உழவுக்குப் பகை எருவில் தீருமோ?
உழவின் பகை எருவிலும் தீராது.
உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.
உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்.4280
- (ஏற விளையும்.)
உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.
- (விளைவு அற விளையும்.)
உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.
உழவுக்கு ஏற்ற கொழு.4285
உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.
- (ஊணுக்கு முன்னே வரும். )
உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.
- (சரி.)
உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.
உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.
உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.4290
உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?
உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.
உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.
உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?
- (என்றால், ஊரிலே.)
உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.4295
உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.
உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.
உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
- (குண்டை-எருது.)
உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக