லோபமுத்திரா காவிரி நதியான கதை
அகத்திய முனிவர் ஒரு சமயம் லோபமுத்திராவை நீராக மாற்றி தமது கமண்டலத்துள் அடக்கி வைத்திருந்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. தன்னை நீண்ட காலம் தனியாக வைத்திருந்ததை லோபமுத்திரா உணர்ந்தவுடன், கமண்டலத்திலிருந்து அவள் ஒரு நதியாக பெருக்கெடுத்து
ஓடலானாள். முனிவர்களின் சீடர்கள் அவளைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால், அவளோ பூமியில் பாய்ந்து ஓடியதால், அவளது பிரவாகத்தை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பிறகு, அவள் பகமண்டலா என்ற இடத்தில் மீண்டும் உதயமானாள். பல காலத்திற்குப் பிறகு, அகத்திய முனிவர் அவளைத் தேடிய போது, காவிரி நதியின் ரூபத்தில் அவளை அவர் அடையாளம் கண்டார். அவள் அகஸ்திய முனிவருடன் அவரது பத்தினியாக வாழ்ந்து, நதியாக மக்களுக்கு உதவியாக இருந்தாள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னொரு புராணக்கதையும் உண்டு. அகத்தியர் தனது பத்தினியைத் தம் கமண்டலத்துள் நீராக வைத்திருந்ததாகவும், கணேச பகவான் காக வடிவில் வந்து அவரது கமண்டலத்தைக் கவிழ்த்து, அதிலுள்ள நீரை ஓட விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நதியாக ஓட ஆரம்பித்ததும், அவள் காவிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள் – காவேராவின் மகளானதால் அப்பெயர் வந்தது. புண்ணிய நதியாக வேண்டும் என்ற விருப்பத்தால், காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது.
அப்படி பட்ட அன்னைக்கு அய்யனுக்கு அளித்த காயத்திரி மந்திரம்
ஓம் காவேர புத்தீரிச வித்மகே
காரூண்ய ரூபாய தீமகே
தந்நோ : ஸ்ரீலோபமுத்ரா தேவி பிரஜோதயாத்
காரூண்ய ரூபாய தீமகே
தந்நோ : ஸ்ரீலோபமுத்ரா தேவி பிரஜோதயாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக