Thursday, November 10, 2016
Thus Spake Agasthya @ Maruderi on Dhanvantri Puja
ஷண்முகனின் பொற்கமல பாதம் போற்றி
சாத்திடுவேன் அகத்தியன் சீவ வாக்கை
வண்ணமுறும் பிருகுமகன் குடிலம் தன்னில்
வாகடத்தின் அதிபனான தன்வந்த்ரி பூசை
With Obeisances to golden feet of Shanmuga
I (Agasthya) will Adorn the Jeeva Vaakku
In the Vivacious Bhrigu's Ashram @ Maruderi
On Puja of Dhanvantri, "The head of Greater-Medicines"
பூசையது கண்டுஉணர்ந்தும் கேட்டுணர்ந்தும்
உளம்மகிழ்ந்து நின்றதொரு சித்தர் கூட்டம்
மாசில்லா நின்றதொரு மாலவன் தான்
மகத்துவங்கள் அளிக்குமொரு சித்த மூத்தோன்
On hearing and seeing this great Puja and Yagna
Stood and enjoyed a larger group of Siddhas
Without Flaw stood the Malavan himself
Giver of Greatness is the Eldest Siddha of Medicines
மூத்தோனாய் யாமிருந்து வாக்கு தன்னை
மொழிகின்றோம் இன்றுயெம் மக்கள் அறியவேண்டி
வேண்டியதோர் விக்கினங்கள் அகற்றி வைத்து
வினைத்தனையே வேரறுக்க ஒன்று கூடி
As Eldest among Siddhas, I now pronounce verses
so It becomes easy for my people to understand
Eliminating the hurdles for those who prayed
To removes the bad karma and its roots with togetherness (All people coming together)
கூடியுமே இன்று நாள் ஏற்றபூசை
குறைவரவே ஆசி தனை வேண்டி நின்றீர்
நின்றதொரு காரணத்தை நாங்கள் கூற
நிர்மலமாய் பிருகுஅவன் குடிலம் தன்னில்
Together today on the Participated Puja
Many Prayed requesting for this Blessings (Earlier)
Thus to understand the background of event, We state
In the Highly Pure State at Bhrigu's ashram
நாங்களும் எழுந்தருளி காலம் காலம்
நலம்பல தான்அருளி நின்றோம் அப்பா
அப்பனே இன்றுரைத்த காலம் தன்னில்
அருணனவன் நீச்சமுற்று இருந்த தோடம்
We continue to raise time after time (In agandam)
And bless all for many things my Son
This to say in this period and day my song
When the effect of sun is considered down (that can generate illness)
தோடங்கள் தனைப்பற்றும் பிணி குற்றங்கள்
தான் விலக சிந்தித்து பூசை கொண்டீர்
கொண்டவிதம் சித்தர்களும் மகிழ்ந்து ஏற்றி
குருபலர்கள் ஒன்றுகூடி இத்தலத்தில் வந்து
Thus on Illness and Diseases that inflict us with problems
To get cured from that was the thought for this Puja
Thus Siddhars were happy the way event was conducted
With Many Gurus coming together @ Maruderi the place was filled
வந்தமே யாதொரு தோஷம் அன்றா
வாகுடத்தின் ஆகுதியியை ஏற்றான் மூத்தோன்
மூத்தோனாய் நின்ற தொரு தன்வந்த்ரியை
முழுமனதாக வணங்கியர்க்கு அகத்தின் பீடை
Hence all the Negativity (Doshas) will stay Away
the Elder-Siddha of Medicine happily received the Oblations
As Elder stood the Great Dhanvantri and
For those who Prayed with Pure Heart, the inner rooted diseases
பீடையெல்லாம் தான்விலகி போகும் என்று
பித்துநிலை வேரறுக்கும் தருணம் அப்பா
அப்பனே மைந்தர்களின் அறிவுரையை
ஆசானாய் இன்றுநாங்கள் உரைப்போம் சொல்வோம்
Time for the Rooted diseases to be cured and
Eliminate issues related to Mental illness
My son on the advises to our-sons(people)
As Guru today we will Preach and Say
சொல்லுகின்ற பிருகுமுனி வாக்கு தன்னை
சூழ்ந்திருந்த மானுடர்க்கு உரைக்க கண்டாய்
இக்காலம் தனில் மாந்தர் வாழ்ந்தகாலம்
எடுதியம்பா துயரங்கள் விலக்க வேண்டி
What I say is the Vaaku/Verses of BhriguMuni
for the people who are surrounded and hearing
People live in such an age and time (This period)
To cure problems that are so intense/bad and hard to express
வேண்டியே தவநிஷ்டை கொண்ட எங்களை
வணங்கியே பலமாந்தர் நித்தம் நித்தம்
நித்தமமுமே வேண்டி நின்றபொருட்டுமே தான்
நியமித்தோம் இத்தலத்தில் பூசை தன்னை
People Pray to those who do Penance Like us
Thus prayed many daily and daily (on a daily basis)
Due to that Daily Prayers was the reason behind the Event
Hence we planned for this Great Yagna in this place
தன்னிலே சித்தர்முறைக்கு உகந்த வண்ணம்
தளராத நவ மூலி சப்தமூலி
அறியாத மூலிகையின் ரகசியத்தை
ஆற்றலை கண்டார்கள் வந்தோர் தாமும்
As per the Disciplines and procedures of Siddhars
The herbs of Nava-Mooli and Saptha-Mooli
The unknown Secret of the Mooli's
Power was recognized by the people who visited
தன்னிலையில் பிழையில்லை குற்றமில்லை
தனமகளும் தாமெழுந்து வரத்தை ஈந்தாள்
தன்னோடு வந்ததொரு சொதிரன் என்று
தட்பரனை வணங்கியே நின்றார் அப்பா
In its style to say there was no flaws or errors
The great Mahalakshmi arouse and gave a boon
as the brother (Dhanvantri) who arouse with her
and worshipped the Supreme here my Son
அப்பனே இதுகுறைகள் எதும் இல்லை
அழகான மார்க்கமதை பற்றி சென்றீர்
சென்றவிதம் இன்னுமொரு புதுமை கேள
சக்தியோட பாகமதை மீண்டும் என்ன
My son there are no shortcomings in way things were done
As you all follow the Beautiful Maargam (Sanmarga of Siddhars)
The way it headed let me tell one more new and interesting thing
The Sakthi's power to repeat things like this again
மேலான பூசைகளும் இத்தலத்தில்
மிகுவிமர்சையாகவே நடத்திட சித்தம் கொண்டார்
கொண்டவிதம் இது கூடி மாந்தரெல்லாம்
குறிக்களவு கடந்து யாமே அனுப்பிவைத்தோம்
With more Pujas of higher quality in this place
and decided to execute them in a grand manner
The event and the way people visited Maruderi
beyond said list was orchestrated and sent by us.
இவ்விடத்தில் சங்கடங்கள் யாதும் கொள்ளா
இறைநிமித்தம் என்றே சேவை கொள்வீர்
வந்தோர்க்கு உணவு ஈவும் வாகடமும்
வருஷிக்கும் இத்தலத்தில் தோடம் இல்லை
In this place without any Type of worries
Do your services as that is God's wish and Need
And Offer Food and Medicine to all who visit
The produces(Food) in this place has no Negativity (Dosha) in it
ஓர்துளி அன்னமது கிட்டினால் கூட
உதிரத்தில் அதுக்கலக்கும் திண்ணம் அப்பா
உதிரத்தில் கலந்ததொரு சத்து எல்லாம்
உன்மத்த குற்றத்தை போக்க கண்டோம்
Even if one drop of food gets consumed
It will for sure mix in the blood my Son
All that mixes into the blood has the Power
to cure even the deepest issue of Minds.
கண்டதொரு கண்மூடி தவங்கள் செய்யும்
கருத்தர்கள் தனை சூழுந்து சிந்தைகொண்டு
கொண்டுமே ஆசியும் ஈந்தார் அப்பா
குறையொன்றும் இல்லையென்று பகரச் சொன்னார்
Realized who close their eyes and do penance
Surrounded me with their deep thoughts
gave their blessings to all my Son and
Asked us to share "That there were no errors/missings"
சொன்னவிதம் நந்தியும் இன்று நாளில்
சுருக்கமாய் ஒரு வாக்கு பகரக்கொண்டோம்
கண்டதொரு கயிலாய பூசைக்கு ஒப்பாய்
கருத்துடன் செய்வதற்கு யார் உபதேசித்தார்
Also Said Nandhi Devar in this very day
Had a Short Dialogue exchange with me
Expressed his surprise that "Puja looks similar to that of Kailash"
and asked who gave these details to do this so effectively.
என்றுமே வினவியே நந்தி கேட்க
இக்கணம் பிருகுமுனி மகிழுந்து சொன்னார்
அறியாத மானுடர்க்கு அறங்கள் தன்னை
அறிவித்து நின்றோமே அப்பா என்றார்
Thus Questioned the great Nandhi on this
With Joy Bhrigumuni Replied
"For those who are unaware of Formalities
I expressed how to do this"
யென்றவிதம் நந்தியும் மகிழ்ச்சி யோடு
ஈசனவன் ஆற்றல்களை எடுத்து செய்து
செய்துமே தீர்த்தமதில் அமர்ந்து இருந்து
சுகமளிக்க சித்தம்கொண்டோம் என்று சொன்னார்
Nandhi devar with happiness now expressed
" The Power of Lord Shiva was taken and made
Thus made and hence I sat on Theertham (Water source)
To offer Pleasantness and that was my determination today"
சொன்னவிதம் மாந்தர்களின் பாதம் தன்னில்
வருவித்த தீர்த்தமெல்லாம் கங்கைக்கு ஒப்பாய்
ஒப்பான புனிதமதை அளித்தது அப்பா
ஒருகுறையும் அண்டாது இதுமேல் மக்காள்
As said in the feet of People who visited
in the washed feet the Theertham was equivalent to GANGA
and gave the same out of divinity (similar to a wash in Ganga)
Henceforth no problems will come near my kids
மக்களே அறியவே இன்று வாக்கு
மொழிகின்றேன் என்மார்கம் கொண்டோர்கெல்லாம்
எல்லாமே மாயையில் இருக்க இருக்க
இத்தருணமதில் விழிப்பு செய்ய கண்டோம்
My Kids for you all to understand is my verses now
I pronounce For All those who FOLLOW in our SIDDHA MARGA (The path of Siddhas)
All that Which is in, IS IN Maya
In this Moment we saw the Awareness Created
நூலிலே பொருளிலே தேடிடாமல்
நல் கருணை உள்ளங்கள் தனிலே நின்று
நின்றுமே சித்தர்களின் மார்க்கம் தன்னை
நிர்மலமாய் அன்னதர்மம் ஈயச் சொன்னோம்
Don't Look & Search for meanings in the book
and Stand by the Kindness in Your Hearts
Standing by the path of the great Siddhas
With Pure Mind asked you to do the Anna Dhana
சொன்னவிதம் இத்தலத்தின் பூர்வீகம் தன்னை
தன்னையுமே உணர்ந்துமே தாவர சங்கமத்தை
கண்டுணர்ந்து பொலிவாக்கி செய்வீர் மக்காள்
இதுவே சித்தர்க்கு செய்யும் சேவையாகும்
As said the heritage/Legacy of our land is to
Understand the Finer details of Herbs and Plant Families
Research Analyse and with Clarity Use them My Sons (For Medicines and Yagna)
This is the service that you can do for Siddhars
ஆனதொரு சிறுஉயிர்கள் போற்றி செய்து
அகத்தியனின் வாக்குப்படி தயை கொண்டிருக்க
எவ்வுயிரும் உங்களுக்கு சாதகமாய்
இருக்குமென்று அகத்தியனும் வாக்கு சொன்னோம்
By that even smaller lives (Ant, Small Birds) will praise you
This is my (Agasthya) savings, to show compassion
Thus all living being will favor your deeds
So is my Versus (Agasthya's versus)
சொன்னோனும் அசூயையில் நின்றிடாமல்
சித்தரென்றும் பித்தரென்றும் பேதகம் பாரா
எவ்வுயிரும் ஒன்றாக நினைத்து விட்டால்
ஏதுக்குறை இல்லையப்பா கர்மம் தீண்டா
As said without being Prejudiced/Jealous
Never differentiate between Siddhars and Pitthars
If all life-forms are thought/Realized as One without differentiation
there will be no-issues and karma won't touch you
தீண்டாத விஷம் அப்பா சித்தருக்கு
திறம்படவே கர்மமும் அணுகாது இருக்க
இருக்கவே பலஉயிரை போற்றி காத்து
இத்தலத்தில் தயைக்கொண்டு இருப்பீர் மக்காள்
It is a poison that does-not affect Siddhas
Thus for karma to Stay away from you
Do cherish all life forms and Protect them
With Compassion live in this place my sons
மக்களே ஷண்முகனின் ஆசி வேண்டி
இத்தலத்தில் எழுந்தருளி இன்று வாக்கு
சொன்னதெல்லாம் சித்தநிலை உலகுக்கு அறிய
சீவர்களின் உள்புறமும் இருந்து காக்க
My Sons to-get Blessings of Shanmuga (Six Faced Lord)
This is the verses for that in this place
Whatever said on Siddha-state is for world to understand
And to also save the people (practitioners) from the Inside
வல்லமையாய் ஈசனும் இயங்கும் வண்ணம்
வருவானே சித்தரவர் உருக்கொண்டு தான்
கொண்டுமே இதுக்காலம் சிவனே சொல்ல
கருமத்தின் குறைபோக்க வரும் ரூபம்தான்
With Greatness the way Lord Shiva Operates
He comes to the world in the form of Siddha
In this time and moment as Lord Shiva himself Says Now as
A Physical form to reduce the problems of Karma
தான் ஆன கபால தாரியாக
கங்கைக்கு அதிபனான பைரவன் போல்
போலுமே வந்துமே அகந்தை தன்னை
புறம்யெடுத்து ஈசனை போல அழிக்கக்கண்டு
Is me as the Kabala dhari Form
As the Head of Ganga the Bhairava
comes and thus eliminates the Ego
by bringing out externally and destroy like Lord Shiva
மாயையே பற்றாது யிருக்க மேலும்
மகத்துவத்தை அளிப்பார்கள் யென்று சொல்ல
சொல்லவே இத்தலத்தின் பூசை நெறி
செழிப்பாக நாங்களும் ஆசி யீந்தோம்
To not get inflicted by the Maya
To say will give all the greatness
To tell the Pooja discipline of this place
will prosper is our blessings
நல்லதொரு ராஜகுணம் கொற்றவன் போல்
நாங்களும் தொழுதேற்றும் பிருகு மைந்தன்
மைந்தனே சிவனுடைய செய்கைபோல
மகத்துவங்கள் அளிக்கவே இத்தலத்தில் மாறாது யாவரும் வழிபட்டு --- மேன்மைபல தாம் அடைவீர் ஆசிவாக்கு முற்றே
With the Great Character of King and like the Emperor
is whom even we praise and do Obeisances , Son- BHRIGU
His action are similar to that of Lord Shiva
to provide greatness in the place and for everyone to visit and Pray
To attain more greatness is my Blessing Verses today.
thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக