ஞாயிறு, 5 அக்டோபர், 2025

தெய்வம் தந்த சேய்கள்

 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

மனித பிறப்பில் ஆண், பெண் என இரண்டு பிறப்பு உண்டு. ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்பாடுகளையுடைய பிறப்பு எனக் கூறப்படுவது திருநங்கை பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை, பொதுவாக ஒத்துப் போகும். 

இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன. சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகன் அலியாகப் பிறப்பான். சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான். செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம், துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகம் அலியாவான். 

மேலும், புதனுடைய வீடுகளாகிய, மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி; புதன் லக்னத்துக்கு ஆறாம் வீட்டில் இருக்க, அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும், ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாகப் பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். 

 1. திருநங்கை(அலி )பற்றிய தொல்காப்பியம்

தொல்காப்பியம் – பொருளதிகாரம்

தமிழின் முதலாவது இலக்கண நூலான தொல்காப்பியத்தில், மனிதப் பிறப்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

ஆண்

பெண்

அலி

ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று பிறப்புகள் உண்டு”

(தொல்காப்பியம், பொருளதிகாரம், பால் இயல்)

இங்கு “அலி”என்றால் பாலினம் தெளிவாகக் காணப்படாத, அல்லது நடுநிலைப்படைப்பு எனப் பொருள்.

அலி எனும் சொல் சங்க இலக்கியங்களிலும், குறிப்பாக  அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு போன்றவற்றிலும் வந்துள்ளது.

இதைப் பார்த்து, தமிழர்கள் அன்றே   

மூன்றாவது பாலினத்தை (Third Gender / Intersex / Transgender)  சமூக அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது.



 2. திருநங்கை(அலி) பற்றிய திருமூலர் (திருமந்திரம்)

திருமூலர், திருமந்திரம் இரண்டாம் தந்திரம், “கர்ப்பக் கிரியை” பாடல்களில், அலி பிறப்புக்கான காரணத்தை விளக்குகிறார்:

ஆண்மிகில் ஆணாகும், பெண்மிகில் பெண்ணாகும்,

பூணிரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்”

 (திருமந்திரம் – பாடல் 478)

 விளக்கம்:

ஆண்மைக் குணம் (விந்து) அதிகமாயின் ஆண் பிறப்பு

பெண்மைக் குணம் (சோணம்) அதிகமாயின் பெண் பிறப்பு

இரண்டும் சமச்சீராக இருந்தால் அலி பிறப்பு

மேலும், கருவில் உயிர் எவ்வாறு நிலை கொள்கிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்:

குழவி ஆணாம் வலத்தது ஆகில்,

குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்,

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்,

 குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”

(திருமந்திரம் – பாடல் 482)

 இங்கே,

வலப்புறம் கருவானால் ஆண்,

இடப்புறம் கருவானால் பெண்,

இரண்டுபுறமும் சேர்ந்தால் இரட்டைக் குழந்தை,

 வாயு சமநிலை குலைந்தால் அலி பிறப்பு

 3. தொல்காப்பியமும் திருமூலரும் காட்டும் பொதுவான உண்மை

தொல்காப்பியம் சமூக அங்கீகார அடிப்படையில் மூன்றாவது பாலினம் (அலி) என்பதை ஏற்றுக்கொள்கிறது.

திருமூலர்→ உயிரியல்/யோக அடிப்படையில் திருநங்கைகள்(அலி) பிறப்புக்கான காரணத்தை விளக்குகிறார்.

அதாவது,

தொல்காப்பியம்: “இது இயற்கையான பிறவிகளில் ஒன்றாகும்” என்று சொல்கிறது.

திருமூலர்: “கருவில் உயிரணு சமநிலை காரணமாக அது தோன்றுகிறது” என்று சித்த விஞ்ஞான ரீதியாக விளக்குகிறார்.


தமிழ் சித்த மெய்யியல் சிந்தனையில்,திருநங்கைகள் (அலி) பிறப்பு எப்போதுமே ஒரு  இயற்கைப் பிறவி என்று கருதப்பட்டது.


தொல்காப்பியம் – “மூன்றாவது பாலினம்” என்பதை இலக்கண ரீதியாக அங்கீகரிக்கிறது.

திருமூலர் – அந்தப் பிறவி உயிரியல் காரணங்களால் உருவாகிறது என விளக்குகிறார்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:

திருநங்கை(அலி )பிறப்பு குறைபாடு அல்ல; அது இறைவனின் இயற்கையான படைப்பு




கர்ப்பம் –  ஆண் – பெண் – திருநங்கை(அலி) – கூன் – குருடு – முடம் – குள்ளம்" குறித்து திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள பாடல்கள் மிகவும் ஆழமானவை.

சுருக்கமாக விளக்கம்:

திருமூலர் திருமந்திரம் இரண்டாம் தந்திரம், 14வது பகுதி கர்ப்பக்கிரியையில் 41 பாடல்களாக குழந்தைப் பிறப்பின் தன்மைகள், பிறவிக்காரணங்கள், உடல் மற்றும் மன குறைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கூறுகிறார்.


 1. ஆண் பெண் திருநங்கை(அலி) பிறப்பு காரணம் திருமூலர்

ஆண்மிகில் ஆணாகும், பெண்மிகில் பெண்ணாகும்

பூணிரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்"

(திருமந்திரம் 478)


விந்து–சோணம் (சுக்கிலம், சோணம்)விந்து.சுரோணிதம் ஜீவ சத்து சமச்சீராக கலக்கும்போது அலி (நடுநிலைப் பாலினம்)பிறக்கும்.

ஆண்மை மிகுந்தால் ஆண், பெண்மை மிகுந்தால் பெண்.


 2. குள்ளம் (குட்டை), முடம், கூனம் உருவாதல்

"பாய்கின்ற வாயுக் குறையிலே குறளாகும்

பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்

காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்"

(திருமந்திரம் 480)


3. மந்த புத்தி, ஊமை, குருடு பிறப்பது

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்

 மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லே"*

 (திருமந்திரம் 481)

கர்ப்பிணி தாயின் உடல் நிலை மற்றும் உண்ணும் உணவு காரணமாக:

* அதிக மலம் மிகுந்தால் – மந்த புத்தி,

* அதிக சலம் (கபம்) இருந்தால் – ஊமை,

* இரண்டும் சேர்ந்தால் – குருடு குழந்தை.


4. ஆண் – பெண் – இரட்டை –மூன்றாம் பாலினம்(அலி) குழந்தை பிறப்புகாரணம்

குழவி ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே"*

(திருமந்திரம் 482)

 கருவின் *நாடி நிலையின்படி

வலப்புறம் இருந்தால் ஆண்,இது சூரியகலை ஆண் தத்துவம்

இடப்புறம் இருந்தால் பெண்,இது சந்திரகலை பெண் தத்துவம் 

இரண்டுபுறமும் இருந்தால் இரட்டைக் குழந்தை,சுழுமுனை நாடி 

அபான வாயு எதிராக இருந்தால் அலி.

சுவாசமும் உயிராக்கமும் நுண்ணிய தொடர்பு உடையது

5. அழகான குழந்தை /  

கருத்தரிக்காமைகாரணம்

"கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்

கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே"*

 (திருமந்திரம் 483)

வாயு (பிராண சக்தி) சமநிலை இருந்தால் அழகான குழந்தை,

சமநிலை இல்லாவிட்டால் கருத்தரிக்கவே முடியாது.

மூச்சின் இயக்கம் உயிரின் ஆக்க நிலைக்கு ஆதாரம்

 திருமூலரின் முக்கியமான கருத்து:

*மனிதப் பிறப்பில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் (ஆண், பெண், அலி, குள்ளம், கூன், முடம், குருடு) கர்ப்பக்கால வாயு நிலை, தாயின் உடல் நிலையுடன் தொடர்புடையவை

உடல் அறிவில் ஆண் பெண் திருநங்கை என்ற பாலின பாகுபாடு உண்டெனினும் ஆன்ம நிலையில் ஒன்றுதான் ஆன்மா மாறாத தெய்வநிலையில் இருக்கும்

உயிரின் அடிப்படையில் வேறுபாடு இல்லை; உடலின் கலவையால் மட்டுமே பாலினம் மற்றும் குறைகள் தோன்றுகின்றன

அலிகள் இயற்கை படைப்புகளில் வந்தவர்களே அவர்களுக்கு முன்பிறவி மற்றும் இப்பிறவியில் கர்ப்ப காலத்தில் பிறவி நிச்சியிக்கபட்டுள்ளது

பும்சவனம் என்பது கர்ப்பகாலத்தில் நடக்கும் ஒரு வைதீக சடங்கு வளையல்காப்பு அதில் பும்சவனம் ஆண்குழந்தை (பெண்)பெறும் சடங்கு என்பதே பொருள்

ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தவரை நபும்சக என்று அழைக்கிறது வடமொழி

ந-பும்சக என்றால் ‘பால் இல்லாத’ என்று பொருள். ஆண்பால், பெண்பால் எதும் இல்லாதது. இதுவும் அல்ல, அதுவும் அல்ல. அதனால் அலி (பால் ஏதும் இல்லாதது). அலி வேறு, பேடி வேறு.


பெண் தோற்றமும், ஆண் இயல்பும் – அலி.

ஆண் தோற்றமும், பெண் இயல்பும் – பேடி.

திருக்குறளில் அலி

பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன்கற்ற நூல் (குறள் : 727)

தோற்றத்தில் ஆண் போல் நின்றும், போர்முனையில் அஞ்சி ஒளிந்து கொள்பவன் கையில் வாள் எப்படி பயனற்றுப் போகிறதோ, அப்படி அவையைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவன் படித்த நூலும் பயனுற்றுப் போகும்.

திருவாய் மொழியில் அலி

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உனளல்லன் இல்லையல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோணை பொதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

கால மாற்றம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அலிகளை கேவலப்படுத்தி மகிழத்தக்கக்கூடிய இழிபிறிவிகளாகக் கருதச் செய்தது. அதற்கேற்ப அலி/ பேடி என்ற சொற்பயன்பாடும் ஒரு கேலிப் பொருளானது. இந்த நிலை மாறவேண்டும் பாலின தேர்வை நாம் எடுத்துக்கொள்ள முடியாது அதை இயற்கை படைப்பு அதை மனப்பூர்வமாக ஏற்று கொள்ள வேண்டும்

மகாபாரதத்தில் அரவானின் தந்தையான அர்ஜூனனும் தான் பெற்ற சாபம் காரணமாக, அலியாக (பிரகன்நளை) சில காலம் வாழ்ந்த கதையுமுண்டு. இது, அரவான் – மோகினி கதையாடலுக்கு முன்பாகவே மகாபாரதத்தில் வரும் நிகழ்வு. மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில், ராமன் வனவாசம் செல்கையில் நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்லும் பொருட்டு ராமர் ”ஆண்கள், பெண்கள் அனைவரும் திரும்பி நாட்டுக்குச் செல்லுங்கள்” என்றார். ஆண்களையும், பெண்களையும் மட்டும் தானே திரும்பிச் செல்லுமாறு சொன்னார். எனவே, நாம் செல்ல வேண்டியதில்லை என்று அலிகள் அனைவருமே ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் வரை அவருக்காக பதினான்கு ஆண்டுகள் காத்திருந்த கதையும் உண்டு.

திருநங்கை மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை கிறுத்தவ மதத்தின் வேத நூலான பைபிளில் அன்னகர் என்ற சொல், தமிழ் மொழியில் பைபிள் அச்சான நாளிலிருந்தே கண்ணியமாக பயன்படுத்தபட்டு வருகிறது

தமிழ் இலக்கியத்தில் அலி, பேடி, இடமி, இப்பந்தி, கிலிபம், சண்டகம், கோஷா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிஜிரா அரபு மொழியில் அரவாணிகளைக் குறிப்பதற்கான சொல்லாக முக்கானத்துன் உள்ளது. ஆணாகப்பிறந்து தன்னை பெண்ணாக பாவிக்கும் முஸ்லிம் நம்பிக்கை கொண்ட மூன்றாம் பாலினமாக கருதமுடியும். இது ஹனித், ஹன்த என்று அழைக்கப்படுகிறது. 


அரவான் மற்றும் திருநங்கைகள்

அரவான், நல்வாழ்வின் அருளாளன்,
மனிதர்களின் துன்பம் அகற்றும் துணை.
பக்தியுடன் வந்தால் தெய்வ அருள் கொடுப்பான்,
சமயமும் சமூகமும் இணையும் பாதை காட்டுவான்.

திருநங்கைகள், ஒற்றுமையின் சின்னம்,
பூஜைகளில் பங்குபெற்று மனம் வலிமை சேர்ப்பர்.
அவர்கள் வழியில் சமூகமும் ஆன்மாவும் ஒளிர்கின்றது,
பக்தியும் அன்பும் வாழ்வில் மலர்கின்றது.



திருநங்கை மதிப்பின் ஆன்மீக உணர்வு

இந்த உலகில் எல்லா உயிர்களும் இறைவனின் படைப்புகள். மனித வாழ்க்கையின் பரிமாணங்களில் ஒவ்வொரு ஜீவியும் தனித்துவம் கொண்டவர். அதேபோல், திருநங்கை சமூகமும் ஒருபடி உயர்ந்த ஆன்மீக உரிமைகள் கொண்டவர்கள். அவர்கள் வாழ்கையின் அசைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் அனைத்தும் சமூகத்திற்கு ஓர் முக்கிய பங்களிப்பாகும்.

திருநங்கை என்ற சொல், உடலியல் மட்டும் அல்லாமல், மன மற்றும் ஆன்மீக சக்தியின் தனித்துவத்தையும் குறிக்கிறது. அவர்களின் வாழ்வுப் பாதையில் சமூக பாரம்பரியங்கள் மற்றும் பாகுபாடுகள் இருந்தாலும், ஆன்மீக உயர்வின் நோக்கத்தில் அவர்கள் சமத்துவம், கண்ணோட்டம், அன்பு மற்றும் கருணையை பரப்பி வருகிறார்கள்.

நாம் அனைவரும் அவர்களை மதித்து, அன்புடன் அணுக வேண்டும். திருநங்கை சமூகத்தினரின் உரிமைகள், கண்ணோட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் மனிதநேயத்தின் ஒரு வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும். அன்பு, நேயம், புரிதல் மற்றும் மதிப்புடன் நமது மனங்களை விரிவாக்குவதில் தான் உண்மையான ஆன்மீக உயர்வு.

திருநங்கை சமூகத்தை மதிப்பது என்பது வெறும் சமூக நியாயம் மட்டுமல்ல; அது ஆன்மீக உணர்வின் அழகான வெளிப்பாடும், மனிதநேயத்தின் உயர்ந்த சான்றும் ஆகும். அன்பும் மதிப்பும் கொண்டு அணுகுவோம்; அவர்களின் வாழ்கை இந்த சமுதாயத்தின் ஒளியாய் பரவி வளரட்டும்.


இறைவன் படைப்பை மதித்து ஆன்ம உரிமையை கொடுத்து மகிழ்வோம் 

அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்

புதன், 1 அக்டோபர், 2025

வாலை தாய் வீட்டு நவராத்திரி பூஜை

வாலை தாய் வீட்டு நவராத்திரி பூஜை 
01.10. 2025 & 2.10.2025



வருணமகா சித்தலிங்கம் பிரம்மா விஷ்ணு சிவன் எனும் மூன்று அம்சமாய் ஆறடி உயர வருணபாகத்தில் அமைந்த வருணமகா சித்தலிங்கம்





தத்துவமாக அமைந்த வருணமகா சித்தலிங்கம் மாசி மகத்தில் பிரதிஷ்டை ஐந்தே நாட்களில் உற்பத்தியான லிங்கம்

வாலகணபதி


வாலமுருகன்




2015 ம் ஆண்டு வாலை தாய் வீட்டிற்கு வந்த துர்க்கை அம்மன்
நவராத்திரி அன்று ஆச்சாள்புரம் மருத்துவ சித்தர் என்று அப்பொழுது பிரபலமாக இருந்த ஆன்மீக பெரியவரை சந்திக்க சென்றபோது துர்க்கை அம்மன் மூர்த்தம் வாகனத்தில் இருந்ததை உணர்ந்து அவ்விக்ரகத்தை எடுத்து வரசெய்து தனது ஆயுர்தேவி அருள்குடிலில் வைத்து நல்லிரவு பனிரெண்டு மணிக்கு புகழ்ந்து பாடியது மறக்கமுடியாத நிகழ்வு. முன்னாள் ராணுவ வீரரான அப்பெரியவர் ஹிந்தியில் சரளமாக துர்க்கை துதியை பாடினார்கள். உடனிருந்த ஞான ஜோதி அம்மாவுக்கும் ஹிந்தி தெறியும் போல மிகுந்த மகிழ்சியுடன் ரசித்து லயித்து பக்தியில் மகிழ்ந்து இருந்தார்கள்

நவராத்திரி மறுநாள் துர்க்கை சிலையை வைத்து எளிமையான யாகம் செய்யப்பட்டது

ஞான ஜோதியம்மா இரவு வாலைதாய் வீட்டில் அருகில் உள்ள எங்கள் வீட்டில் தங்கி மறுநாள் ஆலய தரிசனங்களுக்கு முன்பு ஹோமத்தில் கலந்து கொண்டார்கள் அடிக்கடி துர்க்கை என்னைபார்த்து சிரிக்கிறாள் என்று சொல்லி சிலிர்ப்பாக கூறி கொண்டே இருந்தார்கள் பசுமையான நினைவுகள்


துர்க்கை அன்னை


காலபைரவர்


முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானையுடன் நித்திய கல்யாண கோலத்துடன் திருமணபந்தலில் எழுந்தருளி இருக்கும் முத்துகுமார ஸ்வாமி

தன் வந்தரி பகவான் பழமையான மூர்த்தி சங்கு சக்ரம் மூலிகை கட்டு உடன் அமிர்த கலசமேந்தி மிகவும் சன்னித்ய சாந்த குணத்தோடு அமர்ந்த மகா நாராயண தன்வந்திரி பகவான்


அருண சடைமகுட அகத்தியர் 


 விஷேசமான வெள்ளிலான ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்துள்ள அகத்தியர் சூரியனின் பிரபை அதில் சந்திர பிறைஎன மிகவும் தத்துவார்த்தமாக அமையப்பெற்ற அகத்தியர்

ஆதி சக்தி அங்காளி டமருகம் திரிசூலம் கத்தி கபாலம் என நான்கு கனங்களில் தத்துவமான ஆயுதம் தாங்கி சிரித்த முகத்தோடு அருள் சுரக்கும் கருணை வடிவான தாய் அங்காளி








 வாலை தாய் வீட்டு  நவராத்திரி பூஜை 



வாலை தாய்க்கு பஞ்சவர்ண பட்டுடுத்தி முல்லை அரும்பு சரம் சூடி மங்கள வடிவாய் ஆசி தருகின்ற அருட்கோலம்

நர்மதா லிங்கம் மற்றும்  நந்தி கணபதி இந்ந மூர்தங்கள் இன்னும் பிரதிஷ்டை ஆக வேண்டிய மூர்த்தம் நர்மதா லிங்கம்

வாலைதாய் வீட்டு ஸ்வாமிகளின் ஆயுதங்கள்

இந்த கோமாதா வாலைதாய் வீட்டில் காமாட்சி பசு என்று ஒன்று இருந்து முகதி அடைந்ததை முன்னாட்டு அப்பசுவின் நினைவாக வந்த கோமாதா

காமாட்சி பசு நினைவாக கோமாதா பூஜை

கருப்புசாமியின் ஆயுதம் அரிவாள் இது அகத்தியர் வாக்கில் வந்து அகத்தியர் அடியவர்களால் காணிக்கையாக வந்த அரிவாள்


வாலை வீட்டு கருப்பு சாமியின் ஆறடி உயரமுள்ள அரிவாள்

வாலைதாய் வீட்டு உச்சியில் அமைந்துள்ள மகாமேரு வடிவிலான லலிதா திரிபுரசுந்தரி ஆதிசக்தி









வாலை தாய்வீடு சித்தர்களின் வாக்குபடி எளிமையான வெட்டவளி வழிபாடு முறையிலான குடில் இங்கு அகஸ்தியர் கருவூரார் திருமூலர் வழிகாட்டுதல் அடிப்படையில் சித்தாகம வழிபாடு வேள்வி விக்ரக ஜோதி வழிபாடு என கூட்டுபிரார்த்தனை நடைபெருகிறது 

சித்தர்கள் அருளால் வாலை என்ற பராசக்தி பத்துவயது உடைய வாலை தாயின் பெருமையை சித்தர்கள் தங்களின் மேலான தாயாக போற்றும் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வழிபட்டு நலம் அடையவே தாயின் பெருமைகளை உணர்ந்து வணங்கி பயன் பெருக


              கருவூரார் பூஜைவிதி 

                  வாலைதாய் சிறப்பு


ஆதி அந்தம் வாலையவள் இருந்த வீடே

ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு

சோதியந்த நடுவீடு பீடமாகிச்

சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப் பெண்ணாத்தாள்

வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி

விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்

பாதி மதி சூடியே இருந்த சாமி

பத்து வயதாகும் இந்த வாமி தானே

வாமியிவள் மர்மம் வைத்துப் பூசை பண்ண

மதியுனக்கு வேணுமடா அதிகமாக

காமிவெகு சாமி சிவ காமி ரூபி

காணரிது சிறுபிள்ளை கன்னி கன்னி

ஆம் இவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்

அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும்

நாம் இவளைப் பூசை பண்ண நினைத்த வாறு

நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே

காணப்பா இவளுடைய கற்பு மெத்த

கண்டவர்க்குப் பெண்ணரசு நானே என்பாள்

ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டி வைப்பாள்

உள்வீட்டுக்கு உள்ளிருந்து மேலே ஏறப்

பூணப்பா மனமுறைந்து வா வா என்பாள்

புத்திரனே என்மகனே என்று சொல்லி

வேணப்பா வேணது எல்லாம் தருவேன் என்பாள்

வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும் தானே

தானென்ற வாலையிவள் ரூபம் காணச்

சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானும் உண்டோ

பானென்ற வாமத்துக்கு உள்ளே யப்பா

பராபரையாள் பலகோடி விதமும் ஆடித்

தேனென்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம்

சிறுபிள்ளை பத்து வயதுள்ள தேவி

ஊனென்ற உடலுக்குள் நடுவும் ஆகி

உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே


உண்மையிவள் நாணமில்லாது இருந்த வீடே

ஊருக்குள் நடுவீடே உற்றுப் பாரு

செம்மையாய்க் கண்டவர்கள் உண்டோ அப்பா

செகசால வித்தை இவளாடும் வித்தை

உண்மையடா பஞ்சவண்ணம் ஆகிநின்ற

உலகதனில் அலைந்தவர்கள் கோடா கோடி

நின்மலமாய்க் கண்டவர்கள் சொல்லார் அப்பா

நேசமுடன் எனக்குரைத்த நிசம் கண்டேனே



கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு

கால்மேலும் தலைகீழும் நடுவுமாகி

அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற

ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று

தொண்டு பண்ணும் அவர்களிலே நாலு பேர்கள்

சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு

கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்று ஆறு

கொள்கையெனக் காத்து இருந்த குறிப்பைப் பாரே


பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய்ப்

பலநூலைப் படித்துப் படுகுழியில் வீழ்வார்

ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே

ஏழைமதி போகாதே என் தாய் பாதம்

போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய்ப்

புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம்

பூத்தமலர் எடுத்து திருப் பாதம் போற்றப்

பொறி ஐந்து கருவி கரணாதி போம

போச்சுதடா மனமாய்கை வீறு போச்சு

பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு

ஏச்சுதடா வென்று மனம் இறக்கல் ஆச்சு

எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு

வாய்ச்சுதடா மனமடங்க வங்கென்றோர் சொல்

வாய்பேசா மவுனத்தை அதிலே சேர்க்கக்

காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை யூன்று

கனியாகும் அக்கனியைக் கண்டு கொள்ளே


கொள்ளுதற்கு இங்கு இன்னமொரு குறிப்பைக் கேளு

கோடியிடி மின் முழங்கும் கண்ணை மூடு

விள்ளுதற்கு மனம் அடங்காப் பூதம் காணும்

விள்ளாதே யுள்ளபடி சிங்கென் றோர்சொல்

விள்ள விமே யுபாயம் அதால் நடுவே நில்லு

வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு

கள்ளரைப் போல் மயங்காதே மவுனத் தூன்று

கண்ணிணையும் திறக்காதே கருதிப் பாரே


பாரேது புனலேது அனலும் ஏது

பாங்கான காலேது வெளியுமாகும்

நாரேது பூவேது வாசமேது

நல்ல புட்பம் தானேது பூசை யேது

ஊரேது பேரேது சினமும் ஏது

ஓகோகோ அதிசயந்தான் என்ன சொல்வேன்

ஆறேது குளமேது கோயில் ஏது

ஆதிவத்தை அறிவதனால் அறியலாமே


ஆமெனவும் ஊமெனவும் இரண்டும் கூட்டி

அப்பனே ஓமென்ற மூன்றும் ஒன்றாய்

நாமெனவும் தாமெனவும் ஒன்றே யாகும்

நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்

வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம்

வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை

சோமநதி அமுதம் உண்ண வாவா என்பாள்

சுகம் உனக்கு பரமசுகம் அருள் செய்வாளே

செய்குவாய் பூசையது செய்யும் போது

செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்

உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம்

ஊமை யென்ற நடுத்தீயை அதிகம் கொண்டால்

பைகுவாய் அரவுவிடம் பொசுங்கிப் போகும்

பங்கம் உனக்கு இல்லையடா அங்கமீதில்

ஐகுவாய் உள்ளடங்கிப் பேச்சை விட்டே

அழைத்திடவே அஞ்சுமது கொஞ்சும் காணே

காணாத காட்சி யெல்லாம் கண்ணிற் காணும்

கலங்காதே மெய்ம் மயக்கம் மெத்த வாகும்

பூணாத பணிபூண்டு சிறு பெண்ணாகப்

போதமெனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய்

வாணாளை மடக்கியிவள் ரூபம் கண்டு

மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு

கோணாத முக்கோணக் குறியைப் பாரு

கூசாதே கண்கூசும் கூசுங்காணே

கூச்சமற்றும் பார்க்கையிலே இருள் போல் மூடும்

கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம் போடு

வாய்ச் சமர்த்துப் பேசாதே மவுனத் தூன்று

வாவா என்றே நீயும் வருந்திக் கூவச்

சூட்சமது இருந்த இடம் சொல்ல லாமோ

சொல்லுதற்கு வாய்விட்டுச் சொல்ல லாமோ

தாய்ச் சமர்த்துப் பாராதே தாயைப் போற்று

சற்குருபோல் உற்பனத்தைத் தாய் சொல்வாளே


சொல்வதற்கு இங்கு இவளையலால் சுகம் வேறுண்டோ

சூட்சம் எல்லாம் இவளை விடச் சூட்சம் உண்டோ

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி

நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி

வல்லவர்க்கும் வல்லவளும் நானே யென்பாள்

வரமவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி

புல்லர்க்கு இங்கு ஆயுதமும் புல்லேயாகும்

புத்தி கெட்ட லோபிகட்கு புகல் ஒணாதே


புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே
அறிவு கெட்டே ஊர்தோறும் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு
சடைமுடியும் காசாயம் தன்னைச் சாற்றி
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய்
எண்ணம் எல்லாம் பெண்ணாசை பூசை தானே
17




பூசையது செய்வம் என்று கூட்டம் கூடிப்
புத்தி கெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி
புரட்டு உருட்டாய் நினைவுதப்பிப் பேசு வானே
18

பேச்சென்றால் வாய்ச் சமர்த்தாய்ப் பேசிப் பேசிப்
பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதும் காணார்
நிர்மூடர் அனேகவித சாலம் கற்றே
ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது
ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகில் தள்ளும்
மோசமது போகாதே முக்கால் பாரே
19



முக்காலும் பொருந்தும் என்று சொன்ன போதே
மோசமில்லை சூட்சமது மொழிந்து கூடும்
தக்காமல் போனபேர் அநேகர் உண்டு
சமர்த்து அறிந்தால் அவன் வாமியவனே சித்தன்
எக்காலும் நடந்திரு நீகாலும் உன்னி
இருந்தடங்கி உள்ளிருந்து வெளியில் போன
அக்காலைக் காணாமல் அலைந்தே யோடி
அழிந்து கெட்டுப் போனவர்கள் அறிந்து கொள்ளே





அறிந்தகுறி அடையாளம் காண வேண்டும்
அக்குறியில் சொக்கி மனம் தேற வேண்டும்
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும்
அலகையது வழிபாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண
மயக்கத்தைக் கண்டு உனையும் மதிக்க வேண்டும்
நிறைந்தமதி குறைந்த வகை அறிய வேண்டும்
நிச்சயத்தை அறிவார்க்கு முத்தி தானே


முத்தி தரும் என்று மனம் புத்தி யற்று
மோசமது போகாதே பாசம் கையில்
சித்தமதில் சந்திரனை நிறுத்திக் கொண்டு
செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கிச்
சுத்தியுடன் ஆதியந்தம் வைத்துச்
சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி
நித்யமலர் அர்ச்சனை செய் பாதம் போற்றி
நீயுமதி மதியுமதில் அதிகம் ஆமே


மதிபெருகுங் கதிபெருகும் வாதம் வாதம்
வருந்தாதே யந்தமுறை யாகா தப்பா
நிதிபெருகும் இவள் குறியே வாத மாகும்
நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி
நதிகள் தனை அறியாமல் சலத்தில் மூழ்கி
நானே நான் என்று வாய் மதங்கள் பேசி
உரிய பொருள் உள்ள தெல்லாம் சுட்டுச் சுட்டே
உட்பொருளைப் பாராமல் அழிந்திட்டாரே


இட்டகுறி நாதவிந்து ரூபங் காண
இயலறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்
விட்டகுறை வந்தது என்றால் தானேஎய்தும்
விதியில்லார்க்கு எத்தனை தான் வருந்தினாலும்
பட்டுமனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை
பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ் போக்காதே
திட்டமதாய் பாணம் வைத்துத் தேவி பூசை
சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே


எட்டிரண்டும் ஒன்றுமது வாலை யென்பார்
இதுதானே பரிதிமதி சுழுனை யென்பார்
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார்
உதித்தெழுந்த மூன்றெழுத்தை அறியா ரையோ
கொட்டும் ஒரு தேளுருவாய் நிற்கும் பாரு
கூட்டம் இட்டுப் பாராதே குறிகள் தோன்றும்
சுட்டசுடு காடுமது வெளியும் ஆகும்
சொல்லுவதற்கு வாய் விளங்காச் சூட்சந்தானே



சூட்சம் இவன் வாசமது நிலைத்த வீடு
சொல்லு தற்கே எங்குமாய்நிறைந்த வீடு
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு
சித்தாந்த சித்தர் அவர் தேடு வீடு
ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடு
ஓகோகோ அதிசயங்கள் உள்ள வீடு
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு
அவன் அருளும் கூடி விளையாடும் வீடே


வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்
வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்
திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல்
அரகர சிவசிவா வாசி வாசல்
கூடுகிற முக்கோணப் பரங்கள் ஆகிக்
குறுகுமதி பெருகுமதி கூற ஒண்ணாதே

27


ஒண்ணாகி இரண்டாகி விளைவும் ஆகி
உத்தமியாள் உட்கருத்தை அறியப் போமோ
தின்னாத விடக்கெடுத்துத் தின்னச் சொன்னாள்
செத்தசவம் போலிருந்து செபிக்கச் சொன்னாள்
பண்ணாத பணக் கோடிப் பண்ணி வைத்தாள்
பார்த்திருந்து கழுத்தறுக்கப் பார்த்தாள் பாவி
எண்ணாது எண்ணி மனம் ஏங்கி நாளும்
எனக்கபயம் ஏதெனவே எழுந்திட்டேனே


எழுந்திட்ட சிவன் பார்த்துத் தொடர்ந்து கூடி
என்னையுமே இழுத்து மடி பிடித்துக் கொண்டு
கொழுந்து விட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டிக்
குடிகேடி சத்துருப் போல் கூச்சலிட்டாள்
அழுதேனே முக்தியினி அந்த ஊரில்
அரகரா துணை எனக்கே யாருமில்லை
எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப் போனார்
என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே



ஏங்கினேன் ஈடழிந்தேன் விடும் அற்றேன்
என்னைத் தான் கண்டவர்கள் சீசீ எயன்னத்
தூங்கினேன் காலறிந்து மடக்க மாட்டேன்
துணை எனக்கு யாருமில்லை சூழ்ச்சியாக
வாங்கினேன் காலறிந்து மடக்க வேண்டும்
வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னேன்
தேங்கினேன் முன்னுவள் பின்னு மாகத்
திடம் எனக்குச் சொன்னது இந்தத் தெளிவுதானே
30


தெளிவதற்குச் சூட்சமிது தெளிவாய்ப் பாரு
சிவனிருந்து விளையாடும் தெருவைப் பாரு
மொழிவதற்கு இந்நூலைவிட வேறொன்று இல்லை
முன்னதி அந்தமொடு நடுவும் சொன்னோம்
சுழியதற்குள் சுழியிருந்த சூட்சம் சொன்னோம்
சொல்லாத மவுனமுதல் கருவும் சொன்னோம்
ஒளிபிறக்கும் உறுதியிந்த உறுதி சொன்னோம்
உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர் தாமே
                     

        
                         வாலை தாய்வீட்டு                    போற்றிகள்


ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்

ஓம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்

ஓம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஒலி தொடுகை உருவம் ரசம் மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
 
ஓம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்

ஓம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தாயே உன் பாதகமல தூசியே வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்

ஓம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி

: ஓம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்த வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

 ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓசை மணி பூரமதிலுதிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்

ஓம் விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்

ஓம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்

ஓம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்

ஓம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்

ஓம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்

ஓம் பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்

ஓம் அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்

ஓம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்

ஓம் தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்

ஓம் சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்

ஓம் ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே போற்றி ஓம்

ஓம் அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்

ஓம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்

ஓம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்

ஓம் பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்

ஓம் ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்

ஓம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்

ஓம் ஓங்காரி என்னும் ஒரு பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்

ஓம் ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்

ஓம் ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்

ஓம் தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்

ஓம் சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்

ஓம் ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்

ஓம் கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்

ஓம் ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்

: ஓம் சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்

ஓம் மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்

ஓம் சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்

ஓம் வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்

ஓம் தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்

ஓம் செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
 பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்

ஓம் மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்

ஓம் நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய ணீன் செந்தாரணியே வாலை தாயே  போற்றி


வாலை வழிபாடு முதிர்ந்த ஞானிகளே பயபக்தியோடு அகமார்க்கமாக செய்யகூடிய பூசை இது.

வாலை சிறுவடிவமான லலிதை மகாசக்தி ஸ்ரீ வித்யாவில் வாலை வழிபாடு முதல்படி 

வாலை வழிபாடு குருமுகமாக நின்று செய்யும் சித்தர் சூட்சம வழிபாடு அதனை சிறுகுந்தை போல் பேசுதல் அருள்வாக்கு உரைத்தல் போன்ற புறிதலற்ற வழிபாடு தவிர்த்து 

கருவூரார் கொங்கணர் அகஸ்தியர் போன்ற மகாகுருவின் ஞானநூல்களை படித்து அறிந்து பக்தி செய்து பயன் பெற வேண்டுகிறேன்

அடியேன்
 இராமய்யா. தாமரைச்செல்வன்









தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...