சனி, 22 நவம்பர், 2025

 

ராமரின் மந்திரங்கள்| Ramarin Manthirangal ஸ்ரீ ராமர் காயத்ரி

ராமரின் மந்திரங்கள்:

ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

பொருள்:
இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார்.

வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் மந்திரம்:
ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா

பொருள்:
பீஜ ஒலியால் ஆன இந்த மந்திரம் சொல்ல சொல்ல, காந்தத்தைப் போல நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தேடி வரும். இதை சொல்லி வர உலக அமைதி உண்டாகும்.
ஸ்ரீ ராம மூல மந்திரம்
மிக எளிய ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம்:
“ஸ்ரீ ராம ஜெயம்”

இதன் பொருள் அனைவரும் அறிந்ததே, ராமருக்கே வெற்றி. நாம் ராமனை வேண்டி இந்த மந்திரத்தை சொன்னால் அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.
இந்த மந்திரத்தை “ஓம் ஸ்ரீ ராமாய நமஹ: ” என்றும் கூறுவதுண்டு.
கோதண்ட ராம மந்திரம்

ஸ்ரீராம் ஜெய ராம் கோதண்ட ராமா
பொருள்:
கோதண்டம் என்றால் வில் என்று பொருள். வில்லை ஏந்திய ராமனின் பெயரை உடைய இந்த மந்திரத்தை சொல்லி வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிக்கும்.  மந்திரம்.

ராம தாரக மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ராம தியான மந்திரம்

ஓம் ஆபதாம்பஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்
ரீராமம் புயோ புயோ நமாம்யஹம்

| ராம பஜனை பாடல் வரிகள்

பகவான் ஸ்ரீ ராமரின் சிறப்பு மிக்க பக்தி பாடல் வரிகள் (Ramar Songs) இந்த பதிவில் உள்ளது…

ஆத்மா ராம ஆனந்த ரமண பாடல் வரிகள்

ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண

ராம ராம ராம ராம ராம நாம  பாடல் வரிகள்

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே



ராம பஜனை பாடல்கள் – Rama bhajans

ராம பஜனை பாடல்கள்

=============================

ஆத்மா ராம ஆனந்த ரமண

அச்சுத கேஷவ ஹரி நாராயண

பவ பய ஹரண வந்தித சரணா

ரகு குல பூஷன ராஜீவ லோசன

ஆதி நாராயண ஆனந்த ஷயன

சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண


================================


தசரத நந்தன ராம ராம்

தயா சாகர ராம ராம் (2)

பசுபதி ரஞ்சன ராம ராம்

பாபா விமோசன ராம ராம் (2)

லக்ஷ்மண சேவித்த ராம ராம்

லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)

சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்

சுந்தரா வதன ராம ராம் (2)


===============================


ராகவா சுந்தரா ராம ரகுவரா

பரம பாவனா ஹே ஜகத் வந்தன

பதிதோ தாரண பக்த பரயண

ராவண மர்த்தன விக்ன பஞ்சன

===============================

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

===============================


ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி

பாடணும் நாமம் சொல்லி பாடணும்

நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்

எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்

என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்


கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்

பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்

விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்

கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்

=================================


ராம ராம ராம ராம ராம நாம தரகம்

ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்

சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்


ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்


ரர 




ஞாயிறு, 2 நவம்பர், 2025

பிரதோஷ வழிபாடு

                                 ஓம்                

                            சிவமயம்





பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடாகும். அதாவது பிரதி + தோஷம் என்று பிரிக்கப்படுகிறது. பிரதி என்றால் ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்றால் பாபத்தைக் குறிப்பதாகும். பிரதோஷ வழிபாடு செய்வதால் ஒவ்வொருவரும் தங்களுடைய பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழி என குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் வரும் திரயோதசி திதி எனும் 13ம் நாள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ விரத மகிமை :

பிரதோஷ நாளன்று யார் ஒருவர் விரதமிருந்து, பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு, நந்தி, சிவபெருமானை தரிசித்து வழிபட்டு, தன் விரதத்தை முடிக்கிறாரோ அவரின் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும்.


பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராண கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.


பிரதோச விரதம்

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.


இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.


பிரதோஷக் காலம்

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

பிரதோச வகைகள்



பிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன:


1.தினசரி பிரதோஷம்

2.பட்சப் பிரதோஷம்

3. மாசப் பிரதோஷம்

4. நட்சத்திரப் பிரதோஷம்

5. பூரண பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்

7.தீபப் பிரதோஷம்

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

9. மகா பிரதோஷம்

10. உத்தம மகா பிரதோஷம்

11. ஏகாட்சர பிரதோஷம்

12. அர்த்தநாரி பிரதோஷம்

13. திரிகரண பிரதோஷம்

14. பிரம்மப் பிரதோஷம்

15. அட்சரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

18. அஷ்ட திக் பிரதோஷம்

19. நவக்கிரகப் பிரதோஷம்

20. துத்தப் பிரதோஷம்

திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோம சூக்தப் பிரதட்சணம்


சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசகாலங்களில் முறையாக வலம் வருவதாகும்

1. தினசரி பிரதோஷம்: தினமும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை உள்ள பிரதோஷ காலத்தில் தொடர்ந்து 5 வருடங்கள் முறையாக பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.

2. பட்ச பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான திரயோதசி திதி பட்ச பிரதோஷம் என அழைக்கப்படுவதால் இந்த நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு செய்வது உத்தமம்.

3. மாத பிரதோஷம்: பௌர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி திதி மாத பிரதோஷம் ஆதலால், இந்த நேரத்தில், பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திர பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி பூரண பிரதோஷம் ஆகும். இந்நேரத்தில் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது  இரட்டைப் பலனைத் தரும்.


6.திவ்ய பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ, திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்ய பிரதோஷம். இன்று மரகத லிங்கேஸ்வரரை வழிபட, பூர்வ ஜன்ம வினை நீங்கும்.


7.  தீப பிரதோஷம்....தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து வழிபட, சொந்த வீடு அமையும்.


8. அபய பிரதோஷம் என்னும் சப்த ரிஷி பிரதோஷம்: சப்த ரிஷி மண்டலத்தை தரிசித்து வழிபடுவதே அபய பிரதோஷம் என்னும் சப்த ரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.


9. மகா பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற, மகா பிரதோஷ நாளில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் மிகவும் உத்தமம்.


10. உத்தம மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாத வளர்பிறையில், சனிக்கிழமையில் வரும் திரயோதசி திதி உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.


11.ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷம் `ஏகாட்சர பிரதோஷம்' ஆகும். இன்று சிவாலயம் சென்று, `ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை ஓத, பலவிதமான நன்மைகள் ஏற்படும்.


12. அர்த்தநாரி பிரதோஷம்:  வருஷத்தில் இரண்டு முறை வரும் மகா பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம் ஆகும். இன்று சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வர்.


13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.


14. பிரம்ம பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்ம பிரதோஷம் ஆகும். இந்த வழிபாடு செய்ய முன் ஜன்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.


15. அட்சர பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சர பிரதோஷம் ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பாவ விமோசனம் கிடைக்கும்

16 கந்த பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் கந்த பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.


17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்' ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம்.


18. அஷ்டதிக் பிரதோஷம்: வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்கு பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.


19. நவகிரக பிரதோஷம்: வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவகிரகப் பிரதோஷம். அரிதான இந்த பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.


20. துத்த பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. இந்த துத்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் சரியாகும்.


மஞ்சள் கூடாது

பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது

சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது

பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது


1.ஓம் சிவசிவ சிவனே

சிவபெருமானே போற்றி போற்றி

விரைவினில் வந்தருள் விமலா

போற்றி போற்றி


2. ஓம் மஹா, ஈசா மகேசா

போற்றி போற்றி

மனதினில் நிறைந்திடும் பசுபதியே

போற்றி போற்றி


3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா

போற்றி போற்றி

மூவா இளமையருளும் முக்கண்ணா

போற்றி போற்றி


4.ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே

போற்றி போற்றி

திரு ஐயாறமர்ந்த குருபரனே

போற்றி போற்றி


5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்

திருமுகமே போற்றி போற்றி


6.ஓம் உமையொருபங்கா

போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே

போற்றி போற்றி


7.ஓம் உலகமே நாயகனே லோக

நாயகா போற்றி போற்றி

அகோரத்திற்கோர் திருமுகமே

போற்றி போற்றி


8. ஓம் உருத்திர பசுபதியே

போற்றி போற்றி


9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே

போற்றி போற்றி


10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே

லிங்கமே போற்றி போற்றி

அதற்கு மோர்திருமுகமே

போற்றி போற்றி


11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்

பாகா போற்றி போற்றி

அம்பிகைக்கோர் முகமே அம்பிகா

பதியே போற்றி போற்றி


12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட

பரமனே போற்றி போற்றி


13 ஓம் சாம்பசிவ சதா சிவனே

சத்குருவே போற்றி போற்றி


14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு

நாதா போற்றி போற்றி


15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்

கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி


16.ஓம் கங்காதரனே கங்களா

போற்றி போற்றி


17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்

இறைவா போற்றி போற்றி

ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ


பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.


பிரதோஷ ஈஸ்வர தியானம் மந்திரம் |


நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

சிவாய நம ஓம் சிவாய நம:

சிவாய நம ஓம் நமசிவாய

சிவாய நம ஓம் சிவாய நம:

சிவாய நம ஓம் நமசிவாய

சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்

ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நம

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம

ஓம் சிவாய சங்கரா

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா


பிரதோஷ கால சிவன் போற்றிகள்

ஓம் முக்கண் முதல்வனே போற்றி

ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி

ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி

ஓம் தில்லையம்பலவாணனே போற்றி

ஓம் சக்தியின் நாயகனே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி

ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி

ஓம் நவசிவாயனே போற்றி போற்றி

ஓம் கங்கை கொண்டவனே போற்றி

ஓம் காசி விஸ்வநாதனே போற்றி

ஓம் திங்களை சூடியவனே போற்றி

ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி

ஓம் சங்கமேஸ்வரனே போற்றி

ஓம் சங்கரி துணைவனே போற்றி

ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி

ஓம் இயக்கத்தின் மூலவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் மாதொரு பாகனே போற்றி

ஓம் இமயமலையனே போற்றி

ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி

ஓம் அரவணைக்கும் அய்யனே போற்றி

ஓம் சோதனைகள் தீர்ப்பனே போற்றி

ஓம் சுடரொளியாய் தெளிபவனே போற்றி

ஓம் நாதபிரம்மமே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி

ஓம் நவசிவாயனே போற்றி போற்றி

ஓம் அடியார்க்கு அடியனே போற்றி

ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி

ஓம் தடைநீக்க வல்லோனே போற்றி

ஓம் தண்டீஸ்வரனே போற்றி

ஓம் அடிமுடியில்லாதவனே போற்றி

ஓம் முக்கண் முதல்வனே போற்றி

ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி

ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி

ஓம் தில்லையம்பலவாணனே போற்றி

ஓம் சக்தியின் நாயகனே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி

ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி

ஓம் நவசிவாயனே போற்றி போற்றி

ஓம் கங்கை கொண்டவனே போற்றி

ஓம் காசி விஸ்வநாதனே போற்றி

ஓம் திங்களை சூடியவனே போற்றி

ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி

ஓம் சங்கமேஸ்வரனே போற்றி

ஓம் அண்ணாமலையானே போற்றி

ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி

ஓம் சாம்பசிவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி

ஓம் பிரகதீஸ்வரனே போற்றி

ஓம் கட்டுகடங்காத கருணைக்கடலே போற்றி

ஓம் கபாலீஸ்வரனே போற்றி

ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி

ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி

ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி

ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் அறுபத்துமூவரின் ஆண்டவனே போற்றி

ஓம் அருணாசலனே போற்றி

ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி

ஓம் பட்டீஸ்வரனே போற்றி

ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி

ஓம் வைத்தீஸ்வரனே போற்றி

ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி

ஓம் காரணீஸ்வரனே போற்றி

ஓம் பொன்னார் மேனியனே போற்றி

ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி

ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி

ஓம் வெங்கேஸ்வரனே போற்றி

ஓம் அன்னாய் காப்பவனே போற்றி

ஓம் கையிலாத நாதனே போற்றி

ஓம் உண்ணாமுலையான் துணைவனே போற்றி

ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி

ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி

ஓம் பரிபூரணமானவனே போற்றி

ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி

ஓம் கரிமுகன் தந்தையே போற்றி

ஓம் காந்திமதி நாதனே போற்றி

ஓம் சரவணனை தந்தவனே போற்றி

ஓம் சாம்பசிவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி

ஓம் வையகம் காப்பவனே போற்றி

ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் சர்வ வல்லமையானே போற்றி

ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் தரணி ஆள்பவனே போற்றி

ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி

ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் கலைகளின் அரசனே போற்றி

ஓம் சத்ரலிங்கேஸ்ரவனே போபோற்றி

ஓம் சர்வம் சிவமயமே போற்றி

ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் சூட்சுமதாரியே போற்றி

ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி

ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி

ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி

ஓம் சரபேஸ்வரனே போற்றி

ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி

ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி

ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி

ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி

ஓம் வற்றா அருளுடையவனே போற்றி

ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி

ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி

ஓம் பாபவிமோச்சனனே போற்றி

ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி

ஓம் உடலின் உயிரே போற்றி

ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி

 

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

பிரதோஷ வழிபாட்டை தத்துவமாக வழிபட்டு நந்தி அருளையும் சிவபெருமானின் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம் 


          காலதீபிகம் அஸ்ட்ரோ சர்வீஸ்

         அடியேன். கணியன். R. T. செல்வம்










  ராமரின் மந்திரங்கள்| Ramarin Manthirangal ஸ்ரீ ராமர் காயத்ரி ராமரின் மந்திரங்கள்: ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்ப...