ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சித்தர் பூஜை

கார்த்திட்ட காலங்கி கலச நாதர்
கமலமுனி யூகிமுனி கருணானந்தர்
பார்த்திட்ட போக முனி சட்டை நாதர்
பதஞ்சலியார்கோரக்கர் பவணனந் தீசர்
சீர்திட்ட புளிபாணி அழுகன் சித்தர்
ஜெகம் புகழும் பாம்பாட்டி இடைகாட்டீசர்
போர்த்திட்ட வசிஷ்டரோடு கவுசிகர்நேர்
பிரம்ம முனியாக இன்னும் பெரியோர்தானே
அரகரா முருகையா என்ற சந்தம்
அனுதினமும் முருகையா நான் மறவேன்
சிவ சிவா முருகையா என்ற சந்தம்
சிந்தையிலே முருகையா நான்மறவேன்
ஓதிவைத்தமுருகையா என்குருவே
ஒருநாளும் முருகையா நான்மறவேன்
பாடி வைத்த முருகையா என்குருவே
பல நாளும் நான்மறவேன்
திருசெந்தூர்முருகையாநெடுபாதயிலே
தினம்தினமும்முருகையா காவடிகள்
அபிசேக முருகையா காவடிகள்
ஆடுது பார் முருகையா உன் சந்நிதியில்
சாமந்திப்பூ முருகையா மாலை கட்டி
சண்முகனே முருகையா கொண்டுவாரோம்
ஆறுதப்பு முருகையா நூறுபிழை
அடியார்கள் முருகையா செய்ததெல்லாம்
கோடி தப்பு முருகையா நூறுபிழை
குழந்தை நாங்கள் முருகையா செய்ததெல்லாம்
ஆதரித்தே முருகையா ரக்ஷிப்பாயே
ஆரையாமுருகையா எனக்கு துணை
ஆதரிப்பாய் முருகையா வேலவனே --------காவடி பாட்டு எங்கள் பாட்டுடை தலைவன்முருகனை எங்கள் பாட்டன்முதல் முப்பாட்டன் களும் பாடி பரவசமான சிந்து கவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
2009 lல் விக்கி பீடியாவின் ஆய்வு தகவல்
ரோமர் மருத்துவம் ---கி.பி 300 ஆண்டு
யுனானி மருத்துவம் ---கி.பி600 ஆண்டு
கிரேக்க மருத்துவம் ----கி.பி900ஆண்டு
அட்டாங்க கிருதயம் மருத்துவம் கி.பி900 ஆண்டு
சாரங்க தர சம்கிதை மருத்துவம் கி.பி1300 ஆண்டு
பாவபிரகாசம் மருத்துவம் கி.பி1600 ஆண்டு
அலோபதி மருத்துவம் கி.பி1775 ஆண்டு
தமிழ் சித்த மருத்துவம் 195,50,11,073 ஆண்டுகளுக்கு முந்தியது இத்தனை பழமை வாய்ந்த மருத்துவத்தை நமது சித்தர்களின் மகத்துவத்தை எண்ணி பணிவோம்
m agathisaya namaga
ஓம் பிருகு தேவாய நமக உலக நலம் வேண்டி விண்ணப்பம்
பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்
1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள் இப்புவியெங்கும் நிறையட்டும்
எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்
வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய் நிற்கட்டும்
3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும்
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும்
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும், உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும்
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும்
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும்
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும்
கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும்
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும்
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும்
நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள் பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும்
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள் போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி
வணக்கம் அகத்தியர் அடியார்களுக்கும் அனைத்துசித்தர்   அடியார்களுக்கும்அனந்த கோடி நமஸ்காரம் .காலதீபிகம் (காலத்தைபற்றியவெளிச்சம் )பலஆராய்ச்சிகள்கட்டுரைகள் ஆன்மிக தகவல்கள், இசை ,விவசாயம் ,மற்றும் பொது தகவல்களை  தரும் ஒரு தகவல் சேவையாக மட்டும் பயன்பட்டு வந்தது .இது நாள் வரையில் பலவிதமான வேலை பளுவினாலும் அகத்தியரின் கட்டளை படி இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை

காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்க அகத்தியரின் ஆசி யும் உத்தரவும்கிட்டியதால் நிகழும் துர்முகி ஆண்டு சித்திரை மாதம் 11ம் (24-4-2016) முதல் அகத்தியரின் ஆணைப்படியும் பிருகுவின் ஆசியாலும் காலதீபிகம் இனி அறிய சித்தர்கள் வழியில் ஸ்ரீ அகத்தியர்  நந்தி பிருகு ஜீவ நாடி நிலையம் சார்பில் சித்தர்கள் சார்ந்த தகவல்களும் பாரம்பரிய ஆகமமும் நாடி தகவல்களை பகிரும் ஒரு தளமாக இருக்கும்

என் பார்வைக்கு அப்பாற்பட்ட தகலவல்கள் இனி  காலதீபிகத்தில் வராது


காலதீபிகம் பிருகு முனிவரின் ஆசிரமம் தொடர்பானது இல்லை .இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பிருகு ஜீவ நாடி நிலையத்தின் பதிவாகும் .இதுசம்பந்தம்மான அனைத்து தகவல் தொடர்பிற்கு bjnaadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன் கொள்ளலாம் .

தங்களின் எந்த வித ஆலோசனையும் ஏற்றுகொள்ளபடும் .-----------

ஓம் அகத்தீசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக -ஓம்நந்தி தேவாய நமக
என்றும் அகத்தியர் அடியான் -இராமையா-தாமரைசெல்வன்
          இன்பமே சூழ்க ---------------


திரு ஒற்றியூர் வடிவுடைஅம்மை திருவந்தாதி

வடிவுடையம்மை திருஅந்தாதி –  முகவுரை திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருவொற்றியூர் திருத்தலத்தில் எழுந்தருளி, அடியார்களுக்கு அன்பும் அருளும் வழங...