சனி, 11 அக்டோபர், 2014

மகிழம்பூ
மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்றும் அன்பாகாது.மென்மை அறிவு தரும்; வன்மை நம்மை அழித்துவிடும். மென்மை போற்றுதலுக் குரியது; வன்மை தூற்றுதலுக்குரியது. மென்மை மேலானது; வன்மை கீழான து. மென்மை சாந்தம் வளர்ப்பது; வன் மை அகங்காரம் வளர்ப்பது. மென்மை நம்மை வளர்ப்பது; ஆனால் வன்மை நம்மைத் தடுப்பது.
அதனால்தான் மென்மையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். மலர்களின் மென்மையில்தா ன் இறைவன் இருக்கிறான். அந்த மலரே- அந்த மலருக்குள் இருக்கு ம் இறையே நமக்கு இரையாகி, நம க்குள் இருக்கும் இறையைப் போஷிக் கிறது. இது ஒரு காலச்சக்கரம். இதில் நாம் வன்மையடைய ஒன்றுமில்லை.
மென்மைக்கு இலக்கணமான மகிழ ம்பூவில் வீற்றிருக்கும் எம் பெருமான் சிவனை வணங்கி வேண்டுவோம். நல்ல உடல்நலம் பெற, கோவை சங்கமேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரத்தினை நடமாடும் சிவனாய் பாவித்து வேண் டுவோம்.
உஷ்ணம் தணிய…
கோடை வெயிலின் கடுமையைத் தணி ப்பதில் மகிழம்பூ முன்னோடி யாயத் திக ழ்கிறது. நான்கு மகிழம்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரி லிட்டு (இரவில்) மூடி வைக்கவும். மறுநாள் காலையில் பூக்க ளை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகி வரவும். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும்.
வியர்க்குருக்கள் மறைய…
புத்தம் புதிய மகிழம்பூக்களை ஒரு கைப் பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கைய ளவு பாசிப்பயறு, மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர் த்தரைத்து உடம்பெ ல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும் தொடர்ந்து பயன்படுத்திவர அழு க்குத் தேமல் அடியோடு மறையும்.
பாலுணர்வு சக்தி மேம்பட…
மகிழம்பூ மனதை மயக்கி புத்துண ர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண் ணங்களை அறவே களைந்து நேர் மறை எண்ணங்களை அதிகப்படு த்தும். அதனால்தான் தெய்வீகத் திருத்தலங்களில் மகிழமரம் நீங் கா இடம் பெற்றுள்ளது. மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போ ட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இய க்கும் நாளமில்லா சுரப்பிக ளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல் லமை மகிழ மரத்திற்கே உண்டு.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம் ளர் நீரிலிட்டு நன்கு கொதிக்க வை த்து வடிகட்டிவிடவும். பின்னர் இத் தண்ணீருடன் பால் சேர்த்து கொதி க்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறு க்கேற்றி பாலுணர்வு சக்தியை இரு பாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம் முறையை 48 நாட்கள் தொடர்ந் து பயன்படுத்தி வர வேண்டும்.
நல்ல தூக்கம் உண்டாக…
நான்கு மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனி யா விதை (கொத்த மல்லி) ஆகியவற்றைச் சேர் த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவி ல் சாப்பிட்டு வாருங்கள். நிம்மதியான தூக்கம் உண்டாகும்.
மன பயம் விலக…
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்கா ய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தை யும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள். இதி ல் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மன பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போ ன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையா கப் பாதிக்கப்பட்டவர்கள் தொட ர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப் பரிய பலன்களைப் பெறலாம்.
கற்றாழை நாற்றம் விலக…
மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடு க்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் , சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவ ற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித்தூள் செய்து கொள்ளவும். இதனை உடம் பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றி லும் விலகிவிடும்.
தலைமுடி வளர…
மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடு த்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படு ம்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்து வரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறை யைப் பின்பற்றினால் பலன் நிச்சய ம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த் தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.
வெள்ளைப்படுதல் குணமாக…
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிரா ம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை – மாலை இரு வேளையும் அரை தேக் கர ண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப் படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புக ளில் உண்டாகும் புண் குணமாகும்.
படை, அரிப்பு தீர…
மகிழம்பூ 1/2 கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள் ளுக்குச்சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்து வர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிக ளை முழுமையாகக் குணப்படுத் தும்.
தலைவலி குணமாக…
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜா ப்பூ, ஏலக்காய், அதி மதுரம், சித்தரத்தை ஆகிய வற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இரு வேளை யும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள் பட்ட தலைவலி, தலை பாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறை பாடுக ள் தீரும்.
உடல் வலுவடைய…
மகிழம்விதை, நாயுருவி விதை ஆகியவற்றை வகைக்கு 100 கிரா ம் எடுத்து சேர்த்தரைத்துக் கொள் ளவும். இதில் அரை தேக் கரண்டிய ளவு காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டுவர உடல் வலுவடை யும். ஆண்மை சக்தி உண்டாகும்.
வெட்டைநோய் தீர…
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூமிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டி னால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும். முகப்பொலிவிழந் து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட் சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச் சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வண ங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.
மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பி ட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்
ஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எடுக்க வேண்டும் . வெறும் ஆன்மா கர்மத்தை செய்ய முடியாது. முந்திய பிறவியின் ஆசையின் காரணமாக ஆன்மா உடலை எடுக்கிறது....
உடல் எப்படி பட்டது. ஆன்மா எங்கே இருக்கிறது ?
ஆன்மா உடலின் இதயத்தில் இருக்கிறது. அது வெறும் சாட்சி யாக இருக்கிறது . எந்த கர்மத்தை செய்யவும் தூண்டவும் இல்லை . எந்த கர்மத்தையும் ஆன்மா செய்ய வில்லை.
உடலில் ஒன்பது வாசல் உள்ளது. அது என்ன ?
இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு மூக்கு துவாரங்கள்
ஒரு வாய்
மூத்திர துவாரம்
மல துவாரம்
இப்படி ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் ஆன்மா வசிகின்றான்.
இந்த ஒன்பது வாசல்களும் எப்படி பட்டது ?
இந்த ஒன்பது வாசல்களும் மிகவும் அசுத்தமானது.
அதாவது ஆன்மா அசுத்தமான ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் குடி இருக்கிறான். ஏன் ?
கர்மத்தில் பந்த பட்டு இருக்கிறான்.
கர்மத்தில் இருந்து விடு பட்டால் தான் அவன் சுகமான இறை இன்பத்தை அடைய முடியும்.
எப்படி ஒன்பது வாசல்களும் அசுத்தமானது /
கண் தினமும் கழிவுகளை வெளியேற்றும். அது ஊளை என்று அழைக்கபடுகிறது .
காது ஒரு வித கழிவுகளை வெளியேற்றும். அது குறும்பி என்று அழைக்கபடுகிறது.
மூக்கு சளி என்ற கழிவை வெளியேற்றுகிறது.
வாய் எச்சில் மற்றும் கிருமிகளை தினமும் உருவாக்கி வெளியேற்றுகிறது.
மூத்திர துவாரத்தின் மூலம் நீர் சம்பந்த பட்ட கழிவுகள் வெளியேற்ற படுகிறது.
மல துவாரத்தின் மூலம் திட கழிவுகள் வெளியேற்ற படுகிறது ( மலம் ).
இப்படி அணைத்து துவாரமும் கழிவுகளை கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட உடலில் தான் ஆன்மா அடைபட்டு கிடக்கிறது.
இது வெளியேற வேண்டும் என்றால் , ஆன்மா முக்தி அடைய வேண்டும்.
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், ப...ேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும். கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும். கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி,  இரு கைகளையும் மெதுவாக தட்டி,  நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில்  இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
 
  •  
விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீ...ழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?
ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனை தவிர்ப்பது நல்லது. அதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு. வருடத்திற்கு ஒரு முறையாவது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருந்தால் இருவருக்கும் சுயமரியாதை பிரச்சினை ஏற்படும். ஒருவர் நன்றாக இருந்தால் மற்றொருவர் நன்றாக இருக்க மாட்டார். ஒருவர் வளர்ச்சி அடைந்தால் மற்றொருவர் வளர்ச்சி தடைபடும்.
...
எனவே ஒரே வீட்டில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் அதற்கு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வருவதுதான் பரிகாரமாகும்.
குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சனை ஏற்படுமா? அதனை தீர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?
பதில்: கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.
ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.
ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
See More
பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ? cash box, money ?
குடும்ப தலைவன் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருக்க வேண்டும். அந்த அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பண பெட்டியை வைக்க வேண்டும்.
பண பெட்டி வடக்கு பார்த்து இருப்பது உத்தமம்.
...
வீடு பெரியதாக இருந்தால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல
வடக்கு திசையில் இருக்கும் அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.
அல்லது கிழக்கு திசையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.
அல்லது தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்
.
ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?
ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா? நாகரீகமான, படித்த மனிதர்கள் மத்தியிலும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான விடயத்தில் தயக்கம் இருக்கிறது. எவ்வளவு சாப்பிடுவது என்பது முதல் எதைச் சாப்பிடுவது என்பது வரை இளைஞர்கள் மத்தியில் கூட குழப்பம் காணப்படுகிறது. பண்டிகை தினங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதற்கும் சிலர் தயக்கம் (சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட) காட்டுகின்றனர். இதற்கு...ம் அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா? பதில்: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள். இதேபோல் மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர். மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்புவர். கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர். எனினும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர். புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்து பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர். எனவே, ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும். மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும். மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள். கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக சூட்டுடன் சாப்பிடுவர். மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...