ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

நந்தி தேவர் சிறப்பு மற்றும் போற்றி துதிகள்


 நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞானப் பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள். ‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு

ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.

🌸 Nandi’s Song 🌸

Silent he waits, with steadfast gaze,
Guarding the Lord in endless praise.
Shadow of Shiva, pure and still,
Devotion shaped by surrendering will.

Chant to Lord Nandi

Nandi, guardian of Kailasa, we bow,
Nandi, first Guru, teach us now.

At Thy lotus feet we pray,
Guide our souls on Truth’s pure way.

Crowns of devas at Thy feet fall,
Thy grace and strength uphold us all.

Day and night, Thy name we sing,
To Thee our hearts, our lives we bring.

Blossoms from Thy anklets shine,
On our heads they rest divine.

O Nandi, Lord of steadfast will,
In silence deep, our hearts You fill.

நந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்

 1. மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை, பொறா மனமும்

 2. தறுகன் ஐம்புலன்களுக்கு, ஏவல் செய்யுறாச் சதுரும் 3. பிறவி தீதெனாப், பேதையர் தம்மொடு பிணக்கும்

4. உறுதி நல்லறஞ், செய்பவர் தங்களோடு உறவும் 

5. யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்

 6. மாதவத்தினோர் ஒறுப்பினும், வணங்கிடும் மகிழ்வும் 

7. ஓது நல்லுபதேச மெய் உறுதியும் 

8. அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக்கொளும் தெளிவும்

9. மனமும்,வாக்கும், நின் அன்பர்பால் ஒருப்படு செயலும் 

10. கனவிலும் உனது அன்பருக்கு அடிமையாங் கருத்தும் 

11. நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்

 12. புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொழிவும் 

13. தீமையாம் புறச் சமயங்கள் ஒழித்திடும் திறனும்

14. வாய்மையாகவே பிறர் பொருள் விழைவுறா வளனும் 

15. ஏமுறும் பர தார நச்சிடாத நன் நோன்பும் 

16. தூய்மை நெஞ்சில் யான், எனது எனும் செருக்குறாத் துறவும்

  • துறக்கமீ துறையினும், நரகில் தோய்கினும் 
  • இறக்கினும், பிறக்கினும், இன்பம் துய்க்கினும் 
  • பிறைக்கொழுந் தணிசடைப் பெரும் இவ்வரம்
  • மறுத்திடாது எனக்கு நீ வழங்கல் வேண்டுமால் 
  • என்று நந்தியெம்பெருமான் திருவையாறு என்ற தலத்தில் ஐயாற்றெம்பெருமானிடம்  நாம் உய்வடைவதற்காக வேண்டிப் பெற்ற பதினாறு பேறுகள் ( 16 செல்வங்கள்)  ஆகும்.

நந்திதேவர் துதி 

 அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு

நம் குரு மரபிற்ககெல்லாம்

முதற்குரு நாதனாகி

பங்கயத் துளபம் நாறும் வேத்திரப்படை பொறுத்த

செங்கையெம் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி


வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி

பத்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையார்தாக்கி

அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்

நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்போம்” 


பிரதோஷ_நந்தி_108_போற்றி*


ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அறத்தின் உருவே போற்றி

ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி

ஓம் அரனுக்குக் காவலனே போற்றி

ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி

ஓம் அம்பலக் கூத்தனே போற்றி

ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி

ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி

ஓம் இடபமே போற்றி

ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி

ஓம் ஈகை உடையவனே போற்றி

ஓம் உலக ரட்சகனே போற்றி

ஓம் உபதேச காரணனே போற்றி

ஓம் ஊக்க முடையவனே போற்றி

ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி

ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி

ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி

ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி

ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி

ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி

ஓம் கல்யாண மங்களமே போற்றி

ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி

ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி

ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி

ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி

ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி

ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் களைவாய் போற்றி

ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி

ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி

ஓம் கைலாச வாகனனே போற்றி

ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி

ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி

ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி

ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி

ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி

ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி

ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி

ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி

ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி

ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி

ஓம் மகாதேவனே போற்றி

ஓம் மகிமை பல செய்வாய் போற்றி

ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி

ஓம் மங்கள நாயகனே போற்றி

ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி

ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி

ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி

ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி

ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி

ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி

ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி

ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி

ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி

ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி

ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி

ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி

ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி

ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி

ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி

ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி

ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி

ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி

ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி

ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி

ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி

ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி

ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி

ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி

ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

ஓம் வித்யா காரணனே போற்றி

ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி

ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி

ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி

ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி

ஓம் வேல்உடையவனே போற்றி

ஓம் மகா காளனே போற்றி

ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி

ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி

ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி

ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி

ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி

ஓம் ஊடலுக்குதவியனே போற்றி

ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி

ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி

ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி

ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி

ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி

ஓம் மாமன்னனும் உன்பனி செய்வார் போற்றி

ஓம் மகாதேவன் கருணையே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி

ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி

ஓம் கையிலையின் காவலனே போற்றி

ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி

ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…

நந்தி காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்

நந்தி பஜனை துதி

நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா

நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி

பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி

நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி

நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி

சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி

மங்களங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி

மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி

அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி

வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி

வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி

பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி

வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி

வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி

கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி

வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி

விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி

வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி

வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி

சேர்ந்த திருப்புன் கூரிலே சாய்ந்த நந்தி

செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி

குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி

பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி

புகழ்விக்க எம் இல்லம் வருக நந்தி


நந்தி தேவர் பஜனை

நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது 

நந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது 

செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது 

சிந்தையில் நினைப்பவ ர்க்குச் செல்வம்தரும் 

நந்தியிது (நந்தி)


தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது 

எல்லை இல்லாஇன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது 

ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது 

வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது

(நந்தி)

பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது 

பார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள 

நந்தியிது சங்கம் முழங்குவரும் சங்கர னின் நந்தியிது 

எங்கும் புகழ்மணக்கும் எழி லான நந்தியிது (நந்தி

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது

நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது 

நெய்யிலே குளித்து வரு ம் நேர்மையுள்ள நந்தியிது 

ஈஎறும்பு அணுகாமல் இறைவ ன்வ ரும் நந்தியிது 

(நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது 

காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது 

உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது 

நகரத்தை வளர்த்துவரும் நா ன் மறையின் நந்தியிது 

(நந்திஇது நந்தி இது....)


நந்தி எம் பெருமான் சிவனின் மறு உருவம் என்பதை திருமூலர் கணபதியை தொழும் போது...நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.... என்று நந்தியை ஈசனின் வடிவமாகவே பேசுகிறார்.

நந்திதேவரை போற்றும் வடமொழி நாமாவளி

ஓம் ஷ்வேதவர்ணாய நம: |

ஓம் ஷிவாஸீனாய நம: |
ஓம் சின்மயாய நம: | |
ஓம் ஷ்ருங்கபட்டாய நம: |
ஓம் ஷ்வேதசாமரபூஷாய நம: |
ஓம் தேவராஜாய நம: |
ஓம் ப்ரபாநந்தினே நம: |
ஓம் பண்டிதாய நம:
ஓம் பரமேஷ்வராய நம: |
ஓம் விரூபாய நம: |
ஓம் நிராகாராய நம: |
ஓம் சின்னதைத்யாய நம: |
ஓம் நாஸாஸூத்ரிணே நம: | |
ஓம் அனந்தேஷாய நம: |
ஓம் திலதண்டுலபஶணாய நம: |
ஓம் வாரநந்தினே நம: |
ஓம் ஸரஸாய நம: |
ஓம் விமலாய நம:
ஓம் பட்டஸூத்ராய நம: |
ஓம் காலகண்டாய நம: |
ஓம் ஷைலாதினே நம: |
ஓம் ஷிலாதனஸுநந்தனாய நம: |
ஓம் காரணாய நம: | |
ஓம் ஷ்ருதிபக்தாய நம: |
ஓம் வீரகண்டாதராய நம: |
ஓம் தன்யாய நம: |
ஓம் விஷ்ணுநந்தினே நம: |
ஓம் ஷிவஜ்வாலாக்ராஹிணே நம:
ஓம் பத்ராய நம: |
ஓம் அனகாய நம: |
ஓம் வீராய நம: |
ஓம் த்ருவாய நம: |
ஓம் தாத்ரே நம: | |
ஓம் ஷாஷ்வதாய நம: |
ஓம் ப்ரதோஷப்ரியரூபிணே நம: |
ஓம் வ்ருஷாய நம: |
ஓம் குண்டலத்ருதே நம: |
ஓம் பீமாய நம:
ஓம் ஸிதவர்ணஸ்வரூபிணே நம: |
ஓம் ஸர்வாத்மனே நம: |

ஓம் ஸர்வவிக்யாதாய நம:

வடமொழி தென்மொழி இரண்டும் இறைவன் பூஜைக்கு தந்த திருமறைகளே என்கிறார் திருமூலர்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து செய்யவேண்டும் என்பதே அடிநாதம்

நந்தி தேவரை..

அறவிடை.

தரும விடை 

வெள்விடை

மாக் காளை என்று தமிழ் மறை போற்றுகிறது


நந்தி என்பவர் அறத்தின் உருவமாக போற்றுகிறது தமிழ்மறை

நந்தியின் இரு கொம்பு வழியாக பார்ப்பது நல்லது என்பது நந்தி என்ற அறத்தின் வழியாலே ஈசனை காணமுடியும் என்பதே ரகசியம்

அறம் செய்வார்க்கு நந்தி பெரும் நலமான ஈஸ்வரனை காட்டி அருள் செய்வார்

அறம் தருமம் வடிவான நந்தியின் மேல் சிவசக்தி எழுந்தருளுவார்கள் என்பது பிரதோஷ நந்தி தத்துவம்

அறம் செய்யும் இடத்தில் சினமும் தோன்றும் இதற்கு ஔவை பிராட்டி அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று அடுத்த வரியிலேயே விழிப்புணர்வு செய்கிறார்

அறமும் அன்பும் சிவனும் சக்தியுமாம் 

நந்தி தேவர் வழிபாட்டை வெறும் பூஜையோடு அணுகாமல் நந்திதேவரை அறத்தோடு அணுகவேண்டும் என்பதே குருமரபு நல்லுரை

நந்தி தேவர் வெள்விடை அதாவது தூய்மை நல் ஒழுக்கம் எனும் வெண்மை அடையாளம் மாசு மறுவில்லாத சன்மார்க்கத்தின் வெண்மை அடையாளம் நந்தி

நந்தியாவெட்டை மலர் தும்பை மலர் இரண்டும் சிவனுக்கு பிடித்த மலர் என்பார்கள் அதுவே நந்திக்கும் பயன்படுத்துவார்கள் நந்தியாவட்டம் எனும் பூ வெண்மை தும்பையும் வெண்மை நந்திதேவரின் குணத்தை வெளிப்படுத்தும் தத்துவம்

குடம் குடமாக பாலை தேனை சொரிந்து அபிஷேகம் செய்யினும் அறம் ஒன்று  இல்லையேல் அப்பூசை அலங்கார பூஜை என்பதே திருமூலர் நமக்கு காட்டும் வழிமுறை

அறம் வழி நின்று பூசனை புறிவதே அரன் பூஜை

அரனை அறிந்த நந்தி தருமத்தின் காவலன்

நந்தி  சிவ விதை நல்லற நாயகன் அவரை வணங்குவதற்கு பூர்வ வினை நல்வினை உதவி செய்யும் 

இறைபூசைக்கு ஒரு பச்சிலை

பசுவிற்கு ஒரு வாய் இரை உணவு

பசித்தோர்க்கு ஒரு கைபிடி அன்னம் 

எளிமையான மக்களுக்கு ஒரு இன்னுரை நல் வார்த்தை அன்பு பாராட்டுதல் என எளிமையான அரன் பூஜையை சொல்லிதருகிறது திருமந்திரம்

திருமூலர் திருமந்திரம் நமது கண்ணை திறக்கிறது திருமந்திரம் திருமறையின் வழி நந்தியை அறம் அன்புடன்  பணிந்து அருள் பெருவோம்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன




சனி, 30 ஆகஸ்ட், 2025

ராம பஜனை பாடல்கள்

 வணக்கம் குருவழி சொந்தங்களுக்கு ராம நாம பஜனை பாடல்கள் சிலவற்றைஇங்கே பதிவு செய்துள்ளோம் பயன்படுத்தி இராமனின் வல்லப ஆசியை பெற்று கொள்ளுங்கள் அன்பர்களே..... வாலைதாய் வீடு

ராம பஜனை பாடல்கள் 

ராம பஜனை பாடல்கள்
=============================
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண

================================

தசரத நந்தன ராம ராம்
தயா சாகர ராம ராம் (2)
பசுபதி ரஞ்சன ராம ராம்
பாபா விமோசன ராம ராம் (2)
லக்ஷ்மண சேவித்த ராம ராம்
லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)
சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்
சுந்தரா வதன ராம ராம் (2)

ராகவா சுந்தரா ராம ரகுவரா

பரம பாவனா ஹே ஜகத் வந்தன

பதிதோ தாரண பக்த பரயண

ராவண மர்த்தன விக்ன பஞ்சன

===============================

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

....,.,...,....... சுபம்............

 ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி

பாடணும் நாமம் சொல்லி பாடணும்
நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்

................... சுபம்..............

ராம ராம ராம ராம ராம நாம தரகம்

ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்

சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்


ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்

........................ சுபம்.............

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

......................சுபம்.......

சிவவாக்கியம்


அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்

சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்

எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. –சிவவாக்கியர்


பொருள்:

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.


கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்

இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்

சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்

இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. -சிவவாக்கியர்


பொருள்:

செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?

கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!

ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்

ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! –சிவவாக்கியர்


பொருள்:

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.















செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

நக்கீரர் அருளிய விநாயகர் அகவல்

 வணக்கம் அன்பான குரு வழி சொந்தங்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் இன்று கணபதிக்கு நக்கீரர் அருளிய கணபதி அகவலை படித்து அழகிய தமிழில் வணங்கி மகிழ்வோம்....வாலைதாய் வீடு



நக்கீரதேவர் அருளிய
விநாயகர் அகவல்

கணபதி வணக்கம் ஆசிரிய விருத்தம்

சீர்கொண்ட கரிமுகமு மைந்து கையும்
சிறந்தவா பரணமுடன் ஒற்றைக் கொம்பும்
ஏர்கொண்ட விமலர்கடங் கலியைத் தீர்த்து
எழில்குகற்கு முன்பிறந்து அமரர் மெச்சப்
போர்கொண்ட பிரணவமாய்ப்பிரண வத்துள்
பெருமைசிவ லிங்கமென வந்த மூலம்
கார்கொண்ட பிண்ட மெங்குந் தானாய்
காத்திடுங் கணபதியை வணங்குவோமே

அகவல்



சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணியமூர்த்தி
சங்கர னருளிய சற்குரு விநாயக
ஏழை யடியேன் இருவிழி காண


வேழ முகமும் வெண்பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலில் திருநீற் றழகும்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுத்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுடநன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்


சிந்தூரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தி னழகும்வீற் றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத் தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந்தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சதங்கைப் பலதொளி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்க


தொகுது துந்துமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய் யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சி தந்தருள்
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி


வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜாட் சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டி னடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலங்குறித்து
மண்டல மூன்றும் வாயுவோர் பத்தும்



குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையும் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டி
பஞ்சமூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்ச சக்திகளின் பாதமும் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்


நைவிழிஞான மனோன்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையும் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இகபர சக்கர விதிதனைக் காட்டிப்
புருவ நடுவணை பொற்கம லாசான்
திருவிளை யாடலுந் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்



சத்தம் பிறந்த தலத்தையும் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாரையும் நீக்கிக்
கருவி கரணம் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்க ளிருடிகள் ஒருவரும் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சக்தி பராபரை சதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியார் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
விண் மயமான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொரு ளியாவுந்



தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந்தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீஷனுங் கூடிக் கலந்து
இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து



புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவென காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுள்ளருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூசை நைவேத் தியமும்
பக்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி



ஏத்திய னுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து
ஆக மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவிலும் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டாவாழ்வையளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வழ்க்கை யிடையூ றகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி யென்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே



நல்வினை தீவினைநாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே பராந்தகன் நீயே
பக்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே



உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதன் கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்று நாடியும் முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளிய நித்தன்
பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்கு
செல்வமும் கல்வியுஞ் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயக
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்

புத்திரனே தரும் புண்ணிய முதலே
வெண்ணீ ரணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெருகுஞ் சரனை
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுகவாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயி றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த்தடத் தருகிற்
றான த்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சி தானந்த சற்குருசரணம்
விக்கின விநாயகா தேவே ஓம்
அரகர சண்முக பவனே ஓம்
சிவ சிவ மஹாதேவ சம்போ ஓம்


கணபதி வஞ்சி விருத்தம்


கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும்

கணபதி யென்றிடக் கரும மாதலால்

கணபதி யென்றிடக் கவலை தீருமே

ஓரானைக் கன்றை யமையாள் திருமகனைப்

பேரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத

புத்தி வரும் வித்தைவரும் புத்திரசம் பத்து வரும்

சக்திதருஞ் சித்தி தருந்தான்...


இறையருளால் நமக்கு துதிதந்த நக்கீரர் முதலான குருவடிக்கு நன்றி சொல்லி திருவடியை பணிவோம் 

குருவடி சரணம் திருவடி சரணம்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...