திங்கள், 28 டிசம்பர், 2015

Tuesday, December 22, 2015

பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்


பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் ,  மருதேரி |  விண்ணப்பம்  


1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள்  இப்புவியெங்கும் நிறையட்டும்

   எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்

   வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்

   வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்


2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்

    சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்

    என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்

    ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய்  நிற்கட்டும்     


3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்

    ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்

    ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்

    உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும் 


4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்

    மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும் 

    பிரம்மன் ஊழ்வினை எழுத்தும்,  உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும் 

    கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும் 


5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும் 

    கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும் 

    கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை  அடியார்கள் வேண்ட சுரக்கட்டும் 

    அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும் 


6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்

    அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும் 

    நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்

    அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்


7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை  நாங்கள் பெறவேண்டும்

   அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை  அனைவரும் பெறவேண்டும்

    வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்

    கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்


8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்

    கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்

    குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்

    இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும் 


9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி

     தந்தையாகி  வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி

     அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி

     விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி


   உயர் திருடிகள் போற்றி போற்றி |   கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி