வியாழன், 27 மே, 2021

ஸ்ரீ மீனாட்சி போற்றி



ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி        20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி    70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி    90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி    100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.
சுபம்

முகத்தல் அளவுகள்

முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

வாலை குளிகை

மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்

வராகன் எடையளவு

32 குன்றிமணி1 வராகன்(வராகனெடை)1.067 கிராம்
10 வராகனெடை1 பலம்10.67 கிராம்
8 பலம்1 சேர்85.33 கிராம்
5 சேர்1 வீசை426.67 கிராம்
1000 பலம்1 கா10.67 கிலோகிராம்
6 வீசை1 துலாம்2.560 கிலோகிராம்
8 வீசை1 மணங்கு3.413 கிலோகிராம்
20 மணங்கு1 கண்டி (பாரம்)68.2667 கிலோகிராம்

ஹோம பலன்கள்



மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெவும், லட்சுமி கடாச்சம் பெறவும்.
 
சந்தான கணபதி ஹோமம்  - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.
 
வித்யா கணபதி ஹோமம் - கல்விக்காக
 
மோகன கணபதி ஹோமம் - திருமணத்திற்காக
 
ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபார லாபத்திற்காக
 
நவகிரக ஹோமம் - நவகிரகங்களினால் நன்மை ஏற்பட
 
லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் - ஏழையும் செல்வந்தனாவான்
 
துர்க்கா ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல
 
சுதர்சன ஹோமம் - கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் அகல
 
ஆயுஷ் ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்
 
மிருத்துந்தய ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்
 
தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம்
 
ஸ்வயம்வரா ஹோமம் - திருமணதடை அகல, விரைவில் கைகூட
 
சந்தான கோபால கிருஷ்ணஹோமம் - குழைந்தை பேறு கிடைக்க
 
மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் - மேற்கல்வி, தெளிந்த சிந்தனை கிடைக்கும்.

1.சூரியன்
                  
                  காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - அக்னி
    ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
    தலம் - சூரியனார் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை , எருக்கு
    வஸ்திரம் - சிவப்பு
    ரத்தினம் - மாணிக்கம்
    அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்
              
                பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.

    திக்கு -தென்கிழக்கு
    அதிதேவதை - ஜலம்
    ப்ரத்யதி தேவதை - கௌரி
    தலம் - திருப்பதி
    நிறம் - வெள்ளை
    வாகனம் - வெள்ளைக் குதிரை
    தானியம் - நெல்
    மலர் - வெள்ளை அரளி
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - முத்து
    அன்னம் - தயிர் சாதம்

3 .  அங்காரகன் (செவ்வாய்)

                    இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு -தெற்கு
    அதிதேவதை - நிலமகள்
    ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
    தலம் - வைத்தீசுவரன் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவளம்
    அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்

                   இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

    திக்கு - வட கிழக்கு
    அதிதேவதை - விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை - நாராயணன்
    தலம் - மதுரை
    நிறம் - வெளிர் பச்சை
    வாகனம் - குதிரை
    தானியம் - பச்சைப் பயறு 
    மலர் - வெண்காந்தள்
    வஸ்திரம் - வெண்ணிற ஆடை
    ரத்தினம் - மரகதம்
    அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு

             இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    ப்ரத்யதி தேவதை - இந்திரன்
    தலம் - திருச்செந்தூர் 
    நிறம் - மஞ்சள்
    வாகனம் - மீனம்
    தானியம் - கடலை 
    வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    அன்னம் - கடலைப்  பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்

             இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - இந்திராணி
    ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
    தலம் - ஸ்ரீரங்கம்
    வாகனம் - முதலை
    தானியம் - மொச்சை
    மலர் - வெண் தாமரை
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - வைரம்
    அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

7.சனி

             இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - மேற்கு
    அதிதேவதை - யமன்
    ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
    தலம் - திருநள்ளாறு
    நிறம் - கருமை
    வாகனம் - காகம்
    தானியம் - எள்
    மலர் - கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - நீலம்
    அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

            இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

    திக்கு - தென் மேற்கு
    அதிதேவதை - பசு
    ப்ரத்யதி தேவதை - பாம்பு
    தலம் - காளத்தி 
    நிறம் - கருமை
    வாகனம் - நீல சிம்மம்
    தானியம் - உளுந்து
    மலர் - மந்தாரை
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - கோமேதகம் 
    அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது

          இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

    திக்கு - வட மேற்கு
    அதிதேவதை - சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை - பிரமன்
    தலம் - காளத்தி 
    நிறம் - செம்மை
    வாகனம் - கழுகு
    தானியம் - கொள்ளு
    மலர் - செவ்வல்லி
    வஸ்திரம் - பல நிற ஆடை
    ரத்தினம் - வைடூரியம்
    அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

1)சொல் பிறந்தவிடமெங்கே முப்பா ழெங்கே!
துவார பாலரெங்கே முதற் பாழெங்கே!
நல்ல சங்கு நதியெங்கே வைகுந்த மெங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்ததெங்கே!
அல்லல் படும் ஐம்பூத மொடுக்க மெங்கே!
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே!


(2)உந்தியெனும் நிலையெங்கும் அறுகோண மெங்கே!
ஓங்கார நிலையெங்கே உற்றவி டமுமெங்கே! 
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்த தெங்கே!
மறை நாலும் விரித்த வயன் தானுமெங்கே!
முந்தி வரும் கணபதியும் பிறந்த தெங்கே!
முக்கோண முனை யெங்கே அடிதா னெங்கே!
இந்தவகைப் பொருளறிந்து சொல்வார் தம்மை!
இறைவனென்றே கருதி யியம் பலாமே!


(3)பற்பதத்தில் பொங்கி வரும் வழிதானெங்கே!
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவுமெங்கே!
உற்பனமாங் கருநின்று விளைந்த தெங்கே!
யொருபாதம் தூக்கி நின்ற வடையாள மெங்கே!
தற்பரமா யாகிநின்ற நிலைதா னெங்கே!
சர்வ வுயிராய் எடுத்த சிவனு மெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(4)அடிமுடியும் நடுவான நிலையு மெங்கே!
அறுசுவையும் கொண்டொ ழித்தவிடமு மெங்கே!
வடிவான வைந்தலை மாணிக்க மெங்கே!
வரையான வூமை யென்னும் எழுத்து மெங்கே!
இடமாக ஆடி நின்ற பாத மெங்கே!
அடைவாயிப் பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே!


(5)சற்குருவும் சந்நிதியு மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(6)நஞ்சணிந்தான் முகந்தா னைந்து மெங்கே!
ஞானக் கண் மற்றக்கண் மூன்று மெங்கே!
அஞ்ச வுயிர்தனைக் கெடுக்கும் யேமனெங்கே!
ஆயிரங் கண்ணி ந்திரனார் தாமுமெங்கே!
பஞ்சறிவால் நின்ற பராசக்தி யெங்கே!
பதினாலு லோகமெனு மதுதா னெங்கே!
வஞ்சமற பொருளறிந்து சொல் வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(7)நகை பிறந்த விடமெங்கே!கோபமெங்கே!
நர மேழா நரகமான தெங்கே!
திகைத்து மறந்திடமெங்கே நினைப்பு மெங்கே!
தீராத குறைவந்து சூழ்ந்த தெங்கே! 
பகைத்த விடந்தா னெங்கே!ஒழுக்கமெங்கே!
பகலிரவு யிருந்த இடந்தா னெங்கே!
வகை பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(8)ஆறுகால் முகமாறு மான தெங்கே!
அறுபத்து நாலுகலை நின்ற தெங்கே!
சீருகால் பன்னிரண்டில் கழிந்த தெங்கே!
செத்திடமுஞ் சாகாதி ருந்திடமு மெங்கே!
பூருவ நீயிருந்துவந்து பிறந்திடந் தானுமெங்கே!
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமு மெங்கே!
வேறு பொருளுரையா துள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலிய லாமே!


(9)ஆதியிற் சந்திரனும் பிறந்த தெங்கே!
அவரொடுங்கி நிற்குமது விடமு மெங்கே!
சாதிபல ஒன்றாகக் கண்ட தெங்கே!
சத்தி சிவமென்று பிரியாத தெங்கே!
ஓதி உணர்ந்த பூசைமறந்த தெங்கே!
வுச்சிட்ட நிட்டத்தே விடமு மெங்கே!
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லிய தெல்லா முடலில் சொல்லுவாறே!


(10)இருள்பிறந்த விடமெங்கே ஒடுக்கிட மெங்கே!
இரண்டு திரிசங்கு நின்றவிடமு மெங்கே!
அருள்பிறந்து பாடிநின்ற விடமு மெங்கே!
அறுத்தடைத்த வாசலொன்று கண்ட தெங்கே!
திருபிறந்த விடமெங்கே எழுகிணறு மெங்கே!
திருக் கிணற்றை யிறைக்கின்ற யேத்தமெங்கே!
விருப்ப முடனடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞான அறிவுள் ளோர்க்கே!

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...