செவ்வாய், 12 ஜனவரி, 2016
Sadhananda Swamigal: Bhrigu Maharishi Guru Pooja images
Sadhananda Swamigal: Bhrigu Maharishi Guru Pooja images: Date: 24th December 2015 (ROHINI STAR) / மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரம் பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja L...
திங்கள், 28 டிசம்பர், 2015
Tuesday, December 22, 2015
பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்
பதிவு
:பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்
1) ஈசன் கிருபையால் எல்லையில்லா
அருள் இப்புவியெங்கும் நிறையட்டும்
எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை
நித்தியமாய் காக்கட்டும்
வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில்
தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு
போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும்
பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு
அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய்
நிற்கட்டும்
3) அன்பே இத்தரணியில் குருவே
நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே
பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும்
உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர்
வாழவேண்டும்
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு
பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும்
அடியோடு விலகட்டும்
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும்,
உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும்
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால்
முழுமையாய் மருதேரியில் தீரட்டும்
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல
பெருகட்டும்
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய
தீர்த்த ஆசி நிரம்பட்டும்
கற்பக விருக்க்ஷமாகி அழியா
அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும்
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும்
ஞானிகள் ஆசி சிறக்கட்டும்
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன்
சுரக்கட்டும்
நதிகள் சங்கமான மருதேரி புனித
தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும்
அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள்
பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை
அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில
மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி
அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே
பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி
வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட
மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும்
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி
வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி
சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள்
போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி
வியாழன், 1 அக்டோபர், 2015
புதன், 30 செப்டம்பர், 2015
திங்கள், 14 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி
சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன் ஆசி மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் ...








