சனி, 1 ஏப்ரல், 2023
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்! ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது. 2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்! மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம் புண்ட்ரேஷசாபகுஸுமேஷ§ஸ்ருணீர்ததாநாம்!! காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன. 3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம் பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்! பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன். 4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம் த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்! விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன் 5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன. 6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா: ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங் கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள். ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.
அடியேனின் ஆறுமுக அந்தாதி ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் வித்தின் ஐக்கியமாம் நாதவிந்து கலாதீதமாய் தாயும் மகனும் உயிரும் உடலுமுமாய் தற்பர விளக்கமதில் எண்ணமும் செயலாக செயலாற்றும் வாலைபுத்திரா சங்கரன் சேயே சரவணபவா ஆறெழுத்து அறுமுகவா ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் அணுவணுவாய் தேர்ந்த குரு ஒளியே குரு ஒளியே குணக்குன்றே கூர்வேலிறைவா குஞ்சரி மணாளா கந்தா கடம்பா சிவ நெருப்பில் உதித்து மால் நீரில் குளிர்ந்த நிர்மல பரப்பிரம்ம மூவித்துரு கரு ஆனவனே மூவித்தால் விளைந்தாறு இதழே முகமாகி முத்தேவர் குணமாக முளைத்தெழுந்த மூர்த்தியே தேவிசக்திவேலை தானேந்தி வல்லவனாய் தேவேந்திர மயிலேறும் தேவசேனா பதியே வருக வருக ஆறுமுகவா குமரா ஆணவமலமறுக்கும் அருளாளா வாலறிவா வாலய்யா செறுக்கருக்கும் செந்தில் ஆண்டவனே முருகா சேனை நாலாயிரம் பூதபடைசூழ வருக வருகவே வடிவேலும் மயிலுடனே வானம் கிடுகிடுக்க வஞ்சகர் நடுநடுங்க இருள் என்னும் மாயைகள் எதிர் நில்லாதோடிடவே ஏறுமயிலேறி ஆறுமுகவா தேவேந்திர படைசூழ வருகவே வருகவே உலகில் வளர்ந்திட்ட தீமையெல்லாம் அழிய வண்ணமயில் தோகைவிரித்து ஆடிவர சித்தர் குருவே வாலை குமரனே கந்தா கடம்பனே கதிர்வேல் முருகனே வருக [17/02, 10:43 pm] Vaalai thaai veedu: வருகவே வேலய்யா வல்அசுரரோடு போரிட்டு வெற்றி கொடி நாட்டி ஒருவனாய் சத்துருவை சம்ஹரித்த வேலா ஓங்காரத்தின் மூலக்கருவறிந்த சத்திவேலே வருக ரரவருகவே விண்ணும் மண்ணும் நலமுறவே வையமதில் தருமமெலாம் தழைத்தோங்க முருகா குருவென குகனென கூறறிவாளாலனாக குணகுன்றே அருளாட்சி செய்ய ஆறுமுகா வருகவே வருகவே வாலை மனோன்மணிக்கு சேயே வரமருளும் வடிவேலா வேத செந்தமிழின் குருவாயும் திருவாய் மலர்ந்தருளிய சுவாமிநாதா கூர்வடிவேலா குருமுனியின் தவகுருவே வருக வருகவே எனைகாக்க எதிரிகளின் வஞ்சகமும் சூழ்ச்சியும் சஞ்சலமாய் எமையணுகா பெருகும் நல்லருள் சூழும் ஒளியாளா சண்முகனே பேரானந்த பெருக்கே வாலறிவா வருக வருவாய் வாதபித்த கபபிணிக்கு வைத்திய நாதனுமாய் வழலை முப்பது வாய் குருமருந்தாய் பாஷாண செந்தூரம் சுண்ணமதாய் கற்பதாய் ஔஷத அம்ருதமுமாய் வருவாய் [17/02, 11:03 pm] Vaalai thaai veedu: வருவாய் பிறவி பெரும்பிணிக்கு அருமருந்தாய் வாக்கும் மனமும் கடந்த மன உன்மணி தத்துவமாய் கருஉருவான கன்னிவாலை திருக்குமரா காக்குகா என வேண்ட சேவல்கொடியேந்தி வருவாய் [ அருளாலா அற்புதம் செய்யும் ஆறுமுகவா வந்து ஆணையிடு அண்டசராசர பூதகணங்களுக்கு பெருகும் நலம் வாய்க்க பேதமையை தான்மாய்க்க பரமனின் மகனே பார்வதி சுதனே வருவாய் அய்யா [ சுதனே சுந்தரவதனே கோடிசூர்ய பிரகாச சூழ்ஒளியே சுகபர ஞானச்சுடரே வதனம் ஆறும் வாலறிவாய் வேல்துணையாய் வந்தெமை காப்பாய் வாலை திருக்குமரா [17: ஓம் சரவணபவனே சண்முகத்தரசே சாம்பவி புத்திரா சக்திவேலாயுதா பரவெளி தத்துவா சேய் கடவுள் பேரொளி கமலபாதச் சரணே : சரணென்று வந்து உமை சார்ந்த அடியவர்க்கு சத்ரு சம்ஹாரியாய் சதாகாலமும் காக்கும் பூரணபூத வேதாள இடும்பகண சேனையானே பொன்னடி சரணே பாதச்சரணே
நட்சத்திர காயத்திரி மந்திரங்கள்அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிஷம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத் அஸ்தம் ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத் சித்திரை ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத் சுவாதி ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத் விசாகம் ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத் அனுஷம் ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத் கேட்டை ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் மூலம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் பூராடம் ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் உத்திராடம் ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் திருவோணம் ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத் அவிட்டம் ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத் சதயம் ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத் பூரட்டாதி ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத் உத்திரட்டாதி ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத் ரேவதி ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
நில அளவுகள்
ஒரு ஏக்கருக்கு \(43,560\) சதுர அடிகள் அல்லது \(4047\) சதுர மீட்டர்கள் ஆகும். \(100\) குழிகள் சேர்ந்தது ஒரு மா (\(100\) குழிகள் = \(1\) மா) ...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன் ஆசி மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் ...