ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

நாட்டு மருந்துக் கடை!!!



திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான்.
‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக காமனெனுந் திப்பிலிக்குக் கை” என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை உயர்த்திச் சீராக்கும் தன்மையும் இருக்கிறது என்பதுதான் பொருள். கூடவே திப்பிலி பித்தத்தினை உயர்த்தி, விந்தணுக்களையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
ஆஸ்துமா நீக்கும் திப்பிலி
ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க இன்று நவீன மருத்துவம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சில மாதங்கள் இரவில் மட்டும் ஆன்டி லியூகோட்ரைன்ஸ் (Anti Leucotrines) கொடுப்பது வழக்கம். இந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக