செவ்வாய், 31 மே, 2016

அருள்மிகு போகநாதர் குரு பூசை 03-6-2016-காலை10 am முதல் மாலை 6-௦௦pmவரை

அருள்மிகு போகநாதர் குரு பூசை



சித்தர் 5 வகை படுவர். அதில் இரசாயன மார்கத்தை தழுவி நின்ற சித்தர்களில் பிரதானமானவர் போகநாதர் பெருமான்.  மூலிகைகளை தாண்டி தாது (Minerals), உலோகங்கள் (Metals) மற்றும் பாஷாணம் (Poisons) கொண்டு பல உன்னத மருந்துகளை நம் முன் வைக்கின்றனர். என்றெல்லாம் கடினமான பிணிகள் மற்றும் நிலம் சார்ந்த துன்பங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் போகர் பெருமானை பற்றி நிற்கவே பிருகு மகரிஷி மற்றும் அகத்திய மாமுனிவர் ஆசி உறைகின்றனர்.

முருகனுடைய தத்துவத்தை பிரதனாமாக வைத்து செல்லும் இந்த இரசாயன வகை சித்தர்களை ALCHEMIST என்று கூறுவது உண்டு. உலோகம் மற்றும் பாஷனத்தின் பர சூட்சுமத்தை அறிந்தவர்கள். இதனால் ஏக தத்துவத்தின் தன்மை கொண்டு ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாய் மாற்றும் தன்மைகளை கண்டுபிடித்தனர். இதனை இரசவாதம் என்றும் கூறுவர்.

போகர் பெருமான் உயிகொல்லும்  கடுமையான நவபசாணத்தை சுத்தி செய்து, அதனை பல நோய் அகற்றும் மா மருந்தாக மாற்றினார். அதனை கொண்டே நவபாசாண முருகனை பழனியில் தோற்றுவித்தார். அந்த முருகனை அபிசேகம் செய்து வரும் பஞ்சமிர்தம், சந்தனம் மருந்தாக மாறி பல கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டு உள்ளது.

போகரும் கோரக்கரும் முருகனுடைய அகமார்க்க சூட்சுமத்தின் மிக தலையாய சித்தர்களாய் அகத்தியரின் மார்க்கம் பற்றி நின்றனர். தன்னுள் இருக்கும் அசுரனை அளித்து அழியா குமரனாய் வாழும் முறையே அது

போகரின் சீன (China) நாட்டு தொடர்பு அனைவரும் அறிந்ததே. பதிவுகள் அவரை Laozi Boyang என்று கூறுகின்றது. அவருடைய சீட வர்க்கம் (Yu) என்னும் புலிப்பாணி என்றும், Kong என்னும் கொங்கனவர் என்றும் கூறுகிறது.





ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி
அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம் வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am முதல் மாலை  6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள் ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின் அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம் பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும் பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
-இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி

சனி, 21 மே, 2016

  •           ஸ்ரீ போகர் ஜோதி விழா வைகாசி பரணி                       
                          ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி

    Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136

    அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம் வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am முதல் மாலை  6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள் ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின் அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம் பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும் பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
                             -இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி
    ஸ்ரீ போகரின் சில தொகுப்புகளும் அவரின் நூல் தகவல்கள் சில
    போகர் 12000
  • சப்த காண்டம் 7000
  • நிகண்டு 1700
  • வைத்தியம் 1000
  • சரக்குவைப்பு 800
  • செனன சாகரம் 550
  • கற்பம் 360
  • உபதேசம் 150
  • இரணவாகமம் 100
  • ஞானசாராம்சம் 100
  • கற்ப சூத்திரம் 54
  • வைத்திய சூத்திரம் 77
  • முப்பு சூத்திரம் 51
  • ஞான சூத்திரம் 37
  • அட்டாங்க யோகம் 24
  • பூசா விதி 20
  • போகர் 7000
போகரின் சப்த காண்டம் - 7000
1.
ஆனந்த மாய்நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர்பாதம்
வானந்த மாகிநின்ற கணேசன்பாதம் மருவியதோர் மூலத்தின் நந்திபாதம்
தானந்த மாகியதோர் காளாங்கிபாதம் கனவருட வியாக்கிரமர் பதஞ்சலிபாதம்
போனந்த மாகியதோர் ரிஷிகள்பாதம் போற்றி ஏழாயிரம்நூல் பகலுவேனே
2.
தானான தாமிரபரணி ஏழுகாதம் தாக்காண காவேரி எழுபதுகாதம்
வேனான கங்காவும் எழுநூறுகாதம் வேகமுடன் சென்றுமல்லோ குளிகைகொண்டேன்
கானான கடலேழும் சுற்றிவந்து காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்டு
பாணான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் சப்தகாண்டம் பண்பாய்த்தானே
3.
பண்பான வைத்தியமும் வாதமார்க்கம் பரிதான ஜெகஜால குளிகைமார்க்கம்
நண்பான சித்தர்களின் மறைவுமார்க்கம் நலமான ராஜாக்கள் இருந்தமார்க்கம்
திண்பான தேவர்தாம் கடந்தமார்க்கம் திறமான மனோவேகம் செல்லும்மார்க்கம்
தண்பான சாஸ்திரங்கள் தொகுப்புமார்க்கம் தயவான மூலிகையுட ரகசியங்காணே
4.
காணவே பாண்டவா ளிருந்தமார்க்கம் கதிர்மதியின் கிரிகைகளி லிருக்குமார்க்கம்
பூணவே பிரமாலய தேவாலயங்கள் புகழான பாசமான மலைகள்மார்க்கம்
தோணவே சரக்குகளின் வைப்புமார்க்கம் துறையான ஆதிமலைக ளிருக்குமார்க்கம்
ஈணவே மிருகங்கள் மகத்துவமார்க்கம் எழிலான பட்ஷியுட மார்க்கம்பாரே
5.
பார்க்கவே மனிதரிடம் பேதாபேதம் பாங்கான உரைகோடி சொந்தங்கோடி
ஏர்க்கவே அதிசயங்கள் எடுத்துக்கூற ஆதிசேஷ னாலும் ஆகா
சேர்க்கவே உலகத்தின் மகிமைகோடி சிறப்பான அதிசயங்கள் உள்ளதெல்லாம்
ஆர்க்கவே சித்தர்களை வணங்கியானும் அன்பாக போகரிஷி அறைந்திட்டேனே
6.
அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்க ளெல்லாம்பார்த்து
குறைந்திட்டேன் போகரே ழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
வறைந்திட்டேன் நாலுயுக வதிசாயங்கள் யாவும்வாகாக பாடிவைத்தேன் சத்தகாண்டம்
வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே
7.
புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவி தெல்லாம் வாதம்போச்சே
8.
போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு
தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே
9.
கரிமுகன் பதம்போற்றி கடவுள்பதம்போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம்போற்றி
அரிஅயன் பதம்போற்றி வாணிபதம்போற்றி அருள்தந்த லட்சுமிதன் ஆயிபதம்போற்றி
வரியமாம் பாட்டனென்ற மூலர்பதம்போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம்போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே
10.
தானான ஏழுலட்சம் சிவன்தான்சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
பானான பாட்டுரைதான் கருக்கள்கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
தேனான காளாங்கி ஐயரையுங்கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே
11.
காணவே மூலமது அண்டம்போல காரணமாய் திரிகோண மாகிநிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
நாணவோ நாற்கமலத்து அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
மூணவே முக்கோணத்துள் ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே
12.
அகாரத்தின் மேலாக கணேசன்நிற்பார் ஆதியொரு கோணத்தில் உகாரம்நிற்கும்
உகாரத்தின் வல்லமையால் சக்திநிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ் குண்டலியாஞ்சக்தி பெண்பாம்பு போல்சுருட்டி சீறிக்கொண்டு
சுதாரமாய் சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீத மென்ற அவத்தைதானே
13.
அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய்நிற்கும்
நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
வவத்தைக்கும் வாய்திறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே
14.
தானான லகிமாவும் கிரிமாவோடு தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி பேரேட்டுத் தேவரையும் தளத்தில்நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார் ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி வங்கென்று வாங்கியே கும்பித்ததே
15.
ஊதினால் என்வாசத்தில் அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
போதினால் ஆயிசொன்ன ஏவல்கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
ஏதினால் இதுக்குல்லே வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே
16.
வாங்கியே நந்திதனில் சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
தாங்கியே வங்கென்று இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
தேங்கிய வல்லமையாஞ் சத்திதானும் சிறந்திருந்தால் பச்சைநிற மாகுந்தானே
17.
பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
மொச்சையாய் மூலமது சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சைநிற காயமுமே கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
துச்சைநிற வாதமது சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே
18.
பாரென்று புரிஅஷ்ட நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
காரென்ற தீபவொளி கண்ணோகூசும் கணபதிதான் கண்முன்னே நிர்த்தம்செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
நேரென்ற சதாசிவத்தின் நிலையும்சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே
19.
போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
சேச்சென்ற வீரசத்தம் கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டிவாங்கு
மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே
20.
உன்னியே பழகுமட்டும் கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரான சுழினைதன்னில் கெட்டிசேரும்
நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே
21. வாசியோகம்
நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப் பிணமாக சொல்லுக்கொக்கும்
பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோமே
22.
சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை அதைத் தாண்டி மேலேயேறே
23.
ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதையுள்ளே காட்டிக்கொண்டு
மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோச மாகியல்லோ பிரலப்பண்ணும்
தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே
24.
கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாய்ஞானம் பேச்சுமாச்சே
25.
ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்துபார்த்து
மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே
26.
இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
குறிப்பான மாத்திரைதான் ஏறஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே
27.
வார்த்தையால் தர்க்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி
தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே
28.
மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தை சுத்திபண்ணும்
காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில் கண்ணொளிதான்மீறும்
ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே
29.
மாட்டவே மார்க்கமாய் மூலத்தில்நில்லு மறவாதேயொன்றில் நின்று தேறினாக்கால்
ஆட்டவே அடிமரத்தை தொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
மூட்டவே மூலமது பழகினாக்கால் முகிந்தவிட மாறுகடந் தப்பால்தாண்டி
தூண்டவே துவாதசாந் தத்தில்சொக்கிச் சுருதிமுடிந் திடமறிந்து சேரலாமே
30.
சேரவே சகஸ்திரமா முண்டகத்தின்பூவைச் சேர்ந்தேறிச் சந்திரமண் டலத்தில்புக்கு
ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங் குண்டலியாந்தாய்க்கும்
பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம் பணிமாரி விவேகத்தாலே
தூரவே சோமப்பா லுகந்தளித்து தூயநால் மூலத்தில் குதிரைமுனைகட்டே
31.
கட்டியே அஞ்சலிபண்ணி குண்டலியாந்தாயை மனதில்வைத்து கணபதி வல்லபைத்தானும்
மூட்டியே முகிழ்ந்திரந்து வழிதாவென்று முனையான சத்தியென்பாய் மயக்கந்தீர
தெட்டியே வஸ்துவைத்தான் பாணம்பண்ணி செயலறிந்து கபாடமது திறப்பாரப்பா
எட்டியே நந்திபத மிறைஞ்சிபோற்று ஏற்றமாந் தொழிலெல்லாம் எளிதிலாமே
32.
எளிதிலே நந்திவந்து இரக்கமாகி எட்டா மறுபத்து நாலுமீவார்
நெறியிலே வாதங்கை கட்டிநிற்கும் நீச்சான குருவகைகள் நிஜமாய்தோன்றும்
களியிலே காயமது சித்தியாகும் கருத்தூனித் தான்வாய்க்கக் கலந்துபோவாய்
அளிகிலே ஆலமுண்டான் ஆட்டுக்காணும் மாச்சரியம் சிலம்பொலியும் மயக்குமாமே
33.
அயிக்கமாய் விழுகாதே காமத்தீயில் அனுதினமும் வேதாந்த முடிவைப்பாரு
ஒயிக்கமாய் ஒருவருடன் வாயாடாதே உண்மையா யிருந்துஉன்னில் உண்ணிப்பாரு
தியக்கமாய் பொய்கொலைகள் செய்திடாதே சேர்த்தேறு வாசியென்ற தேசிதன்னில்
மயக்கமாய் வஸ்துவைநீ பாணம்பண்ணி மத்தாலே யழியாதே மாய்கைநீக்கே
34.
நீக்கியே ஐம்புலனை அருத்துசாடு நித்திரையைத் தள்ளிவிட்டு காலைப்பண்ணு
தூத்தமரே சகபூதந்தானும் சுயம்பான கும்பகமும் கணக்காய் சூட்டு
தாக்கியே அமுர்தவெல்லந் தன்னையுண்ணு சங்கற்ப விகற்பமென்ற சட்டைநீக்கு
வாக்கியே பிராணயம் வரிசைதன்னை மறவாமல் மாட்டுதற்கு மார்க்கஞ்செய்யே
35.
செய்துமே யுற்றுப்பார் கருத்தையூனித் திகையாதே புலன்களோடு கணேசன்காண்பார்
கொய்த்துமே பூசைபண்ணி குட்டிக்கொண்டு கூர்ந்துமே வாசிதன்னை இருத்திவைத்து
ஒய்த்துமே ஓம்சிறியும் கிறியுங்கிளியும் உயரயெங் கணபதி யென்றுச்சரிக்க
நய்ந்துமே நந்தியர்கொடிக் கதிர்கொப்பு நற்சுழியில் ஒளிகண்டால் நமநாடானே
36.
நாடாமற் போவதென்ன என்றுகேட்க நற்சத்த பரிசமொடுரூபம் ரசகெந்தி
தாடாமல் சத்தோடு பொறிகளாஞ்சுந் தனக்கேற்ற வழிப்போக்கில் மனந்தானோடும்
தேடாமல் காதையைநீ போற்றினாக்கால் சொல்லொன்று கேளாது சூட்டிப்பாரே
37.
சூட்டிப்பார் இன்னமும்நீ பரிட்சைகேளு துடித்தன்னை போற்றிடிலோ ரூபங்காணார்
ஊட்டிப்பார் அமுதந்தன்னை அசைத்துக்கொண்டால் வளமான வாசமொன்றும் தோன்றிடாது
ஊட்டிப்பார் வாய்தன்னில் உப்பையிட்டால் உருக்கறிச்சு உப்பென்ற ருசியேகாணும்
ஓட்டிப்பார் என்பது முடலிலூர்ந்தா லேற்றமாம் அறிவாலே பரிசமாச்சே
38.
ஆச்சிசிந்தனை வேரால் நின்றாயானால் அரிருமாகா மந்திரியின் வேகமாச்சு
ஓச்சிந்து மனத்துணித்தம் பிராணயாமம் உகந்தேறி வாசியைநீ பிடித்தேபூரி
முச்சிந்த மூலத்தில் முதிர்ந்துகும்மி முனையான வயமுமாச்சு விவரிடாமல்
காச்சிந்த மூலத்தில் நின்றுநின்று கதறக்கண்டு தெரியும் மேலேயேறே
39.
ஏறியே பாரென்று ஐயர்சொன்னார் எனையீன்ற ஆயர்காளாங்கி நாதர்
பாருஇது வழியென்று பக்குவத்திச்சொன்னார் பதஞ்சலியும் வியாக்கிரமர் சிவயோகமும்
மீறியோ அதற்குவிளக்கஞ் சொன்னார் மிக்கபராபரித்தாயும் இதுவே சொன்னாள்
ஆரியோ தான்பார்த்து ஆறுவத்தை அநுபவித்து ஏழாயிரத்தில் அமைத்திட்டேனே
40.
அமைத்திட்ட சிகாரமென்ற அட்சரத்தா லழும்பாகான் வெளியில்லா கனமேசெய்வார்
குமைத்திட்ட வெளிதன்னில் கூகூகூகூ வென்று
நமைத்திட்டொரு சொல்லால் ஏழுகோடி காகமெனும் விரவியென்ற கடலில் வீழ்வார்
சிமைத்திட்ட சித்தமெல்லாம் மூலத்துள்ளே சிக்கென்று உன்னியே தியானிப்பாரே
41.
தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார் செயகண்டி சங்கோசை காதில்கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஓசைகேட்கும் சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம் திகட்டாம துண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி பத்ததில் திடமாக மனவிலங்கு மாட்டுவாரே
42.
மாட்டியே மனவிலங்கை பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ஆனந்த மயமுமாகி
பூட்டியே வாசியைத்தான் கும்பித்துக்கொண்டு பிறளாமல் தம்பித்து நிற்பாரையா
நாட்டியே மனமொன்றாய் திடாகரித்து நாதாந்த பெருவழியே நாடுவார்கள்
தூட்டியே துவாதசாந் தத்தில்புக்கி சுருதியந்தத்துள் இருந்து துதிசெய்வாரே
43.
துதிசெய்து மூலதனந் தாண்டியப்பால் துடியான நாலங்குலமே தாண்ட
பதிசெய்த பிரமனுட வீடுமாகும் பகர்ந்த சுவாதிஷ்டான மென்றுபேரு
அதிசெய நால்வட்ட கவளபஞ்சுத்தம் ஆறிதன் தானட்சரத்தை யறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான் நடுபீசம் லங்னம் ஆமே
44.
சகாரமென் றெழுத்ததுவும் பிரமர்க்காகும் வாவென்ற எழுத்ததுவும் பிரிதிவிபீசம்
யகாரமென்ற துரியாதிக் கிருப்பிடம்தான் புகளுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தா னதினுடைய நிறம் பொன்னிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின்கூறு மயிரெலும்பு இறைச்சிதோல் சரம்போடஞ்சே
45.
அஞ்சான பொன்னிற பிரமன்பக்க கடந்தால் வாணிநிற்பாள் அறிந்துகொள்ளு
தஞ்சான சதுரமுகப்பை அவர்தம் தண்டுகமண்டலமும் அட்சத மாலையோடு
பஞ்சான பதமதனம் பிரம்மணிமாலை பகர்ந்தநவ ரத்தினமாங் கிரிடத்தோடு
திஞ்சான தியானித்து வேசியைத்தான் கிரந்தசபா மந்திரத்தை செபித்துண்ணே
46.
உண்ணியே சரஸ்பதியை தியானித்தூதி உறுதியாய் பெறுதற்கு உண்மைகேளு
கண்ணியே சகலவித்தை தருந்தாய்நீயே தயாநிதியே சிங்குவையில் தரிக்குந்தாயே
முன்னியே நீபிரிந்தால் மோடனாவான் முனிந்துநீ முன்னின்றால் மூத்தனாவான்
கன்னியே போகசித்தி வாதசித்தி காயசித்தி ஞானசித்தி கடாட்சியெண்ணே
47.
என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமே கம்மென்று இருத்திக்கும்பி
என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா
என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர் கொண்டு அர்ச்சித்தேற்ற
அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே
48.
மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்ற பிறைபோல கோட்டையாகும்
மாலினுட விலையம்போல் பத்திதழ்தான் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு
தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆயினுட மிடங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென் றறியலாமே
மணிபூரகம்
49.
அறிந்தமணி பூரத்தின் வீடுமாகும் அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிரிந்தேசா வேதமுமாம் படிகவர்ணம் பிரியாமல் லட்சுமிதான் வாம்பாகம்
கறிந்தஅறு சுவையுமங்கே காணலாகும் கதிர்த்தநீர் மச்சையொடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவொடு அஞ்சமாகும் மிக்கசங்கு சக்கரமும் கருடவாகனமே
50.
வாகனமாய் லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி
ஆகனமா யரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செய்து அஞ்சல்பண்ணு
தேகனமாய் ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாய்தான் திரோதமையு மயக்கத்தில் சுழற்றுமேதான்
மோகனமாய் மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே
51.
வீடாக திரோதகையு மிருந்தவீடு வெகுபோகங் காமியத்தை விடுத்தவீடே
வாசா மனங்கலங்கி நின்றவீடு மாயமெல்லாங் குடிகொண்ட மகத்தாம்வீடு
பேடாக் கருத்தழிந்து பெண்ணைத்தேடி பேய்க்கூத்தாய் நின்றலைந்த பெரியவீடு
சாகாவரம் பழித்த சாதிவீடு தன்வசமாய் வாசிகொண்டு தாக்கிடாயே
52.
தாக்கியே சந்திரமண்டலத்தில் பூவை சகஸ்திரமா மிதழாலே தரிக்கப்பண்ணி
பாக்கியே பலபல தூபந்தானும் பண்பாக மனத்தாலே பாவகமே பண்ணி
ஆக்கியே மேலேற அருள்தாவென்று அஷ்டசித்து தந்துமே அனுப்பநன்று
போக்கியே ஐம்புலனைப் பொறியின்பக்கம் போகாமல் நிறுத்தவென்று போற்றிசெய்யே
53.
செய்யவே மாலொடு லட்சுமிதானும் சித்தமகிழ்ந் தப்போது சித்தியீவார்
பையவே ஏறுதற்கு பலனுஞ்சொல்வார் பலபலவாந் தொழிலுனுட பக்குவமேசொல்வார்
உய்யவே இரக்காமல் சடந்தானிருந்த உறுதியாம் யோகத்துக் குண்மைசொல்வார்
ஐயவே அஷ்டாங்க மனைத்தும்பார்க்க அதற்கதற்கு வங்கமெலாம் அறிவிப்பாரே
அநாகதம்
54.
அறிவுக்கு மேலேறி யெட்டங்குலத்துக் கப்பால் அனாகதத்தின் வீட்டைக்கேளு
முறிவுக்கு முக்கோண மாருதற்கு முதிர்வளையம் பனிரெண் டிதழுமாகும்
பிரிவுக்கு சாகாவாகா சாகாபேரான சகசகானூடாட டாவாரூபமே
இறிவுக்கு யிதமில்நிற்கும் அட்சரந்தான் ஏற்றமாஞ் சழித்திய துக்கிருப்புமாமே
55.
ஆமென்ற சிகாரத்தின் எடுத்தூடுவாகும் ஆண்மையாய் பூதமது தேயுதானாகும்
தேனென்ற செம்மைநிறச் சிவப்புமாகும் தேய்வுட பீசமது றவ்வுமாகும்
ஓமென்ற வொளிகோடி பானுவாகும் ருத்திரனும் ருத்திரியும் நடுவேநிற்பார்
கோமென்ற அவருடைய குணமேதென்னில் கொடும்பொசிப்புஞ் சோம்பலொடு பயமுந்தூங்கே
56.
தூங்கவே எழுப்பிமெல்ல பெண்ணைசேர்க்கும் சுகமஞ்சுஞ் சிவன்கைக்குள் தொழில்தானப்பா
ஓங்கவே ரத்தினசிம் மாசனமுமாகும் உமாசத்தி யாகுமடா அஸ்திமாலை
மாங்கவே மான்மழுவும் வரிப்புலித்தோல் மகரகொடி சூரியப் பிரகாசமாகும்
தாங்கவே தேவதேவா சர்ப்பாசனம் தரித்த தாயார் தாமே
57.
தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று
ஓமென்று உன்னியே உத்தமிதாய்பதத்தை உறுதியாய் மனந்தன்னை ஓங்கப்பண்ணி
ஆமென்று ஐம்புலனை பறிவாய்தள்ளி ஆதி அந்தமில்லா தாயேஎன்று
காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாக மனந்தன்னை ஒளியில்வையே
58.
ஒளியான நந்திவா கனமுமாகும் ஒருசாம வேதத்தி னுருப்புமாகும்
கனியான காமப்பால் மாச்சல்செய்து கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி
வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாய் ஞானமெல்லாம் விழலாய்ப்பண்ணும்
கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடே கூர்ந்திடாயே
59.
கூர்ந்திட்டாடு வளையில் காந்திதானும் கூகைக்கு மாக்காலம் குறிகண்டாப்போல
ஆர்த்திட்டு அவர்பதத்தில் மனவிலங்குமாட்டி அறிவோடே அசையாமல் அடற்குள்நின்று
ஏர்ந்திட்ட ஏறுதற்கு வழியைக்கேட்டு எட்டெட்டு சித்திக்கும் இயல்புவாங்கி
வார்த்திட்டு வாதத்தின் இனங்களெல்லாம் கேட்டு வகையான காயசித்தி மார்க்கங்கேளே
60.
கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து
தேளுமே சிவனோடு சத்திக்குந்தான் சிதையாமல் மனந்தன்னை திருவடிசேவித்து
வாழுமே மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி
மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடை தானே சுருக்காயேறே
விசுத்தி
61.
ஏறியே பனிரெண்டங்குலமே தாண்டி ஏத்தமாம் விசுத்தியென்ற தலமுமாகும்
மாறவே அருகோண வளையமொன்று மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான் அஆஇஈஉஊ வாமதுர வெயிரோஇல்லோ
துனையான எ ஐ ஒ ஔ அம் அம் ஆமே
62.
ஆம்முதலாய் பதினாறு எழுத்துமிட்டு அறுகோண நடுவேதான் வகாரம்நிற்கும்
வாமுதலாய் மஹேஸ்வரனும் மஹேஸ்வரியும் நிற்பார் மகத்தான சொப்பணத்தின் இருப்புமாகும்
பூமுதலாய் பூதமது வாயுமாகும் புகழான பீசமது அங்குமாகும்
நாமுதலாய் தாணவே தாந்தானாகும் சபல மனோவேகமாய் நாடலாமே
63.
நாட்டமாய் இவருடைய தொழிலுநன்றாய் நடத்தலொடு ஓட்டல்மயங்கிக் கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலொடு கலங்காமலிருத்தல் நிலையஞ்சின் விபரத்தை நிலைக்கக்கேளு
பூட்டமாய் பொசித்தலொடு ராகங்கேட்கல் பொங்கியே கோபஞ்சண்டை சினமடைத்தாங்கல்
ஓட்டமாய் ஓங்காரம் உன்னைக்கண்டால் உயர்வாயை திறந்திடுதல் உருதிகாணே
64.
உறுதியாம் ருசியாறு வாயினுள்ளே உரிசைதான் வாயினுக்கு பாலுமில்லை
பறுதியாம் பரமென்ற பீடமப்பா பரத்தி என்றுமோர் பண்புமாகும்
கிறிதியாமைப் பொறியின் கணையைவாங்கி பிசகாமல் நாலதனி லொக்கசேர்த்து
அறுதியாம் ஆதாரமெல்லாம் பார்த்து அப்பனே நாலுக்குள் அனைத்திடாயே
65.
அனைத்திட்ட நாலுக்குள் சிங்கென்றூணு ஆதியாம் ஓம்நமசிவா யாவென்றே
துளைத்திட்டு வாசியைநீ வாயிலூட்டில் சுருக்கிட்டு கட்டிடவே ஓடாதப்பா
பழைத்திட்டு பதினாறு தலத்தில்தானும் பாங்கான சீவகளை இருப்புமாகும்
தினைத்திட்ட சீவகளை இருந்தத்தானே சிறப்பாக பாடிவிக்கும் திறமையாமே
66.
திறமையோ புரிசையொடு உண்ணப்பண்ணும் சீவகளை இருந்துகொண்டு எட்டுநாளாய்
புறமையா இருந்துகொண்டு நாவும்பாழாய் புத்தியுள்ள சீவகளை மதிபோல்தேய்ந்து
நலுமையாய் நறைதிறையாய்ச் சேரமாண்டு நலமான ஜீவகளை போகுவதைக்காணார்
குறமையாம் நாதமது கண்டத்திற்காணும் குறிப்பான திரோதகையின் கூற்றுதானே
67.
தானான வாய்வுட வீட்டில்நின்று தம்பித்து ஆத்தாளைத்தான் விலங்குபூட்டி
போனான சந்திரன் மண்டலத்தில்பூவால் போற்றியே அடிவணங்கி வாசிபூட்டி
தேனான மேலேற வழிதாவென்று சுத்தசை தன்னிபத்தைத் தோத்தரித்து
வானான வாதசித்தி யோகசித்தி மகாசித்தி யோகசித்தி மார்க்கங்கேளே
68.
மார்க்கமாய் மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அய்யருமே யுளமகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார்
ஊக்கமாம் மஹேஸ்பரத்தின் பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே
69.
மேலேறி இரண்டு புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
மேலேறி வட்டமாம் வீடுபோலே வளையமொன்று ரெண்டிதழ்தான் எரஷரிவாகும்
ஆலேறி ஆங்கென்ற அட்சரந்தான் நடுவே ஆகாச பூதமாம் பூதபீசம்
மானேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின் வீடுமாமே
70.
வீடுமாம் வர்ணமது மேகவர்ணம் விலங்குகின்ற தொழிலதுதான் காமம்குரோதம்
வாடுவாம் லோபமொடு மோகமாகும் மதமாச் சரியத்தோடு அஞ்சாகும்
நாடுநான் முகன்மாலுஞ் சிவன்மஹேஸன் நலமாக காப்பார்கள் திகைத்துதானும்
தானுசதாசிவன் தானும் தளவாயாருந் தளவாயை கண்டாக்கால் சகலமாமே
71.
தளவாயை கண்டாக்கால் சம்சயந்தான்தீரும் சங்கற்பவகற்ப மென்ற சட்டைநீக்கும்
தளவாயை கண்டாக்கால் தாயோடே சேர்ப்பார் சச்சிதா னந்தத்தின் தன்மைகாண்பார்
தளவாயை கண்டாக்கால் சகலசித்துமாகும் தனைவானோடொத்த கள்ளனைந்து நிறமாகும்
தளவாயை ஐம்பத்தொன்றில் காணாதப்பா சாங்கமா யரைத்து நீ வாசிமாட்டே
72.
உரைத்துமே ஆக்கினையாஞ் சாக்கிரத்தில் உகந்துமே மனோன்மணியை உச்சரித்து
மரைத்துமே மந்திரத்தை சொல்லக்கேளும் மருவு கா ஏ இன் கூ ஆகல இரியுமாகும்
அரைத்தும் அசைகன் இரியுமாரு அதின்பின்பு அதிகழா யிரமமாகும்
உரைத்தும் மூக்கண்ட பஞ்சதேசாவிது உச்சரியே முனிந்துமே யுச்சரித்து மூட்டுநீயே
73.
மூட்டியே தாயாருட பதத்தைக்கண்டால் முஷ்காரமாய் கையெல்லாம் ஒருந்துட்போகும்
நாட்டியே யெடோட நாலுங்கூட்டி நாதாந்த சித்தயெல்லாம் சணத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் மயிர்ப்பான நெருப்பாறு கடக்கலாகும்
நீட்டியே நிராதாரம் அறியலாகும் நிச்சயமாய்க் குடுகளெல்லா நினைக்கலாமே
74.
நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும் நோய்மூப்பு சாடுநரை திரையும்போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்துங்காணும் கண்ணிமைக்குள் போற்றுயிர் கடிகிமீளும்
அனைக்கவே சாக்கிரத்தில் இருந்துகொண்டு ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும்பார்த்து
தனைக்கவே சரியொடு கிரிகையோகம் சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே
75.
தானான மனோன்மணியைத் தாண்டியப்பால் தணிந்ததோ ரெட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதந்தான் கூட்டிப்பாரு குறிப்பான புகழ்காணார் ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும் அகராமா மகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்துஅஞ்சும் வந்தமந்தாம் ஐங்கோணத்தில் நிற்கும்பாரே
76.
பார்க்கவே உகாரமா நடுமையத்தில் பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகராதநிர்மலன் தன்வடிவாம் பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள்வைத்து
நேர்க்கவே ஓடாமல் நிறுத்திப்பாரு நிலையாத பிரவியரும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தின் ஆதிபொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே
77.
அறியொணா பிரமாந்திரம் என்றுபேரு அதிலுடைய நிறந்தானும் படிகவர்ணம்
நெறியொண்ணா காயத்ரி யாகலின்னா நித்யநித்ய நிருபமாகும் நித்யசுத்த
பறியெண்ணாம் பரிபூரண சச்சிதானந்த பகாரிய நிரஞ்சன வித்துவங்கே
நெறியொண்ணா நிற்பாகா யதிமசியாம் மெறிவதனு சூடதம்பிர சோதயாதே
78.
தேயென்ற யிருபத்தி நாலாய்நின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து
வாவென்று வாசியைநீ இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல்
தேயென்று இருத்தியே கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க
பூவென்ற பிறவியற்ற பூரணத்தில் லயிப்பாய் போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே
79.
பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாய் பிரித்துப்பாரு
அருளான உன்மனையில் எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று
தெருளான பதினொன்றுஞ் செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன்
நருளான நந்தி யேழாயிரத்தில் நாட்டினார் நல்லநீவை நான்காணேனே
80.
காணாத மார்க்கமெல்லாம் காணும்நேராய் கடுசாக முனைமுகத்தில் கடிந்தால்சாறும்
வாணாதே யூணினால் பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும்
கோனாக குண்டலி கோத்தை நோக்கிக்கூர்ந்து பார்ப் பதினொன்று மொன்றுகாணும்
நானாதோடு மையம்நோக்கி னாக்கால் நலமான காலாந்தான் கோடிப்பானே
81.
பானான நூல்சொன்னபடி கேட்கும் பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால்
வானான வார்த்தையால் பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாய்தானும்
கானான காய்க்குமே தேங்காய்தானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம்
கோனான பறத்தினுட முடிவைப்பாரு குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே
82.
கேளுநீ மூலத்தில் குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி
நீளுநீ ரேசித்துப் பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும்
வாளுநீ நந்திவந்து வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும்
நாளுநீ வாசிவைத்து மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே
83.
நாட்டிட்ட மூலத்தைத் தாண்டிப்பின்னர் நலமான கஞ்சனு பதியிற்கூட்டி
ஒட்டியே வகாரத்தை உருத்திநோக்கி ஒளியான சிகாரத்தால் உள்ரேசிக்க
பாட்டியே பண்டான பிறவியறலாகும் பண்பாக நான்முகனைக் கண்டதாலே
மாட்டியே கஞ்சனுட பதியைத்தாண்டி மாவிருக்கும் மதியூடி மருவிநில்லே
84.
மருவியே வகாரத்தை யுட்பூரித்து வாதமாஞ் சிகாரத்தை உள்ளேரேசி
பருவியே பஞ்சநரை யெல்லாம்போக்கிப் பாலனுமாய் பதினாறு வயசுமாவார்
உருவியே யாங்கடந்து ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு
தருவியே சிகாரத்தை உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே
85.
சித்தியாம் ருத்திரன்தன் பதியைத்தாண்டி தெளிவான மஹேஸனுட பதியில்புக்கி
அத்தியாம் வகாரத்தை அசையாமல்பூரி யதுக்குள்ளே சிகாரத்தை உள்ரேசிக்கப்
பத்தியாம் சிறுபிள்ளை தானாவார்கள் பாருடலுங்கை நெல்லிக் கனிபோலாகும்
துத்தியாம் சிவயோகம் வைத்துப்பாரு துடியாகும் குளிகையெல்லாம் சுருக்கிலாமே
86.
சுருக்கான மஹேஸ்பரத்தின் பதியைத்தாண்டி சூஎன்றசதாசிவ மிடத்தே காலையூன்றி
மகத்தான சிகாரத்தை வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெவனமாகும்
செருக்கான மனோன்மணி மாதாவின்பாதம் திரமான வாசிவைத்துப் படியேபார்க்க
பெருக்கான மெய்ஞான நிராதாரந்தான் செய்வான வாசினைதான் தானும்நீயாமே
87.
நீயான குருபதத்தில் நின்றாயானால் நிலையான சிவயோக வாசிஓட்டு
தாயான பூரணமும் சகலதெரிசனமாஞ் சதமான வகரசிகாரத்தின் மார்க்கம்
வயலான வலுவைத்தான் வைத்துமங்கே மதியோடேபார் மகத்தான சித்தி
தீயான நீக்கவிட மற்றுநின்ற சிறந்திடுமே பூரணந்தான் சித்துமாதே
88.
சித்தாகப் பாய்ந்தேன்நான் அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின்சித்தஞ் சொன்னார்நந்தி
அத்தாக அண்டியஞ்சலித்து அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி
பத்தாக துனையென்றார் பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து
கத்தாக மலினியை காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே
89.
நுழைந்திட்டே நிருவிகற்ப நிறையானயோகி நேரஞ்சு தனித்தனியே கோடிசித்தர்
குழைத்திட்டு தெவிட்டாதே பார்த்துநின்றேன் சித்தாணியுனக் கெந்நாளாச்ச தென்றார்
குழைந்திட்டு கொடியறுத்து மாச்சுதென்றேன் நுறியதளஞ் சித்திப் பாரென்றார்கள்
மழைத்திட்டு நுழைந்தேன் பின்னோரண்டத்தில் மகத்தான சித்தர்க்கு கைகூப்பினேனே
90.
கைகூப்பி கட்டியதோர் பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது
கைகூப்பி நீள்சாரடைந்தயோர் களரியோரைக் கண்டு நானஞ்சி வலம்வந்தேன்
கைகூப்பி பரிவான அடுக்கொன்று தன்னில் பாய்ந்தேநான் முடியேறி பரிந்துபோந்தேன்
செய்கூப்பி அண்டமெல்லாம் சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாய்ந்திட்டேனே
91.
பாய்ந்திட்டேன் அண்டத்தில் நுழைந்துபார்த்தேன் பலகோடி சித்தர்கள் வாசித்தார்கள்
ஆய்ந்திட்டு அனைந்திடும் நூலார்தான் சொன்னார் ஐயனே எனக்கேட்டே னடிவணங்கி
காய்ந்திட்ட சிவன்தானும் தாய்கண்டுசொன்னார் தனி ஏழுலட்சத்தை கரைகண்டுபார்த்தோம்
தோய்ந்திட்ட இந்தநூல் பெருக்கமெத்த சுருக்காதே போனவென்ன வெனக்கேட்டேனே
92.
கேட்டதற்கு தரந்தான் சொன்னார்சித்தர்தானும் கிரந்தத்தை சுருக்குவதற்கு சிவனாலுமாகா
மாட்டாதற்கு ஒன்றான சாஸ்திரத்தின் மகத்துவமாஞ் சுருக்குண்டோ வென்றுகேட்டார்
சூட்டிதுக்குச் சித்தர்தான் சொன்னமார்க்கம் சருமிச்சதொகுப் பெல்லாம் தெரிந்துபார்த்து
ஏட்டத்துக்குள் ஏழுலட்சம் இயல்புதன்னை ஏற்றகல்லு வெட்டுபோல் இசைந்திட்டாரே
93.
இசைந்திட்டார் ஏழுலட்சம் இயல்பையெல்லாம் எளிதாய் ஏழாயிரம் இசைத்துவைத்தார்
பசைந்திட்ட நூலெங்கே இருக்குதெனப் பகர்ந்தார் பாக்கான தெட்சண பாகத்தில்தானும்
அசைந்திட்ட நூற்றறுபதா மண்டபத்தில் அமைத்துவைத்தார் சித்தர்கள் தான்பாரே
வசைந்திட்ட ஏடுதனில் கருவென்னசொல்லும் கருத்தை கடாட்சித்துச் சொல்லெண்பாரே
94.
என்றதோர் படிக்கின்ற நூலில்தானும் ஏற்றமாய்ப் பயனெல்லாம் சொல்லுவோமோ
வென்றதோர் நூல்தன்னில் சாரனேயுங் குருந்தான் சுருக்குமேபதினாறு அங்கந்தானும்
தின்றுமே எட்டெட்டு சித்தோடு தியங்காமல் ஆதற்கேற்க ஏற்று கிட்டார்
என்றுமே தேங்காமல் தெங்குசிவயோகம் கனமான பூரணமும் மயிக்கம்பாரே
95.
அயிக்கமே பூரணத்தில் தூங்காமல்தூங்கும் அன்பான சொருபத்தைக் காட்டும்பாரு
அயிக்கமே தூவாரார் கையிலுண்டு அவருடைய பேர்தன்னை சொல்லுமென்றார்
கயிக்குமே வாசிக்கும் குருவுமான காரணமாம் நந்தியர் காட்டும்நூலை
தியக்குமே சித்தருக்குங் கொடுத்தார்நூலை திருமூலர் அரைந்ததை திடமென்பாரே
96.
திடமான நூல்தன்னில் செப்பினதுசொல்லாய் தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம்
குடமான கோடரியொடு சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள்
தடமான லவனமொடு சத்தும்செம்பு தனியகந்த குளிகையொடு செந்நீராகும்
கடமான திருகலமும் இனக்கூட்டந்தான் கடிதான மூலிமகா அவுஷதந்தானே
97.
அவுஷதமொடு வவுஷதவகை பதினேழும் அடங்களுஞ் சொல்லு ரெண்ணாயிரத்துள்ளே
வவுஷதமொடு ஏழுலட்சகிரந்தப் போக்கை இடித்தும் எண்ணாயிரமாம் என்பாட்டர்சொன்னார்
கவுஷத மெண்ணாயிரத்தைத் திரட்டித்தானும் கதித்த ஐயாயிரமாய் பின்புசொன்னார்
மவயஷத மூவாயிரமும் ஆயிரம்பின்பு சொன்னார்முந்நூறு முப்பத்து மூன்றென்றாரே
98.
என்றாரே சாற்றினதோர் நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான்
கன்றாரே கரும்பான பாகுபோல்திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார்
தன்றாரே தந்தை காலாங்கிநாதர் தாமுமோ சகலநூல்பார்த்துத் தேர்ந்து
அண்டாரே யகண்டம்போ லஞ்சுகாண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே
99.
அலாவினேன் நூற்றறுபதா மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராய்ந்துபார்த்தேன்
துளாவினேன் பாட்டருட னென்நூலைஐயர்துதி செய்தேன்சுருதியாம் வாக்கியத்தை
கலாவினேன் காலாங்கி நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும்
விளாவினேன் ரிஷிசித்தர் நூலையெல்லாம் வெட்டவெளி யாய்திறந்து வீசினேனே
100.
வீசினேன் ஏழுகாண்ட முடுக்காய்சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டுசொன்னேன்
தூசினேன் சூத்திரந்தான் எழுநூற்றுசொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு
பூசினேன் யோகத்துக்கு உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன்
ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன் உறுதியாம் வாசியென்ற யோகந்தானே



வெள்ளி, 6 மே, 2016


ஸ்ரீ அகத்திய பெருமான் மற்றும் சித்தர்களுக்கான பூஜை முறைகள்

  • அகத்தியர் சித்தர்களுக்கெல்லாம் தலைவர்  அவரின் சிறப்புகளும் பூசை முறைகளும்

    தொடர்புள்ள கம்பராமாயண மூலம்
    என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
    நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
    தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
    கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
    வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
    விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
    வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
    குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
    முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

    சிறப்புப் பெயர்கள்

  • தமிழ் முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
  • மாதவ முனிவன் (அதிக தவம் செய்ததால்)
  • மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
  • குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
  • திருமுனி (உயர்வுக்குரியவர்)
  • முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
  • பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
  • அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
  • பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
  • குடமுனி (குடத்தில் பிறந்தவர்)
  • தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
  • அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
  • அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
  • கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
  • தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
  • இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
  • சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
  • இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
  • அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
  • வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

அகத்தியர் பெருமானின் பூசை முறை

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்

ஓம் அகத்திய மகரிஷி யே பொதிகை சஞ்சாரியே  தமிழ் முனியே ஹயகிரிவரின் சிஷ்யரே கந்தனுக்கு பிரி யமானவரே யுக யுக குருவே கலியுகம் போற்றும் லோப முத்திரை சமேத ஸ்ரீ அகத்தியரே போற்றி உங்களை தியானிக்கிறோம் எங்களை வழி நடுத் துவீ ராக என்று தொடங்க வேண்டும் 



தியான மந்திரம்

ஓம் அகத்திய மகரிஷி நம என்றுஎன்று ஓது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அப்பொழுது சித்தரெல்லாம் கைகொள்வார்கள்
அகத்தியனை தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடை இல்லை அரசே என்பார்
அகத்தியன்தான் எக்கியத்தில் பிறந்த ஜோதி
ஆயிரத்தெட்டுஅண்டமெல்லாம் ஆணையாச்சே

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

சிறப்பு உபசாரம்

முதலில் அகத்தியரை பிம்பத்தில் அல்லது சிலாரூப த்தில் எழுந்தருள செய்ய வேண்டும்  கொஞ்சம் புஷ்பம் எடுத்து நீரால் சுத்தி செய்து மானசிகமாக அழைக்க வேண்டும்
ஆவாகனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று  அகத்தியரை சித்தர்களை  எழுந்தருள செய்து புஷ்பத்தை சமர்பிக்க வேண்டும்
ஆசனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுமானசீகமாக ஆசனம் அளிக்க வேண்டும்
ஸ்நானம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
புஷ்ப்பதால் நிர்தெளிக்க வேண்டும்
வஸ்திரம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முடிந்தஅளவுகாவிஅல்லதுபச்சைவத்திரம்சாற்றவேண்டும் 
சந்தனம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று பாதங்களுக்கு சந்தனம் அத்தர் ஜவ்வாது சுகந்தம் சாற்ற வேண்டும்
குங்குமம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று குங்குமம்பாதைகளுக்கு இட வேண்டும்
அக்ஷதை சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று மங்கள் அரிசியை பா தங்களுக்கு இட வேண்டும்
புஷ்பம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று புஷ்பங்களை சமர்பிக்க வேண்டும்
தூபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுசாம்பிராணி ஊதுவர்த்தி காட்ட வேண்டும்
தீபம் சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நெய்தீபம் காட்ட வேண்டும்
ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று நீரை வார்க்க வேண்டும்
காதலி பழ நைவேத்தியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக.
என்று பழம் நைவேத்தியம் அளிக்க வேண்டும்
மீண்டும் ஆசமனியம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
நீர் வார்க்க வேண்டும்

தாம்பூலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்றுவெற்றிலை பாக்கு சமர்பிக்க வேண்டும்
ஸ்ரீபலம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று முழு  தேங்காய் சமர்பிக்க வேண்டும்
பின்பு ஆரார்த்திகம் .சமர்ப்பியாமே ஸ்ரீ குருசரண கமலேப்பியோ நமக
என்று கற்பூர ஆரார்த்தி காட்ட வேண்டும் இதற்கான் பொருளை முன்பே தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும்
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

  1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
  2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
  3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
  4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
  5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
  6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
  7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
  8. இசைஞான ஜோதியே போற்றி!
  9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
  10. காவேரி தந்த கருணையே போற்றி!
  11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
  12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
  13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
  14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
  15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
  16. இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
  17. ஓம் அகத்தியரே போற்றி என்றும் என்னும் பிற நாமங்களையும் சொல்லலாம்

நிவேதனம்

இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

  1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
  2. கல்வித்தடை நீங்கும்.
  3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
  4. முன்வினை பாவங்கள் அகலும்.
  5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
  6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
  7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
  8. சகலவிதமான நோய்களும் தீரும்.
  9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

திருசெங்காட்டங்குடி சிறுத்தொண்டர் அமுது படையல் 6-5-2016 துர்முகி சித்திரை மாதம் 23-ம திகதி பரணி நட்சத்திரம்
இறைவன் ;உதிராபதிசுவரர் இறைவி ;திருக்குழல் நாயகி 


e.
சித்தஅடியார்களுக்குவணக்கம்நிகழும்துர்முகிவருடம்சித்திரைமாதபரணி
நட்சத்திரம்  திருசெங்காட்டங்குடி யில் சிறுதொண்டர் அமுது படையல் 6-5-2016 வெள்ளி கிழமை  இரவு  பிள்ளை கறி நிகழ்வும் உத்திராபதிஸ்வரர் வீதிஉலாவும் ஆயிரமாயிரம் சிவா அடியார்களின் சங்கமத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல சிவனின் அருளையும்  அடியார்களின் ஆசியும் பெறவேண்டுகிறோம்
137. Tiruchenkattankudi
திருசெங்காட்டங்குடி 
Location: Ganapateeswaram near Mayiladuturai, Nannilam
(Chola Naadu-South of Kaveri)
Shiva: Uttarapathiyar, Ganapateeswarar
Ambal: Tirugukuzhal Nayaki.
Vriksham: Aathi
Theertham: Surya Theertham
Patikam : Sambandar, Appar
Travel Base: Thanjavur
Tvm7.jpg (55426 bytes)
Description: This Shivastalam is located near Tiruppugalur and the Vaishnava Divya Desam Tirukkannapuram and is also known as Ganapateeswaram. There are several features of interest and several colorful legends here. Shiva's dance here is referred to as Ubayapaadanarthanam. Sirutonda Nayanar is associated with this shrine. It is considered to be the 79th in the series of Tevara Stalams in the Chola kingdom located south of the river Kaveri.  Tiruchenkaattankudi is the site of one of the nine Nava - tandavams of Shiva Tiruvalangadu-Oordvatandavam, Kailasam-Veda Tandavam, Tiruvenkadu-Rahasyatandavam, Chidambaram-Ananda Tandavam, Madurai-Kaal Maari Aadiyadu, Kumbhakonam-Aadalvallar Tandavam, Vazhuvur-Dharukavana Tandavam, Atikai - Tripura Tandavam, and Tiruchenkaattankudi - Ubayapaadanartanam.
Legends: Ganapati is said to have prayed to Shiva here to seek atonement for the sin of having killed Gajamukhasuran, hence the name Ganapateeswaram. The demon's blood flowed to create the reddened land, Chenkaadu. Shiva Bhairava is said to have killed Raktabheejan & other demons here.
This temple occupies an area of about 2 acres. A five tiered rajaopuram adorns the entrance. The Vaataapi Ganapati temple (in commemoration of the expedition to Vaaataapi the Chalukyan capital) was raised by Sirutonda Nayanar and the then Pallava Emperor. Utharapateeswarar represents the Bhikshandakar manifestation of Shiva. There is an image of Vinayaka with a human face here in this temple.
Festivals: Six worship services are offered here each day. Navaratri, Sivaratri, Skanda Sashti and Kartikai Deepam are celebrated here; so is the Amudhu Padayal festival in the month of Chittirai. ; Vinayaka Chaturthi is also celebrated with great pomp here.
பெயர்: சிறுத்தொண்ட நாயனார்
குலம்: மாமாத்திரர்
பூசை நாள்: சித்திரை பரணி
அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி
முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி
சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.

நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.
மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’ என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.

சிவத் தொண்டராக

மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இறைவனின் திருவிளையாடல்

சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.
அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார், ‘உத்தராபதியாகிய பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, திருநீறு, உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது;’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட ஒண்ணாதனவும் எளிதில் உளவாகும்; அருமையில்லை’ என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கைதொழுதார். பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு; உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்;’ எனக் கூறினார். பின்னர். கேட்ட சிறுத்தொண்டரும் ‘யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்’ என்றார். ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று’ என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார்.
வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார். அதுகேட்ட கற்பிற்சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்.’ எனத் தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தி பின்னர் ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார். சிறுத்தொண்டர் மனமகிழ்ந்து தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.
பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார் ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளாவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார்.
சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர் அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும் என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.
வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.
சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

நுண்பொருள்

  1. குடிக்கொரு புதல்வனை மகிழ்ச்சியான மனத்துடன் குரூரமாகக் கொன்று உறுப்பரிந்து கறியமுது செய்யும் வல்வினை செயற்கரியதும் காரணம் காண்டற்கரியதுமான சிவத்தொண்டேயாகும். அது ஈசனடியார்க்காயின் எச்செயலும் அரியதில்லை எனக் காணும் உறைத்த மெய்த் தொண்டர்க்கு மிக இயல்பாக கைவரும் கருமமுமாகும்.
  2. கல்வி, வீரம், செல்வம், அரச அதிகாரம், சிவபக்தி என்பவற்றில் சிறந்திருக்கும் பெரியோர் சிவனடியாரிடத்தில் சிறிய தொண்டராய் பணிந்து நடப்பார்கள்.
  3. சிவதொண்டியற்றுவார்க்கு நேரும் சோதனைகள் அவர்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணெமே அமையும், போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்யவல்ல தொண்டர்க்கு அவ்வண்ணமே ஒரு சோதனை நேர்ந்தது. சோதனை அளிக்க வரும் பெருமானும் அதற்கேற்ற கோலம் பசு இறைச்சி வேண்டுதற் ஏற்ற ஒரு கோலமே.
  4. அரசரானவர் தொண்டுறுதிபடைத்தோரை அத்தொண்டுறுதி துலங்கும் வண்ணம், இயன்ற வசதிகள் அளித்து அரச கருமத்தின்றும் ஓய்ந்திருக்கச் செய்தல் சிறந்தது.
  5. அருள் தருதற்குப் பெருமாள் கொள்ளும் கோலம் அன்பர் நிலைக்குப் பொருந்தியதாக அமையும். சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கை, சீராளர் என்போர்க்கு அருள்புரிய கொண்டகோலம் சோமாஸ்கந்த மூர்த்தமாயிருந்தல் காண்க. சந்தனத்தாதியாருக்கும் திருவடிப்பேறு அருளியமையும் சிறப்பே.
  6. சோதனைகள் எல்லாம் வரப்பிரசாதமாக நிறைவுறும்
சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி
“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை. நன்றி விக்கி பீடியா
ஸ்ரீ கொங்க சித்தருக்கான ஜோதி விழா ஸ்ரீ பிருகு அருள் நிலையதில் சித்திரை மாதம் உத்திராட நட் சத்திரம்  அன்று இனிதே நடந்ததேறியதுஅதில் சிலகாட்சிகள்
சுகந்த நீருக்கான மருந்து இ டிக்கபடுகிறது




ஸ்ரீகொங்கண சித்தரைவரவேற்க ஆயத்தமான அகண்டம்


 பிருகு முனிவருக்கான அலங்காரம்

சுகந்த நீர் வெள்ளி பாத்திரத்தினால் அடியார்களுக்கு வழங்க பட்டது

புதன், 27 ஏப்ரல், 2016

ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் !!!

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
*மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.
*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ் வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.
*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் – கரூர்.
* சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்
* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்.
*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
* அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
* புனர்பூசம் 1, 2, 3 (மிதுனம்) =ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீ ஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும் பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவன ந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
*மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர், அழகர் கோவில், மதுரை அருகில்.
* உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) =ஸ்ரீஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீ கரூவூரார் – கரூர்.
* சித்திரை 1,2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாய தாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம் frown emoticon ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
*மூலம் (தனுசு)=ஸ்ரீபதஞ்சலிராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
*பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார் கோவில்.
*உத்திராடம்1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
* அவிட்டம் 1 , 2 (மகரம்); அவிட்டம் 3, 4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட்டா.
* பூரட்டாதி4 (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரம ஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங் குன்ற ம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமா

Maruderi's Sangalpam for all in Guru Pooja (Vinnapam in English)


Let Shiva’s boundless divinity flourish this world and all beings in it
The Progenitor Vishnu's energy preserve this world day to day
Let Brahma's creativity produce greater and righteous resources
Velan's supremacy by haragara haragara naama eliminate the erroneous ………….1

Let Panchabootha and Planets do good to all beings.
The blessings of Saptharishi’s flourish and nourish this world
Let Guru's Soma light shape greater minds for humans
Let Aditya's light strengthen our atma and guide us……………………………………..2

With your blessings the act of kindness in this world should increase
Let the siddha's truth and values spread to everyone in this world
Let humans live in harmony per Dharma’s principles
Thus reach higher state of living by cultivating greater and good thoughts…………….3
Let the pathinenmar's divinity spread to everyone on earth
Eradicating diseases, illness and sufferings of minds
Let writings of Brahma's change here when we deeply revere thereby
Even Chronic problems cure here with the blessings of Siddhas………………………..4

Wealth and knowledge increase in this world like perennial stream of water

The divine Ganges, Yamuna Sindhu, Godaveri Cauvery bless all with fullness
Bless us oh mighty kalpa Vriksha that generates the eternal nectar
Let the Gnanis bless every living being in the world from the Aganda Sothi…………..5
    

Let Nandi devar remove all obstacles and guard all human beings
Let kamadhenu valued blessings and energy get generous to all
Let Maruderi's diving spring heal every being and people visiting here
Let all humans get their required Annam and get purified internally …………….……6

Our beloved Gurunaadha blessed shall we be all today by Holy Vaalai Mother
Oh Guru & father by collective bliss of all divinities, let all beings get blessed
Oh Guru of Vedas let this world get blessed, by all Masters and Gurus
Oh Guru of Kaliyuga let all beings be warmly blessed by your divine grace…………..7 

Oh Guru let humans foster and grow awareness of higher knowledge
That blossoms clarity and thoughts thereby forming sound mind in all
Guru as divine light guide us out of darkness and tightness 
Help us cross this life with a mind that adores the path of truth………………………….8

Oh father we look upon you who provides knowledge, love and mindfulness
Oh father we revere you as the one who lights the awareness to seek
Oh father we look at you the Siddha of Maruderi who alleviates our minds            
And see you as the Guru who is revered as the great yogi of all worlds…………………நன்றி  பிருகு அருள் நிலையம்  மருதேரி 

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...