைக் கொடுக்கும். தெளிவுடன் இருந்து செயலாற்றினால், எல்லாக் காரியமும் வீரியமாகும். காரியம் வீரியமானால், சகலமும் வெற்றியே... சகலமும் நிம்மதியே... என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி
ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
அன்றைய தினம், அதாவது சந்திர கிரகண வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே குளிர்ந்த நிலையில் இருக்கும் சந்திரன், இன்னும் இன்னும் குளிர்ந்து போவார். நம்மையும் நம் மனதையும் குளிரச்செய்வார்
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே.
நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே.
ஆளா காராளா
னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
ணாகிக் கழிவரே.
நடலை வாழ்வுகொண்
டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
தூர்முனி பண்டமே.
பூக்கைக் கொண்டரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே.
குறிக ளுமடை
யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
மென்கொல் புகாததே.
வாழ்த்த வாயும்
நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
யேன்நெடுங் காலமே.
எழுது பாவைநல்
லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
தென்படு கின்றதே.
நெக்கு நெக்கு
நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
ரவர்தம்மை நாணியே.
விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்
டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே.
இறைவனை தொழுது நலம் பெற நல்லதே நடக்கும்
சர்வம் சிவார்ப்பனம்
அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக