வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருக்குறள்



சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 


விளக்கம்:- இந்த ஐந்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. பஞ்சபூதங்கள் ஆகிய ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு உலகத்தில் இருப்பதால் இவற்றை எல்லாம் உணரமுடியும்.

 இப்பிரபஞ்சத்தில் பிறந்த போது இருந்த கோள்களின் நிலையை வைத்து செய்யும் செயல்கள் மாறுபடும். இவற்றை எல்லாம் கையாளப்படும் முறை தெரிந்து குறள் அற நெறிகளை கடைபிடிப்பவன் 

உலகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.

இப்பூவுலகில் பிறந்த மனிதன் வாழ்க்கையில் ஐந்து உறுப்புகள் (மெய் வாய் கண் காது மூக்கு) மூலம்தான் ஐந்து உணர்வை பெறுகிறோம்.

அதுமட்டுமில்லாமல் ஞானக்கண் என்று சொல்லப்படும் உணர்வுகள் மூலம் அவனது தொலை நோக்குப் பார்வை செயல்படும்.


1.சுவைஒளி :- சுவைத்தல் + பார்த்தல். முதலில் சுவைத்தல் என்றால் எந்தவொரு செயலையும் விருப்பத்தோடு, ஆவலோடு, புரிதலோடு, ஊக்கத்தோடு, செய்தால் அது ஒருவனது மனதிற்கு மனநிறைவு ஏற்படுவதால் சுவைப்பதுக்கு சமமாகும்.

பின்னர்தான் நாவின் சுவை அறுசுவை உணவு பதார்த்தங்கள் என்பது போன்றவையாகும்.

இரண்டாவதாக பார்த்தல்

எந்த வயதில் எதை பார்க்க வேண்டுமோ அதைப் பார்த்துதான் எதையும் தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் செய்யக்கூடிய செயலின் தன்மை எத்தகையது அதனால் அவனது மனதிற்கு கிடைக்கும் நிறைவு போல அவன் அந்த சுவையானவற்றை உணர முடியும்.  


2.ஊறுஓசை :- .தொடு உணர்வு-அன்பாக பாசமாக என தொடுதல் என்ற உணர்வு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது எனவே வெறுப்போடு தொடாதீர்கள். அடுத்து

ஓசை, சத்தம், இனிமையான இசை கேட்பதுபோல அடுத்தவர்களுக்கு நமது வாய்மொழியும் சொல்லும் இனிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழி நடத்தவும், விழிப்புணர்வு கொடுப்பதற்கும் தேவையான குரலோசை பெற்றிருக்க வேண்டும். எதை கேட்க வேண்டுமோ உன் அறிவிற்கு தேவையானதை மட்டுமே கேள்.


3.நாற்றமென ;- என்றால் மணம், நறுமணம், கெட்ட வாசனை எது என்பதை உணர்ந்து கொள்ள மூக்கின் மூலம் முடிகிறது. நல்ல செயல்களை செய்தால் அவனது வாழ்க்கை வளமாகி உயர்ந்த நிலையை அடைகிறான். அதனால் நறுமணத்தை போல என்று ஒப்பிடலாம்.

முகர்தல்- நல்ல நறுமணங்களை விட்டு விஷவாயு போன்ற கொடியவற்றை முகர்தல் வேண்டாம். 


4.ஐந்தின் வகை தெரிவான்:- மேற்கூறிய ஐந்து வகையான செயல்களை தெரிந்தவன், புரிந்தவன், அறிந்தவன் ஞானி ஆவான். அவர்களே பல சித்தர்களும் ஆன்மிக வாதிகளும் ஆவார்.


5.கட்டே உலகு: கட்டே என்றால் களைந்து எறிதல். அதாவது தேவையற்றதை விட்டு விடுதல் எனப் பொருள்படும். பகுத்தறிவு உடைய மனிதர்கள் 

மனிதற்களுக்கே (கட்டே) உலகு. அவர்கள்

உலக மக்களால் போற்றப்படுவார்கள் அவர்களே சிறந்த ஞானிகள்.


உட்கருத்து:- உட்கருத்து. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். எல்லாவற்றிலும் உயர்வானதையே செய்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...