செவ்வாய், 31 மே, 2016

அருள்மிகு போகநாதர் குரு பூசை 03-6-2016-காலை10 am முதல் மாலை 6-௦௦pmவரை

அருள்மிகு போகநாதர் குரு பூசை



சித்தர் 5 வகை படுவர். அதில் இரசாயன மார்கத்தை தழுவி நின்ற சித்தர்களில் பிரதானமானவர் போகநாதர் பெருமான்.  மூலிகைகளை தாண்டி தாது (Minerals), உலோகங்கள் (Metals) மற்றும் பாஷாணம் (Poisons) கொண்டு பல உன்னத மருந்துகளை நம் முன் வைக்கின்றனர். என்றெல்லாம் கடினமான பிணிகள் மற்றும் நிலம் சார்ந்த துன்பங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் போகர் பெருமானை பற்றி நிற்கவே பிருகு மகரிஷி மற்றும் அகத்திய மாமுனிவர் ஆசி உறைகின்றனர்.

முருகனுடைய தத்துவத்தை பிரதனாமாக வைத்து செல்லும் இந்த இரசாயன வகை சித்தர்களை ALCHEMIST என்று கூறுவது உண்டு. உலோகம் மற்றும் பாஷனத்தின் பர சூட்சுமத்தை அறிந்தவர்கள். இதனால் ஏக தத்துவத்தின் தன்மை கொண்டு ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாய் மாற்றும் தன்மைகளை கண்டுபிடித்தனர். இதனை இரசவாதம் என்றும் கூறுவர்.

போகர் பெருமான் உயிகொல்லும்  கடுமையான நவபசாணத்தை சுத்தி செய்து, அதனை பல நோய் அகற்றும் மா மருந்தாக மாற்றினார். அதனை கொண்டே நவபாசாண முருகனை பழனியில் தோற்றுவித்தார். அந்த முருகனை அபிசேகம் செய்து வரும் பஞ்சமிர்தம், சந்தனம் மருந்தாக மாறி பல கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டு உள்ளது.

போகரும் கோரக்கரும் முருகனுடைய அகமார்க்க சூட்சுமத்தின் மிக தலையாய சித்தர்களாய் அகத்தியரின் மார்க்கம் பற்றி நின்றனர். தன்னுள் இருக்கும் அசுரனை அளித்து அழியா குமரனாய் வாழும் முறையே அது

போகரின் சீன (China) நாட்டு தொடர்பு அனைவரும் அறிந்ததே. பதிவுகள் அவரை Laozi Boyang என்று கூறுகின்றது. அவருடைய சீட வர்க்கம் (Yu) என்னும் புலிப்பாணி என்றும், Kong என்னும் கொங்கனவர் என்றும் கூறுகிறது.





ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி
அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம் வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am முதல் மாலை  6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள் ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின் அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம் பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும் பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
-இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி

சனி, 21 மே, 2016

  •           ஸ்ரீ போகர் ஜோதி விழா வைகாசி பரணி                       
                          ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி

    Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136

    அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம் வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am முதல் மாலை  6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள் ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின் அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம் பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும் பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
                             -இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி
    ஸ்ரீ போகரின் சில தொகுப்புகளும் அவரின் நூல் தகவல்கள் சில
    போகர் 12000
  • சப்த காண்டம் 7000
  • நிகண்டு 1700
  • வைத்தியம் 1000
  • சரக்குவைப்பு 800
  • செனன சாகரம் 550
  • கற்பம் 360
  • உபதேசம் 150
  • இரணவாகமம் 100
  • ஞானசாராம்சம் 100
  • கற்ப சூத்திரம் 54
  • வைத்திய சூத்திரம் 77
  • முப்பு சூத்திரம் 51
  • ஞான சூத்திரம் 37
  • அட்டாங்க யோகம் 24
  • பூசா விதி 20
  • போகர் 7000
போகரின் சப்த காண்டம் - 7000
1.
ஆனந்த மாய்நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர்பாதம்
வானந்த மாகிநின்ற கணேசன்பாதம் மருவியதோர் மூலத்தின் நந்திபாதம்
தானந்த மாகியதோர் காளாங்கிபாதம் கனவருட வியாக்கிரமர் பதஞ்சலிபாதம்
போனந்த மாகியதோர் ரிஷிகள்பாதம் போற்றி ஏழாயிரம்நூல் பகலுவேனே
2.
தானான தாமிரபரணி ஏழுகாதம் தாக்காண காவேரி எழுபதுகாதம்
வேனான கங்காவும் எழுநூறுகாதம் வேகமுடன் சென்றுமல்லோ குளிகைகொண்டேன்
கானான கடலேழும் சுற்றிவந்து காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்டு
பாணான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் சப்தகாண்டம் பண்பாய்த்தானே
3.
பண்பான வைத்தியமும் வாதமார்க்கம் பரிதான ஜெகஜால குளிகைமார்க்கம்
நண்பான சித்தர்களின் மறைவுமார்க்கம் நலமான ராஜாக்கள் இருந்தமார்க்கம்
திண்பான தேவர்தாம் கடந்தமார்க்கம் திறமான மனோவேகம் செல்லும்மார்க்கம்
தண்பான சாஸ்திரங்கள் தொகுப்புமார்க்கம் தயவான மூலிகையுட ரகசியங்காணே
4.
காணவே பாண்டவா ளிருந்தமார்க்கம் கதிர்மதியின் கிரிகைகளி லிருக்குமார்க்கம்
பூணவே பிரமாலய தேவாலயங்கள் புகழான பாசமான மலைகள்மார்க்கம்
தோணவே சரக்குகளின் வைப்புமார்க்கம் துறையான ஆதிமலைக ளிருக்குமார்க்கம்
ஈணவே மிருகங்கள் மகத்துவமார்க்கம் எழிலான பட்ஷியுட மார்க்கம்பாரே
5.
பார்க்கவே மனிதரிடம் பேதாபேதம் பாங்கான உரைகோடி சொந்தங்கோடி
ஏர்க்கவே அதிசயங்கள் எடுத்துக்கூற ஆதிசேஷ னாலும் ஆகா
சேர்க்கவே உலகத்தின் மகிமைகோடி சிறப்பான அதிசயங்கள் உள்ளதெல்லாம்
ஆர்க்கவே சித்தர்களை வணங்கியானும் அன்பாக போகரிஷி அறைந்திட்டேனே
6.
அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்க ளெல்லாம்பார்த்து
குறைந்திட்டேன் போகரே ழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
வறைந்திட்டேன் நாலுயுக வதிசாயங்கள் யாவும்வாகாக பாடிவைத்தேன் சத்தகாண்டம்
வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே
7.
புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவி தெல்லாம் வாதம்போச்சே
8.
போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு
தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே
9.
கரிமுகன் பதம்போற்றி கடவுள்பதம்போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம்போற்றி
அரிஅயன் பதம்போற்றி வாணிபதம்போற்றி அருள்தந்த லட்சுமிதன் ஆயிபதம்போற்றி
வரியமாம் பாட்டனென்ற மூலர்பதம்போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம்போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே
10.
தானான ஏழுலட்சம் சிவன்தான்சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
பானான பாட்டுரைதான் கருக்கள்கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
தேனான காளாங்கி ஐயரையுங்கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே
11.
காணவே மூலமது அண்டம்போல காரணமாய் திரிகோண மாகிநிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
நாணவோ நாற்கமலத்து அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
மூணவே முக்கோணத்துள் ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே
12.
அகாரத்தின் மேலாக கணேசன்நிற்பார் ஆதியொரு கோணத்தில் உகாரம்நிற்கும்
உகாரத்தின் வல்லமையால் சக்திநிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ் குண்டலியாஞ்சக்தி பெண்பாம்பு போல்சுருட்டி சீறிக்கொண்டு
சுதாரமாய் சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீத மென்ற அவத்தைதானே
13.
அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய்நிற்கும்
நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
வவத்தைக்கும் வாய்திறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே
14.
தானான லகிமாவும் கிரிமாவோடு தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி பேரேட்டுத் தேவரையும் தளத்தில்நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார் ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி வங்கென்று வாங்கியே கும்பித்ததே
15.
ஊதினால் என்வாசத்தில் அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
போதினால் ஆயிசொன்ன ஏவல்கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
ஏதினால் இதுக்குல்லே வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே
16.
வாங்கியே நந்திதனில் சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
தாங்கியே வங்கென்று இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
தேங்கிய வல்லமையாஞ் சத்திதானும் சிறந்திருந்தால் பச்சைநிற மாகுந்தானே
17.
பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
மொச்சையாய் மூலமது சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சைநிற காயமுமே கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
துச்சைநிற வாதமது சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே
18.
பாரென்று புரிஅஷ்ட நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
காரென்ற தீபவொளி கண்ணோகூசும் கணபதிதான் கண்முன்னே நிர்த்தம்செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
நேரென்ற சதாசிவத்தின் நிலையும்சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே
19.
போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
சேச்சென்ற வீரசத்தம் கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டிவாங்கு
மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே
20.
உன்னியே பழகுமட்டும் கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரான சுழினைதன்னில் கெட்டிசேரும்
நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே
21. வாசியோகம்
நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப் பிணமாக சொல்லுக்கொக்கும்
பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோமே
22.
சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை அதைத் தாண்டி மேலேயேறே
23.
ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதையுள்ளே காட்டிக்கொண்டு
மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோச மாகியல்லோ பிரலப்பண்ணும்
தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே
24.
கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாய்ஞானம் பேச்சுமாச்சே
25.
ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்துபார்த்து
மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே
26.
இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
குறிப்பான மாத்திரைதான் ஏறஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே
27.
வார்த்தையால் தர்க்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி
தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே
28.
மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தை சுத்திபண்ணும்
காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில் கண்ணொளிதான்மீறும்
ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே
29.
மாட்டவே மார்க்கமாய் மூலத்தில்நில்லு மறவாதேயொன்றில் நின்று தேறினாக்கால்
ஆட்டவே அடிமரத்தை தொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
மூட்டவே மூலமது பழகினாக்கால் முகிந்தவிட மாறுகடந் தப்பால்தாண்டி
தூண்டவே துவாதசாந் தத்தில்சொக்கிச் சுருதிமுடிந் திடமறிந்து சேரலாமே
30.
சேரவே சகஸ்திரமா முண்டகத்தின்பூவைச் சேர்ந்தேறிச் சந்திரமண் டலத்தில்புக்கு
ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங் குண்டலியாந்தாய்க்கும்
பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம் பணிமாரி விவேகத்தாலே
தூரவே சோமப்பா லுகந்தளித்து தூயநால் மூலத்தில் குதிரைமுனைகட்டே
31.
கட்டியே அஞ்சலிபண்ணி குண்டலியாந்தாயை மனதில்வைத்து கணபதி வல்லபைத்தானும்
மூட்டியே முகிழ்ந்திரந்து வழிதாவென்று முனையான சத்தியென்பாய் மயக்கந்தீர
தெட்டியே வஸ்துவைத்தான் பாணம்பண்ணி செயலறிந்து கபாடமது திறப்பாரப்பா
எட்டியே நந்திபத மிறைஞ்சிபோற்று ஏற்றமாந் தொழிலெல்லாம் எளிதிலாமே
32.
எளிதிலே நந்திவந்து இரக்கமாகி எட்டா மறுபத்து நாலுமீவார்
நெறியிலே வாதங்கை கட்டிநிற்கும் நீச்சான குருவகைகள் நிஜமாய்தோன்றும்
களியிலே காயமது சித்தியாகும் கருத்தூனித் தான்வாய்க்கக் கலந்துபோவாய்
அளிகிலே ஆலமுண்டான் ஆட்டுக்காணும் மாச்சரியம் சிலம்பொலியும் மயக்குமாமே
33.
அயிக்கமாய் விழுகாதே காமத்தீயில் அனுதினமும் வேதாந்த முடிவைப்பாரு
ஒயிக்கமாய் ஒருவருடன் வாயாடாதே உண்மையா யிருந்துஉன்னில் உண்ணிப்பாரு
தியக்கமாய் பொய்கொலைகள் செய்திடாதே சேர்த்தேறு வாசியென்ற தேசிதன்னில்
மயக்கமாய் வஸ்துவைநீ பாணம்பண்ணி மத்தாலே யழியாதே மாய்கைநீக்கே
34.
நீக்கியே ஐம்புலனை அருத்துசாடு நித்திரையைத் தள்ளிவிட்டு காலைப்பண்ணு
தூத்தமரே சகபூதந்தானும் சுயம்பான கும்பகமும் கணக்காய் சூட்டு
தாக்கியே அமுர்தவெல்லந் தன்னையுண்ணு சங்கற்ப விகற்பமென்ற சட்டைநீக்கு
வாக்கியே பிராணயம் வரிசைதன்னை மறவாமல் மாட்டுதற்கு மார்க்கஞ்செய்யே
35.
செய்துமே யுற்றுப்பார் கருத்தையூனித் திகையாதே புலன்களோடு கணேசன்காண்பார்
கொய்த்துமே பூசைபண்ணி குட்டிக்கொண்டு கூர்ந்துமே வாசிதன்னை இருத்திவைத்து
ஒய்த்துமே ஓம்சிறியும் கிறியுங்கிளியும் உயரயெங் கணபதி யென்றுச்சரிக்க
நய்ந்துமே நந்தியர்கொடிக் கதிர்கொப்பு நற்சுழியில் ஒளிகண்டால் நமநாடானே
36.
நாடாமற் போவதென்ன என்றுகேட்க நற்சத்த பரிசமொடுரூபம் ரசகெந்தி
தாடாமல் சத்தோடு பொறிகளாஞ்சுந் தனக்கேற்ற வழிப்போக்கில் மனந்தானோடும்
தேடாமல் காதையைநீ போற்றினாக்கால் சொல்லொன்று கேளாது சூட்டிப்பாரே
37.
சூட்டிப்பார் இன்னமும்நீ பரிட்சைகேளு துடித்தன்னை போற்றிடிலோ ரூபங்காணார்
ஊட்டிப்பார் அமுதந்தன்னை அசைத்துக்கொண்டால் வளமான வாசமொன்றும் தோன்றிடாது
ஊட்டிப்பார் வாய்தன்னில் உப்பையிட்டால் உருக்கறிச்சு உப்பென்ற ருசியேகாணும்
ஓட்டிப்பார் என்பது முடலிலூர்ந்தா லேற்றமாம் அறிவாலே பரிசமாச்சே
38.
ஆச்சிசிந்தனை வேரால் நின்றாயானால் அரிருமாகா மந்திரியின் வேகமாச்சு
ஓச்சிந்து மனத்துணித்தம் பிராணயாமம் உகந்தேறி வாசியைநீ பிடித்தேபூரி
முச்சிந்த மூலத்தில் முதிர்ந்துகும்மி முனையான வயமுமாச்சு விவரிடாமல்
காச்சிந்த மூலத்தில் நின்றுநின்று கதறக்கண்டு தெரியும் மேலேயேறே
39.
ஏறியே பாரென்று ஐயர்சொன்னார் எனையீன்ற ஆயர்காளாங்கி நாதர்
பாருஇது வழியென்று பக்குவத்திச்சொன்னார் பதஞ்சலியும் வியாக்கிரமர் சிவயோகமும்
மீறியோ அதற்குவிளக்கஞ் சொன்னார் மிக்கபராபரித்தாயும் இதுவே சொன்னாள்
ஆரியோ தான்பார்த்து ஆறுவத்தை அநுபவித்து ஏழாயிரத்தில் அமைத்திட்டேனே
40.
அமைத்திட்ட சிகாரமென்ற அட்சரத்தா லழும்பாகான் வெளியில்லா கனமேசெய்வார்
குமைத்திட்ட வெளிதன்னில் கூகூகூகூ வென்று
நமைத்திட்டொரு சொல்லால் ஏழுகோடி காகமெனும் விரவியென்ற கடலில் வீழ்வார்
சிமைத்திட்ட சித்தமெல்லாம் மூலத்துள்ளே சிக்கென்று உன்னியே தியானிப்பாரே
41.
தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம் திகட்டாம துண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாக மனவிலங்கு மாட்டுவாரே
42.
மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்த மயமுமாகி
பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய் திடாகரித்து நாதாந்த பெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந் தத்தில்புக்கி சுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே
43.
துதிசெய்து மூலதனந் தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்ட கவளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான் நடுபீசம் லங்னம் ஆமே
44.
சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற துரியாதிக் கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடைய நிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே
45.
அஞ்சான பொன்னிற பிரமன்பக்க கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகப்பை அவர்தம் தண்டுகமண்டலமும் அட்சத மாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை பகர்ந்தநவ ரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்துண்ணே
46.
உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே
47.
என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமே கம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர் கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே
48.
மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்ற பிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல் பத்திதழ்தான் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுட மிடங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென் றறியலாமே
மணிபூரகம்
49.
அறிந்தமணி பூரத்தின் வீடுமாகும் அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்கு சக்கரமும் கருடவாகனமே
50.
வாகனமாய் லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமா யரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாய்தான் திரோதமையு மயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே
51.
வீடாக திரோதகையு மிருந்தவீடு வெகுபோகங் காமியத்தை விடுத்தவீடே
வாசா மனங்கலங்கி நின்றவீடு மாயமெல்லாங் குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக் கருத்தழிந்து பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே
52.
தாக்கியே சந்திரமண்டலத்தில் பூவை சகஸ்திரமா மிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபல தூபந்தானும் பண்பாக மனத்தாலே பாவகமே பண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப் பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே
53.
செய்யவே மாலொடு லட்சுமிதானும் சித்தமகிழ்ந் தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு பலனுஞ்சொல்வார் பலபலவாந் தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல் சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக் குண்மைசொல்வார்
ஐயவே அஷ்டாங்க மனைத்தும்பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே
அநாகதம்
54.
அறிவுக்கு மேலேறி யெட்டங்குலத்துக் கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோண மாருதற்கு முதிர்வளையம் பனிரெண் டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்கு யிதமில்நிற்கும் அட்சரந்தான் ஏற்றமாஞ் சழித்திய துக்கிருப்புமாமே
55.
ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமது தேயுதானாகும்
தேனென்ற செம்மைநிறச் சிவப்புமாகும் தேய்வுட பீசமது றவ்வுமாகும்
ஓமென்ற வொளிகோடி பானுவாகும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே
56.
தூங்கவே எழுப்பிமெல்ல பெண்ணைசேர்க்கும் சுகமஞ்சுஞ் சிவன்கைக்குள் தொழில்தானப்பா
ஓங்கவே ரத்தினசிம் மாசனமுமாகும் உமாசத்தி யாகுமடா அஸ்திமாலை
மாங்கவே மான்மழுவும் வரிப்புலித்தோல் மகரகொடி சூரியப் பிரகாசமாகும்
தாங்கவே தேவதேவா சர்ப்பாசனம் தரித்த தாயார் தாமே
57.
தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று
ஓமென்று உன்னியே உத்தமிதாய்பதத்தை உறுதியாய் மனந்தன்னை ஓங்கப்பண்ணி
ஆமென்று ஐம்புலனை பறிவாய்தள்ளி ஆதி அந்தமில்லா தாயேஎன்று
காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாக மனந்தன்னை ஒளியில்வையே
58.
ஒளியான நந்திவா கனமுமாகும் ஒருசாம வேதத்தி னுருப்புமாகும்
கனியான காமப்பால் மாச்சல்செய்து கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி
வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாய் ஞானமெல்லாம் விழலாய்ப்பண்ணும்
கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடே கூர்ந்திடாயே
59.
கூர்ந்திட்டாடு வளையில் காந்திதானும் கூகைக்கு மாக்காலம் குறிகண்டாப்போல
ஆர்த்திட்டு அவர்பதத்தில் மனவிலங்குமாட்டி அறிவோடே அசையாமல் அடற்குள்நின்று
ஏர்ந்திட்ட ஏறுதற்கு வழியைக்கேட்டு எட்டெட்டு சித்திக்கும் இயல்புவாங்கி
வார்த்திட்டு வாதத்தின் இனங்களெல்லாம் கேட்டு வகையான காயசித்தி மார்க்கங்கேளே
60.
கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து
தேளுமே சிவனோடு சத்திக்குந்தான் சிதையாமல் மனந்தன்னை திருவடிசேவித்து
வாழுமே மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி
மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடை தானே சுருக்காயேறே
விசுத்தி
61.
ஏறியே பனிரெண்டங்குலமே தாண்டி ஏத்தமாம் விசுத்தியென்ற தலமுமாகும்
மாறவே அருகோண வளையமொன்று மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான் அஆஇஈஉஊ வாமதுர வெயிரோஇல்லோ
துனையான எ ஐ ஒ ஔ அம் அம் ஆமே
62.
ஆம்முதலாய் பதினாறு எழுத்துமிட்டு அறுகோண நடுவேதான் வகாரம்நிற்கும்
வாமுதலாய் மஹேஸ்வரனும் மஹேஸ்வரியும் நிற்பார் மகத்தான சொப்பணத்தின் இருப்புமாகும்
பூமுதலாய் பூதமது வாயுமாகும் புகழான பீசமது அங்குமாகும்
நாமுதலாய் தாணவே தாந்தானாகும் சபல மனோவேகமாய் நாடலாமே
63.
நாட்டமாய் இவருடைய தொழிலுநன்றாய் நடத்தலொடு ஓட்டல்மயங்கிக் கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலொடு கலங்காமலிருத்தல் நிலையஞ்சின் விபரத்தை நிலைக்கக்கேளு
பூட்டமாய் பொசித்தலொடு ராகங்கேட்கல் பொங்கியே கோபஞ்சண்டை சினமடைத்தாங்கல்
ஓட்டமாய் ஓங்காரம் உன்னைக்கண்டால் உயர்வாயை திறந்திடுதல் உருதிகாணே
64.
உறுதியாம் ருசியாறு வாயினுள்ளே உரிசைதான் வாயினுக்கு பாலுமில்லை
பறுதியாம் பரமென்ற பீடமப்பா பரத்தி என்றுமோர் பண்புமாகும்
கிறிதியாமைப் பொறியின் கணையைவாங்கி பிசகாமல் நாலதனி லொக்கசேர்த்து
அறுதியாம் ஆதாரமெல்லாம் பார்த்து அப்பனே நாலுக்குள் அனைத்திடாயே
65.
அனைத்திட்ட நாலுக்குள் சிங்கென்றூணு ஆதியாம் ஓம்நமசிவா யாவென்றே
துளைத்திட்டு வாசியைநீ வாயிலூட்டில் சுருக்கிட்டு கட்டிடவே ஓடாதப்பா
பழைத்திட்டு பதினாறு தலத்தில்தானும் பாங்கான சீவகளை இருப்புமாகும்
தினைத்திட்ட சீவகளை இருந்தத்தானே சிறப்பாக பாடிவிக்கும் திறமையாமே
66.
திறமையோ புரிசையொடு உண்ணப்பண்ணும் சீவகளை இருந்துகொண்டு எட்டுநாளாய்
புறமையா இருந்துகொண்டு நாவும்பாழாய் புத்தியுள்ள சீவகளை மதிபோல்தேய்ந்து
நலுமையாய் நறைதிறையாய்ச் சேரமாண்டு நலமான ஜீவகளை போகுவதைக்காணார்
குறமையாம் நாதமது கண்டத்திற்காணும் குறிப்பான திரோதகையின் கூற்றுதானே
67.
தானான வாய்வுட வீட்டில்நின்று தம்பித்து ஆத்தாளைத்தான் விலங்குபூட்டி
போனான சந்திரன் மண்டலத்தில்பூவால் போற்றியே அடிவணங்கி வாசிபூட்டி
தேனான மேலேற வழிதாவென்று சுத்தசை தன்னிபத்தைத் தோத்தரித்து
வானான வாதசித்தி யோகசித்தி மகாசித்தி யோகசித்தி மார்க்கங்கேளே
68.
மார்க்கமாய் மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அய்யருமே யுளமகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார்
ஊக்கமாம் மஹேஸ்பரத்தின் பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே
69.
மேலேறி இரண்டு புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
மேலேறி வட்டமாம் வீடுபோலே வளையமொன்று ரெண்டிதழ்தான் எரஷரிவாகும்
ஆலேறி ஆங்கென்ற அட்சரந்தான் நடுவே ஆகாச பூதமாம் பூதபீசம்
மானேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின் வீடுமாமே
70.
வீடுமாம் வர்ணமது மேகவர்ணம் விலங்குகின்ற தொழிலதுதான் காமம்குரோதம்
வாடுவாம் லோபமொடு மோகமாகும் மதமாச் சரியத்தோடு அஞ்சாகும்
நாடுநான் முகன்மாலுஞ் சிவன்மஹேஸன் நலமாக காப்பார்கள் திகைத்துதானும்
தானுசதாசிவன் தானும் தளவாயாருந் தளவாயை கண்டாக்கால் சகலமாமே
71.
தளவாயை கண்டாக்கால் சம்சயந்தான்தீரும் சங்கற்பவகற்ப மென்ற சட்டைநீக்கும்
தளவாயை கண்டாக்கால் தாயோடே சேர்ப்பார் சச்சிதா னந்தத்தின் தன்மைகாண்பார்
தளவாயை கண்டாக்கால் சகலசித்துமாகும் தனைவானோடொத்த கள்ளனைந்து நிறமாகும்
தளவாயை ஐம்பத்தொன்றில் காணாதப்பா சாங்கமா யரைத்து நீ வாசிமாட்டே
72.
உரைத்துமே ஆக்கினையாஞ் சாக்கிரத்தில் உகந்துமே மனோன்மணியை உச்சரித்து
மரைத்துமே மந்திரத்தை சொல்லக்கேளும் மருவு கா ஏ இன் கூ ஆகல இரியுமாகும்
அரைத்தும் அசைகன் இரியுமாரு அதின்பின்பு அதிகழா யிரமமாகும்
உரைத்தும் மூக்கண்ட பஞ்சதேசாவிது உச்சரியே முனிந்துமே யுச்சரித்து மூட்டுநீயே
73.
மூட்டியே தாயாருட பதத்தைக்கண்டால் முஷ்காரமாய் கையெல்லாம் ஒருந்துட்போகும்
நாட்டியே யெடோட நாலுங்கூட்டி நாதாந்த சித்தயெல்லாம் சணத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் மயிர்ப்பான நெருப்பாறு கடக்கலாகும்
நீட்டியே நிராதாரம் அறியலாகும் நிச்சயமாய்க் குடுகளெல்லா நினைக்கலாமே
74.
நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும் நோய்மூப்பு சாடுநரை திரையும்போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்துங்காணும் கண்ணிமைக்குள் போற்றுயிர் கடிகிமீளும்
அனைக்கவே சாக்கிரத்தில் இருந்துகொண்டு ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும்பார்த்து
தனைக்கவே சரியொடு கிரிகையோகம் சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே
75.
தானான மனோன்மணியைத் தாண்டியப்பால் தணிந்ததோ ரெட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதந்தான் கூட்டிப்பாரு குறிப்பான புகழ்காணார் ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும் அகராமா மகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்துஅஞ்சும் வந்தமந்தாம் ஐங்கோணத்தில் நிற்கும்பாரே
76.
பார்க்கவே உகாரமா நடுமையத்தில் பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகராதநிர்மலன் தன்வடிவாம் பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள்வைத்து
நேர்க்கவே ஓடாமல் நிறுத்திப்பாரு நிலையாத பிரவியரும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தின் ஆதிபொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே
77.
அறியொணா பிரமாந்திரம் என்றுபேரு அதிலுடைய நிறந்தானும் படிகவர்ணம்
நெறியொண்ணா காயத்ரி யாகலின்னா நித்யநித்ய நிருபமாகும் நித்யசுத்த
பறியெண்ணாம் பரிபூரண சச்சிதானந்த பகாரிய நிரஞ்சன வித்துவங்கே
நெறியொண்ணா நிற்பாகா யதிமசியாம் மெறிவதனு சூடதம்பிர சோதயாதே
78.
தேயென்ற யிருபத்தி நாலாய்நின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து
வாவென்று வாசியைநீ இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல்
தேயென்று இருத்தியே கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க
பூவென்ற பிறவியற்ற பூரணத்தில் லயிப்பாய் போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே
79.
பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாய் பிரித்துப்பாரு
அருளான உன்மனையில் எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று
தெருளான பதினொன்றுஞ் செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன்
நருளான நந்தி யேழாயிரத்தில் நாட்டினார் நல்லநீவை நான்காணேனே
80.
காணாத மார்க்கமெல்லாம் காணும்நேராய் கடுசாக முனைமுகத்தில் கடிந்தால்சாறும்
வாணாதே யூணினால் பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும்
கோனாக குண்டலி கோத்தை நோக்கிக்கூர்ந்து பார்ப் பதினொன்று மொன்றுகாணும்
நானாதோடு மையம்நோக்கி னாக்கால் நலமான காலாந்தான் கோடிப்பானே
81.
பானான நூல்சொன்னபடி கேட்கும் பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால்
வானான வார்த்தையால் பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாய்தானும்
கானான காய்க்குமே தேங்காய்தானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம்
கோனான பறத்தினுட முடிவைப்பாரு குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே
82.
கேளுநீ மூலத்தில் குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி
நீளுநீ ரேசித்துப் பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும்
வாளுநீ நந்திவந்து வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும்
நாளுநீ வாசிவைத்து மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே
83.
நாட்டிட்ட மூலத்தைத் தாண்டிப்பின்னர் நலமான கஞ்சனு பதியிற்கூட்டி
ஒட்டியே வகாரத்தை உருத்திநோக்கி ஒளியான சிகாரத்தால் உள்ரேசிக்க
பாட்டியே பண்டான பிறவியறலாகும் பண்பாக நான்முகனைக் கண்டதாலே
மாட்டியே கஞ்சனுட பதியைத்தாண்டி மாவிருக்கும் மதியூடி மருவிநில்லே
84.
மருவியே வகாரத்தை யுட்பூரித்து வாதமாஞ் சிகாரத்தை உள்ளேரேசி
பருவியே பஞ்சநரை யெல்லாம்போக்கிப் பாலனுமாய் பதினாறு வயசுமாவார்
உருவியே யாங்கடந்து ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு
தருவியே சிகாரத்தை உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே
85.
சித்தியாம் ருத்திரன்தன் பதியைத்தாண்டி தெளிவான மஹேஸனுட பதியில்புக்கி
அத்தியாம் வகாரத்தை அசையாமல்பூரி யதுக்குள்ளே சிகாரத்தை உள்ரேசிக்கப்
பத்தியாம் சிறுபிள்ளை தானாவார்கள் பாருடலுங்கை நெல்லிக் கனிபோலாகும்
துத்தியாம் சிவயோகம் வைத்துப்பாரு துடியாகும் குளிகையெல்லாம் சுருக்கிலாமே
86.
சுருக்கான மஹேஸ்பரத்தின் பதியைத்தாண்டி சூஎன்றசதாசிவ மிடத்தே காலையூன்றி
மகத்தான சிகாரத்தை வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெவனமாகும்
செருக்கான மனோன்மணி மாதாவின்பாதம் திரமான வாசிவைத்துப் படியேபார்க்க
பெருக்கான மெய்ஞான நிராதாரந்தான் செய்வான வாசினைதான் தானும்நீயாமே
87.
நீயான குருபதத்தில் நின்றாயானால் நிலையான சிவயோக வாசிஓட்டு
தாயான பூரணமும் சகலதெரிசனமாஞ் சதமான வகரசிகாரத்தின் மார்க்கம்
வயலான வலுவைத்தான் வைத்துமங்கே மதியோடேபார் மகத்தான சித்தி
தீயான நீக்கவிட மற்றுநின்ற சிறந்திடுமே பூரணந்தான் சித்துமாதே
88.
சித்தாகப் பாய்ந்தேன்நான் அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின்சித்தஞ் சொன்னார்நந்தி
அத்தாக அண்டியஞ்சலித்து அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி
பத்தாக துனையென்றார் பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து
கத்தாக மலினியை காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே
89.
நுழைந்திட்டே நிருவிகற்ப நிறையானயோகி நேரஞ்சு தனித்தனியே கோடிசித்தர்
குழைத்திட்டு தெவிட்டாதே பார்த்துநின்றேன் சித்தாணியுனக் கெந்நாளாச்ச தென்றார்
குழைந்திட்டு கொடியறுத்து மாச்சுதென்றேன் நுறியதளஞ் சித்திப் பாரென்றார்கள்
மழைத்திட்டு நுழைந்தேன் பின்னோரண்டத்தில் மகத்தான சித்தர்க்கு கைகூப்பினேனே
90.
கைகூப்பி கட்டியதோர் பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது
கைகூப்பி நீள்சாரடைந்தயோர் களரியோரைக் கண்டு நானஞ்சி வலம்வந்தேன்
கைகூப்பி பரிவான அடுக்கொன்று தன்னில் பாய்ந்தேநான் முடியேறி பரிந்துபோந்தேன்
செய்கூப்பி அண்டமெல்லாம் சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாய்ந்திட்டேனே
91.
பாய்ந்திட்டேன் அண்டத்தில் நுழைந்துபார்த்தேன் பலகோடி சித்தர்கள் வாசித்தார்கள்
ஆய்ந்திட்டு அனைந்திடும் நூலார்தான் சொன்னார் ஐயனே எனக்கேட்டே னடிவணங்கி
காய்ந்திட்ட சிவன்தானும் தாய்கண்டுசொன்னார் தனி ஏழுலட்சத்தை கரைகண்டுபார்த்தோம்
தோய்ந்திட்ட இந்தநூல் பெருக்கமெத்த சுருக்காதே போனவென்ன வெனக்கேட்டேனே
92.
கேட்டதற்கு தரந்தான் சொன்னார்சித்தர்தானும் கிரந்தத்தை சுருக்குவதற்கு சிவனாலுமாகா
மாட்டாதற்கு ஒன்றான சாஸ்திரத்தின் மகத்துவமாஞ் சுருக்குண்டோ வென்றுகேட்டார்
சூட்டிதுக்குச் சித்தர்தான் சொன்னமார்க்கம் சருமிச்சதொகுப் பெல்லாம் தெரிந்துபார்த்து
ஏட்டத்துக்குள் ஏழுலட்சம் இயல்புதன்னை ஏற்றகல்லு வெட்டுபோல் இசைந்திட்டாரே
93.
இசைந்திட்டார் ஏழுலட்சம் இயல்பையெல்லாம் எளிதாய் ஏழாயிரம் இசைத்துவைத்தார்
பசைந்திட்ட நூலெங்கே இருக்குதெனப் பகர்ந்தார் பாக்கான தெட்சண பாகத்தில்தானும்
அசைந்திட்ட நூற்றறுபதா மண்டபத்தில் அமைத்துவைத்தார் சித்தர்கள் தான்பாரே
வசைந்திட்ட ஏடுதனில் கருவென்னசொல்லும் கருத்தை கடாட்சித்துச் சொல்லெண்பாரே
94.
என்றதோர் படிக்கின்ற நூலில்தானும் ஏற்றமாய்ப் பயனெல்லாம் சொல்லுவோமோ
வென்றதோர் நூல்தன்னில் சாரனேயுங் குருந்தான் சுருக்குமேபதினாறு அங்கந்தானும்
தின்றுமே எட்டெட்டு சித்தோடு தியங்காமல் ஆதற்கேற்க ஏற்று கிட்டார்
என்றுமே தேங்காமல் தெங்குசிவயோகம் கனமான பூரணமும் மயிக்கம்பாரே
95.
அயிக்கமே பூரணத்தில் தூங்காமல்தூங்கும் அன்பான சொருபத்தைக் காட்டும்பாரு
அயிக்கமே தூவாரார் கையிலுண்டு அவருடைய பேர்தன்னை சொல்லுமென்றார்
கயிக்குமே வாசிக்கும் குருவுமான காரணமாம் நந்தியர் காட்டும்நூலை
தியக்குமே சித்தருக்குங் கொடுத்தார்நூலை திருமூலர் அரைந்ததை திடமென்பாரே
96.
திடமான நூல்தன்னில் செப்பினதுசொல்லாய் தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம்
குடமான கோடரியொடு சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள்
தடமான லவனமொடு சத்தும்செம்பு தனியகந்த குளிகையொடு செந்நீராகும்
கடமான திருகலமும் இனக்கூட்டந்தான் கடிதான மூலிமகா அவுஷதந்தானே
97.
அவுஷதமொடு வவுஷதவகை பதினேழும் அடங்களுஞ் சொல்லு ரெண்ணாயிரத்துள்ளே
வவுஷதமொடு ஏழுலட்சகிரந்தப் போக்கை இடித்தும் எண்ணாயிரமாம் என்பாட்டர்சொன்னார்
கவுஷத மெண்ணாயிரத்தைத் திரட்டித்தானும் கதித்த ஐயாயிரமாய் பின்புசொன்னார்
மவயஷத மூவாயிரமும் ஆயிரம்பின்பு சொன்னார்முந்நூறு முப்பத்து மூன்றென்றாரே
98.
என்றாரே சாற்றினதோர் நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான்
கன்றாரே கரும்பான பாகுபோல்திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார்
தன்றாரே தந்தை காலாங்கிநாதர் தாமுமோ சகலநூல்பார்த்துத் தேர்ந்து
அண்டாரே யகண்டம்போ லஞ்சுகாண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே
99.
அலாவினேன் நூற்றறுபதா மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராய்ந்துபார்த்தேன்
துளாவினேன் பாட்டருட னென்நூலைஐயர்துதி செய்தேன்சுருதியாம் வாக்கியத்தை
கலாவினேன் காலாங்கி நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும்
விளாவினேன் ரிஷிசித்தர் நூலையெல்லாம் வெட்டவெளி யாய்திறந்து வீசினேனே
100.
வீசினேன் ஏழுகாண்ட முடுக்காய்சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டுசொன்னேன்
தூசினேன் சூத்திரந்தான் எழுநூற்றுசொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு
பூசினேன் யோகத்துக்கு உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன்
ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன் உறுதியாம் வாசியென்ற யோகந்தானே



சனி, 7 மே, 2016


பிருகு முனி - 







ஐயனை பற்றி தகவல்களை துணுக்குகளாக இங்கே நீங்கள் காணலாம். இதில் சில முக்கிய தகவல்கள் முன்பே வெளியே வராதவை..



பிருகு முனியின் தவ ஞான சீவ தளங்கள்

திருமால் வீற்று இருக்கும் திருப்பதி.- இத்தளம் முக்கிய சீவ தலமாக அமைகிறது

சுகபிரம்ம ரிஷி பிருகு முனியை குருவாக கொண்டவர். அவரே கீழ் கண்ட காயத்ரி மந்திரத்தை ஏற்றி உள்ளார்

"ஓம் சர்வதேவ ப்ரியாய வித்மஹே ஸ்ரீனிவாச சம்பவ காரணாய தீமஹி
தானோ ப்ரிஹு முனிச ப்ரசோதயாத்"

"Om sarvadeva Priyaya Vidmahe Srinivasa Sambhava Karanaaya Deemahi
Dhano Brihu Munisa Prachodayat"

"ஓம் சர்வதேவர்களுக்கும் ப்ரியமானவருமான சீனிவாச சம்பவத்திற்கு காரணமானவருமான
பிருகு முனியே என்னை ஆட்கொண்டு வழி நடத்துவீராக"

மேல்கண்ட காயத்ரியாலும் , புராணங்களை வைத்தும் சப்தகிரிகும் ப்ரிக்ஹுமுனிக்கு உள்ள தொடர்பயும்  புரிந்து கொள்ளலாம்


திருக்கள்ளில் -சிவா நந்தீஸ்வரர் ( வட மொழியில் - வஜிர வனம்)

கீழ் வரும் பாடல் பிருகு மகரிஷி வாழுந்து வழி பட்ட திருக்கள்ளில் என்ற இடத்தில இருந்து எடுக்கப்பட்டது. இந்த இடத்தில கள்ளி பூவை வைத்து பிருகு மகரிஷி லிங்கத்தை வணங்கியதால் திருக்கள்ளில் என்ற பெயர் பெற்றது.

தேவாதி தேவர்களும் பணிந்து ஏற்றும்
தற்பரமே கமலமதை பிருகு போற்றி
மூவாதி முதல்வனும் தேவர் மூவர்
முறை உணர்ந்த கோடி கண சித்தமுனிகள்
சித்தமுனிகள் சீவமாய் தரணி தன்னில்
முடிவில்லா வழிபட்ட தலத்தில் நின்ற
முனி வாக்காய் அருள் பாலித்த குருசாட்சியாய்
மகனுக்கு உரைப்பேன் சீவசாட்சி ஆசி உண்மை
............
ஞானம்எல்லாம் யாம் பெற்ற தலத்தில் இன்று
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "

பொருள் : சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை அகற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.

திருநெல்வேலி நாங்குநெறி

ஹரி ஓம் என்னும் சூட்சமதொடு தொடர்புடைய ஒரு கோயில். இதன் தத்துவத்தை பிருகு முனி உணர்ந்த இடமாக இது உள்ளது

சுவாமி மலை - கும்பகோணம்


சென்னை அடுத்துள்ள திருநீர்மலை ,

இவ்விடம் பிருகு முனி 400 வருடம் தவம் இயற்றிய இடமாக தெரிகிறது

சென்னை அடுத்துள்ள வட திருமுல்லைவாயில்

இங்கு பிருகு முனி தவம் செய்து ரத்தினங்களை மழை போல் பொழிய செய்த இடம்

பருச் கச் - குஜராத் (நர்மதா அருகில்)

Bharuch also known as Broach, is the oldest city in Gujarat, situated at the mouth of the holy river Narmada. Bharuch is the administrative headquarters of Bharuch District and a municipality of more than 1,50,000 inhabitants. As Bharuch is a major seaport city, a number of trade activities have flourished here. Located between Vadodara and Surat, the city derived its name from ‘'Bhrigukachchha’' (Sanskrit: भृगुकच्छ), the residence of the great saint Bhrigu Rishi, which was later abridged to Bharuch

பல்லியா - உத்தர பிரதேசம் (கங்கை வழி அருகில்)

Ballia is also considered as a holy Hindu city. It has big and small temples. Bhrigu temple in Bhrigu Ashram is considered to be a famous temple where Bhrigu Muni was supposed to reside. Behind Bhrigu Ashram earlier River Ganga used to flow. Famous Dadri Mela (fair) is still held annually and people from all around the place come to visit it.

மன்னார்குடி ராஜகோபாலன்

பிருகு முனி இந்த இடத்தை ஆருடம் படி, ஜாதகத்தில் 5 ஆம் கட்டம் (புத்திர) சம்பந்த பட்ட சிக்கல்கள் நிவர்த்தி செய்ய உண்டாகிய ஸ்தலமாக தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் இங்கே ஒரு கல் தூனால் செய்யப்பட்ட துளசி மாடம் ( பிரமாண்டமாக) உள்ளது. இந்த இடத்தையும் பிருகு முனிவரின் சீவ தலமாக மன்னார்குடி மக்கள் பௌர்ணமி அன்று வணங்கி வருகின்றனர்

வைணவ திவ்யதேசங்கள் எல்லாம் (எப்படி பதஞ்சலி, வியாகரபாதர் நடராஜர் முன் நிற்பார்களோ சயனிக்கும் பெருமாள் பாதத்திலும், தலைமாட்டிலும் காணலாம் பிருகுமுனி மற்றும் மார்கேண்டேயரையும் பல தளங்களில் பார்க்கலாம்                 )thanks.18sithar bloks


வெள்ளி, 6 மே, 2016


ஸ்ரீ அகத்திய பெருமான் மற்றும் சித்தர்களுக்கான பூஜை முறைகள்

  • அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் தலைவர்  அவரின் சிறப்புகளும் பூசை முறைகளும்

    தொடர்புள்ள கம்பராமாயண மூலம்
    என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
    நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
    தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
    கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
    வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
    விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
    வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
    குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
    முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

    சிறப்புப் பெயர்கள்

  • தமிழ் முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
  • மாதவ முனிவன் (அதிக தவம் செய்ததால்)
  • மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
  • குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
  • திருமுனி (உயர்வுக்குரியவர்)
  • முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
  • பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
  • அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
  • பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
  • குடமுனி (குடத்தில் பிறந்தவர்)
  • தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
  • அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
  • அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
  • கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
  • தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
  • இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
  • சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
  • இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
  • அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
  • வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

அகத்தியர் பெருமானின் பூசை முறை

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்

ஓம் அகத்திய மகரிஷி யே பொதிகை சஞ்சாரியே  தமிழ் முனியே ஹயகிரிவரின் சிஷ்யரே கந்தனுக்கு பிரி யமானவரே யுக யுக குருவே கலியுகம் போற்றும் லோப முத்திரை சமேத ஸ்ரீ அகத்தியரே போற்றி உங்களை தியானிக்கிறோம் எங்களை வழி நடுத் துவீ ராக என்று தொடங்க வேண்டும் 



தியான மந்திரம்

ஓம் அகத்திய மகரிஷி நம என்றுஎன்று ஓது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அப்பொழுது சித்தரெல்லாம் கைகொள்வார்கள்
அகத்தியனை தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடை இல்லை அரசே என்பார்
அகத்தியன்தான் எக்கியத்தில் பிறந்த ஜோதி
ஆயிரத்தெட்டுஅண்டமெல்லாம் ஆணையாச்சே

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

சிறப்பு உபசாரம்

முதலில் அகத்தியரை பிம்பத்தில் அல்லது சிலாரூப த்தில் எழுந்தருள செய்ய வேண்டும்  கொஞ்சம் புஷ்பம் எடுத்து நீரால் சுத்தி செய்து மானசிகமாக அழைக்க வேண்டும்
ஆவாகனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று  அகத்தியரை சித்தர்களை  எழுந்தருள செய்து புஷ்பத்தை சமர்பிக்க வேண்டும்
ஆசனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுமானசீகமாக ஆசனம் அளிக்க வேண்டும்
ஸ்நானம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
புஷ்ப்பதால் நிர்தெளிக்க வேண்டும்
வஸ்திரம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முடிந்தஅளவுகாவிஅல்லதுபச்சைவத்திரம்சாற்றவேண்டும் 
சந்தனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று பாதங்களுக்கு சந்தனம் அத்தர் ஜவ்வாது சுகந்தம் சாற்ற வேண்டும்
குங்குமம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று குங்குமம்பாதைகளுக்கு இட வேண்டும்
அக்ஷதை சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று மங்கள் அரிசியை பா தங்களுக்கு இட வேண்டும்
புஷ்பம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று புஷ்பங்களை சமர்பிக்க வேண்டும்
தூபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுசாம்பிராணி ஊதுவர்த்தி காட்ட வேண்டும்
தீபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நெய்தீபம் காட்ட வேண்டும்
ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நீரை வார்க்க வேண்டும்
காதலி பழ நைவேத்தியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக.
என்று பழம் நைவேத்தியம் அளிக்க வேண்டும்
மீண்டும் ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
நீர் வார்க்க வேண்டும்

தாம்பூலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுவெற்றிலை பாக்கு சமர்பிக்க வேண்டும்
ஸ்ரீபலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முழு  தேங்காய் சமர்பிக்க வேண்டும்
பின்பு ஆரார்த்திகம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று கற்பூர ஆரார்த்தி காட்ட வேண்டும் இதற்கான் பொருளை முன்பே தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும்
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

  1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
  2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
  3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
  4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
  5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
  6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
  7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
  8. இசைஞான ஜோதியே போற்றி!
  9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
  10. காவேரி தந்த கருணையே போற்றி!
  11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
  12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
  13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
  14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
  15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
  16. இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
  17. ஓம் அகத்தியரே போற்றி என்றும் என்னும் பிற நாமங்களையும் சொல்லலாம்

நிவேதனம்

இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

  1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
  2. கல்வித்தடை நீங்கும்.
  3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
  4. முன்வினை பாவங்கள் அகலும்.
  5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
  6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
  7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
  8. சகலவிதமான நோய்களும் தீரும்.
  9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.