ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி
Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136
மார்கழி –ரோஹிணி மகா அகண்ட ஜோதி பெருவிழா(
சோடச மகாலக்ஷ்மி பூஜை –குபேர
பூஜை ஜோதி தரிசனம்
அனைத்து சித்தர்கள்
அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருடம் மார்கழி
மாதம்25 ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 09-01-2017
காலை9 am
முதல் மாலை 10-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ பிருகு மகரிஷி ராஜசிம்மாசனத்தில் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம்
கொண்டுள்ளார் ,அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்கள்
அனைவரும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ பிருகு மகரிஷியின் அருள் ஆசியும் ஸ்ரீ பிருகுமுனிவரின் அகண்ட ஜோதி தரிசனமும்
காண பெற்று பயனடைய வேண்டுகிறோம் ..அன்றுசித்தர்கள்முறைப்படி சோடச மகாலஷ்மி பூஜையும்
–குபேர பூஜையும் ஜோதி தரிசனமும் (16 லக்ஷ்மிகள் எழுந்தருளுதல்)
உலக நலம்
பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள்
கர்ம நிலை தாக்கம் விலகும்
பொருட்டும் அகத்திய முனிவரின் 108மூலிகை கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து அன்னதானமும்
வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி
நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற
வேண்டுகிறோம்
-இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி
Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136 |
சனி, 24 டிசம்பர், 2016
ஞாயிறு, 11 டிசம்பர், 2016
dadata potrri
சாமுண்டி
![]() சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். . தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள். மயிலாடுதுறை நகரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது. மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்) அம்மன்: ஞானாம்பிகை சிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் ஊர்: மயிலாடுதுறை மாவட்டம்: நாகப்பட்டினம் தல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார். அதற்கு சிவபெருமான்,நந்தி! இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். தல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று இங்கு சண்டிஹோமம் நடக்கிறது. போன்: 04364-242 996 சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்! சாமுண்டி பாடல் : பாரமேருவிற் பரமனைப் பரவும் உத்தரமா யூரநாதனை உம்பர்கள் தம்பெருமானைத் தீரமேதரு சாமுண்டி பூசனை செய்து வாரம்மேய பல்வரங்களும் பெற்றுளம் மகிழ்ந்தாள். சாமுண்டி பைரவி பூஜா ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம: ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம: காயத்ரி: ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே; சூல ஹஸ்தாயை தீமஹி; தந்நோ, காளீ ப்ரசோத யாத் தியான ஸ்லோகம்: சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா; கபால சூல ஹஸ்தா; ச வரதாபய பாணிநீ; ஸிரோமாலா உபவீதா ச பத்ம பீடோ பரிஸ்திதா; வ்யாக்ர சர்மாம்பர தரா வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா; வாம பாத ஸ்திதா, ஸர்வா ஸவ்ய பாத ப்ரலம்பிதா; நவாமி சாமுண்டா தேவிம் மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம : அர்ச்சனை: ஓம் சாமுண்டாயை நம ஓம் மாங்கல்யாயை நம ஓம் குலவர்த்திந்யை நம ஓம் மேர சயங்கர்யை நம ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம ஓம் பர்ணசந்த்ரநிதாயை நம ஓம் அஷ்டபுஜாயை நம ஓம் த்ரிதசபூஜிதாயை நம ஓம் மகிசாசுநாசின்யை நம ஓம் ஜயவிஜயாயை நம ஓம் வரதசித்தியாயை நம ஓம் காள்யவர்ணாயை நம ஓம் மாம்சப்ரியாயை நம ஓம் பாபபரிண்யை நம ஓம் கீர்த்தியாயை நம ஓம் பந்தநாசிந்யை நம ஓம் மோகநாசிந்யை நம ஓம் ம்ருத்யுநாசிந்யை நம ஓம் பயநாசிந்யை நம ஓம் ராஜ்யதாயை நம ஓம் பவமோசந்யை நம ஓம் ஆர்யாயை நம ஓம் ஆத்யாயை நம ஓம் த்ரிநேத்ராயை நம ஓம் பிநாகதாரிண்யை நம ஓம் சண்டகண்டாயை நம ஓம் சித்தரூபாயை நம ஓம் சர்வமக்த்ரம்யை நம ஓம் அநந்தாயை நம ஓம் சதாகத்யை நம ஓம் அபர்ணாயை நம ஓம் பாடலாவத்யை நம ஓம் வந்துர்க்காயை நம ஓம் மாதங்க்யை நம ஓம் வராஹ்யை நம ஓம் ப்ராஹ்ம்யை நம ஓம் ஐந்தர்யை நம ஓம் கௌமார்யை நம ஓம் மகேச்வர்யை நம ஓம் வைஷ்ணவ்யை நம ஓம் விமலாயை நம ஓம் இலக்ஷ்ம்யை நம ஓம் புருஷாக்ருத்யை நம ஓம் உதகர்சின்யை நம ஓம் நித்யாயை நம ஓம் புத்திதாயை நம ஓம் நிசும்பசும்ப பகந்யை நம ஓம் மகிசாசுரமர்திந்யை நம ஓம் மதுகைடபஹர்ந்யை நம ஓம் சர்வாசுர விநாசாயை நம ஓம் ப்ரௌடாயை நம ஓம் அப்ரௌடாயை நம ஓம் பலப்ரதாயை நம ஓம் மகோத்திர்யை நம ஓம் அக்நிசுவலாயை நம ஓம் ரௌத்ரமுக்யை நம ஓம் முண்ட கண்டாயை நம ஓம் பத்ர காள்யை நம ஓம் சிவதூத்யை நம ஓம் காத்யாயந்யை நம ஓம் சாகம்பர்யை நம ஓம் குண்டல்யை நம ஓம் விச்வ ரூபிண்யை நம ஓம் ஹ்ரீங்கார்யை நம ஓம் அசலாயை நம ஓம் சூஷ்மாயை நம ஓம் சர்வவர்ணாயை நம ஓம் மதூசித்யை நம ஓம் ஸ்வாஹாயை நம ஓம் த்ரிபுராந்தகாயை நம ஓம் த்ரி சக்தியை நம ஓம் திரைலோக்யவாசின்யை நம ஓம் அத்ரி சூதாயை நம ஓம் நிர்க் குணாயை நம ஓம் காமிண்யை நம ஓம் சர்வகர்மபலப்ரதாயை நம ஓம் சர்வ தீர்த்தமயாயை நம ஓம் புண்யாயை நம ஓம் அயோகிசாயை நம ஓம் ஆத்மரூபிண்யை நம ஓம் சரண் அருளாயை நம ஓம் சௌபாக்யதாயை நம ஓம் ஆரோக்யதாயை நம ஓம் பக்தவத்சலாயை நம ஓம் கட்ககரத்தாயை நம ஓம் திவ்யாம்பரதாயை நம ஓம் நாராயண அம்சாயை நம ஓம் பாத்ரஹஸ்தாயை நம ஓம் குண்டல பூர்ணகாணாயை நம ஓம் க்ருஷ்ணாயை நம ஓம் பாச தாரிண்யை நம ஓம் தநுர்தாரிண்யை நம ஓம் சக்ர தாரிண்யை நம ஓம் கண்டாதாரிண்யை நம ஓம் கேடக பாணியேயை நம ஓம் திரிசூலகரத்தாயை நம ஓம் கோபரூபிண்யை நம ஓம் ருத்ரதாண்டவாயை நம ஓம் வாக்கிஸ்வரி அம்சியே நம ஓம் வாகீஸ்வரியாயை நம ஓம் ரௌத்ரி கோபாயை நம ஓம் வைஷ்ணவி ரூபாயை நம ஓம் ப்ரம்மசாஸ்ததாயை நம ஓம் அபிராமியாயை நம ஓம் ப்ரத்தியங்கராயை நம ஓம் துர்க்காசாயாயை நம ஓம் பைரவி அம்சாயை நம ஓம் சண்டமுண்டசம் ஹாராயை நம ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா. பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும். துதி: தம் ஷட் ராக ரால வதனே சிரோமாலா விபூஷனே சாமுண்டே முண்ட மதனே அம்பிகே நமோஸ்துதே. |
வெள்ளி, 25 நவம்பர், 2016
தன்வந்திரி போற்றி | ||||||
|
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சேயோன் முருகன்
ஓம் ஆறுமுகா ஓம் சண்முகா ஆறுமுகன் – தத்துவத்தின் ஆன்மிக வெளிப்பாடு முருகன் என்பது வெறும் புராணக் கதாபாத்திரம் அல்ல. அவர...

-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன் ஆசி மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் ...