வியாழன், 4 ஜூலை, 2019

பிரம்மதேவர் பிரபந்தம்

பிரம்ம தேவர்

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக் கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம். பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.

பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படு கின்றனர். விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.

'ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.

முப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு ஏன் தனி வழிபாடு இல்லை?

தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.

'நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி 'மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.

''மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.

- இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.

'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

''பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார். அவர்தான் பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது. அதுவே 'ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன. அவை 'பூர்’, 'புவ’, 'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும் தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலை யும் ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா? அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.

'ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்மஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். 'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.


யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார் பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக் கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆக பிரம்மம் ஒரு ஆலயத்தில் அடைக்க முடியாது.... ஞானிகள்  குருமார்கள் வடிவில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்....... ஆக பிரம்மனுக்கு ஆலயம் இல்லாதது சாபத்தால் இல்லை பிரமன் வணக்கத்தை மட்டுமே செய்து விட்டு போகிற தில்லை..... நாம் இறுதி யாக  உணர்ந்து கொள்ள வேண்நினைப்புதும் பிரமத்தையே   .....தேகத்தையும் அதனுள் உயிர் தங்கிட வழி வகை செய்த பிரம்ம த்தை நினைவு கூர்ந்து கவனித்தால் தன் னுள் புலப்படும்......

இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான். அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்..... நன்றி படைத்தவர்க்கு

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

அகத்தியர் போற்றி

ஸ்ரீ அகத்திய பெருமான் போற்றி ஓம் அகத்தீசாய நமஹ: ஓம் சத்குருவே போற்றி ஓம் குறுமுனியே போற்றி ஓம் அகத்தீசா போற்றி ஓம் ஒளிரூபமே போற்றி ஓம் விபூதி பிரியரே போற்றி ஓம் பொதிகை வேந்தே போற்றி ஓம் இடரைக் களைவாய் போற்றி ஓம் அருள் செய்பவரே போற்றி ஓம் அட்டமா சித்தி அடைந்தவரேபோற்றி ஓம் தீபச்சுடரே போற்றி ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ ஓம் குறுவடி மகனே போற்றி ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி< ஓம் ஞான ரூபமே போற்றி ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி ஓம் சருவாந்தர் யாமியே போற்றி ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி ஓம் தத்துவமானவரே போற்றி ஓம் குற்றாலத்து பெருமகானேபோற்றி ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி ஓம் மாசற்ற மணியே போற்றி ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி ஓம் நற்கதி அருள்வாய் போற்றி ஓம் நறுமண விரும்பியே போற்றி ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி ஓம் இனிமையுடையோய் போற்றி ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி ஓம் தருமத்தின் வடிவே போற்றி ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி ஓம் கும்ப வடிவானவனே போற்றி ஓம் நீதி வழங்குபவனே போற்றி ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி ஓம் புகழுருவே போற்றி< ஓம் புலமைக்கு வித்தே போற்றி ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி ஓம் பரமானந்தமே போற்றி ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி ஓம் கரை கண்டோரே போற்றி ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி ஓம நீதி வழி நிற்போரே போற்றி ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றிr / ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி ஓம் வித்தையின் கடலே போற்றி ஓம் காட்சிக்கினியோய் போற்றி ஓம் கரும்பின் சுவையே போற்றி ஓம் நற்சுகம் தருவோய் போற்றி ஓம் சிற்சபை கண்டோய் போற்றி ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி ஓம் நன்னெறி உரைத்திட்டோய்போற்றி ஓம் மருத்துவ மாமணியே போற்றி ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி ஓம் பரிவு காட்டுபவரே போற்றி ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி ஓம் மகிமையை அருள்வோய் போற்றி ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி ஒம் எல்லையில்லா கருணையே போற்றி ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி ஓம் அல்லல் அறுப்போய் போற்றி ஓம் அருட்பெருந்தீயே போற்றி ஓம் அமுதே ஆனாய் போற்றி ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி ஓம் நித்யமடைந்தாய் போற்றி ஓம் அகத்தியர் அன்னை லோபாமித்ரை திருவடிகள் போற்றி போற்றி
ஞான சூரிய குரவஞ்சி


பரம்பரை வழியாய் வந்த பதமதைப் பற்றி மோன
வரமதை நல்கும் கவிக்கு வான் பொருள் தானே காப்பாய்
உரமாகி நின்று உயிர்க்கும் ஒளிமய உச்சிக்கனலே
சிரமதன் காப்பு ஞான சூரிய கவிக்கும் இதுவே

சற்குரு மேன்மைக்கு சாட்சி அருளும் என் குருவே
அந்த அற்புதம் சொல்லிட அட்சரம் இல்லை என் சிஷ்யா
அப்புறம் எப்படி ஆதி அறிவதென் குருவே
அந்த செப்படி வித்தைக்கு சென்மம் எடுக்கணும் சிஷ்யா
சென்மம் எடுப்பதை செப்புவதாரெந்தன் குருவே
உன்றன் கன்மபலன் அந்த கற்பக்குழியறை சிஷ்யா
கற்பத்தில் வந்தது கர்மத்தினாலோ என்குருவே
அந்த மர்மத்தை சொல்வதே மாமறையானது சிஷ்யா
மாமறைநூலில் மறைந்ததை சொல்க என்குருவே
அந்த பூமறைதான் இந்த பூமியும் வானமும் சிஷ்யா
பூவெனச்சொல்லிடும் பொக்கிஷம் காட்டும் என்குருவே
ஞானப்பாவினை பார்வை பதித்திடக்காணும் என் சிஷ்யா
பார்வையில் எப்படி பக்குவம் தோன்றிடும் குருவே
அந்த சீர் சொல்லும் சூரிய குருவஞ்சி கேளடா சிஷ்யா
சூரிய குருவஞ்சி சொல்லியதாரெந்தன் குருவே
உன்றன் சூரியச்சந்திர சோதியின் நாதமே சிஷ்யா
சோதிக்குள் நாதத்து சூட்சுமம் சொல்க என்குருவே
அந்தசேதிக்கு முன்உன்றன் செம்பொருள் சொல்கின்றேன் சிஷ்யா
செம்பொருள் சொல்லி என்சித்தம் தெளியவை குருவே
அந்த ஐம்பூத வண்ணத்து அற்புதம் கேளென்றன் சிஷ்யா
வண்ணத்தைச்சொல்லி என்வாசலைக் காட்டும் என்குருவே
உன்றன் எண்ணத்தில் ஊறிய ஈரொளியானது சிஷ்யா
ஈரொளியாகிய இன்பம் உணர்த்துக குருவே
அது பேரொளியாகிய பிரம்மப் பிரகாசமே சிஷ்யா
பிரமத்தில் வைத்துயர் பிரம்மோபதேசம் தா குருவே
அந்த பிரமக்கலை இரு கண்மணியானதே சிஷ்யா
கண்மணி பிரமம் என்றானது எப்படி குருவே
அது விண்மணி சூத்திர வேதஒளிமையம் சிஷ்யா
வேதஒளிமைய மேன்மை அருள்க என்குருவே
அது நாதம் உணர்ந்தபின் நன்கு விளங்கிடும் சிஷ்யா
நாதமயத்தினை நல்கிடவேண்டும் என் குருவே
ஞானப் பாதத்தை பார்த்திரு பக்குவம் தோன்றிடும் சிஷ்யா
பாதத்தில் நாதத்தை பார்ப்பது எப்படி குருவே
அது போதத்தில் ஊறிய ஞானசுகமயம் சிஷ்யா
நாதக்கலை என்னும் நற்கலை சொல்க என்குருவே
அது நாதவிந்து நின்ற ஒளிமய தீட்ஷையே சிஷ்யா
ஒளிமய தீட்ஷையுள் நாதம் விளங்குமா குருவே
தீட்ஷை ஒளியுள்ஒளிந்துள்ள ஒளியின் உயிர்நிலை சிஷ்யா
ஒளியின் உயிர்நிலை உன்னதம் காட்டும் என்குருவே
அது ஒளிஒளி மையத்து உட்கனல் ரகசியம் சிஷ்யா
உட்கனல் என்பதன் உண்மை உரைத்தருள் குருவே
அது கட்செவியாகிய கண்மணி தீண்டலே சிஷ்யா
தீண்டிடும்போதுயர் நாதம் விளங்குமா குருவே
அங்கு தீண்டிடதீண்டிட தீங்கனல் நாதமே சிஷ்யா
தீங்கனல் நாதத்தை தரிசிக்கும் தலமேது குருவே
அது பூக்குளமாகிய பொன்னொளி மையமே சிஷ்யா
ஒளிமையம் என்பது கண்மணியல்லவோ குருவே
அங்கு ஒளியென ஓங்கிய நாதத்தைப் பார்த்திரு சிஷ்யா
நாதத்தைப் பார்ப்பதா கேட்பதா சொல்க என்குருவே
ஞான நாதத்தைப் பார்ப்பதே நடுமணி சத்தியம் சிஷ்யா
கேட்கிற நாதத்தின் கேள்வி நிலை என்ன குருவே
செவி கேட்கும் புறநிலை கீழ்நிலை மாய்கையே சிஷ்யா
பார்க்கிற நாதத்தின் பரநிலை சொல்க என்குருவே
அது கூர்நெறி அகநிலை குருநிலை மாஅருள் சிஷ்யா
குருநிலை என்பதன் கூற்றை உணர்த்துக குருவே
உன்றன் கருநிலை காட்டிடும் காருண்யமாநிலை சிஷ்யா
காருண்யமானதன் காருண்யம் எதென்றன் குருவே
அது பூரண மௌனமனோண்மணி யானதென் சிஷ்யா
மௌனமனோண்மணி மௌன நிலை என்ன குருவே
அந்த மௌனத்துள் மௌனமாம் மோனமனோகரம் சிஷ்யா
மோனத்தின் நாதத்துள் மூழ்கும் நிலை சொல்க குருவே
அங்கு மோனமே நாதமாம் மோன தரிசனம் சிஷ்யா
மோன தரிசனம் கண்டபின் வேறென்ன குருவே
அந்த மோனமே முத்தியும் சித்தியு மாகுமென் சிஷ்யா
முத்தியும் சித்தியும் மூடமா வேடமா குருவே
உன்றன் புத்தியே முத்திக்கு வித்தென ஆனது சிஷ்யா
புத்தியே வித்தெனில் புத்திக்கு வித்தெது குருவே
அது அத்தனின் சித்த மென்றாகிய நாடகம் சிஷ்யா
சித்தம் அவனெனில் செய்வினை எப்படி குருவே
அவன் உத்திரவே உன்றன் நல்வினை தீவினை சிஷ்யா
நல்வினை தீவினை என்றனுக் கெப்படி குருவே
அந்த நல்லவன் ஆடிடும் நர்த்தன கூத்திது சிஷ்யா
கூத்தினை செய்திடும் கூத்தனக்கோ வினை குருவே
இந்த கூத்தை உணர்கின்ற கூர்நெறி கற்கவா சிஷ்யா
அவ்வினை பற்றிடா அறிவிற்கு அறிவருள் குருவே
இங்கு எவ்வினையானாலும் எனதல்ல தென்பதே சிஷ்யா
எப்படி சாத்தியம் இப்படி வாழ்வது குருவே
அந்த வெப்பு மணிமன்ற ஔசதம் கைகொள்க சிஷ்யா
உற்ற உடல் உள்ளம் உயிர் பிணி தீருமோ குருவே
ஞான பற்றற்ற மெய்கனல் பற்றிடு விட்டிடும் சிஷ்யா
ஓட்டை உடல் வந்த உன்னதம் சொல்லுக குருவே
இந்த கோட்டைக்குள் கோமகன் நின்று சுழன்றதால் சிஷ்யா
மண் இட்டு மூடிய பாண்ட மிதல்லவோ குருவே
இதில் பொன் இட்ட புண்ணிய பூரணம் உள்ளது சிஷ்யா
பூரணம் என்பதன் பூரணம் சொல்க என்குருவே
உடல் காரணம் கொண்டதன் காரியம் தானடா சிஷ்யா
நாற்ற உடலிற்குள் நாதன் இருப்பதேன் குருவே
உடல் மாற்றத்தில் மாறாத மாற்றம் அவன்தானே சிஷ்யா
மாறாமல் நின்ற மகத்துவம் சொல்க என்குருவே
அது கூறாமல் கூறிடும் கூர்மணி தீட்ஷையே சிஷ்யா
உடலுக்கா உயிருக்கா மனதுக்கா தீட்ஷை குருவே

அந்த மடலுக்குள் மூன்றையும் ஒன்றாய் அமைப்பது சிஷ்யா
ஒன்றினுள் ஒன்றென ஒன்றிடும் ஒன்றெது குருவே
அந்த ஒன்றுதான் ஒளிமய உட்கனல் ஓர்மையே சிஷ்யா
காமகுடம் என கண்ட குடம் இதே குருவே
இது காமகுடமல்ல ஓமகுடமிதே சிஷ்யா
சாந்திதரும் சித்தி ஞான நிலையென்ன குருவே
தனல் ஏந்தும் இருவட்டப் பாதம் பிடித்திரு சிஷ்யா
பாதம் பிடித்தபின் வேதம் அடங்குமா குருவே
சர்வவேதம் அடங்கிடும் வெட்டவெளியிதே சிஷ்யா
வெட்டவெளி தனில் வட்டயிடம் எது குருவே
நான் தொட்ட இடந்தனை தொட்டு பணிந்திடு சிஷ்யா
தொட்டுத் தொடர்ந்திட தொல்லை அழியுமோ குருவே
உயிர் சுட்டபழச்சுவை சூழ்வினை தீர்ந்திடும் சிஷ்யா
சூழ்வினை தீர்ந்தபின் ஜீவன் நிலையென்ன குருவே
அது வாலறிவாகிய வானம் அடைந்திடும் சிஷ்யா
வானம் அடைந்தபின் சோதிநிலை என்ன குருவே
அது மோனமடைந்துமே மோட்ஷமதாகிடும் சிஷ்யா
மோட்ஷமதாகிய முக்து நிலை என்ன குருவே
உயிர்சாக்ஷி கடந்திடும் சர்வக்ஞரூபமே சிஷ்யா
சர்வக்ஞம் என்பது ரூபம்அரூபமா குருவே
அந்த தர்மநிலை இருமாநிலை அற்றதே சிஷ்யா
வெற்றிடமாகிய வெற்றி நிலை என்ன குருவே
ஒளி பற்றியும் பற்றிடா இருள்நிறைவேயது சிஷ்யா
இருள்பரிபூரணம் என்பது உண்மையா குருவே
இங்கு இருப்பது இருப்பென இருள்மயமாவது சிஷ்யா
ஒளிஒளி தாண்டிய உயிர் நினைப்பேதிங்கு குருவே
அது ஒளிஒளிக்கிடம்தரும் உன்னத இருளருள் சிஷ்யா
அண்டசராசரம் ஆளும் நினைப்பெது குருவே
அது அண்டம்பிண்டம் நின்ற ஆதியிருள்மயம் சிஷ்யா
எட்டெட்டு சூத்திரம் எட்டுவதெப்படி குருவே
உன்னை தொட்டிட்ட கேள்வியை விட்டிட கூடிடும் சிஷ்யா
ஆணவம் விட்டது ஆணவம் விட்டது குருவே
என்றன் மாணவன் நீயல்ல மாகுரு சாமியே சரணே
ஏக சமநிலை பெற்ற அதிசயம் சரணே
என்றன் தாகத்திற்கு தண்ணீர் ஞானகுருவஞ்சி சரணே
நீர் தந்த சூரிய குருவஞ்சி அமுதமே சரணே
இந்த சீர்தந்த செம்பொருள் சூரிய மெய்க்கவி சரணே
மாரண சாட்சிக்கு மெய்ப்பொருள் சாட்சியே சரணே
என்னை பூரணமாக்கிய பூரண பூவிதழ் சரணே
சற்குரு சாற்றிய சத்தியம் சத்தியம் சரணே

இங்கு உற்ற பிறவியின் மெய்ப்பயன் குருவஞ்சி சரணே

வாலை தாய் போற்றிகள்



ஸ்ரீவாலைதாய்வீடு  வாலை போற்றிகள்
ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன்


ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்தநிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும். அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலதுமுறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும்.

குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச்சொல்லப்பட்டிருக்கிறது. சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளைகுறிப்பட்டுள்ளார். கொங்கணவர் தனது வாலை கொம்மியில், “முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசிப் பழக்கத்திலே அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே” (54) காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம் மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த மானுடன் கோட்டை பிடித்தவளாம்” (57) “வீணாசை கொண்டு திரியாதே இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே” திருமூலர் தனது திருமந்திரத்தில், “சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை” (1199) “முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர் ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை” (1073) “நீங்காத பச்சை நிறம் உடையவள் ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தளே” என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில், “ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு” என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள். மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர். பாலா திரியட்சரி மூல மந்திரம் “ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும். ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும். சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.
பாலா சடாட்சரி மூல மந்திரம்

ஓம் ஐம் க்லீம் சௌ சௌ க்லீம் ஐம்” திரியட்சரி மூலமந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம் பாலா நவாட்சரி மூல மந்திரம் “ஓம் ஐம் க்லீம் சௌ சௌ க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌ” சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம். பாலா தியான மந்திரம் “அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!” என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய் ஓடி வருபவள். வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும். மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன்வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும். ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், ‘நித்ய யெளவனா‘ என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள “தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா” என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான வெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம். “

வாலை வழிபாட்டு போற்றிகள் இது திருமூலர் கொங்கனர் கருவூரார் சித்தர்பாடல்களின் மூலத்திலிருந்து தொகுக்கப்பட்ட போற்றி துதிகள்


 ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்

ஓம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்

ஓம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஒலி தொடுகை உருவம் ரசம் மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
 
ஓம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்

ஓம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தாயே உன் பாதகமல தூசியே வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்

ஓம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி

: ஓம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்த வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

 ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓசை மணி பூரமதிலுதிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும்  வாலை தாயே போற்றி ஓம்

ஓம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்

ஓம் விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்

ஓம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்

ஓம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்

ஓம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்

ஓம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்

ஓம் பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்

ஓம் அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்

ஓம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்

ஓம் தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்

ஓம் சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்

ஓம் ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே  போற்றி ஓம்

ஓம் அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்

ஓம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்

ஓம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்

ஓம் பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்

ஓம் ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்

ஓம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்

ஓம் ஓங்காரி என்னும் ஒரு பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்

ஓம் ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்

ஓம் ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்

ஓம் தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்

ஓம் சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்

ஓம் ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்

ஓம் கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்

ஓம் ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்

: ஓம் சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்

ஓம் மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்

ஓம் சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்

ஓம் வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்

ஓம் தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்

ஓம் செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
 பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்

ஓம் மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்

ஓம் நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய ணீன் செந்தாரணியே வாலை தாயே போற்றி ஓம்


வாலை கன்னி அம்மன் அம்மானை பாடல்

1.

தேனமரும் சோலைத் திருவரங்கர்
எப்பொருளும் ஆனவர்தாம்
ஆண்பெண் அலியலார்காண்
அம்மானை ஆனவர்தாம்

ஆண்பெண் அலியலரே
ஆமாகில் சானகியை
கொள்வாரோ தாரமாய்
அம்மானை தாரமாய்?

தாரமாய் கொண்டதுமோர்
சாபத்தால் அம்மானை!

மூவருக்கும் முன்பிறந்த
மூத்தவளாம் பராசக்தி
முத்தி தரும் தாயவள்கு
பேரு என்ன அம்மானை?
பேறு என்ன அம்மானை?

இது திருவரங்க பெருமாளின் அம்மானை இதுபோன்று மூவர் சேர்ந்து கேள்வி பதில் தெளிவு என மூன்று பாடல்களில் ஐயம்தீரும் அம்மானை பாடல்


2.

முந்தி ஜெகம் பிறந்த
மனோன்மணி தாயவளின்
மகளாய் வந்தவள் பேர்
வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை

சத்திய பேருருவாம்
சித்தர்களின் தாய் வாலை
சித்தி என்ன அம்மானை
சித்தி என்ன அம்மானை

மாதா குமரி இவள்
மகிழ்ந்தமர்ந்த தாய் வீட்டில்
மாதவங்கள் சித்திக்கும்
வாலை அருள் அம்மானை
வாலையருள் அம்மானை


3.

சிரித்து புரமெரித்தாள்
சின்ன கன்னி ஆக வந்து
சென்ம வினையறுப்பாள்
வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை

சிங்க வாகினியாய்
மும்மலத்தை வேறருத்து
சின்மய ரூபம் காட்டும்
சித்தகத்தி அம்மானை
சித்தகத்தி அம்மானை


4.

மூன்று சத்தி ஓருவாய்
முளைத்தெழுந்த வாலைக்கு
நாதமென்ன அம்மானை
நாதமென்ன அம்மானை

ஓமெனவும் ஆமெனவும்
ஊமை எழுத்துடனே
ஆமென்று அழைப்பதுவே
அன்னை நாதம் அம்மானை
அன்னை நாதம் அம்மானை

முச்சத்தி ஆனவள்கு
முப்பீஜம் பிரணவமும்
மகாமந்திரமே அம்மானை
மகாமந்திரமே அம்மானை


5.

கன்னியாக நின்றவளை
குவலயத்தில் சித்தர் எல்லாம்
தாயாக ஏற்றதொரு
தன்மை என்ன அம்மானை
தன்மை என்ன அம்மானை

கருபிறந்த கர்மத்தை
கட்டறுத்து நின்றவளை
கண்டவராம் சித்தர்களின்
கன்னி வாலை அம்மானை
கன்னி வாலை அம்மானை

காலமெல்லாம் அறிந்தவளை
காலைனையும் உதைத்தவளை
சித்தர்கள் கழல்பணிந்தார்
அம்மானை கழல்பணிந்தார்

 6

ஏடேந்தும் பாரதியாள்

தத்துவமாய் நின்றதனால்

வாலைக்கு ஆதி பீஜம்

ஐம் என்பார் அம்மானை

ஐம் என்பார் அம்மானை


சிரித்து புரமெரித்த

வாலை திரிபுரசுந்தரிக்கு

கிலியும் ஈராம் பீஜம்

என்பார் அம்மானை

ஈராம் பீஜமென்பார் அம்மானை


அல்லி மலர் தானமர்ந்த

வாலை மனோன்மணிக்கு

சவ்வுமே திரிபீஜம்

அம்மானை சவ்வுமே

திரு அம்மானை

7.

ஐயம் திரிபு நீக்கும்

ஆயி மகமாயி வாலை

அமர்ந்த இடம் பேருமென்ன

அம்மானை பேருமென்ன

அம்மானை


ஆதியந்த சோதிவீடு

அருந்தவத்தார் கூடும் வீடு

எங்கு இருக்கும் அம்மானை

எங்கு இருக்கும் அம்மானை


கோட்டை கட்டி நின்ற வீடு

கோடி சித்தர் கூடும் வீடு

உச்சிலே ஜோதி மேரு

ஒளி வீசும் தாயி வீடு

அம்மானை தாயி வீடு

அம்மானை

8.

மாற்றி பிறக்க செய்யும்

மாதா வாலை கன்னிகையை

சார்ந்தவர்க்கு என்ன பயன்

அம்மானை என்ன பயன்

அம்மானை


மாளா பிறவி தொடர்ந்து உழன்று

மறலிவாய் வீழாமல்

மானுடர் கரை சேர

வழிசெய்வாள் அம்மானை

வழிசெய்வாள் அம்மானை


ஊத்தை சடலமதில்

உள்ளார்ந்த ஜோதி வாலை

உள்ளமர்ந்து ஞானம் சொல்லி

உயர்த்துவாள் அம்மானை

உயர்த்துவாள் அம்மானை

 9.

தேமல் உடலழகி

தேன்மொழிச்சி வாலைகன்னி

தொடர என்ன பயன்

அம்மானை தொடர

என்ன பயன் அம்மானை


முந்தை பிறவியதில்

விட்டகுறை தொட்டகுறை

வாசனை காரணமே

அம்மானை வாசனை

காரணமே அம்மானை


விதியில் இல்லாவிடில்

தாயை மதி காண ஒன்னாது

விதி சதி செய்யாது

காத்தருள்வாள் அம்மானை

காத்தருள்வாள் அம்மானை

 10.

சிறுபிள்ளை ஆனவளை

சித்தர்கள் தொழுது நிற்கும்

சித்தம் என்ன அம்மானை

சித்தம் என்ன அம்மானை


சிதறும் மனம் ஒருமித்து

சீவகலை பெற்றாளும்

சதாகதியாய் சுழுமுனை தாயை

சார்ந்த நெறி அம்மானை

சார்ந்த நெறி அம்மானை


குளத்தில் நிறைந்த பாசி நீரை

மறைக்கும் கும்பத்தை உள்ளமிழ்த்த

குளபாசி விலகும் போல

கும்பக வாலை தாய்

அம்மானை வாலை தாய்

அம்மானை

 11.

ஜோதி மணிவிளக்காம் வாலை

சிரசதிலே சூரிய சந்திரரை

சூடியதேன் அம்மானை

சூடியதேன் அம்மானை


வாசி வடிவமவள் வாமி சுழுமுனையே

இடக்கலை பிங்களையாம்

ரவிமதி சுடர் அம்மானை

ரவிமதி சுடர் அம்மானை


முச்சுடர் ஆனவளாம்

முப்புடம் செய்பளாம்

ஞானத்தை முழுமையாக்கும்

வாலை தாய் அம்மானை

முழுமையாக்கும் வாலை தாய்

அம்மானை

12.

வாலை தாயவளை வரித்துமே

பூசிக்க வருபவர் யார்

அம்மானை வருபவர் யார்

அம்மானை


தாமரை தாது தேனை உண்ண

தேடி வரும் தேன் குருவி போல்

தானுணர்வாய் கூடுவார்கள்

அம்மானை கூடுவார்கள்

அம்மானை


தேனிருக்கும் இடத்தையே

தேனீக்கள் தானறியும்

முன்னை வாசனையால் முயன்று வருவார்

அம்மானை முயன்று வருவார்

அம்மானை


வல்லமை காரியான

வாலை கன்னி தாயவளை

வழிபடும் முறைகள் என்ன

அம்மானை முறைகள் என்ன

அம்மானை


சிந்து கவிகள் பாடி

சிறுகையால் கொம்மி தட்டி

பாடி பரவிடவே

வாலை தாய் மகிழ்வாள்

அம்மானை வாலை தாய் மகிழ்வாள்

அம்மானை


மனதை ஒப்படைக்க

மமகாரம் அண்டாது

தன்னை அறிவதற்கு

தாய் தயை செய்வாள்

அம்மானை தயை செய்வாள்

அம்மானை

13.


சிறுபிள்ளையாக வந்து

சிரித்து விளையாடும்

சின்மயத்தை காண்பரிதோ

அம்மானை காண்பரிதோ

அம்மானை


சிந்தனையால் நினையாத

சடத்தவர்க்கு தூரமவள்

சிந்தனை செய்தோர்க்கு

சிறுகன்னி மடியமர்வாள்

அம்மானை மடியமர்வாள்

அம்மானை


ஒற்றை சடை போட்டு

ஒய்யார நடைநடந்து

தாம்பூல வாயழகி

தான் வருவாள் அம்மானை

தான் வருவாள் அம்மானை

14.

கருத்த நாகமதை

ஆபணமாய் பூண்டவளை

காண்பரிதோ அம்மானை

காண்பரிதோ அம்மானை


அன்னை என்று அழைத்தவுடன்

ஆனந்தமாய் ஓடிவரும்

அருள்வடிவம் தாய்வாலை

அம்மானை தாய்வாலை

அம்மானை


பணிந்தரை நிமிரவைக்கும்

பராபரை வாலை தாய்

பக்திக்கு இணங்கிடுவாள்

அம்மானை இணங்கிடுவாள்

அம்மானை


அம்பாள் வாலை சகலகலைகளையும் அறிந்தவள் மந்திரபீடேஸ்வரி தாயிடம் மந்திர பூர்வமாக அணுகுவதைவிட பக்தி சரணாகதி மூலமாக பயன் அடைவதே சிறந்த வழி 

சித்தர்கள் தங்கள் பாடல்களில் சித்தமாதா வாலையை துதி செய்யும் சுருதிகள் வழியான போற்றி தொகுப்பு உள்ளது வெள்ளிகிழமை பூரம் நட்சத்திரம் தாயை வணங்க ஏற்ற தினம்

மாலை சந்திரோதயத்தில் சந்திரனை நோக்கி தீபமிட்டும் தாயை போறாறலாம்

வாலை வழிபாட்டில் குருவிற்கு மிகுந்தமரியாதை செலுத்தவேண்டும் வாலையே குருவாக பாவித்து வணங்க வேண்டும்
அகஸ்தியர் முதலான சித்தர்களை குருவாக வணங்கி பின் வாலை திரிபுரை லலிதை மனோன்மணி என உயர்நிலை வழிபாடாக உயர்ந்து மேருபூஜையை முடிவாக கொண்டு ஸ்ரீ நகரத்தில் பிந்துஸ்தானத்தில் அமர்ந்த அந்த ஆதி சக்தியோடு ஐக்கியமாகி பிறவி பெரும்பயனான வீடு பேற்றை அடையலாம்
அம்பிகை என்றால் ஆனந்தம்
அவளை அறியா அமரர்கள் இல்லை
அவளன்றி அருந்தவம் இல்லை

தாயை பக்தியோடு பணிவோம்
தயை அன்பு கருணேயை பெருவோம்

அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்
குமரகுருபரர் அருளிய சகல கலாவல்லி மாலை எளிதாக படிக்கும் வண்ணம்.....

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...