சனி, 1 ஏப்ரல், 2023

அடியேனின் ஆறுமுக அந்தாதி ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் வித்தின் ஐக்கியமாம் நாதவிந்து கலாதீதமாய் தாயும் மகனும் உயிரும் உடலுமுமாய் தற்பர விளக்கமதில் எண்ணமும் செயலாக செயலாற்றும் வாலைபுத்திரா சங்கரன் சேயே சரவணபவா ஆறெழுத்து அறுமுகவா ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் அணுவணுவாய் தேர்ந்த குரு ஒளியே குரு ஒளியே குணக்குன்றே கூர்வேலிறைவா குஞ்சரி மணாளா கந்தா கடம்பா சிவ நெருப்பில் உதித்து மால் நீரில் குளிர்ந்த நிர்மல பரப்பிரம்ம மூவித்துரு கரு ஆனவனே மூவித்தால் விளைந்தாறு இதழே முகமாகி முத்தேவர் குணமாக முளைத்தெழுந்த மூர்த்தியே தேவிசக்திவேலை தானேந்தி வல்லவனாய் தேவேந்திர மயிலேறும் தேவசேனா பதியே வருக வருக ஆறுமுகவா குமரா ஆணவமலமறுக்கும் அருளாளா வாலறிவா வாலய்யா செறுக்கருக்கும் செந்தில் ஆண்டவனே முருகா சேனை நாலாயிரம் பூதபடைசூழ வருக வருகவே வடிவேலும் மயிலுடனே வானம் கிடுகிடுக்க வஞ்சகர் நடுநடுங்க இருள் என்னும் மாயைகள் எதிர் நில்லாதோடிடவே ஏறுமயிலேறி ஆறுமுகவா தேவேந்திர படைசூழ வருகவே வருகவே உலகில் வளர்ந்திட்ட தீமையெல்லாம் அழிய வண்ணமயில் தோகைவிரித்து ஆடிவர சித்தர் குருவே வாலை குமரனே கந்தா கடம்பனே கதிர்வேல் முருகனே வருக [17/02, 10:43 pm] Vaalai thaai veedu: வருகவே வேலய்யா வல்அசுரரோடு போரிட்டு வெற்றி கொடி நாட்டி ஒருவனாய் சத்துருவை சம்ஹரித்த வேலா ஓங்காரத்தின் மூலக்கருவறிந்த சத்திவேலே வருக ரரவருகவே விண்ணும் மண்ணும் நலமுறவே வையமதில் தருமமெலாம் தழைத்தோங்க முருகா குருவென குகனென கூறறிவாளாலனாக குணகுன்றே அருளாட்சி செய்ய ஆறுமுகா வருகவே வருகவே வாலை மனோன்மணிக்கு சேயே வரமருளும் வடிவேலா வேத செந்தமிழின் குருவாயும் திருவாய் மலர்ந்தருளிய சுவாமிநாதா கூர்வடிவேலா குருமுனியின் தவகுருவே வருக வருகவே எனைகாக்க எதிரிகளின் வஞ்சகமும் சூழ்ச்சியும் சஞ்சலமாய் எமையணுகா பெருகும் நல்லருள் சூழும் ஒளியாளா சண்முகனே பேரானந்த பெருக்கே வாலறிவா வருக வருவாய் வாதபித்த கபபிணிக்கு வைத்திய நாதனுமாய் வழலை முப்பது வாய் குருமருந்தாய் பாஷாண செந்தூரம் சுண்ணமதாய் கற்பதாய் ஔஷத அம்ருதமுமாய் வருவாய் [17/02, 11:03 pm] Vaalai thaai veedu: வருவாய் பிறவி பெரும்பிணிக்கு அருமருந்தாய் வாக்கும் மனமும் கடந்த மன உன்மணி தத்துவமாய் கருஉருவான கன்னிவாலை திருக்குமரா காக்குகா என வேண்ட சேவல்கொடியேந்தி வருவாய் [ அருளாலா அற்புதம் செய்யும் ஆறுமுகவா வந்து ஆணையிடு அண்டசராசர பூதகணங்களுக்கு பெருகும் நலம் வாய்க்க பேதமையை தான்மாய்க்க பரமனின் மகனே பார்வதி சுதனே வருவாய் அய்யா [ சுதனே சுந்தரவதனே கோடிசூர்ய பிரகாச சூழ்ஒளியே சுகபர ஞானச்சுடரே வதனம் ஆறும் வாலறிவாய் வேல்துணையாய் வந்தெமை காப்பாய் வாலை திருக்குமரா [17: ஓம் சரவணபவனே சண்முகத்தரசே சாம்பவி புத்திரா சக்திவேலாயுதா பரவெளி தத்துவா சேய் கடவுள் பேரொளி கமலபாதச் சரணே : சரணென்று வந்து உமை சார்ந்த அடியவர்க்கு சத்ரு சம்ஹாரியாய் சதாகாலமும் காக்கும் பூரணபூத வேதாள இடும்பகண சேனையானே பொன்னடி சரணே பாதச்சரணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக