புதன், 21 டிசம்பர், 2016

அண்ணாமலையான் திருப்பாதம் வணங்கி 
அறிவிக்கின்ற தத்தனது வாக்கை 
மேன்மைப்பட உரைக்க மாந்தர்களும் விளைகின்ற இத்தருணமதில் 
விண்ணமர உலகுதனில் கர்ம தர்மங்களை கண்டுணர்ந்து அழிக்கவே 
My Salutations to lotus feet of Annamalaiyaan (Fire form of Shiva) 
and here are my Verses as Datta (Dattatreya)
With higher state in this place where people are present
with determination in this world of Karma & Dharma to understand and destroy
எங்கள் அத்தனும் ஏற்றியதொரு அசிரம விதிப்படி 
சத்தியமாய் யாதொரு அதிகாரத்துக்கும் பணியாது 
ஆண்டவன் ஆயினும் எத்துணை சோதனை கண்டாலும் 
அதனை உள் உணராது ஈசனின் விதியை இசைபட கருதி 
Is per father's compilation the Principles of Ashram
Truly without surrendering to any form of Commands
Even with that of Gods and Even after going through multiple form of tests 
He doesn't take them in(being affected) and Undergoes Lord Shiva's Plan with Happiness
கருமமே தர்மமாய் வாழ்ந்து குருவென சேவைகொண்ட 
சித்தர்களில் மூத்தோனான பூரண சோமவொளி பொருந்திய 
பிருகுமாமுனியின் அருள் நிலை வேண்டி 
இக்காலம் அதில் எங்களது ஜெயந்திவேண்டி சோதியுற 
The Guru Who lived his "Karma as Dharma" and served is the
Elders of Siddhas and one with Fullness of Soma Light(Moon LIght) is
The Bhrigu Mahamuni; To get this grace and blessings
In this period on my Jayanthi, that's celebrated using Sothi (Aganda Sothi)
இத்தலத்தில் கொண்ட பூசையதில் அகமகிழ்ந்து வாக்குதான் உரைக்க கண்டு 
பூரண உத்தராயண காலம்முன் தலதீர்த்தங்கள் தனில் ஆசி கொண்டிட 
யாமும் எழுந்தருளி வரும் தருணம் பிருகுமுனியின்
கட்டளையில் இத்தலம் ஏக சிந்தை கொண்டோம் 
Due to the Puja in this place, with Joy are my Verses Now
Before the Uttrayana, in All Thalam (Sanctums) and Theertha (Holywater)for blessings
as I continue to raise everywhere to bless, per Bhrigu Muni's
Command I decided to come to this place (Maruderi)
ஆதிஈசன் தன்கருணையால் ஆசிரமங்களை ஸ்தாபனைசெய்ய சித்தமாய் இருக்க 
உத்திர தேசமதில் உயர்வான ஞானமும் ஜீவமும் கொண்ட 
உத்தமங்கள் நிறைந்த பிருகுதான் தன் பூர்வ நிலைகளை நிறுத்த 
மானசகமாய் இத்தலத்தில் எழுந்தருள சோதி ரூபமாய் அருளாட்சி புரிந்திட 
As Aadhi Shiva with his grace is keen to create Ashrams
From the Northern Part with higher Knowledge and life force
with Abundant Greatness is the Bhrigu, who wished to brings back his legacy
Hence as his mind's favourite place, he decided to raise & bless here in Jyothi Form and grace all
அகண்டமதில் அரசனை போல வீற்றிருந்து 
ஆன்ம நேயம் அளிக்க சித்தம் கொண்டதை அறிந்து யாமும் 
களிப்புற்று இத்தலம் ஏக சித்தம் கொண்ட இத்தருணத்தில் 
மாந்தர்கள் அறியவேண்டியது யாதென்று உரைப்போம் 
In the Agandam royally seated like the Great King 
I understood that he is here with determination to "Give Goodness for Aathma " and hence
with enthusiasm I decided to come to this place and for now
to people, I will be telling what you need to know
மகத்துவங்கள் கொண்ட இம்மானிட பிறவியில் 
தன்னிலை அறிந்தோர்கள் அற்பமே 
தன்னிலையில் பிறவியின் பயன் அறியாது 
பாழ்நிலை கொண்டு தனம் பொருளில் தர்க்கத்தில் அதிகாரத்தில் 
In this birth of human that is all about Greatness
Only very few get to know their real state
In their self state without knowing the reason for birth
Ruin their state in by Materialistic nature, Quarreling and Seeking Power
மனம் செலுத்தி மாண்டு மடிந்து பிறவி பல கண்டோர் 
அறியாது நின்ற மார்க்கமே சன்மார்க்கமாய் 
சத்துவதில் உணர்ந்ததொரு விடயங்களை மறைக்கவல்லது கர்மமெனும் பாகமே 
எத்துணை வழியிலும் இது அரண்போல் எதிர்த்துநிற்கும் 
Let their mind on those, perish and die, thereby got into births are those
Who were not aware of this Margam. The sanmarga and Sathuva
which help realize things can get hidden by the share of karma
And by all possible ways it will stand and oppose like a nice route
இதில் குற்றம் உணர்ந்தோர்கள் அவ்வழி செல்லாது மறைப்பதற்கு ஆயிரம் வழிகளை பிழையாய் காட்ட வல்லதாய் இருக்க 
அவ்விதம் தனமும் செல்வமும் அதிகாரமும் இன்னும் பிற 
மனமாயைகளில் வீழ்ந்து துயரமுற்று மாந்தர்கள் பிறவிகளில் உழன்று வீழ்கின்ற தருணமதில் அத்தனின் ஆசியால் உத்தம சடங்கு நிலைகளில் மனதை செலுத்தி சங்கடங்கள் கொள்ளாதிருக்க
Those who are aware of this flaw, don't take that route, which is capable of showing false things as 1000 wonderful opportunities
That way Money, Wealth and Power and extra
are the Maya in which people fall and get subjected to sorrow and the birth trap, That is when with blessings of father and his great 
principles has to be filled in mind without falling to trap to mere rules
உதித்துடும் இச்சோதியதில்  சன்மார்க்க நியதி  தன்னை 
மீண்டும் மலரச்செய்ய இத்தலத்தில் நாயகமாக கொண்ட பிருகுமுனி 
தன்னுடைய ஞானங்கள் எல்லாம் தவநெறிகள் எல்லாம் தானமாய் ஈந்திட 
தட்பரமாய் ஈசனின் ஸ்வரூபமாய் நிற்க வல்ல இத்தலத்தில் 
by the raising of this Jyothi, is the sanmarga principle and that
is reborn in this place with Center Purusha being Bhrigu Muni
who is giving his Gnana and Meditation principles as Dhaan (Dhaanam) here
and stand as Thatparam with Swaroopa of Lord Shiva in this place
உற்றிடும் அடியார்கள் கூடி உணவு மருந்து இன்னும்பிற தவநிலைகளும் 
யாதொரு காலத்திலும் நிலைத்திட நாங்களும் பரிபூரண ஆசிஈய வல்லதாய் 
கலியுகத்தின் குற்றங்கள் குறைகள் உரைத்தால் யாவரும் அறியவொண்ணா நிலையாய் இருக்க 
சித்தர்களே மீண்டும் உத்தரவாய் வந்திடும் தருணம் என உரைக்க 
Here his disciples/followers come together for food, medicines and to meditate
Forever these good things to get stationed here, is my Complete blessings with Virtue
The problems and deficiencies of kaliyuga is beyond anyone's comprehension now
Siddhas come here with discipline and command in this place
சத்தியமாய் இத்தலத்தில் யாமும் உறைகின்ற வாக்கு 
சனாதன தர்மத்தின் வழியிலே பிழைபட மாந்தர்களுக்கு தக்க பாடங்கள் கற்பிக்கும் தருணமாய் இருக்க 
வேதியர்களும் வேதத்தின் சூட்சமங்களையும் எதிர்த்திடும் பல்வித குற்றங்களும் அகற்ற வல்லதாய் 
சன்மார்க்க நெறிதனை சார்ந்து அவ்விதம்  உயர யாமும் துணையிருக்க சித்தம் கொண்டிருந்தோம் 
So the truth/fact at this place my verses continues now
Per Sanathana Dharma it is time to train/teach them lessons
To overcome the problems that is built against Vedha Practioners, and the hidden secrets of Vedas
Is to abide by the Sanmarga Principle, that way to raise I'll be supportive here is my Siddham
பேதமை இல்லாது மனமொன்றி தன் மாயாவாதங்களை அழித்து 
பூரண ஆன்ம சுதந்திரம் பெறவே இன்று எழுந்தருளி இருக்கும் மாந்தர்க்கு யாம் ஆசியீந்தோம் 
மொழிகடந்து மௌன ஞானத்தை அடைவதற்கான சாட்சியாய் இத்தலத்தில் தாரணியின் 
உயர்வித மௌனதபங்களை மேற்கொள்ள சித்தமாய் இருக்க 
Without differentiation and by aligning to mind and fighting the distractions created by Maya
For complete freedom of Aathma, I raise today and bless the people here today
To reach the Gnana that is beyond language and to achieve and witness the Dharana's
Higher form of meditations is the decision here
 உத்தம தருணம் என்று அகத்தியன் முதலான சித்தர்களும் எழுந்தருளி 
இத்தேசத்தில்  பாரதத்தின் உன்னத நிலையை அறிய அத்திரியின் வழிமுதலான 
ஞானங்களை உனக்கு உணர்த்த  மேம்படுகின்ற சித்தர்மொழிகளை யாவையும் பன்மொழியாக்கி  பரவசெய்ய 
உத்தம தருணம் இது அஞ்ஞானத்தில் உழன்றோர்கள் சத்துவநெறிகளை சார்ந்து வாழ இத்தலங்களில் 
And the timing is right hence from Agasthya to all Siddhas raise here
In this country Bharat to attain higher states by Athiri and his way
of Gnana and for you to realize them, the verses of Siddha that allows one to grow is to be translated to multiple languages and to spread this now is the right time
Those who lack Gnana and get lost for them to know and abide by Sathuva Principles,  in this place
இனிவரும் காலத்தில் ஒவ்வொரு ஆசிரமத்தில் உண்டான குறை குற்றங்களையும் பிழைகளையும் களையும் வண்ணம் 
யாமும் அவதரிக்கும் தருணம் இவ்விடத்தில் பஞ்சபூதங்களால் சுத்தம் செய்து 
பரிபூரணமாய் அத்தனின் வழி கடைபிடிக்க இனி ஆன்மகுற்றம் உடையார்க்கு அவை அழிக்க பைரவனும் துணையாய் கருப்பன்போல் ஆயுதம் ஏந்தி இனி கலங்கச்செய்து அவர்களை சன்மார்க்கம் மீட்டெடுக்க வழிகொண்டோம் 
In the times to come, in every ashrams, will work on mistakes, deficiencies & inadequacy and remove them
in this time as I raise,  this place (Maruderi) is cleansed by the Pancha Bhootha
With completeness by following the path of Father for people with mistakes in Aathma will be destroyed by help of Bhairava
in addition like Black (Karuppan) with weapons will shake up things and revive the sanmargam path
ஆக செயந்தியதில் உரைத்திடும்வாக்கு சத்துவவழிகளில் செல்வோரும் சார்ந்திருந்து  நின்ற மார்கமதில் 
விடாமுயற்சியுடன் யாதொரு இயற்க்கை குற்றங்களையும் அணுகாதிருக்க இயற்கையை சார்ந்து வாழும் 
உத்தமநிலைதனை அறிவிக்க யாமும் நல்லாசி புரிவோம் எதிர்த்திடும் மாந்தர்க்கு இன்னுமொரு சண்டமாருத நிலைபோல் சூழச்செய்து இவ்விதத்தில் இயற்க்கைக்கு அப்பால் பட்ட நிலை இல்லையென்று சத்திய நிலையை நிலை  செய்வோம் 
Thus in Jayanthi the verses are, In Sathva path and the marga that abides that
with Perseverance to ensure there is messing with nature the way is live with it
Thus I pronounce is the Best state and my good blessing for it. However for people who Oppose.. like the Great Hurricane
Things will Surround to prove nothing is beyond nature. as we will instill that as the permanent state
பூரண பூசையதில் சித்தமாய் எங்களது அம்சமாய் வழி தோன்றலாய் நின்ற சத்தியத்தின் உருவமாய்  நின்ற 
அவதூதனின் ஆசியும் பரிபூரணமாய் ஓங்கியிருக்க வந்தோரும் இந்நாளில் அவரின் பரிபூரண ஆற்றலை பெற்று 
நல்வித நிலைகளை அடைய இன்று சாந்தஸ்வரூபியாய் அருளும் பொருளும் வழங்க சித்தம் கொண்டிருந்தான் 
என் மகன் சீவகலை யதில் பெருமை பெற்றோன் 
In the absolute and complete pooja as decided, as our Amsa's birth stood as truth's form
The Avadhuta whose blessing was strong and high, those who came felt and received his energy/blessing
For all to attain good states today, in silent form he arose and decided to bless all for wealth and health
So is my SON who is famous on Seeva kalai (Life force related)
மூத்த அவதூத சித்தனாய் உலகோர் எட்டுத்திசையிலும் வணங்கும் சாய்நாதன் தன்னருளால்  
யாவையும் வழங்க வல்லான் எங்களது அம்சமாய் ஓர் பிறவி கண்ட மைந்தனின் ஆசியும் ஒன்றிணைந்து யாமும் உருகக்கண்டு 
மும்மூர்த்தியாய் முச்சுடராய் முப்பெரும்சோதியாய் இன்று அருளாட்சி புரிந்த சோதி வடிவை கண்டோர் 
முக்குற்றங்கள் அகல வல்லதாய் இருக்க யாமும் இத்தருணம் மகிழ்ந்து யாதொரு குறைவின்றி ஏற்றிட்ட  இப்பூசை 
He is an Elder Avadhuta Siddha who is praised by world from 8 directions and worshipped as Sai Nath 
Who is capable to give everything as our Amsa who took a birth, is the son and his blessing with mine makes me melt and happy
As Trimurthi Trijyothi stood as Great TRIJYOTHI stood and blessed all, so witnessed everyone who visited
Thus capable of destroying Three-Sins (3 types of Errors) and at this time I'm so happy on this flawless Puja 
நித்தியமாய் நித்தியமாய் நடந்தேற எங்களது ஆசி பரிபூரணமாய்
உற்றிடும் தாளமதில் சன்மார்க்திற்கு  தடையாய் நின்ற  தனங்களும் தைரிய குற்றங்களும் 
பிணிக்குற்றங்களும் இன்னும் பிற தடங்களும் விலக சத்தியமாய் இக்காலத்தில் வாக்குரைப்போம் 
சாந்தமும் பரிபூரணமுமாய்  இயல்பற்ற இருந்த  நிலைமாறி  பூரணமாய் எச்செயலையும் செய்யவல்ல 
Thus Sheer Blessings are so for this to happen on a daily basis
In this time for Sanmarga, the issues that stood blocking the Money and Courage
Malady and other Blocks to go away is my next set of True Verses now
With Silence and in completeness on things that were incomplete/with hurdles will changes and to do any thing in full and completely
பரிபூரண ஆசிதனை அளித்து காத்தருள நடைமுறை ஆசிதனை ஈந்தோம் 
சித்தர்கள் மொழிபுரியாது சீர்கெட்டு நின்ற மாந்தர்கள் 
சித்தர்கள் சித்தம் தெளிவிக்க சித்தர்மொழிகள் நடைமுறையில் உரைக்க இத்தருணம் ஆசிபட 
இக்காலமதில் யாவரும் அறியும் வண்ணம் சித்தர்களின் மொழியில் சித்தர்களின் நிலைகளை  உரைக்க   
Is my Fullness of blessing that I gave you now as we speak 
Without understanding Verses of Siddhas and getting ruined; for those People
Things in Siddhar's mind have to be clarified to those People in pragmatic manner, So now are blessings
In this time, so everyone knows the Siddhar's verses and the stands/states of Siddha
இத்தலத்தில் என்றும் ஆசியுற உயிர்படும் அவஸ்தைகளை நீக்கி நந்தியும்  பதினெண் சித்தர்களும் உறுதுணையாய் நின்றிருக்க நித்தியமாய் சோதியதை கொண்டு நிலைபெற ஓர் உயிர்க்காவது அன்னம் ஈந்து  உயிர்படும் அவஸ்தைகளை நீக்கி 
நல்விதமாய் மருந்தும் ஆற்றலும் பரிபூரணமாய் நிலைக்க யாதொருகாலத்திலும் தனநிலை குன்றாது இருக்க நல்லாசி புரிவோம் 
இன்றும் யானும் எழுந்தருளி இருக்கின்ற நிலையை தொழுது இக்காலமதில் முச்சுடரை கண்டு சோதியின் நிலையறிந்து  ஆசிபெறுவீர் மக்காள் முற்றே 
In this place(Maruderi) with blessings to heal avasta of life forms, Nandi and Pathinen Siddhas Stand together and Strengthen
The Jyothi has to be on daily basis with atleast food given for one life minimum, removing the avastha of the life
In good manner Medicine & Energy with Completeness get stationed, ensuring at any point there won't be problem to money is by Good blessings now
Today those who witnessed by raise and worshiped, during this period worshipped the Tri form of Jyothi thus understand the Jyothi's state and stay blessed Oh Kids 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ  பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழம...