ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025
திருகுறள். துறவு பெருமை
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
விளக்கம்:- இவ்வுலகில் பிறந்த மனிதன் தன்னை முற்றிலும் துறந்துவிட்டு இறைவனுக்கு தொண்டு செய்து தன்னையே அர்ப்பணித்த அகத்தியர் திருமூலர் நந்தீஸ்வரர் முற்றும் 63 நாயன்மார்கள் பதினெண் சித்தர்கள், ரமணர்.வள்ளலார்.அருணகிரி நாதர். பட்டினத்தார்.
அவ்வையார். மற்றும் சங்க இலக்கியத்தில் உள்ள தமிழ் புலவவர்கள் தொல்காப்பியர் திருவள்ளுவர். பதினெண்கீழ்க்கணக்கு புறநானூறு அகநானூறு நற்றிணை நான்குமறை
ராமாயணம் மகாபாரதம் கம்பராமாயணம் மருத்துவ நூல்கள் படைத்த சித்தர்கள்
என அவர்களின் அருமை பெருமைகளை நம்மால் கணக்கிட முடியும்.
அவர்கள் இயற்றிய நூல்களைப் படித்து தெளிந்து பிறருக்கும் போதனை செய்து கூறமுடியும். ஆனால் இவ்வுலகத்தில் சாதாரண மனிதர்கள் (வரலாற்றில் அரசர்கள் பேரரசர்கள் விதிவிலக்கு) எத்தனைபேர் பிறந்தார்கள் பின்னர் இறந்தார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது கணக்கிடவும் முடியாது.
1.துறந்தார் பெருமை:- இவ்வுலகில் தோன்றிய அரும்பெரும் ஞானிகள் சான்றோர்கள் சித்தர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து தனது சுகம் துக்கங்களை துறந்து வாழ்ந்து, உலக மக்களுக்காக பல ஆண்டுகள் தவமிருந்து கற்றுத் தெளிந்து விட்டுச்சென்ற போதனைகள் நூல்கள் என்றும் இன்றும் சரி அதைத்தான் நாம் படித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கிறோம் என்றால் மிகையாகாது. இதுதான் பிறந்தவர்களின் பெருமையாகும்.
2.துணைக்கூறின்:- ஆதிகாலத்தில் இயற்றிய அனைத்து நூல்களும் முக்கியமாக வானியல் சாஸ்திரம் வைத்தியம் சோதிடம் இலக்கியம் கலைகள் அனைத்தும் இவ்வுலக மக்களுக்கு துணையாக இருந்து அதை படித்து தெளிந்து நாமும் சிறந்த ஞானியாகவும் சான்றோனாகவும் மாறுவதற்கு காரணமாக இருப்பது இவர்களின் துணை மூலம் தியானம் செய்து சிந்தித்து அவர்கள் நூல்கள் மூலம் கிடைக்கும் ஞானமே ஆகும்.
3. வையத்து இறந்தாரை:- இவ் உலகம் தோன்றியது முதல் கோடான கோடி உயிர்கள் மனிதர்கள் பிறந்தார்கள் வளர்ந்தார்கள், பின்னர் இவ்வுலகை விட்டு இறந்து மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் இன்றளவும் உலகம் எப்படி தோன்றியது என ஆராய்ந்து பல ஆயிரக்கணக்கான நூல்களையும் தத்துவங்களையும் பொது மறைகளையும் நூல்களாக எழுதி விட்டுச் சென்ற ஞானிகளின் பெயர் இன்றளவும் உலக மக்களால் நினைத்து உச்சரிக்கப்பட்டு அவர்களது போதனைகளை அறிந்து படித்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வுலக மக்களுக்கும் பயனுள்ளதாக யார் அதையே அனைவருக்கும் போதித்துக் வந்தால் அதுவே மனிதனாக பிறந்ததற்கு ஒரு நல்ல உபயோகமாக இருக்கும் என்றால் மிகையாகாது.
4.எண்ணிக்கொண் டற்று:-
இவ்வுலகம் தோன்றியது முதல் கணக்கிலடங்காத கோடான கோடி பேர் எத்தனை பேர் பிறந்து இறந்தார்கள் என்று யாராலும் எண்ணி கணக்கு சொல்லிவிட முடியாது. ஆனால் ஞானிகளை எண்ணி கணக்கிட்டு அவர்கள் விட்டுச் சென்ற நூல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
உட்கருத்து....தோன்றிர் புகழோடு தோன்றுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்
நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக