சனி, 1 பிப்ரவரி, 2025
வசந்த பஞ்சமி
வணக்கம் 02.02.2025 வசந்த பஞ்சமி இது மங்களம் தருகின்ற வசந்த காலத்தை வரவேற்பு செய்யும் நன்னாள்
தைதிங்களில் பூசணி பரங்கி செடிகள் காலையில் மஞ்சள் நிற பூ பூத்து காய்க்கும் பீர்க்கங் செடிகள் மாலையில் பூத்து பனிகாலத்தில் இவைகள் காய்க்க தொடங்கும் மஞ்சள் கிழங்ககள் அறுவடை முடியும்
பாடுபட்ட வெள்ளாமை நெல்மணி குவியலாக கிடக்கும்
நன்கு விளைந்த நெல்மணி கதிர்கள் தலை சாய்ந்து தங்கம் நிறம் கொண்டு எங்கும் மஞ்சளாக தங்க நிறமாக காட்சி தருவதை தொல்குடிகள் தங்கள் மகிழ்ச்சி கொண்டாட்டமாய் பூமா தேவி சரஸ்வதி புவனேஸ்வரி க்கு பொங்கலிட்டு மகிழ்வர் சிறு குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஈரம் தரும் வாலை சரஸ்வதியை போற்றுவதும் வீதிகளில் மஞ்சள் நீரை ஊற்றி களித்து மகிழ்வர் இது காணும் பொங்கல் முதலே தொடங்கும்
கன்னி பொங்கல் என்பதே தொல்குடி வழக்காடல்
லசந்த பஞ்சமி வராகி தேவியின் சூழ்ச்சம வழிபாடு இந்த பூமியை தாங்கும் வராக துணை ஆனதனால் நமது முன்னோர்கள் மஞ்சள் நீராட்டலை கடவுளுக்கும் கன்னியர் சடங்கிலும் செய்தார்கள்
வராகி வழிபாடு தொல்குடி மக்கள் மிகவும் நுணுக்கமாக கையாண்டு உள்ளனர்.
முக்கியமாக விவசாய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பூசைகாலத்திலும் மஞ்சளை தொட்டு பூசைகளை தொடங்கி உள்ளனர்
வீட்டில் உள்ள நிலைகதவுகளில் மஞ்சள் தடவுவது
கன்னியர் பூப்புகாலம்
கற்ப காலத்தில் வளையல் காப்பு காலம்
குழந்தை பிறந்த பதினாறு நாட்கள்
அம்மை போன்ற காலங்களிலும்
திருமண சடங்கு எல்லாவற்றிலும் இந்த மஞ்சளை தொட்டு வரும் பழக்கம் உள்ளது
ஆக சித்தர்கள் கொண்டு வந்த விசேஷ மஞ்சளை ஒரு வசந்த வரவேற்பு ஒரு மகிழ்ச்சி தரும் காலங்களில் காப்பு செய்து கொண்டது தொல்குடி மரபு
மஞ்சள் தங்கத்திற்கு ஈடான பொருள் என கருதியது நம் முன்னோர்கள் மரபு
இந்த வசந்த பஞ்சமியில் மஞ்சளை தொட்டு வழிபாடு செய்து நன்மையை வரவேற்போம்.
: நெல்லும் மஞ்சளும் அறுவடை ஆகும் நாளில் வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு கொஞ்சம் வாங்கி வீடுகளில் வைப்பது ஒரு ஐஸ்வர்யமே
தங்கம் வாங்குதை பிரபல படுத்துவார்கள் ஆனால் எல்லோரும் தங்கம் வாங்க இயலாது
ஆக எளிமையாக மஞ்சளை கிழங்கு வாங்கி வைக்கலாம்
நெல் ஒருபடி முதல் ஒரு மரக்கால் வரை வாங்கி பூஜை அறையில் வைக்கலாம் இது ஒரு உயிர் விதை ஆற்றல்
தொல்குடி மக்கள் தங்கள் விவசாயத்திற்கு உரிய விதை நெல்லை காயவைத்து வைக்கோல் கோட்டைகட்டி சாணம் மெழுகி பாது காப்பார்கள் ஆக நித்யமாக தான்யம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்
மஞ்சளை அந்தந்த நேரத்தில் அரைத்து பயன்படுத்துவதே நல்லது
அதன் வாசனையே மருத்துவ குணங்கள் உடையது
அதுபோல் குளியலுக்கும் உரசி தேய்து குளித்து வருவதே நல்ல பலன்
ஆக கடைகளில் கலப்பட மஞ்சள் பொடியை தவிர்த்து மஞ்சள் பொடியை கைபாகமாக செய்வது நல்லது
மஞ்சள் கிழங்கு வகையை சார்ந்தது இதை பதியம் இட்டு வளர்க்கமுடியும்
மஞ்சளை சித்தர்கள் உலகத்திலிருந்து கொண்டு வந்து இங்கு பதியம் இட்டார்கள் என்று குருமரபு கூறுகிறது
வாழை மஞ்சள் கருணை கிழங்கு இன்னும் பிற உயர்ந்த கிழங்கு வகைகளை சித்தர்கள் கொண்டு வந்து பதியம் இட்டனர் என்பதே குரு மரபு செய்தி
நமக்கு பயன் படும் என்று ஆதி சித்தர்கள் தொல்குடி மக்கள் கொண்டு வந்த கிழங்கு மற்றும் உண்ணும் உணவு விதைகளை சேகரிக்க மறந்து போனதும் அவலமே
வழிபாடு ஒரு இயற்கை பாதுகாப்பு நன்றி நவில்தல் பெரியோர்கள் மரபை பேணுதல் அவர்கள் காட்டிய வழியில் ஆயிரமாயிரம் ரகசியம் உள் பொதிந்து இருக்கும் ஆக தொல்குடி மரபை உள்வாங்கி பயன் பெருவோம்
யார் விதைகளை தந்தவரோ அதை விளைவித்து உணவாக்கி தந்தவரோ அவர்களுக்கு வணக்கங்கள்
யார் கிழங்குகளையும் மூலிகைகளையும் கொண்டு வந்து இட்டு வளர்த்து காத்து நமக்களித்தனரோ அவர்களுக்கு வணக்கங்கள்
பூமியிலும் விதைகளிலும் ஈரத்தையும் சத்துக்களை தந்து வீரியமாய் முளைக்கும் அறிவை தந்த அந்த தெய்வங்களுக்கு வணக்கங்கள்
மலையில் பெய்யும் மழை கடலில் கலப்பதை ஆறு வெட்டி வாய்க்கால் வெட்டி பள்ளத்தில் நீரை நிறுத்தி வரப்பு கட்டி வேளாண்மை அறிவை தந்த வேந்தனுக்கும் தொல்குடி மக்களுக்கு வணக்கங்கள்
வசந்த காலத்தில் மஞ்சளும் வெள்ளையும் பல வர்ணமாக பூத்து குளுங்கும் செடிகொடிகளுக்கும்
பனி நிறைந்த வயல் வனத்திற்கும் வணக்கங்கள் இப்படி வசந்த காலத்தில் மனம் திறந்த வணக்கம் செய்வோம் மனதில் இலேசானவர்கள் ஆகுவோம்
பத்ர பூசை. இறைவனுக்குஇலை அர்ச்சனை
இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால், அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
அதாவது அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்னியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கும் படி செய்தது பஞ்சபூத குணங்களை அடைவதற்கு இயற்கை இறை வழிபாடு
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்
பூதகணங்கள்
ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இருந்தாலும் சிலருக்கு ஒரே மாதிரியான பீடிப்புகள் இருக்கும். அதன் பின்னணியை ஆராயும் போது இறையருளால் பூதகணங்களை பற்றிய ஒரு அறிமுகத்தை அகத்தியர் மற்றும் இடியாப்ப சித்தர் ஆசியால் கிடைக்க பெற்றது இந்த பூதகணங்கள் ஒருவரை பீடிக்கும் போது அவர்கள் அந்த பூத கணங்களின் ஆசைகளை தங்கள் ஆசைகளாக கொள்கிறார்கள் என்கிறது நிகண்டு சிவனுக்கும் வாலை மனோண்பணிக்கும் அங்காளிக்கு மட்டுமே கட்டுபடும் பூதங்களை வாலை தாய் வீட்டில் இவ்வகை பூதங்களை அதன் சேட்டை தீர்ந்து விலகி நின்று ஆதரவை தரும் விதமாகவே இருபெரும் சிவ சக்தியின் அம்சமாக சிவனையும் அங்காளி உடனான சக்திகளை குருவருள் வருவித்தது இங்கு தன்னிச்சையாக இயங்கும் பூதங்களை கட்டுபடுத்தி சிவ சக்தி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனால் நன்மையை அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நடக்கின்றது ஆக ஒருவர் செயலுக்கு அவரே கூட காரணமாக இருப்பதில்லை. அவர்களை பீட வாகனமாக பயன்படுத்தி இந்த பூதங்கள் இயங்கும் இது அந்த நபருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜாதகத்திலும் இதை கணிக்க முடியாது...... ஆக இந்த பூதங்களை கட்டுபடுத்திட வாலை ஆசி செய்யட்டும் வாலை வழிபாட்டு நோக்கங்கள் மக்களை ஆட்டி படைக்கும் மது மற்றும் பிற இடையூறு தரும் பூதங்களை மனித இனம் புரியாத இருப்பதாலே அனேக இயற்கை விதிமீறல் இருக்கிறது இதற்கு ஒரு தனி வழியாக சித்த சார்பாக சிவன் அங்காளி மூலம் கட்டுபடுத்தி பூதங்களை நல்வழிக்கு பயன்படுத்தி டும் முறையால் உலகில் மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் இது ஒரு போராட்டம் இதற்கு பெரிய சக்தி உடைய தெய்வங்களே குருமார்கள் துணையாக இருக்கும்.
1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும்.
2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும்.
3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல்.
4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.
5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும்.
6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும்.
7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும்.
8. சித்த பூதம் - ஞானமளிக்கும்.
9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும்.
10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும்.
11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும்.
12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும்.
14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும்.
16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும்.
17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும்.
19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும்.
20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும்.
21. குபேர பூதம் - தன விருத்தி.
22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும்.
23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும்.
24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை.
25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும்.
26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும்.
27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும்.
28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம்.
29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல்.
30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம்.
31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல்.
32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை.
33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.
இது ரகசியமான விஷயம் இதனை பகிர்தல் கூடாது.
பாடல் எண் : 02
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திருவெண்காடு அடை நெஞ்சே.
பாடல் விளக்கம்:
நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலை வீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமை பங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
சங்கிலி பூதம் மரசிற்பம்
## 🌿 பூதகணங்கள் பூஜை விபரம்
### 1. **பூஜை செய்யும் நாள்**
* பெரும்பாலும் **செவ்வாய் கிழமை** அல்லது **சதுர்த்தி திதி** சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
* யாகங்கள், பெரிய விழாக்கள், சிவாலயக் கும்பாபிஷேகம் போன்ற சமயங்களில் கணபூஜை வழிமுறையும் நடத்தப்படும்.
### 2. **பூஜை இடம்**
* சிவாலயத்தில் நந்தி அருகே, கோபுர வாசலில் அல்லது தனி ஆலயத்தில்.
* சில ஊர்களில் "பூதகண சந்நதி" காணப்படும்.
### 3. **அவசிய பொருட்கள்**
* மஞ்சள், குங்குமம், சந்தனம்
* பூக்கள் (அரளி, செம்பருத்தி, வில்வம்)
* தூர்வை, கருக்காப்பு, கற்பூரம்
* நெய்வேதியம்: சுண்டல், வெல்லப்பொங்கல், அரிசி, கிழங்கு வகைகள்
### 4. **பூஜை முறை**
1. **தியானம் & சங்கல்பம்** – இறைவனை நினைத்து பூதகணங்களின் அருளைப் பெறும் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
2. **ஆவாஹனம்** – மந்திரங்களின் மூலம் பூதகணங்களை அழைக்கிறார்கள்.
* “ஓம் பூதகணாதிபதயே நம:”
* “ஓம் கணநாயகாய நம:” போன்ற மந்திரங்கள் உச்சரிக்கப்படும்.
3. **அர்ச்சனை** – வில்வம், பூக்கள், தூர்வை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
4. **நெய்வேதியம்** – சுண்டல், கிழங்கு வகைகள், வெல்லப்பொங்கல் சமர்ப்பிக்கப்படும்.
5. **தீபாராதனை** – கற்பூரம் காட்டி, பூஜை நிறைவு செய்யப்படுகிறது.
### 5. **நம்பிக்கை**
* பூதகணங்களை வணங்கினால்:
* சில **உடல் மற்றும் மன நோய்களிலிருந்து** நிவாரணம் கிடைக்கும்.
* தீய சக்திகள் நீங்கி **வாழ்க்கையில் முன்னேற்றம்** பெறுவதாக நம்பிக்கை.
* யாகங்கள், பெருவிழாக்கள் தடையின்றி நிறைவடையும்.
---
பூதகணங்களுக்கு சிறப்பான தனி **ஆகம முறைபடி செய்யப்படும் மந்திரங்கள்** உள்ளன. பொதுவாக சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் செயற்படுவதாகக் கருதப்படுவதால், அவற்றின் வழிபாட்டிலும் **சிவமந்திரங்கள்** அல்லது **கணபதி/பூதநாதர் தொடர்பான மந்திரங்கள்** பயன்படுத்தப்படுகின்றன.
### பொதுவாக உச்சரிக்கப்படும் மந்திரங்கள் :
🔸 **பூதகணங்களை வணங்கும் மந்திரம்**
```
ॐ நமோ பூதகணாதிபதயே
சிவசேவகாய நம: ||
```
**(ஓம் நமோ பூதகணாதிபதயே, சிவசேவகாய நம:)**
🔸 **சிவபெருமானின் மந்திரம்** (பூதகணங்களுக்கு அதிபதி என்பதால்)
```
ॐ நம: சிவாய ||
```
🔸 **விநாயகர் மந்திரம்** (பூதகணங்களுக்கு தலைவராக கருதப்படுவதால்)
```
ॐ கணாதிபதயே நம: ||
ॐ விநாயகாய நம: ||
```
🔸 **பூஜையில் சொல்லப்படும் சுருக்க மந்திரம்**
```
பூதகணபூஜாம் கிருஹாண
சிவபக்தாநாம் ஹிதகரா: ||
```
👉 பொதுவாக, பூதகணங்களின் அருளைப் பெற **“ஓம் நம: சிவாய”** என்ற பஞ்சாட்சர மந்திரம் அல்லது **கணபதி மந்திரம்** போதுமானதாகக் கருதப்படுகிறது.
👉 குறிப்பிட்ட கோவில் மரபுகளில் (சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற சிவாலயங்களில்) பூதகணங்களுக்கு தனிப்பட்ட ஸ்தோத்திரங்கள்/அர்ச்சனை மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
**பூதகண காயத்ரி மந்திரம்**
பொதுவாக சிவபெருமானின் பின்வந்த சக்திகளான பூதகணங்களைத் துதிப்பதற்காக ஜபிக்கப்படுகிறது. இதற்கான காயத்ரி மந்திரம் இவ்வாறு உள்ளது:
**மந்திரம் (வடமொழி)*
```
ஓம் பூதகணாய வித்மஹே
வீரபக்ஷாய தீமஹி
தன்னோ கணபதி: ப்ரசோதயாத் ॥
```
**தமிழாக்கம்:**
ஓம்! பூதகணங்களை அறிந்துகொள்வோமாக.
வீரமான இறைவனின் பக்கம் உள்ளவரை தியானிப்போமாக.
அந்த கணபதி எங்களைத் தூண்டி வழிநடத்தட்டும்.
இந்த மந்திரத்தை **108 முறை ஜபிக்கலாம்**. குறிப்பாக *புரட்டாசி மாதம், சதுர்த்தி, பிரதோஷம்* போன்ற சிவபெருமானுக்கான நாள்களில் ஜபித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
## 🌸 **பூதகண திருப்புகழ்** 🌸
*(தலப்பெயர்: திருப்பூதவனம்)
வருணமகா சித்தலிங்கம்
**1**
பூதகணமொடு வந்தினம்,
பொற்கொடிமேல் பறந்தினம்,
ஆதிபெருமான் அருளினால்,
ஆடிப் பாடி மகிழ்ந்தினம்.
**2**
கொண்டினம் கணமெல்லாம்,
கோடி ரூபம் வெளிப்பட,
அண்டமெலாம் காப்பவர்,
அரனைத் துதி செய்யினம்.
**3**
வண்டினம் மலர்மிசைத்,
தண்புகழ் சடைமிசை,
தொண்டினம் நிறைந்தநாம்,
சோதி சிவனை வணங்கினம்.
**4**
ஆடினம் அமரர்சுற்று,
அங்கணமொடு விளங்கினம்,
சூடினம் சடைமுடியில்,
சோதி நிலவு தழுவினம்.
**5**
மண்டினம் உலகினிலே,
மக்கள்துயரைக் களைந்தினம்,
கண்டினம் கருணைவேள்வி,
காப்பதரனைக் கொண்டினம்.
**6**
தீயினம் காற்றினமாய்,
தேவரோடு கலந்து நம்,
பாயினம் உலகமெல்லாம்,
பாலினமென இனிமினம்.
**7**
ஓடினம் உறவினனாய்,
ஓங்கி நிறைந்த பெருமானை,
நாடினம் நவமலர்கள்,
நான்முகனும் புகழ்ந்தினம்.
**8**
வேடினம் பலதரித்த,
விரித்த முகங்கள் பலரென,
கூடினம் அடி பணிந்தே,
கோடியினும் புகழ்ந்தினம்.
**9**
தூடினம் பவமகிழ,
சோதி பரமனைச் சூழ்ந்தினம்,
ஏடினம் உபசரிப்போய்,
எம்மை நலமாக்கினம்.
**10**
பாடினம் அரனைப் போற்றி,
பண்புடை பூதகணங்களாம்,
நாடினம் உயிர்க் கருணை,
நலமுடன் வாழ்கின்றோம்.
---
வாலை தாய் திருவடிகளே போற்றி
அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்
சனி, 1 ஏப்ரல், 2023
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்! ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது. 2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்! மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம் புண்ட்ரேஷசாபகுஸுமேஷ§ஸ்ருணீர்ததாநாம்!! காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன. 3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம் பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்! பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன். 4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம் த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்! விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன் 5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன. 6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா: ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங் கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள். ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.
அடியேனின் ஆறுமுக அந்தாதி ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் வித்தின் ஐக்கியமாம் நாதவிந்து கலாதீதமாய் தாயும் மகனும் உயிரும் உடலுமுமாய் தற்பர விளக்கமதில் எண்ணமும் செயலாக செயலாற்றும் வாலைபுத்திரா சங்கரன் சேயே சரவணபவா ஆறெழுத்து அறுமுகவா ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் அணுவணுவாய் தேர்ந்த குரு ஒளியே குரு ஒளியே குணக்குன்றே கூர்வேலிறைவா குஞ்சரி மணாளா கந்தா கடம்பா சிவ நெருப்பில் உதித்து மால் நீரில் குளிர்ந்த நிர்மல பரப்பிரம்ம மூவித்துரு கரு ஆனவனே மூவித்தால் விளைந்தாறு இதழே முகமாகி முத்தேவர் குணமாக முளைத்தெழுந்த மூர்த்தியே தேவிசக்திவேலை தானேந்தி வல்லவனாய் தேவேந்திர மயிலேறும் தேவசேனா பதியே வருக வருக ஆறுமுகவா குமரா ஆணவமலமறுக்கும் அருளாளா வாலறிவா வாலய்யா செறுக்கருக்கும் செந்தில் ஆண்டவனே முருகா சேனை நாலாயிரம் பூதபடைசூழ வருக வருகவே வடிவேலும் மயிலுடனே வானம் கிடுகிடுக்க வஞ்சகர் நடுநடுங்க இருள் என்னும் மாயைகள் எதிர் நில்லாதோடிடவே ஏறுமயிலேறி ஆறுமுகவா தேவேந்திர படைசூழ வருகவே வருகவே உலகில் வளர்ந்திட்ட தீமையெல்லாம் அழிய வண்ணமயில் தோகைவிரித்து ஆடிவர சித்தர் குருவே வாலை குமரனே கந்தா கடம்பனே கதிர்வேல் முருகனே வருக [17/02, 10:43 pm] Vaalai thaai veedu: வருகவே வேலய்யா வல்அசுரரோடு போரிட்டு வெற்றி கொடி நாட்டி ஒருவனாய் சத்துருவை சம்ஹரித்த வேலா ஓங்காரத்தின் மூலக்கருவறிந்த சத்திவேலே வருக ரரவருகவே விண்ணும் மண்ணும் நலமுறவே வையமதில் தருமமெலாம் தழைத்தோங்க முருகா குருவென குகனென கூறறிவாளாலனாக குணகுன்றே அருளாட்சி செய்ய ஆறுமுகா வருகவே வருகவே வாலை மனோன்மணிக்கு சேயே வரமருளும் வடிவேலா வேத செந்தமிழின் குருவாயும் திருவாய் மலர்ந்தருளிய சுவாமிநாதா கூர்வடிவேலா குருமுனியின் தவகுருவே வருக வருகவே எனைகாக்க எதிரிகளின் வஞ்சகமும் சூழ்ச்சியும் சஞ்சலமாய் எமையணுகா பெருகும் நல்லருள் சூழும் ஒளியாளா சண்முகனே பேரானந்த பெருக்கே வாலறிவா வருக வருவாய் வாதபித்த கபபிணிக்கு வைத்திய நாதனுமாய் வழலை முப்பது வாய் குருமருந்தாய் பாஷாண செந்தூரம் சுண்ணமதாய் கற்பதாய் ஔஷத அம்ருதமுமாய் வருவாய் [17/02, 11:03 pm] Vaalai thaai veedu: வருவாய் பிறவி பெரும்பிணிக்கு அருமருந்தாய் வாக்கும் மனமும் கடந்த மன உன்மணி தத்துவமாய் கருஉருவான கன்னிவாலை திருக்குமரா காக்குகா என வேண்ட சேவல்கொடியேந்தி வருவாய் [ அருளாலா அற்புதம் செய்யும் ஆறுமுகவா வந்து ஆணையிடு அண்டசராசர பூதகணங்களுக்கு பெருகும் நலம் வாய்க்க பேதமையை தான்மாய்க்க பரமனின் மகனே பார்வதி சுதனே வருவாய் அய்யா [ சுதனே சுந்தரவதனே கோடிசூர்ய பிரகாச சூழ்ஒளியே சுகபர ஞானச்சுடரே வதனம் ஆறும் வாலறிவாய் வேல்துணையாய் வந்தெமை காப்பாய் வாலை திருக்குமரா [17: ஓம் சரவணபவனே சண்முகத்தரசே சாம்பவி புத்திரா சக்திவேலாயுதா பரவெளி தத்துவா சேய் கடவுள் பேரொளி கமலபாதச் சரணே : சரணென்று வந்து உமை சார்ந்த அடியவர்க்கு சத்ரு சம்ஹாரியாய் சதாகாலமும் காக்கும் பூரணபூத வேதாள இடும்பகண சேனையானே பொன்னடி சரணே பாதச்சரணே
நட்சத்திர காயத்திரி மந்திரங்கள்அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிஷம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத் அஸ்தம் ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத் சித்திரை ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத் சுவாதி ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத் விசாகம் ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத் அனுஷம் ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத் கேட்டை ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் மூலம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் பூராடம் ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் உத்திராடம் ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் திருவோணம் ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத் அவிட்டம் ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத் சதயம் ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத் பூரட்டாதி ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத் உத்திரட்டாதி ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத் ரேவதி ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
சனி, 5 நவம்பர், 2022
ஜீவ சமாதிகள் #சென்னையில்_இருக்கும் #ஜீவசமாதிகள் பற்றிய அபூர்வ குறிப்புகளை விரிவாக பார்போம்.... சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் இருப்பிடமும், திருவொற்றியூர்: ******************** (1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை. (2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம். (3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது. (4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர். (5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில். (6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை. (7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில். (8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை. (9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!! ராயபுரம்: *********** (1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது. (2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி . வியாசர்பாடி: *************** (1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில். (2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!! பெரம்பூர்: ************ (1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது. (2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில். (3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில். (4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர். (5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில். (6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம். ஓட்டேரி: ********** ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை. புரசைவாக்கம்: ****************** (1)வீரசுப்பையா சுவாமி புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில். (2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில். எழும்பூர்: *********** (1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா. (2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை. நுங்கம்பாக்கம்: ******************* (1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி. (2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில். (3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி. (4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி. (5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில். கோடம்பாக்கம்: ******************* ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம். வடபழனி: ************ அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில். மைலாப்பூர்: *************** (1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில். (2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது. (3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது. (4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில். ஆலந்தூர்: ************* (1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை. (2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில். கிண்டி: ********* (1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை. (2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில். திருவான்மியூர்: ******************* (1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை. (2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில். (3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு, வேளச்சேரி: *************** சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை. ராஜகீழ்ப்பாக்கம்: ********************* சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி. பெருங்குடி: ************** நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள். நங்கநல்லூர்: ***************** மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி. சிட்லப்பாக்கம்: ****************** சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில். ஊரப்பாகம்: *************** எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது. படப்பை: *********** துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில். பெருங்களத்தூர்: ********************* ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில். புழல்: ******** (1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி. (2)காரனோடை மல்லையா சாமிகள்: காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. (3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது. (4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது. (5)பூதூர் ஷா இன்ஷா பாபா- செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது. பஞ்சேஷ்டி ************* புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)- ரெட் ஹில்ஸ் டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர்: ************** ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது. வடதிருமுல்லைவாயில்: ***************************** (1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. (2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. பூந்தமல்லி: ************** (1)கர்லாக்கட்டை சித்தர்- வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார். (2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது. (3)கருடகோடி சித்தர்- பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர்: ******************** (1)அருள்வெளி சித்தர் பூதேரிபண்டை கிராமம்- வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. (2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது. மாங்காடு : ************* சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது. புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்): ***************************** மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்- ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது. கோவளம் : ************* ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன. திருக்கழுகுன்றம் : ********************** (1)குழந்தை வேலாயுத சித்தர் செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது. (2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. திருப்போரூர் : ***************** சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்று வருகிறது. செம்பாக்கம் : **************** இரட்டை சித்தர்கள் செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன. கூடுவாஞ்சேரி : ******************* மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது. அச்சரப்பாக்கம் : ******************** முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோவில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி
சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன் ஆசி மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் ...



