சனி, 1 பிப்ரவரி, 2025
திருமூலர் சூனிய சம்பாஷணை
பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு
திருமந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
இதன் பொருள் ஓரளவுக்கு சொல்ல முடிந்தால்
இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு
விவசாய நிகழ்வுகளை குறித்து ஒப்பீடு செய்து திருகுறள் திருமந்திரம் போன்ற உயர் அறம் மறைநூல்களும் உபதேசம் செய்வதை கொண்டு விவசாயம் ஞானம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதை அறிந்து கொள்ளலாம்
குரு அருளால் தெறிந்ததை பகிர்ந்து கொள்கிறோம் இதில் ஆயாசம் இருப்பினும் தெறிவிக்காலாம்
பதிவு எல்லாம் குரு பரம்பரையின் அடிநாதம் இதற்கு சகல உரிமைகளும் குருபாதங்களுக்கே சமர்ப்பணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமூலர் சூனிய சம்பாஷணை
பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக