அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் தலைவர் அவரின் சிறப்புகளும் பூசை முறைகளும்
தொடர்புள்ள கம்பராமாயண மூலம்
- என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
- நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
- தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
- கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
- வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
- விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
- வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
- குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
- முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56
சிறப்புப் பெயர்கள்
- தமிழ் முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
- மாதவ முனிவன் (அதிக தவம் செய்ததால்)
- மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
- குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
- திருமுனி (உயர்வுக்குரியவர்)
- முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
- பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
- அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
- பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
- குடமுனி (குடத்தில் பிறந்தவர்)
- தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
- அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
- அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
- கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
- தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
- இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
- சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
- இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
- அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
- வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
அகத்தியர் பெருமானின் பூசை முறை
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்
ஓம் அகத்திய மகரிஷி யே பொதிகை சஞ்சாரியே தமிழ் முனியே ஹயகிரிவரின் சிஷ்யரே கந்தனுக்கு பிரி யமானவரே யுக யுக குருவே கலியுகம் போற்றும் லோப முத்திரை சமேத ஸ்ரீ அகத்தியரே போற்றி உங்களை தியானிக்கிறோம் எங்களை வழி நடுத் துவீ ராக என்று தொடங்க வேண்டும்
தியான மந்திரம்
ஓம் அகத்திய மகரிஷி நம என்றுஎன்று ஓது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அப்பொழுது சித்தரெல்லாம் கைகொள்வார்கள்
அகத்தியனை தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடை இல்லை அரசே என்பார்
அகத்தியன்தான் எக்கியத்தில் பிறந்த ஜோதி
ஆயிரத்தெட்டுஅண்டமெல்லாம் ஆணையாச்சே
- ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
- சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
- கடலுண்ட காருண்யரே
- கும்பமுனி குருவே சரணம் சரணம்
சிறப்பு உபசாரம்
முதலில் அகத்தியரை பிம்பத்தில் அல்லது சிலாரூப த்தில் எழுந்தருள செய்ய வேண்டும் கொஞ்சம் புஷ்பம் எடுத்து நீரால் சுத்தி செய்து மானசிகமாக அழைக்க வேண்டும்
ஆவாகனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று அகத்தியரை சித்தர்களை எழுந்தருள செய்து புஷ்பத்தை சமர்பிக்க வேண்டும்
ஆசனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுமானசீகமாக ஆசனம் அளிக்க வேண்டும்
ஸ்நானம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
புஷ்ப்பதால் நிர்தெளிக்க வேண்டும்
வஸ்திரம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முடிந்தஅளவுகாவிஅல்லதுபச்சைவத்திரம்சாற்றவேண்டும்
சந்தனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று பாதங்களுக்கு சந்தனம் அத்தர் ஜவ்வாது சுகந்தம் சாற்ற வேண்டும்
குங்குமம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று குங்குமம்பாதைகளுக்கு இட வேண்டும்
அக்ஷதை சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று மங்கள் அரிசியை பா தங்களுக்கு இட வேண்டும்
புஷ்பம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று புஷ்பங்களை சமர்பிக்க வேண்டும்
தூபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுசாம்பிராணி ஊதுவர்த்தி காட்ட வேண்டும்
தீபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நெய்தீபம் காட்ட வேண்டும்
ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நீரை வார்க்க வேண்டும்
காதலி பழ நைவேத்தியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக.
என்று பழம் நைவேத்தியம் அளிக்க வேண்டும்
மீண்டும் ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
நீர் வார்க்க வேண்டும்
தாம்பூலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுவெற்றிலை பாக்கு சமர்பிக்க வேண்டும்
ஸ்ரீபலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முழு தேங்காய் சமர்பிக்க வேண்டும்
பின்பு ஆரார்த்திகம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று கற்பூர ஆரார்த்தி காட்ட வேண்டும் இதற்கான் பொருளை முன்பே தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும்
பதினாறு போற்றிகள்
- தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
- சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
- தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
- விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
- கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
- சித்த வைத்திய சிகரமே போற்றி!
- சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
- இசைஞான ஜோதியே போற்றி!
- உலோப முத்திரையின் பதியே போற்றி!
- காவேரி தந்த கருணையே போற்றி!
- அகத்தியம் தந்த அருளே போற்றி!
- இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
- அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
- அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
- இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
- இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
- ஓம் அகத்தியரே போற்றி என்றும் என்னும் பிற நாமங்களையும் சொல்லலாம்
நிவேதனம்
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
- இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
- கல்வித்தடை நீங்கும்.
- புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
- முன்வினை பாவங்கள் அகலும்.
- பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
- பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
- பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
- சகலவிதமான நோய்களும் தீரும்.
- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக