ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ  பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழமை ரோகணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் அகண்டஜோதியும் பஞ்சபூத மகா யக்னமும் நடைபெறும் அன்பர்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு சித்தர்கள் அருளை பெற்று இன்பமுற வேண்டுகிறோம்.........




இடம்...ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  செங்கல்பட்டு தாலுக்கா
இருந்து அனுமந்தபுரம் வழியில் தர்காஸ் பிரிவுசாலை


வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வணக்கம்  நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி  யக்னம் நடைபெறும்.அன்று ஸ்ரீசரபங்கர் மகரிஷி ஜோதியில் ஏழுந்தருளி ஆசியுடன் யாகம் நடைபெறுவதால் இதை கண்ணுரும் அன்பர்கள் இப்பூசையில் கலந்துகொண்டு ஸ்ரீ சரபங்கரின் ஆசியும் பெற வேண்டுகிறோம்.............ஓம் பிருகு மகரிஷி திருவடிகளே சரணம்




ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  காஞ்சிபுரம் மாவட்டம் 
சிங்கபெருமாள் கோயில்........அனுமந்தபுரம் வழி சாலை பிரிவில் தர்காஸ் கிளை சாலை மருதேரி கிராமம்

வணக்கம் சித்தர்களின் ஆசியால் எல்லோரும் வல்லமை பெற்று வாழ வேண்டுகிறேன்.இனி காலதீபிகத்தில் சித்தர்கள் தொடர்பான ஆன்மீக தொடர்பான தகவல்களையும் ஜீவ நாடியில் சித்தர்கள் உரைக்கும் சில பொது தகவல்களையும் பகிர அய்யனின் ஆசியும் கிட்டியுள்ளது.இனி வலைபூவில் சில பதிவுகளுடன்...........சந்திப்போம் ..ஓம் அகத்தீசாய நமக ஓம் பிருகுதேவாய நமக

திங்கள், 12 மார்ச், 2018

காளங்கி நாதர்.

 காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை.
வாழ்க்கை குறிப்பு காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார். ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர். காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. இப்படித்தான் ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது. மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால் காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால்  இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர்.
                                                பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர். அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன. அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன.
                                                  மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர்  புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம். காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார். அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார். அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும்.
                                                 கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும். எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர்,  நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்.
                                                 ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது. சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர். திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார். அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64 என்கிற கலைகள் ஆனது.
                                                  இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது. நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர்.
                                                 திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார்.
                                                குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை.
                                                 அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர்.
                                                 இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
காலாங்கி நாதர்      வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய
வகாரத் திரவியம்,
வைத்திய காவியம்,
ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
 ஞான பூஜா விதி,
இந்திர ஜால ஞானம்,
ஞான சூத்திரம்,
உபதேச ஞானம்,
தண்டகம்
போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார்.
இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர்.
காற்றையே உடலாகக்  கொண்டவர் என்றும் காலனைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால் நெருங்க முடியாதவர் என்றும் காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு.
                                                    காலங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர் இவரைப் பற்றிக்  கூறியுள்ளார். யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்கள் பலவுண்டு. திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும், புயலும் வெள்ளமும் கரை புரள பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள், யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பக்  காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டேபோனார்.காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கியே சென்று கொண்டிருந்த காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!...எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர். “சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரேஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார்.
                                               அங்கு ஒரு பயங்கரமான புலி படுத்துக்கிடப்பதைக்  கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது. காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர்.  மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனிதமுகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்குதவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி.
                                                காலங்கி நாதர் அவரை வணங்கி உபதேசம் பெற்றார். பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும் திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி ஆசி பெற்றார்.சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களயும் சந்தித்து அவர்களின் பேரருளைப்  பெற்றார். அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான். தான் அவரைப் பார்க்க வந்த நோக்கத்தைக் கூறினான்.

காலாங்கி நாதர் .

 சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக்கிணறு உண்டு.உலோகத்தைத்  தங்கமாக மாற்றும் தைல மூலிகைக்  கிணறு.சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில் இறைபக்தியும்,திருப்பணி கைங்கர்யங்கங்களில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியைத்  தொடந்தான்.ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள் பொருள் பற்றாக் குறையால் பணியைத்  தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவி புரியவில்லை. சதுரகிரியில் தவம் புரிந்து கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான்.நடந்தவற்றைக் கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி நின்றான்.ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை, உதிர வேங்கை,ஜோதி விருட்சம்,கருநெல்லி முதலியவற்றாலும்,முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார். அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களைத் தங்கம் உண்டாக்கினார்.'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து கோயிலைக்  கட்டி முடி போஎன்றார். காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற  வணிகன் வாமதேவன் தன் விருப்பப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான். அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்  கொண்டு மூடிவிட்டார்.
                                                   துஷ்டர்கள், பேராசைக்காரர்,வீணர்களிடம் போய்ச்  சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,நான்கு திசைகளுக்கும் வாரகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களைக்  காவலுக்கு  நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். [ தைலக் கிணறு சதுரகிரியில் இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின் அருகில் இன்றும் காணலாம். கிணற்றின் மீது இரும்புச் சட்டங்களால் மூடப்பட்டுள்ளது. இன்றும் சித்தர்கள் அங்கு உருவாகவும், அருவுருவாக நடமாடுவதைப்  பலரும் கண்டுள்ளனர். குறிப்பாக பெளர்ணமி காலங்கள் விசேஷம் ] காலாங்கிநாதர் ககனகுளிகையின் உதவியோடு விண்வெளியாக சீன நாடு சென்று காலனுடைய அருள் பெற்று சமாதி அடைந்தார். சீன நாட்டில் காலங்கி நாதர் சமாதி அடைந்திருந்த முக்காதக் கோட்டைக்குள்நுழைந்து போகர் முனிவர் வணங்க சமாதியின் கதவு திறந்து ஒளிமயமாக காலாங்கிநாதர் போகருக்கு  தரிசனம் தந்தார்.வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே  இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை  எதிர்கொள்கிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே  உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும்  சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.
                                                சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும்  பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது  குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த  வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும்,குறைத்திடவும் பல்வேறு  உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு  சாத்தியமில்லாதவைகளாகவும் இருக்கின்றன. கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும்,உபாயங்களையும்  கூறியிருந்தாலும்,  கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில்  பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.
பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும்
- காலங்கி நாதர் -
மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம். 
அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும்  அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம்  தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும்  கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர். காலங்கிநாதர் தனது “காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம்” என்ற நூலில்  கோரக்கரின் இருப்பிடத்தையும்,தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார்.
பார்க்கவே கோரக்கர் குண்டாதோன்றும்
தேரப்பா கஞ்சவுடன் மூலி சேர்ததிற் கடைந்து
சித்தர் முனி ஒவ்வொருவருக்கும் ஈவார்
நேரப்பா அதனருகே குகைதான் உண்டு
யென்றும் நிலையாக சிவயோகம் செய்வாரங்கே
கோரப்பா கோரக்கர் தம்மைக் கண்டு
கொண்டவனே ஞானாமிர்தம் உண்டோந்தானே
- காலங்கி நாதர் -
சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு  கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும்  இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய  தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார்.
அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென  அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது  தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான  அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும்  செய்தி! குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள  எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.
ஸ்ரீ அகத்தியர் துதி

கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!

நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!

பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்

கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!

வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்

மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!

பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ

சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !

காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை

நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல்  தவிக்கின்றேன் நான்

பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்

தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018


சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.

ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.

மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.

இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.


 
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி மூல மந்திரம்
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ட:ஹும் பட் சுவாக.

3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
===000===



 ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி
1.    ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
2.    ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
3.    ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
4.    ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
5.    ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:

6.    ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
7.    ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
8.    ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
9.    ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
10.    ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:

11.    ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
12.    ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
13.    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
14.    ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
15.    ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
16.    ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
17.    ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
18.    ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
19.    ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
20.    ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:

21.    ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
22.    ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
23.    ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
24.    ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
25.    ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
26.    ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
27.    ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
28.    ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
29.    ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
30.    ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:

31.    ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
32.    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
33.    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
34.    ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
35.    ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
36.    ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
37.    ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
38.    ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
39.    ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
40.    ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:

41.    ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
42.    ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
43.    ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
44.    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
45.    ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
46.    ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
47.    ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
48.    ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
49.    ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
50.    ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:

51.    ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
52.    ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
53.    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
54.    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
55.    ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
56.    ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
57.    ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
58.    ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
59.    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
60.    ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:

61.    ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
62.    ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
63.    ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
64.    ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
65.    ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
66.    ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
67.    ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
68.    ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
69.    ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
70.    ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:

71.    ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
72.    ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
73.    ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
74.    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
75.    ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
76.    ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
77.    ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
78.    ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
79.    ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
80.    ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:

81.    ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
82.    ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
83.    ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
84.    ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
85.    ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
86.    ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
87.    ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
88.    ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
89.    ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
90.    ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:

91.    ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
92.    ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
93.    ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
94.    ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
95.    ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
96.    ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
97.    ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
98.    ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
99.    ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
100.ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:

101.ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
102.ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
103.ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
104.ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
105.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
106.ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
107.ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
108.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:
லோபமுத்திரா காவிரி நதியான கதை
அகத்திய முனிவர் ஒரு சமயம் லோபமுத்திராவை நீராக மாற்றி தமது கமண்டலத்துள் அடக்கி வைத்திருந்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. தன்னை நீண்ட காலம் தனியாக வைத்திருந்ததை லோபமுத்திரா உணர்ந்தவுடன், கமண்டலத்திலிருந்து அவள் ஒரு நதியாக பெருக்கெடுத்து
ஓடலானாள். முனிவர்களின் சீடர்கள் அவளைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால், அவளோ பூமியில் பாய்ந்து ஓடியதால், அவளது பிரவாகத்தை  அவர்களால் நிறுத்த முடியவில்லை. பிறகு, அவள் பகமண்டலா என்ற இடத்தில் மீண்டும் உதயமானாள். பல காலத்திற்குப் பிறகு, அகத்திய முனிவர் அவளைத் தேடிய போது, காவிரி நதியின் ரூபத்தில் அவளை அவர் அடையாளம் கண்டார். அவள் அகஸ்திய முனிவருடன் அவரது பத்தினியாக வாழ்ந்து, நதியாக மக்களுக்கு உதவியாக இருந்தாள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னொரு புராணக்கதையும் உண்டு. அகத்தியர் தனது பத்தினியைத் தம் கமண்டலத்துள் நீராக வைத்திருந்ததாகவும், கணேச பகவான் காக வடிவில் வந்து அவரது கமண்டலத்தைக் கவிழ்த்து, அதிலுள்ள நீரை ஓட விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நதியாக ஓட ஆரம்பித்ததும், அவள் காவிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள் – காவேராவின் மகளானதால் அப்பெயர் வந்தது. புண்ணிய நதியாக வேண்டும் என்ற விருப்பத்தால், காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம்   கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே  புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. 
அப்படி பட்ட அன்னைக்கு அய்யனுக்கு அளித்த காயத்திரி மந்திரம் 
ஓம் காவேர புத்தீரிச வித்மகே
காரூண்ய ரூபாய தீமகே
தந்நோ : ஸ்ரீலோபமுத்ரா தேவி பிரஜோதயாத்

நீடித்த ஆயுளை கொடுக்கும் அன்னை வாலையின் தாலாட்டு !

Bala Konjum Bakthi - Bala aval engal kuzhandhaiyadi.

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

Sri Bala Tripurasundari-Chitra pournami Unjal Seva video 2014

சித்தர்கள் போற்றும் வாலை

சித்தர் கொங்கண நாயனாரின் வாலை கும்மி---Kongkana Naayanar Vaalai Kummi