சனி, 1 ஏப்ரல், 2023

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்! ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது. 2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்! மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம் புண்ட்ரேஷசாபகுஸுமேஷ§ஸ்ருணீர்ததாநாம்!! காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன. 3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம் பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்! பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன். 4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம் த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்! விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன் 5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன. 6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா: ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங் கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள். ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.