சனி, 1 பிப்ரவரி, 2025

பத்ர பூசை. இறைவனுக்குஇலை அர்ச்சனை

இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால், அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்: 1. முல்லை இலை பலன்: அறம் வளரும். 2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும். 3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ 4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது 5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம். 6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும். 7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும். 9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும். 10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும். 11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும். 13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும். 14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும். 15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும். 16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும். 17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும். 18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும். 20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 21. தவனம் இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் அதாவது அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்னியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கும் படி செய்தது பஞ்சபூத குணங்களை அடைவதற்கு இயற்கை இறை வழிபாடு மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமூலர் சூனிய சம்பாஷணை

பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...