அறம் ஹைக்கூ
அறம் செய்த கை
அதை மறந்த பின்னே
அறம் மலரும்
பசியின் முன்
பகிர்ந்த ஒரு கவளம்
பெரும் யாகம்
அன்பின் மொழி
அறம் பேசும் போது
இறை கேட்கும்
உண்மை சொல்
காயம் தந்தாலும்
அறம் அதுவே
வீழ்ந்தவரை
தூக்கி நிறுத்துதல்
அறம் நடப்பு
ஈதல் என்பது
மீதியைத் தருதல் அல்ல
மனதைத் தருதல்
மரம் போலே
கல்லடி பெற்றும்
நிழல் தரும்
அறம் வாழும்
இதயம் இருந்திடில்
அருள் வாழும்
கோபம் வரும்
கருணை வென்றிடுமே
அறம் பிறக்கும்
பிறர் துன்பம்
தன் துன்பம் எனுதல்
அறத்தின் கண்
செல்வம் இல்லை
இன்சொல் இருந்தாலே
அறம் உண்டு
வாய்மை ஒன்று
வாழ்நாள் முழுவதும்
காக்கும் காவல்
அறம் விதைத்தால்
காலம் கடந்தாலும்
பயன் விளையும்
நல்ல எண்ணம்
பிறக்கும் அந்தக் கணம்
அறம் பிறக்கும்
தன் உயர்வை
விட பிறர் உயர்வில்
மகிழ்ச்சி அறம்
அகத்தியர் தாசனின் அறம் ஹைக்கூ
அறம் செய்வோர்
ஆலமரம் போல
ஆயுள் வாழ்வார்
அகத்தியர் சொல்
அன்பே அறமாகும்
அறமே சிவம்
பிறர் நலனில்
பெருமை காண்பதே
அறஞானம்
அறம் காத்தால்
அறமே காத்திடும்
காலம் முழுதும்
உயிர் அனைத்தும்
ஒன்றென உணர்வதே
உயர்ந்த அறம்.
Haiku on Virtue (Aram)
The hand that gives,
forgetting its own kindness—
virtue blossoms.
Before hunger,
a shared handful of food
becomes a sacrifice.
When love speaks,
and virtue finds its voice,
the Divine listens.
A truthful word,
though it may cause a wound,
is still virtue.
Lifting up one
who has fallen to the ground—
virtue in action.
Giving is not
offering what remains,
but offering the heart.
Like a tree,
struck by stones yet still giving
its cooling shade.
Where virtue lives
within the human heart,
grace also dwells.
Anger arises;
compassion overcomes it—
virtue is born.
To see another's pain
as if it were your own—
the eye of virtue.
Though wealth is absent,
gentle and kind words alone
are virtue enough.
Truthfulness stands
as a lifelong guardian
protecting one's path.
Sow the seeds of virtue;
though time may pass away,
the harvest will come.
The very moment
a noble thought arises,
virtue is born.
Finding joy not
in one's own rise, but in
another's success.
Agathiyar Dāsan's Haiku on Virtue
Those who live by virtue
stand like the banyan tree,
enduring through time.
Agathiyar teaches:
Love itself is virtue;
virtue itself is Śiva.
Rejoicing in
the welfare of others—
that is virtuous wisdom.
Protect virtue,
and virtue in return
will protect you.
To realize that
all living beings are one—
the highest virtue.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக