புதன், 15 மே, 2019

ருத்ரம்


  ஸ்ரீ ருத்ரம்


  ஓம் அதாத்மானக்‍ம் ஶிவாத்மானக் ஶ்ரீ ருத்ரரூபம் த்யாயேத் ||
ஶுத்தஸ்படிக ஸம்காஶம் த்ரினேத்ரம் பம்ச வக்த்ரகம் |
கம்காதரம் தஶபுஜம் ஸர்வாபரண பூஷிதம் ||
னீலக்ரீவம் ஶஶாம்காம்கம் னாக யஜ்ஞோப வீதினம் |
வ்யாக்ர சர்மோத்தரீயம் ச வரேண்யமபய ப்ரதம் ||
கமம்டல்-வக்ஷ ஸூத்ராணாம் தாரிணம் ஶூலபாணினம் |
ஜ்வலன்தம் பிம்களஜடா ஶிகா முத்த்யோத தாரிணம் ||
வ்றுஷ ஸ்கம்த ஸமாரூடம் உமா தேஹார்த தாரிணம் |
அம்றுதேனாப்லுதம் ஶான்தம் திவ்யபோக ஸமன்விதம் ||
திக்தேவதா ஸமாயுக்தம் ஸுராஸுர னமஸ்க்றுதம் |
னித்யம் ச ஶாஶ்வதம் ஶுத்தம் த்ருவ-மக்ஷர-மவ்யயம் |
ஸர்வ வ்யாபின-மீஶானம் ருத்ரம் வை விஶ்வரூபிணம் |
ஏவம் த்யாத்வா த்விஜஃ ஸம்யக் ததோ யஜனமாரபேத் ||
அதாதோ ருத்ர ஸ்னானார்சனாபிஷேக விதிம் வ்யா”க்ஷ்யாஸ்யாமஃ | ஆதித ஏவ தீர்தே ஸ்னாத்வா உதேத்ய ஶுசிஃ ப்ரயதோ ப்ரஹ்மசாரீ ஶுக்லவாஸா தேவாபிமுகஃ ஸ்தித்வா ஆத்மனி தேவதாஃ ஸ்தாபயேத் ||
ப்ரஜனனே ப்ரஹ்மா திஷ்டது | பாதயோர்-விஷ்ணுஸ்திஷ்டது | ஹஸ்தயோர்-ஹரஸ்திஷ்டது | பாஹ்வோரின்த்ரஸ்திஷ்டது | ஜடரே‌உஅக்னிஸ்திஷ்டது | ஹ்றுத’யே ஶிவஸ்திஷ்டது | கண்டே வஸவஸ்திஷ்டன்து | வக்த்ரே ஸரஸ்வதீ திஷ்டது | னாஸிகயோர்-வாயுஸ்திஷ்டது | னயனயோஶ்-சம்த்ராதித்யௌ திஷ்டேதாம் | கர்ணயோரஶ்வினௌ திஷ்டேதாம் | லலாடே ருத்ராஸ்திஷ்டன்து | மூர்த்ன்யாதித்யாஸ்திஷ்டன்து | ஶிரஸி மஹாதேவஸ்திஷ்டது | ஶிகாயாம் வாமதேவாஸ்திஷ்டது | ப்றுஷ்டே பினாகீ திஷ்டது | புரதஃ ஶூலீ திஷ்டது | பார்ஶ்யயோஃ ஶிவாஶம்கரௌ திஷ்டேதாம் | ஸர்வதோ வாயுஸ்திஷ்டது | ததோ பஹிஃ ஸர்வதோ‌உக்னிர்-ஜ்வாலாமாலா-பரிவ்றுதஸ்திஷ்டது | ஸர்வேஷ்வம்கேஷு ஸர்வா தேவதா யதாஸ்தானம் திஷ்டன்து | மாக்‍ம் ரக்ஷன்து |
க்னிர்மே’ வாசி ஶ்ரிதஃ | வாக்த்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி |
வாயுர்மே” ப்ராணே ஶ்ரிதஃ | ப்ராணோ ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | ஸூர்யோ’ மே சக்ஷுஷி ஶ்ரிதஃ | சக்ஷுர்-ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | ன்த்ரமா’ மே மன’ஸி ஶ்ரிதஃ | மனோ ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | திஶோ’ மே ஶ்ரோத்ரே” ஶ்ரிதாஃ | ஶ்ரோத்ரக்ம் ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம்ப்ரஹ்ம’ணி | ஆபோமே ரேதஸி ஶ்ரிதாஃ | ரேதோ ஹ்றுத’யே | ஹ்றுத’யம்மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | ப்றுதிவீ மே ஶரீ’ரே ஶ்ரிதாஃ | ஶரீ’க்ம் ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம்ப்ரஹ்ம’ணி | தி ஸ்பதயோ’ மே லோம’ஸு ஶ்ரிதாஃ | லோமா’னிஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | இன்த்ரோ’ மே பலே” ஶ்ரிதஃ | பக்ம் ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | ர்ஜன்யோ’ மே மூர்த்னி ஶ்ரிதஃ | மூர்தா ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | ஈஶா’னோ மே ன்யௌ ஶ்ரிதஃ | ன்யுர்-ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | த்மா ம’ த்மனி’ ஶ்ரிதஃ | த்மா ஹ்றுத’யே | ஹ்றுத’யம் மயி’ | ம்றுதே” | ம்றுதம் ப்ரஹ்ம’ணி | புன’ர்ம த்மா புராயு ராகா”த் | புனஃ’ ப்ராணஃ புராகூ’மாகா”த் | வைஶ்வாரோ ஶ்மிபி’ர்-வாவ்றுதானஃ | ன்தஸ்தி’ஷ்டத்வம்றுத’ஸ்ய கோபாஃ ||
அஸ்ய ஶ்ரீ ருத்ராத்யாய ப்ரஶ்ன மஹாமன்த்ரஸ்ய, அகோர றுஷிஃ, அனுஷ்டுப் சன்தஃ, ஸங்கர்ஷண மூர்தி ஸ்வரூபோ யோ‌உஸாவாதித்யஃ பரமபுருஷஃ ஸ ஏஷ ருத்ரோ தேவதா | னமஃ ஶிவாயேதி பீஜம் | ஶிவதராயேதி ஶக்திஃ | மஹாதேவாயேதி கீலகம் | ஶ்ரீ ஸாம்ப ஸதாஶிவ ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே வினியோகஃ ||
ஓம் அக்னிஹோத்ராத்மனே அம்குஷ்டாப்யாம் னமஃ | தர்ஶபூர்ண மாஸாத்மனே தர்ஜனீப்யாம் னமஃ | சாதுர்-மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் னமஃ | னிரூட பஶுபம்தாத்மனே அனாமிகாப்யாம் னமஃ | ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் னமஃ | ஸர்வக்ரத்வாத்மனே கரதல கரப்றுஷ்டாப்யாம் னமஃ ||
அக்னிஹோத்ராத்மனே ஹ்றுதயாய னமஃ | தர்ஶபூர்ண மாஸாத்மனே ஶிரஸே ஸ்வாஹா | சாதுர்-மாஸ்யாத்மனே ஶிகாயை வஷட் | னிரூட பஶுபம்தாத்மனே கவசாய ஹும் | ஜ்யோதிஷ்டோமாத்மனே னேத்ரத்ரயாய வௌஷட் | ஸர்வக்ரத்வாத்மனே அஸ்த்ராயபட் | பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பன்தஃ ||
த்யானம்%
ஆபாதாள-னபஃஸ்தலான்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத்-
ஜ்யோதிஃ ஸ்பாடிக-லிம்க-மௌளி-விலஸத்-பூர்ணேன்து-வான்தாம்றுதைஃ |
அஸ்தோகாப்லுத-மேக-மீஶ-மனிஶம் ருத்ரானு-வாகாம்ஜபன்
த்யாயே-தீப்ஸித-ஸித்தயே த்ருவபதம் விப்ரோ‌உபிஷிம்சே-ச்சிவம் ||
ப்ரஹ்மாண்ட வ்யாப்ததேஹா பஸித ஹிமருசா பாஸமானா புஜம்கைஃ
கண்டே காலாஃ கபர்தாஃ கலித-ஶஶிகலா-ஶ்சண்ட கோதண்ட ஹஸ்தாஃ |
த்ர்யக்ஷா ருத்ராக்ஷமாலாஃ ப்ரகடிதவிபவாஃ ஶாம்பவா மூர்திபேதாஃ
ருத்ராஃ ஶ்ரீருத்ரஸூக்த-ப்ரகடிதவிபவா னஃ ப்ரயச்சன்து ஸௌக்யம் ||
ஓம் ணானா”ம் த்வா ணப’திக்‍ம் ஹவாமஹே விம் க’வீனாமு’மஶ்ர’வஸ்தமம் | ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்ம’ணாம் ப்ரஹ்மணஸ்பஆ னஃ’ ஶ்றுண்வன்னூதிபி’ஸ்ஸீ ஸாத’னம் || மஹாகணபதயே னமஃ ||
ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌உனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌உம்றுதம்’ ச மே‌உயக்ஷ்மம்  மே‌உனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌உனமித்ரம்  மே‌உப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ  பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழமை ரோகணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் அகண்டஜோதியும் பஞ்சபூத மகா யக்னமும் நடைபெறும் அன்பர்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு சித்தர்கள் அருளை பெற்று இன்பமுற வேண்டுகிறோம்.........




இடம்...ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  செங்கல்பட்டு தாலுக்கா
இருந்து அனுமந்தபுரம் வழியில் தர்காஸ் பிரிவுசாலை


வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வணக்கம்  நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி  யக்னம் நடைபெறும்.அன்று ஸ்ரீசரபங்கர் மகரிஷி ஜோதியில் ஏழுந்தருளி ஆசியுடன் யாகம் நடைபெறுவதால் இதை கண்ணுரும் அன்பர்கள் இப்பூசையில் கலந்துகொண்டு ஸ்ரீ சரபங்கரின் ஆசியும் பெற வேண்டுகிறோம்.............ஓம் பிருகு மகரிஷி திருவடிகளே சரணம்




ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  காஞ்சிபுரம் மாவட்டம் 
சிங்கபெருமாள் கோயில்........அனுமந்தபுரம் வழி சாலை பிரிவில் தர்காஸ் கிளை சாலை மருதேரி கிராமம்

வணக்கம் சித்தர்களின் ஆசியால் எல்லோரும் வல்லமை பெற்று வாழ வேண்டுகிறேன்.இனி காலதீபிகத்தில் சித்தர்கள் தொடர்பான ஆன்மீக தொடர்பான தகவல்களையும் ஜீவ நாடியில் சித்தர்கள் உரைக்கும் சில பொது தகவல்களையும் பகிர அய்யனின் ஆசியும் கிட்டியுள்ளது.இனி வலைபூவில் சில பதிவுகளுடன்...........சந்திப்போம் ..ஓம் அகத்தீசாய நமக ஓம் பிருகுதேவாய நமக

அக்னி ஹோத்திரம் சூரிய வழிபாடு

                              அக்னி ஹோத்ரம்
   
                        லகுமுறை




                          ஓம் சூர்யாய நம 
                 ஓம் ஆதித்யாய நம

அக்னிஹோத்திரம் ஒரு வித யோக பயிற்சி போன்றது. தினமும் அக்னிஹோத்திரம் காலையும் மாலையும் பூரண நம்பிக்கையுடன் செய்வதே நன்று.

 அக்னிஹோத்ரம் எப்படி செய்ய வேண்டும் 

அக்னிஹோத்ரம் என்ற புனித யாகம் செய்யும் முறையை படிப்படியாக காண்போம்.

அக்னிஹோத்ரம் செய்ய தேவையான பொருட்கள் :

1) சிறிய ஹோம குண்டம்,

ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.

2) சாண வறட்டி

சிறிய அளவிலான வரட்டிகள் போதுமானது.

3) முனை உடையாத பச்சரிசி.

இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.

4) பசு நெய்

சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.

இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.

அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :

சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.

அக்னிஹோத்ரம் செய் முறை :

ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.

பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.

நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும்.

இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது.

அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..


அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :

சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்

அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

அவ்வளவுதான். அக்னிஹோத்திரம் இது செய்வதற்கு ஏதேனும் கஷ்டம் உண்டா?

அக்னிஹோத்திரத்திற்கு என சின்னதாக ஒரு பை தயார் செய்து அப்பொருட்கள் அதனுள் வைத்திருந்து தினமும் பயன்படுத்தலாம்.
-----------------------


அக்னிஹோத்திர மந்திரங்களை , செம்மொழியாம் தமிழ் மொழியில் கூறுவதாக இருந்தால் செய்கிறேன் என்பவர்களுக்கு தமிழ் மாத்திரைகள் (மந்திரங்கள்) கொடுக்கப்பட்டுள்ளது.

அக்னி வேள்வி :

கதிர் உயரும் நேரம் கூறும் மாத்திரைகள் :

கதிரவனிடம் சரணாகதி அடைகிறேன்
கதிரவன் இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.

கதிர் சாயும் நேரம் கூறும் மாத்திரைகள் :

அக்னியை சரணடைகிறேன்
அக்னியை இங்கே எழுந்தருளட்டும்.

அண்டத்தை படைத்தவனை சரணடைகிறேன்.
அண்டத்தை படைத்தவன் இங்கே எழுந்தருளட்டும்.

குரு அருளால் ஞாயிறு வழிபாட்டின் அங்கமாக தினம் அல்லது ஞாயிறு கிழமை அன்று சூரியனை எளிய அக்னி ஹோத்ரம் எனும் லகுவேள்வியை செய்வதால் சூரியனின் அருள் காயத்ரி சாவித்திரி அருளும் வீட்டில் நேர்மறை ஆற்றலும் பெருகி வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாகும்

குருவருளால் நல்லதே நடக்கும்
அடியேன். 
இராமய்யா. தாமரைச்செல்வன்

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...