செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருக்குறள் தெளிவு

 குறள் 24: 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

விளக்கம்:- இவ்வுலகில் மனிதனாக பிறந்தவன் வாழ்க்கையின் தத்துவம் பற்றிய கருத்தை அறிந்து தெளிந்து அதை கடைபிடிக்க வேண்டும். இந்த அழியக்கூடிய உடலை நல்வழியில் தனது உள்ளத்தைப் பயன்படுத்தி சீர்படுத்தி செழுமைப்படுத்தி வாழும் வகையை கண்டுபிடித்து அதை பின்பற்ற வேண்டும். மனிதனாக பிறந்து ஞானியாக வாழ்ந்து சென்ற சான்றோர்களை உலகம் என்றும் மறக்காமல் அவர்களது வழியை பின்பற்றும்.


1.உரனென்னும்:- உரனென்னும்= திண்மை, திடமான- மனிதனுடைய உள்ளம் அவன் செய்யும் நல்வழி செய்கைகளில் திடமான உறுதியான தன்னம்பிக்கை தன் மீது வைக்க வேண்டும். அது அவனது ஆழ்மனதிலும் ஆழமாகப் பதிந்து நல்ல செயல்களை செய்ய வேண்டும்.


2.தோட்டியான்:- 

தோட்டியான்‌ என்றால் பாதுகாவலன் எனப் பொருள்படும். இந்த வார்த்தையை தற்போதும் நமது வழக்குச் சொல்லில் உள்ளது ஆனால் இந்த உலகை பாதுகாப்பவன் இயற்கையாக உள்ள இறை சக்தி வாய்ந்த பொதுவான அர்த்தமாகும். மனிதன் எதை எதை பார்க்க பாதுகாக்க வேண்டும் முதலில் தனது அறிவு மூலம் சான்றோர்களின் நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து தனக்கென்று இல்லாமல் பொதுமக்களுக்காக அவனது அறிவையும் ஆற்றலையும் உபயோகப்படுத்த வேண்டும். அதற்காக அவன் இந்த உலக மக்களுக்கு பாதுகாவலனாக விளங்கும் இறை சக்தியை பெறக்கூடிய வழிமுறையை தெரிந்து ஞானத்தைப் பெற்று இந்த உலக மக்களை நல்வழிப்படுத்த கூடிய இறைவனின் தூதனாக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.


3.ஓரைந்தும் காப்பான்:- 

ஓரைந்தும்= உடலில் உள்ள ஐந்து உணர்வுகளை அறிந்து

(தொடுவுணர்வு முகர்தல் சுவைத்தல் பார்த்தல். கேட்பது) அதை அனுபவித்து பின்னர் கட்டுப்படுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் தனது ஆசை பந்தபாசங்களை விட்டு நீத்து/ துறந்துவிட 

வேண்டும்.


4.வரனென்னும்:- என்றால் சிறந்தவனாக எனப் பொருள்படும். மேற்கண்டவாறு ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தலைசிறந்தவராக உலகிற்கு புத்திபுகட்டும் ஞானியாக மாறமுடியும்.


5.வைப்பிற்கோர் வித்து;-

வைப்போர்- வை என்றால் வையகம் உலகம், மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்போர் எனப் பொருள்படும் சாதாரண மனிதர்களாகப் பிறந்து இவ்வுலகில் அவர்கள் விட்டுச்சென்ற அல்லது விதைத்துச் சென்ற

வித்து எனும் விதை ஆகும். அத்தகைய மனித பிறவிகள் இந்த உலகிற்கு அறிவு ஜீவியாக விளங்கும் வகையில் ஒரு வித்தாக இருப்பார்கள்.

 உதாரணமாக வள்ளலார் போன்ற சாதாரண மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிறந்த ஞானியாக ஞானம் பெற்று உலக மக்களின் நல் வாழ்க்கைக்காக அவர் விட்டுச்சென்ற கருணை என்னும் பாதை ஆகும். இதே போல உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ஆவார்.


உட்கருத்து:- மனிதனும் தெய்வமாகலாம்.


நன்றி.. திருவள்ளுவர் பெருமானுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...