சனி, 1 பிப்ரவரி, 2025

வசந்த பஞ்சமி

வணக்கம் 02.02.2025 வசந்த பஞ்சமி இது மங்களம் தருகின்ற வசந்த காலத்தை வரவேற்பு செய்யும் நன்னாள் தைதிங்களில் பூசணி பரங்கி செடிகள் காலையில் மஞ்சள் நிற பூ பூத்து காய்க்கும் பீர்க்கங் செடிகள் மாலையில் பூத்து பனிகாலத்தில் இவைகள் காய்க்க தொடங்கும் மஞ்சள் கிழங்ககள் அறுவடை முடியும் பாடுபட்ட வெள்ளாமை நெல்மணி குவியலாக கிடக்கும் நன்கு விளைந்த நெல்மணி கதிர்கள் தலை சாய்ந்து தங்கம் நிறம் கொண்டு எங்கும் மஞ்சளாக தங்க நிறமாக காட்சி தருவதை தொல்குடிகள் தங்கள் மகிழ்ச்சி கொண்டாட்டமாய் பூமா தேவி சரஸ்வதி புவனேஸ்வரி க்கு பொங்கலிட்டு மகிழ்வர் சிறு குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஈரம் தரும் வாலை சரஸ்வதியை போற்றுவதும் வீதிகளில் மஞ்சள் நீரை ஊற்றி களித்து மகிழ்வர் இது காணும் பொங்கல் முதலே தொடங்கும் கன்னி பொங்கல் என்பதே தொல்குடி வழக்காடல் லசந்த பஞ்சமி வராகி தேவியின் சூழ்ச்சம வழிபாடு இந்த பூமியை தாங்கும் வராக துணை ஆனதனால் நமது முன்னோர்கள் மஞ்சள் நீராட்டலை கடவுளுக்கும் கன்னியர் சடங்கிலும் செய்தார்கள் வராகி வழிபாடு தொல்குடி மக்கள் மிகவும் நுணுக்கமாக கையாண்டு உள்ளனர். முக்கியமாக விவசாய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பூசைகாலத்திலும் மஞ்சளை தொட்டு பூசைகளை தொடங்கி உள்ளனர் வீட்டில் உள்ள நிலைகதவுகளில் மஞ்சள் தடவுவது கன்னியர் பூப்புகாலம் கற்ப காலத்தில் வளையல் காப்பு காலம் குழந்தை பிறந்த பதினாறு நாட்கள் அம்மை போன்ற காலங்களிலும் திருமண சடங்கு எல்லாவற்றிலும் இந்த மஞ்சளை தொட்டு வரும் பழக்கம் உள்ளது ஆக சித்தர்கள் கொண்டு வந்த விசேஷ மஞ்சளை ஒரு வசந்த வரவேற்பு ஒரு மகிழ்ச்சி தரும் காலங்களில் காப்பு செய்து கொண்டது தொல்குடி மரபு மஞ்சள் தங்கத்திற்கு ஈடான பொருள் என கருதியது நம் முன்னோர்கள் மரபு இந்த வசந்த பஞ்சமியில் மஞ்சளை தொட்டு வழிபாடு செய்து நன்மையை வரவேற்போம். : நெல்லும் மஞ்சளும் அறுவடை ஆகும் நாளில் வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு கொஞ்சம் வாங்கி வீடுகளில் வைப்பது ஒரு ஐஸ்வர்யமே தங்கம் வாங்குதை பிரபல படுத்துவார்கள் ஆனால் எல்லோரும் தங்கம் வாங்க இயலாது ஆக எளிமையாக மஞ்சளை கிழங்கு வாங்கி வைக்கலாம் நெல் ஒருபடி முதல் ஒரு மரக்கால் வரை வாங்கி பூஜை அறையில் வைக்கலாம் இது ஒரு உயிர் விதை ஆற்றல் தொல்குடி மக்கள் தங்கள் விவசாயத்திற்கு உரிய விதை நெல்லை காயவைத்து வைக்கோல் கோட்டைகட்டி சாணம் மெழுகி பாது காப்பார்கள் ஆக நித்யமாக தான்யம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும் மஞ்சளை அந்தந்த நேரத்தில் அரைத்து பயன்படுத்துவதே நல்லது அதன் வாசனையே மருத்துவ குணங்கள் உடையது அதுபோல் குளியலுக்கும் உரசி தேய்து குளித்து வருவதே நல்ல பலன் ஆக கடைகளில் கலப்பட மஞ்சள் பொடியை தவிர்த்து மஞ்சள் பொடியை கைபாகமாக செய்வது நல்லது மஞ்சள் கிழங்கு வகையை சார்ந்தது இதை பதியம் இட்டு வளர்க்கமுடியும் மஞ்சளை சித்தர்கள் உலகத்திலிருந்து கொண்டு வந்து இங்கு பதியம் இட்டார்கள் என்று குருமரபு கூறுகிறது வாழை மஞ்சள் கருணை கிழங்கு இன்னும் பிற உயர்ந்த கிழங்கு வகைகளை சித்தர்கள் கொண்டு வந்து பதியம் இட்டனர் என்பதே குரு மரபு செய்தி நமக்கு பயன் படும் என்று ஆதி சித்தர்கள் தொல்குடி மக்கள் கொண்டு வந்த கிழங்கு மற்றும் உண்ணும் உணவு விதைகளை சேகரிக்க மறந்து போனதும் அவலமே வழிபாடு ஒரு இயற்கை பாதுகாப்பு நன்றி நவில்தல் பெரியோர்கள் மரபை பேணுதல் அவர்கள் காட்டிய வழியில் ஆயிரமாயிரம் ரகசியம் உள் பொதிந்து இருக்கும் ஆக தொல்குடி மரபை உள்வாங்கி பயன் பெருவோம் யார் விதைகளை தந்தவரோ அதை விளைவித்து உணவாக்கி தந்தவரோ அவர்களுக்கு வணக்கங்கள் யார் கிழங்குகளையும் மூலிகைகளையும் கொண்டு வந்து இட்டு வளர்த்து காத்து நமக்களித்தனரோ அவர்களுக்கு வணக்கங்கள் பூமியிலும் விதைகளிலும் ஈரத்தையும் சத்துக்களை தந்து வீரியமாய் முளைக்கும் அறிவை தந்த அந்த தெய்வங்களுக்கு வணக்கங்கள் மலையில் பெய்யும் மழை கடலில் கலப்பதை ஆறு வெட்டி வாய்க்கால் வெட்டி பள்ளத்தில் நீரை நிறுத்தி வரப்பு கட்டி வேளாண்மை அறிவை தந்த வேந்தனுக்கும் தொல்குடி மக்களுக்கு வணக்கங்கள் வசந்த காலத்தில் மஞ்சளும் வெள்ளையும் பல வர்ணமாக பூத்து குளுங்கும் செடிகொடிகளுக்கும் பனி நிறைந்த வயல் வனத்திற்கும் வணக்கங்கள் இப்படி வசந்த காலத்தில் மனம் திறந்த வணக்கம் செய்வோம் மனதில் இலேசானவர்கள் ஆகுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமூலர் சூனிய சம்பாஷணை

பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...