புதன், 19 பிப்ரவரி, 2025

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

  

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு.

நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.

ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும்.

 

ஆடிப்பட்டம் பயிர் செய்.

ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர்.

 

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது.

 

மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை.

மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

 தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும்.

 

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்.

விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும்.  அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும்.

 

விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.

உழவு தொழில் பழமொழிகள்

 உழவுக்குப் பகை எருவில் தீருமோ?

உழவின் பகை எருவிலும் தீராது.

உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.

உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்.4280

(ஏற விளையும்.)

உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.

உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.

உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.

(விளைவு அற விளையும்.)

உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.

உழவுக்கு ஏற்ற கொழு.4285

உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.

(ஊணுக்கு முன்னே வரும். )

உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.

(சரி.)

உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.

உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.

உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.4290

உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?

உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.

உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.

உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?

(என்றால், ஊரிலே.)

உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.4295

உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.

உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.

உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?

(குண்டை-எருது.)

உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கணபதி துதி நட்சத்திர கணபதி பெயர்கள்

 கணபதி துதி


திகட சக்கரச் 

செம்முகம் ஐந்துளான்


சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட   சக்கர வின்மணி யாவுரை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்


ஐந்து கரத்தனை 

ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

 அமாவாசை திதி முதல்.... 

ஓம் ஸ்ரீ நிருத்த கணபதியே போற்றி 


1. பிரதமை திதி ஓம் ஸ்ரீ பால கணபதியே போற்றி

2. த்விதியை திதி ஓம் ஸ்ரீ தருண கணபதியே போற்றி


3. திருதியை திதி ஓம் ஸ்ரீ பக்தி கணபதியே போற்றி


4. சதுர்த்தி திதி ஓம் ஸ்ரீ வீர கணபதியே போற்றி 


5. பஞ்சமி திதி ஓம்ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி 


6. சஷ்டி திதி 

ஓம்ஸ்ரீ த்விஜ கணபதியே போற்றி

 

7. சப்தமி திதி 

 ஓம் ஸ்ரீ சித்தி கணபதியே போற்றி


8. அஷ்டமி திதி ஓம்ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே போற்றி 


9. நவமி திதி 

ஓம் ஸ்ரீ விக்ன கணபதியே போற்றி 


10. தசமி திதி 

ஓம் க்ஷிப்ர கணபதியே போற்றி


11. ஏகாதசி திதி 

ஓம் ஸ்ரீ ஹேரம்ப கணபதி போற்றி


12. துவாதசி திதி ஓம் ஸ்ரீ லக்ஷ்மி கணபதியே போற்றி


13. திரயோதசி திதி ஓம் ஸ்ரீ மஹா கணபதியே போற்றி


14. சதுர்த்தசி திதி  

ஓம் ஸ்ரீ விஜய கணபதியே போற்றி 


15. பௌர்ணமி திதி ஸ்ரீ நிருத்த கணபதி.[8/8 ...

கணபதி உயிர் எழுத்து போற்றி

 ..


ஓம் அகர முதலே அத்திமுகனே போற்றி

ஓம் அனைத்திலும் நிறைந்த ஒளியே போற்றி 


ஓம் ஆனை முகனே போற்றி

ஓம் ஆகம மாமறை ஆனாய் போற்றி 


ஓம் இடையூறு நீக்குபவரே

 போற்றி

ஓம் இளங்களிர் வடிவே போற்றி


ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈஸ்வரி மேனி சந்தன உருவே போற்றி


ஓம் உயிரின் மூலமே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி


ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி

ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி


ஓம் எண்ணும், எழுத்தும் கருத்துமானாய் போற்றி

ஓம் எங்கும் நிறைந்த இறைவ போற்றி


ஓம் ஏழைக்கருளும் எளியோன் போற்றி

ஓம் ஏற்றமும் அளிப்பாய் போற்றி


ஓம் ஐயமெல்லாம் போக்கும்

ஐங்கரா போற்றி

ஓம் ஐஸ்வரியம் அளிப்பாய் போற்றி


ஓம் ஒலி, ஒளி நாதா போற்றி

ஓம் ஒரு பொருள் உணர்த்துவாய் போற்றி 


ஓம் ஓங்கார ரூபா போற்றி

ஓம் எனும் வடிவே போற்றி 


ஓம் ஔவைக்கு முதிர்ந்த ஞானமீந்த

கரிமுகனே போற்றி 

ஓம் கொற்றவை மகனே போற்றி 

பணிந்தார் பாவம் தீர்க்கும்

பஞ்சமுகன் தாள் வாழ்க!

துணிந்தார் மனதில் என்றும்

துணையாய் இருப்பான் வாழ்க!

கனிந்தார் மனதில்

கருணைக் கடவுளே வாழ்க!

விரிந்த மலரில்

தேனாய், மணமாயிருப்பவன் வாழ்க

பரந்த உலகைக்

காக்கும் நாதன் வாழ்க!

காவிரித் தலைவன் வாழ்க! பாரதம்

காவிய மியற்றியவன் வாழ்க!

முப்பாலின் பொருளாய்

மூவுலகை ஆள்பவன் வாழ்க!

மூஞ்சுறு வாகனன் வாழ்க!

முத்தமிழ் நாயகன் வாழ்க!

அனுவில் அனுவாய்

கனவில் கனவாய்

வானகமாய் கானகமாய்

இயற்கைப் மண் பெருநிதியாய்

இகம் பரம் ஆகிய

இன்ப துனபக் கருவாய்

விளங்கும் விளம்பித சூத்ரன்

விக்ன விநாயகன் பாதம்

விரைந்து சரணடைவோம்!



வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருக்குறள்



சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 


விளக்கம்:- இந்த ஐந்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. பஞ்சபூதங்கள் ஆகிய ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு உலகத்தில் இருப்பதால் இவற்றை எல்லாம் உணரமுடியும்.

 இப்பிரபஞ்சத்தில் பிறந்த போது இருந்த கோள்களின் நிலையை வைத்து செய்யும் செயல்கள் மாறுபடும். இவற்றை எல்லாம் கையாளப்படும் முறை தெரிந்து குறள் அற நெறிகளை கடைபிடிப்பவன் 

உலகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.

இப்பூவுலகில் பிறந்த மனிதன் வாழ்க்கையில் ஐந்து உறுப்புகள் (மெய் வாய் கண் காது மூக்கு) மூலம்தான் ஐந்து உணர்வை பெறுகிறோம்.

அதுமட்டுமில்லாமல் ஞானக்கண் என்று சொல்லப்படும் உணர்வுகள் மூலம் அவனது தொலை நோக்குப் பார்வை செயல்படும்.


1.சுவைஒளி :- சுவைத்தல் + பார்த்தல். முதலில் சுவைத்தல் என்றால் எந்தவொரு செயலையும் விருப்பத்தோடு, ஆவலோடு, புரிதலோடு, ஊக்கத்தோடு, செய்தால் அது ஒருவனது மனதிற்கு மனநிறைவு ஏற்படுவதால் சுவைப்பதுக்கு சமமாகும்.

பின்னர்தான் நாவின் சுவை அறுசுவை உணவு பதார்த்தங்கள் என்பது போன்றவையாகும்.

இரண்டாவதாக பார்த்தல்

எந்த வயதில் எதை பார்க்க வேண்டுமோ அதைப் பார்த்துதான் எதையும் தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் செய்யக்கூடிய செயலின் தன்மை எத்தகையது அதனால் அவனது மனதிற்கு கிடைக்கும் நிறைவு போல அவன் அந்த சுவையானவற்றை உணர முடியும்.  


2.ஊறுஓசை :- .தொடு உணர்வு-அன்பாக பாசமாக என தொடுதல் என்ற உணர்வு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது எனவே வெறுப்போடு தொடாதீர்கள். அடுத்து

ஓசை, சத்தம், இனிமையான இசை கேட்பதுபோல அடுத்தவர்களுக்கு நமது வாய்மொழியும் சொல்லும் இனிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழி நடத்தவும், விழிப்புணர்வு கொடுப்பதற்கும் தேவையான குரலோசை பெற்றிருக்க வேண்டும். எதை கேட்க வேண்டுமோ உன் அறிவிற்கு தேவையானதை மட்டுமே கேள்.


3.நாற்றமென ;- என்றால் மணம், நறுமணம், கெட்ட வாசனை எது என்பதை உணர்ந்து கொள்ள மூக்கின் மூலம் முடிகிறது. நல்ல செயல்களை செய்தால் அவனது வாழ்க்கை வளமாகி உயர்ந்த நிலையை அடைகிறான். அதனால் நறுமணத்தை போல என்று ஒப்பிடலாம்.

முகர்தல்- நல்ல நறுமணங்களை விட்டு விஷவாயு போன்ற கொடியவற்றை முகர்தல் வேண்டாம். 


4.ஐந்தின் வகை தெரிவான்:- மேற்கூறிய ஐந்து வகையான செயல்களை தெரிந்தவன், புரிந்தவன், அறிந்தவன் ஞானி ஆவான். அவர்களே பல சித்தர்களும் ஆன்மிக வாதிகளும் ஆவார்.


5.கட்டே உலகு: கட்டே என்றால் களைந்து எறிதல். அதாவது தேவையற்றதை விட்டு விடுதல் எனப் பொருள்படும். பகுத்தறிவு உடைய மனிதர்கள் 

மனிதற்களுக்கே (கட்டே) உலகு. அவர்கள்

உலக மக்களால் போற்றப்படுவார்கள் அவர்களே சிறந்த ஞானிகள்.


உட்கருத்து:- உட்கருத்து. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். எல்லாவற்றிலும் உயர்வானதையே செய்க

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருக்குறள் தெளிவு

 குறள் 24: 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

விளக்கம்:- இவ்வுலகில் மனிதனாக பிறந்தவன் வாழ்க்கையின் தத்துவம் பற்றிய கருத்தை அறிந்து தெளிந்து அதை கடைபிடிக்க வேண்டும். இந்த அழியக்கூடிய உடலை நல்வழியில் தனது உள்ளத்தைப் பயன்படுத்தி சீர்படுத்தி செழுமைப்படுத்தி வாழும் வகையை கண்டுபிடித்து அதை பின்பற்ற வேண்டும். மனிதனாக பிறந்து ஞானியாக வாழ்ந்து சென்ற சான்றோர்களை உலகம் என்றும் மறக்காமல் அவர்களது வழியை பின்பற்றும்.


1.உரனென்னும்:- உரனென்னும்= திண்மை, திடமான- மனிதனுடைய உள்ளம் அவன் செய்யும் நல்வழி செய்கைகளில் திடமான உறுதியான தன்னம்பிக்கை தன் மீது வைக்க வேண்டும். அது அவனது ஆழ்மனதிலும் ஆழமாகப் பதிந்து நல்ல செயல்களை செய்ய வேண்டும்.


2.தோட்டியான்:- 

தோட்டியான்‌ என்றால் பாதுகாவலன் எனப் பொருள்படும். இந்த வார்த்தையை தற்போதும் நமது வழக்குச் சொல்லில் உள்ளது ஆனால் இந்த உலகை பாதுகாப்பவன் இயற்கையாக உள்ள இறை சக்தி வாய்ந்த பொதுவான அர்த்தமாகும். மனிதன் எதை எதை பார்க்க பாதுகாக்க வேண்டும் முதலில் தனது அறிவு மூலம் சான்றோர்களின் நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து தனக்கென்று இல்லாமல் பொதுமக்களுக்காக அவனது அறிவையும் ஆற்றலையும் உபயோகப்படுத்த வேண்டும். அதற்காக அவன் இந்த உலக மக்களுக்கு பாதுகாவலனாக விளங்கும் இறை சக்தியை பெறக்கூடிய வழிமுறையை தெரிந்து ஞானத்தைப் பெற்று இந்த உலக மக்களை நல்வழிப்படுத்த கூடிய இறைவனின் தூதனாக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.


3.ஓரைந்தும் காப்பான்:- 

ஓரைந்தும்= உடலில் உள்ள ஐந்து உணர்வுகளை அறிந்து

(தொடுவுணர்வு முகர்தல் சுவைத்தல் பார்த்தல். கேட்பது) அதை அனுபவித்து பின்னர் கட்டுப்படுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் தனது ஆசை பந்தபாசங்களை விட்டு நீத்து/ துறந்துவிட 

வேண்டும்.


4.வரனென்னும்:- என்றால் சிறந்தவனாக எனப் பொருள்படும். மேற்கண்டவாறு ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தலைசிறந்தவராக உலகிற்கு புத்திபுகட்டும் ஞானியாக மாறமுடியும்.


5.வைப்பிற்கோர் வித்து;-

வைப்போர்- வை என்றால் வையகம் உலகம், மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்போர் எனப் பொருள்படும் சாதாரண மனிதர்களாகப் பிறந்து இவ்வுலகில் அவர்கள் விட்டுச்சென்ற அல்லது விதைத்துச் சென்ற

வித்து எனும் விதை ஆகும். அத்தகைய மனித பிறவிகள் இந்த உலகிற்கு அறிவு ஜீவியாக விளங்கும் வகையில் ஒரு வித்தாக இருப்பார்கள்.

 உதாரணமாக வள்ளலார் போன்ற சாதாரண மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிறந்த ஞானியாக ஞானம் பெற்று உலக மக்களின் நல் வாழ்க்கைக்காக அவர் விட்டுச்சென்ற கருணை என்னும் பாதை ஆகும். இதே போல உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ஆவார்.


உட்கருத்து:- மனிதனும் தெய்வமாகலாம்.


நன்றி.. திருவள்ளுவர் பெருமானுக்கு

திங்கள், 3 பிப்ரவரி, 2025

சுவாச காச நிவாரண சூரணம்

சுவாச காச நிவாரண சூரணம் தாளிசபத்திரி சீரகம் சுக்கு மிளகு சித்திரத்தை சிறுநாகப்பூ கிராம்பு லவங்க பட்டை ஓமம் கருஞ்சீரகம் தான்றிக்காய் பெருநாகப்பூ கடுக்காய் ஏலக்காய் ஜாதிக்காய் சுத்தம் செய்து பாலில் ஒரு ஆவிகாட்டி சுக்கு சித்தனத்தையை மேல்தோல் சீவியும் கிராம்பை மேலே உள்ள பூவை நீக்கியும் கடுக்காய் தான்றிகாய்களை கொட்டை நீக்கியும் மற்றவைகளை மித தீயில் இளவறுப்பாக வறுத்து எல்லா சரக்குகளையும் மிக நுண்ணிய பொடி சூரணமாக செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்து கொண்டு தேனில் குழைத்து ஒருவேளை கொடுக்கவும் அதிக கபம் இருந்தால் இதோடு ஒருதுளி பச்சை கற்பூரம் பனங்கருப்பட்டி கலந்தும் தரலாம் இதுசமயம் வெட்டிவேரை கஷாயம் இட்டு பனங்கருப்பட்டி இட்டு கொடுப்பது அதிக சூடு இல்லாமல் கடும் இருமல் இல்லாமல் இருக்கும் இதனை சிறிது சுடுசாதத்தில் பிசைந்து சிறிதளவு நெய் கலந்து கொடுக்கலாம் இது வரட்டு இருமலுக்கு இவ்விதம் பயன் படும் [04/02, 5:15 am] Thamaraiselvan Ramaiya: இதில் எல்லா சரக்குகளும் சமன் எடை நிதானமாக முருகனை வேண்டி இச்சரக்குகளை ஒரு தவமாக கையாள வேண்டும் மருந்துகளை தயார் செய்யும் போது பலரை கூட வைத்து கொள்ளகூடாது பெயர் சொல்லா மருந்து என்று இதற்கு பேர் உண்டு மருந்தே கடவுள் அதாவது உடலுக்குள் கடந்து சென்று காப்பாற்றுவது ஆக மருந்தை கடவுளுக்கு தரும் மரியாதை அனைத்தும் தரவேண்டும். விளையாட்டு தனமாக மதிப்பு தெரியாத மக்களுக்கு வலிய சென்று மருந்தை தரகூடாது. மருந்தை பிணியாளருக்கு கொடுப்பதோடு அதன் செயல் அறிகுறியை கவணித்து பிணி விலகிய பின் படிப்படியாக மருந்தை கொடுக்க வேண்டும் மருந்தை மதியாதவர்க்கு கண்ணிலும் காட்ட கூடாது கபம் குழந்தைகளுக்கு மிக பெரிய இடையூறு செய்வன உடலில் தேக வனப்பை கெடுக்கும் இந்த கபம் சளி சளி தொற்று அடிக்கடி வரும் குழந்தைகளை நெடும்நாள் பயன்படுத்தும் மெத்தை தலையணைகளை பயன்படுத்திடாமல் பார்த்து கொள்ள வேண்டும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உணவை சூடு செய்து தரகூடாது பனி காலத்தில் முக்கியமாக அதிக தூரம் பயணிக்க வைக்க கூடாது கொதித்து ஆறியபின் வெள்ளை பருத்தி துணியில் வடிகட்டிய நீரை தாராளமாக கொடுக்கலாம் அடிக்கடி பூண்டு மிளகு ரசம் கொடுக்கலாம் விளையாட்டாக பலூன் ஊத வைக்கலாம் சிறு நடை சிறு ஓட்டம் நுரையீரல் நன்கு சுவாசம் செய்ய வைக்கலாம் பந்துகள் விளையாட்டு நல்லது வாலிபால் பூப்பந்து ஆடுதல் # இதில் கருஞ்சீரகம் இருப்பதால் கர்ப்பம் தரித்த பெண்கள் சாப்பிட கூடாது ######## பொருப்பு துறப்பு##### இதுஒரு பாரம்பரிய கைபாக முறை இதை தேர்ந்த வைத்தியர் மேற்பார்வையில் செய்து கொள்வது உசிதம் நாட்டுப்புற மரபு பகிர்வு.... நன்றி சித்தர் தொல்குடி மக்களுக்கு கந்தாசரணம் சுபம்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி பாடல்

காப்பு பாடல் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே ...... இருப்பளிங்கு வாரா(து) இடர். படிகநிறமும் பவளச் செவ் வாயும் கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும்சொல் லாதோ கவி. நூல் சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியும் போருகத் தாளை வணங்குதுமே 1 வணங்கும் சிலைநுத லும்கழைத் தோளும் வனமுலைமேல் சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமனன்பால் உணங்கும் திருமுன்றி லாய்மறை நான்கும் உரைப்பவளே 2 உரைப்பார் உரைக்கும் கலைகளெல் லாமெண்ணில் உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவல் லரோதண் தரளமுலை வரைப்பால் அமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே 3 இயலா னதுகொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு முயலாமை யால்தடு மாறுகின் றேனிந்த மூவுலகும் செயலால் அமைத்த கலைமக ளேநின் திருவருளுக்(கு) அயலா விடாமல் அடியேனை யும்உவந்(து) ஆண்டருளே 4 அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத்(து) அழகெறிக்கும் திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் இருக்கோது நாதனும் தானுமெப் போதும் இனிதிருக்கும் மருக்கோல நாண்மல ராள்என்னை யாளும் மடமயிலே 5 மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையே குயிலே பசுங்கிளி யேஅன் னமேமனக் கூரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே 6 பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளே ஏதாம் புவியில் பெறலரி தாவ(து) எனக்கினியே 7 இனிநான் உணர்வதெண் ணெண்கலையாளை இலகுதொண்டைக் கனிநாணும் செவ்விதழ் வெண்ணிறத்தாளை கமலஅயன் தனிநா யகியை அகிலாண் டமும்பெற்ற தாயைமணப் பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே 8 பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா மேவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதிய நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கும் நறுங்கமலப் பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே 9 புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ அந்தியில் தோன்றிய தீபமென் கோநல் அருமறையோர் சந்தியில் தோன்றும் தபனனென் கோமணித் தாமமென்கோ உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே 10 ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னை இருத்தியை வெண்கம லத்திருப் பாளையெண் ணெண்கலைதோய் கருத்தியை ஐம்புல னுங்கலங் காமல் கருத்தை யெல்லாம் திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே 11 தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற மூவரும் தானவர் ஆகியுள் ளோரும் முனிவரரும் யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ்வெளுத்த பூவரும் மாதின் அருள்கொண்டு ஞானம் புரிகின்றதே 12 புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை அரிகின்ற(து) ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத் தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்துமுற்ற விரிகின்ற(து) எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே 13 வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்தவிந்து நாதமும் நாதவண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே 14 நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞானஇன்பச் சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையா லேஅகம் மாறி விடும்அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும் தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே 15 சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும் உரோருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல் சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும் ஒரோருகம் ஈரரை மாத்திரை யான உரைமகட்கே 16 கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள் அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத் தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில் பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே 17 தனக்கே துணிபொருள் எண்ணும்தொல் வேதம் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர்தாம் மனகேதம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான் கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே 18 கமலந் தனிலிருப் பாள்விருப் போடங் கரங்குவித்துக் கமலங் கடவுளர் போற்றுமென் பூவைகண் ணிற்கருணைக் கமலந் தனைக்கொண்டு கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார் கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே 19 காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் நாரணன் ஆகம் அகலாத் திருவும்ஓர் நான்மருப்பு வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே 20 அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் முடிவே தவள முளரிமின்னே முடியா இரத்தின வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே 21 வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பேர் கூறிலை யானும் குறித்துநின் றேன்ஐம் புலக்குறும்பர் மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில் சேறிலை ஈந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே 22 சேதிக்க லாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாம்முத்தி தானெய்தலாம் ஆதிக் கலாமயில் வல்லிபொற் றாளை அடைந்தவரே 23 அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப் படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும் தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே 24 தொழுவார் வலம்வரு வார்துதிப் பார்தம் தொழில்மறந்து விழுவார் அருமறை மெய்தெரி வார்இன்ப மெய்புளகித்(து) அழுவார் இனுங்கண்ணீர் மல்குவார் என்கண்ணின் ஆவதென்னை வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே 25 வைக்கும் பொருளும்இல் வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே 26 பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோ மருளாத சொற்கலை வான்பொரு ளோபொருள் வந்துவந்தித்(து) அருளாய் விளங்கு மவர்க்கொளி யாய்அறி யாதவருக்(கு) இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே 27 இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே துலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல் கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே 28 கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும் புரியார்ந்த தாமரை யும்திரு மேனியும் பூண்பனவும் பிரியாவெந் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே 29 பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும் திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே 30 நன்றி...... கம்பருக்கும் திரட்டி தந்தவர்க்கும்

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...