சனி, 11 அக்டோபர், 2014

ஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எடுக்க வேண்டும் . வெறும் ஆன்மா கர்மத்தை செய்ய முடியாது. முந்திய பிறவியின் ஆசையின் காரணமாக ஆன்மா உடலை எடுக்கிறது....
உடல் எப்படி பட்டது. ஆன்மா எங்கே இருக்கிறது ?
ஆன்மா உடலின் இதயத்தில் இருக்கிறது. அது வெறும் சாட்சி யாக இருக்கிறது . எந்த கர்மத்தை செய்யவும் தூண்டவும் இல்லை . எந்த கர்மத்தையும் ஆன்மா செய்ய வில்லை.
உடலில் ஒன்பது வாசல் உள்ளது. அது என்ன ?
இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு மூக்கு துவாரங்கள்
ஒரு வாய்
மூத்திர துவாரம்
மல துவாரம்
இப்படி ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் ஆன்மா வசிகின்றான்.
இந்த ஒன்பது வாசல்களும் எப்படி பட்டது ?
இந்த ஒன்பது வாசல்களும் மிகவும் அசுத்தமானது.
அதாவது ஆன்மா அசுத்தமான ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் குடி இருக்கிறான். ஏன் ?
கர்மத்தில் பந்த பட்டு இருக்கிறான்.
கர்மத்தில் இருந்து விடு பட்டால் தான் அவன் சுகமான இறை இன்பத்தை அடைய முடியும்.
எப்படி ஒன்பது வாசல்களும் அசுத்தமானது /
கண் தினமும் கழிவுகளை வெளியேற்றும். அது ஊளை என்று அழைக்கபடுகிறது .
காது ஒரு வித கழிவுகளை வெளியேற்றும். அது குறும்பி என்று அழைக்கபடுகிறது.
மூக்கு சளி என்ற கழிவை வெளியேற்றுகிறது.
வாய் எச்சில் மற்றும் கிருமிகளை தினமும் உருவாக்கி வெளியேற்றுகிறது.
மூத்திர துவாரத்தின் மூலம் நீர் சம்பந்த பட்ட கழிவுகள் வெளியேற்ற படுகிறது.
மல துவாரத்தின் மூலம் திட கழிவுகள் வெளியேற்ற படுகிறது ( மலம் ).
இப்படி அணைத்து துவாரமும் கழிவுகளை கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட உடலில் தான் ஆன்மா அடைபட்டு கிடக்கிறது.
இது வெளியேற வேண்டும் என்றால் , ஆன்மா முக்தி அடைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக