புதன், 19 பிப்ரவரி, 2025

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

  

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு.

நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.

ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும்.

 

ஆடிப்பட்டம் பயிர் செய்.

ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர்.

 

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது.

 

மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை.

மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

 தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும்.

 

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்.

விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும்.  அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும்.

 உழவுக்குப் பகை எருவில் தீருமோ?

உழவின் பகை எருவிலும் தீராது.

உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.

உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்.4280

(ஏற விளையும்.)

உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.

உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.

உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.

(விளைவு அற விளையும்.)

உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.

உழவுக்கு ஏற்ற கொழு.4285

உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.

(ஊணுக்கு முன்னே வரும். )

உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.

(சரி.)

உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.

உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.

உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.4290

உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?

உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.

உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.

உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?

(என்றால், ஊரிலே.)

உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.4295

உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.

உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.

உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?

(குண்டை-எருது.)

உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.


விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.

உழவு தொழில் பழமொழிகள்

 உழவுக்குப் பகை எருவில் தீருமோ?

உழவின் பகை எருவிலும் தீராது.

உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.

உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்.4280

(ஏற விளையும்.)

உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.

உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.

உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.

(விளைவு அற விளையும்.)

உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.

உழவுக்கு ஏற்ற கொழு.4285

உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.

(ஊணுக்கு முன்னே வரும். )

உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.

(சரி.)

உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.

உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.

உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.4290

உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?

உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.

உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.

உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?

(என்றால், ஊரிலே.)

உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.4295

உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.

உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.

உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?

(குண்டை-எருது.)

உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.


வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருக்குறள்



சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 


விளக்கம்:- இந்த ஐந்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. பஞ்சபூதங்கள் ஆகிய ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு உலகத்தில் இருப்பதால் இவற்றை எல்லாம் உணரமுடியும்.

 இப்பிரபஞ்சத்தில் பிறந்த போது இருந்த கோள்களின் நிலையை வைத்து செய்யும் செயல்கள் மாறுபடும். இவற்றை எல்லாம் கையாளப்படும் முறை தெரிந்து குறள் அற நெறிகளை கடைபிடிப்பவன் 

உலகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.

இப்பூவுலகில் பிறந்த மனிதன் வாழ்க்கையில் ஐந்து உறுப்புகள் (மெய் வாய் கண் காது மூக்கு) மூலம்தான் ஐந்து உணர்வை பெறுகிறோம்.

அதுமட்டுமில்லாமல் ஞானக்கண் என்று சொல்லப்படும் உணர்வுகள் மூலம் அவனது தொலை நோக்குப் பார்வை செயல்படும்.


1.சுவைஒளி :- சுவைத்தல் + பார்த்தல். முதலில் சுவைத்தல் என்றால் எந்தவொரு செயலையும் விருப்பத்தோடு, ஆவலோடு, புரிதலோடு, ஊக்கத்தோடு, செய்தால் அது ஒருவனது மனதிற்கு மனநிறைவு ஏற்படுவதால் சுவைப்பதுக்கு சமமாகும்.

பின்னர்தான் நாவின் சுவை அறுசுவை உணவு பதார்த்தங்கள் என்பது போன்றவையாகும்.

இரண்டாவதாக பார்த்தல்

எந்த வயதில் எதை பார்க்க வேண்டுமோ அதைப் பார்த்துதான் எதையும் தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் செய்யக்கூடிய செயலின் தன்மை எத்தகையது அதனால் அவனது மனதிற்கு கிடைக்கும் நிறைவு போல அவன் அந்த சுவையானவற்றை உணர முடியும்.  


2.ஊறுஓசை :- .தொடு உணர்வு-அன்பாக பாசமாக என தொடுதல் என்ற உணர்வு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது எனவே வெறுப்போடு தொடாதீர்கள். அடுத்து

ஓசை, சத்தம், இனிமையான இசை கேட்பதுபோல அடுத்தவர்களுக்கு நமது வாய்மொழியும் சொல்லும் இனிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழி நடத்தவும், விழிப்புணர்வு கொடுப்பதற்கும் தேவையான குரலோசை பெற்றிருக்க வேண்டும். எதை கேட்க வேண்டுமோ உன் அறிவிற்கு தேவையானதை மட்டுமே கேள்.


3.நாற்றமென ;- என்றால் மணம், நறுமணம், கெட்ட வாசனை எது என்பதை உணர்ந்து கொள்ள மூக்கின் மூலம் முடிகிறது. நல்ல செயல்களை செய்தால் அவனது வாழ்க்கை வளமாகி உயர்ந்த நிலையை அடைகிறான். அதனால் நறுமணத்தை போல என்று ஒப்பிடலாம்.

முகர்தல்- நல்ல நறுமணங்களை விட்டு விஷவாயு போன்ற கொடியவற்றை முகர்தல் வேண்டாம். 


4.ஐந்தின் வகை தெரிவான்:- மேற்கூறிய ஐந்து வகையான செயல்களை தெரிந்தவன், புரிந்தவன், அறிந்தவன் ஞானி ஆவான். அவர்களே பல சித்தர்களும் ஆன்மிக வாதிகளும் ஆவார்.


5.கட்டே உலகு: கட்டே என்றால் களைந்து எறிதல். அதாவது தேவையற்றதை விட்டு விடுதல் எனப் பொருள்படும். பகுத்தறிவு உடைய மனிதர்கள் 

மனிதற்களுக்கே (கட்டே) உலகு. அவர்கள்

உலக மக்களால் போற்றப்படுவார்கள் அவர்களே சிறந்த ஞானிகள்.


உட்கருத்து:- உட்கருத்து. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். எல்லாவற்றிலும் உயர்வானதையே செய்க

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருக்குறள் தெளிவு

 குறள் 24: 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

விளக்கம்:- இவ்வுலகில் மனிதனாக பிறந்தவன் வாழ்க்கையின் தத்துவம் பற்றிய கருத்தை அறிந்து தெளிந்து அதை கடைபிடிக்க வேண்டும். இந்த அழியக்கூடிய உடலை நல்வழியில் தனது உள்ளத்தைப் பயன்படுத்தி சீர்படுத்தி செழுமைப்படுத்தி வாழும் வகையை கண்டுபிடித்து அதை பின்பற்ற வேண்டும். மனிதனாக பிறந்து ஞானியாக வாழ்ந்து சென்ற சான்றோர்களை உலகம் என்றும் மறக்காமல் அவர்களது வழியை பின்பற்றும்.


1.உரனென்னும்:- உரனென்னும்= திண்மை, திடமான- மனிதனுடைய உள்ளம் அவன் செய்யும் நல்வழி செய்கைகளில் திடமான உறுதியான தன்னம்பிக்கை தன் மீது வைக்க வேண்டும். அது அவனது ஆழ்மனதிலும் ஆழமாகப் பதிந்து நல்ல செயல்களை செய்ய வேண்டும்.


2.தோட்டியான்:- 

தோட்டியான்‌ என்றால் பாதுகாவலன் எனப் பொருள்படும். இந்த வார்த்தையை தற்போதும் நமது வழக்குச் சொல்லில் உள்ளது ஆனால் இந்த உலகை பாதுகாப்பவன் இயற்கையாக உள்ள இறை சக்தி வாய்ந்த பொதுவான அர்த்தமாகும். மனிதன் எதை எதை பார்க்க பாதுகாக்க வேண்டும் முதலில் தனது அறிவு மூலம் சான்றோர்களின் நூல்களைக் கற்று அறிந்து தெளிந்து தனக்கென்று இல்லாமல் பொதுமக்களுக்காக அவனது அறிவையும் ஆற்றலையும் உபயோகப்படுத்த வேண்டும். அதற்காக அவன் இந்த உலக மக்களுக்கு பாதுகாவலனாக விளங்கும் இறை சக்தியை பெறக்கூடிய வழிமுறையை தெரிந்து ஞானத்தைப் பெற்று இந்த உலக மக்களை நல்வழிப்படுத்த கூடிய இறைவனின் தூதனாக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.


3.ஓரைந்தும் காப்பான்:- 

ஓரைந்தும்= உடலில் உள்ள ஐந்து உணர்வுகளை அறிந்து

(தொடுவுணர்வு முகர்தல் சுவைத்தல் பார்த்தல். கேட்பது) அதை அனுபவித்து பின்னர் கட்டுப்படுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் தனது ஆசை பந்தபாசங்களை விட்டு நீத்து/ துறந்துவிட 

வேண்டும்.


4.வரனென்னும்:- என்றால் சிறந்தவனாக எனப் பொருள்படும். மேற்கண்டவாறு ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தலைசிறந்தவராக உலகிற்கு புத்திபுகட்டும் ஞானியாக மாறமுடியும்.


5.வைப்பிற்கோர் வித்து;-

வைப்போர்- வை என்றால் வையகம் உலகம், மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்போர் எனப் பொருள்படும் சாதாரண மனிதர்களாகப் பிறந்து இவ்வுலகில் அவர்கள் விட்டுச்சென்ற அல்லது விதைத்துச் சென்ற

வித்து எனும் விதை ஆகும். அத்தகைய மனித பிறவிகள் இந்த உலகிற்கு அறிவு ஜீவியாக விளங்கும் வகையில் ஒரு வித்தாக இருப்பார்கள்.

 உதாரணமாக வள்ளலார் போன்ற சாதாரண மனிதனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிறந்த ஞானியாக ஞானம் பெற்று உலக மக்களின் நல் வாழ்க்கைக்காக அவர் விட்டுச்சென்ற கருணை என்னும் பாதை ஆகும். இதே போல உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ஆவார்.


உட்கருத்து:- மனிதனும் தெய்வமாகலாம்.


நன்றி.. திருவள்ளுவர் பெருமானுக்கு

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி பாடல்

கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி

காப்பு பாடல் 

 ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே ...... இருப்பளிங்கு வாரா(து) இடர். படிகநிறமும் பவளச் செவ் வாயும் கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும்சொல் லாதோ கவி

பாடல்


 1.நூல் சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல் தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியும் போருகத் தாளை வணங்குதுமே 

 2..வணங்கும் சிலைநுத லும்கழைத் தோளும் வனமுலைமேல் சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமனன்பால் உணங்கும் திருமுன்றி லாய்மறை நான்கும் உரைப்பவளே 

 3.உரைப்பார் உரைக்கும் கலைகளெல் லாமெண்ணில் உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவல் லரோதண் தரளமுலை வரைப்பால் அமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே 

 4..இயலா னதுகொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு முயலாமை யால்தடு மாறுகின் றேனிந்த மூவுலகும் செயலால் அமைத்த கலைமக ளேநின் திருவருளுக்(கு) அயலா விடாமல் அடியேனை யும்உவந்(து) ஆண்டருளே 

 5...அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத்(து) அழகெறிக்கும் திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் இருக்கோது நாதனும் தானுமெப் போதும் இனிதிருக்கும் மருக்கோல நாண்மல ராள்என்னை யாளும் மடமயிலே 

 6..மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையே குயிலே பசுங்கிளி யேஅன் னமேமனக் கூரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே 

 7.பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளே ஏதாம் புவியில் பெறலரி தாவ(து) எனக்கினியே

 8..இனிநான் உணர்வதெண் ணெண்கலையாளை இலகுதொண்டைக் கனிநாணும் செவ்விதழ் வெண்ணிறத்தாளை கமலஅயன் தனிநா யகியை அகிலாண் டமும்பெற்ற தாயைமணப் பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே

 9.. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா மேவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதிய நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கும் நறுங்கமலப் பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே 

 10..புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ அந்தியில் தோன்றிய தீபமென் கோநல் அருமறையோர் சந்தியில் தோன்றும் தபனனென் கோமணித் தாமமென்கோ உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே 

11.ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்துதன்னை இருத்தியை வெண்கம லத்திருப் பாளையெண் ணெண்கலைதோய் கருத்தியை ஐம்புல னுங்கலங் காமல் கருத்தை யெல்லாம் திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே 

12.. தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற மூவரும் தானவர் ஆகியுள் ளோரும் முனிவரரும் யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ்வெளுத்த பூவரும் மாதின் அருள்கொண்டு ஞானம் புரிகின்றதே 

13.. புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை அரிகின்ற(து) ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத் தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்துமுற்ற விரிகின்ற(து) எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே 

 14..வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்தவிந்து நாதமும் நாதவண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே

 15... நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞானஇன்பச் சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையா லேஅகம் மாறி விடும்அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும் தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே 

 16..சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும் உரோருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல் சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும் ஒரோருகம் ஈரரை மாத்திரை யான உரைமகட்கே

 17... கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள் அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத் தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில் பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே 

 18.. தனக்கே துணிபொருள் எண்ணும்தொல் வேதம் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர்தாம் மனகேதம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான் கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே 

19....கமலந் தனிலிருப் பாள்விருப் போடங் கரங்குவித்துக் கமலங் கடவுளர் போற்றுமென் பூவைகண் ணிற்கருணைக் கமலந் தனைக்கொண்டு கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார் கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே 

 20... காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் நாரணன் ஆகம் அகலாத் திருவும்ஓர் நான்மருப்பு வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே 

 21... அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் முடிவே தவள முளரிமின்னே முடியா இரத்தின வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே

 22... வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பேர் கூறிலை யானும் குறித்துநின் றேன்ஐம் புலக்குறும்பர் மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில் சேறிலை ஈந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே 


 23...சேதிக்க லாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாம்முத்தி தானெய்தலாம் ஆதிக் கலாமயில் வல்லிபொற் றாளை அடைந்தவரே

 24... அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப் படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும் தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே 

 25...தொழுவார் வலம்வரு வார்துதிப் பார்தம் தொழில்மறந்து விழுவார் அருமறை மெய்தெரி வார்இன்ப மெய்புளகித்(து) அழுவார் இனுங்கண்ணீர் மல்குவார் என்கண்ணின் ஆவதென்னை வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே

 26...வைக்கும் பொருளும்இல் வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே

 27... பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோ மருளாத சொற்கலை வான்பொரு ளோபொருள் வந்துவந்தித்(து) அருளாய் விளங்கு மவர்க்கொளி யாய்அறி யாதவருக்(கு) இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே  

 28...இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே துலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல் கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே 

 29....கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும் புரியார்ந்த தாமரை யும்திரு மேனியும் பூண்பனவும் பிரியாவெந் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே 

 30...பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும் திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே 

நன்றி...... கம்பருக்கும் திரட்டி தந்தவர்க்கும்

அடியேன் இராமய்யா.. தாமரைச்செல்வன்

திருகுறள். துறவு பெருமை

குறள் 22 


 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 


 விளக்கம்:-

 இவ்வுலகில் பிறந்த மனிதன் தன்னை முற்றிலும் துறந்துவிட்டு இறைவனுக்கு தொண்டு செய்து தன்னையே அர்ப்பணித்த அகத்தியர் திருமூலர் நந்தீஸ்வரர் முற்றும் 63 நாயன்மார்கள் பதினெண் சித்தர்கள், ரமணர்.‌வள்ளலார்.அருணகிரி நாதர். பட்டினத்தார். அவ்வையார். மற்றும் சங்க இலக்கியத்தில் உள்ள தமிழ் புலவவர்கள் தொல்காப்பியர் திருவள்ளுவர். பதினெண்கீழ்க்கணக்கு புறநானூறு அகநானூறு நற்றிணை நான்குமறை ராமாயணம் மகாபாரதம் கம்பராமாயணம் மருத்துவ நூல்கள் படைத்த சித்தர்கள் என அவர்களின் அருமை பெருமைகளை நம்மால் கணக்கிட முடியும். அவர்கள் இயற்றிய நூல்களைப் படித்து தெளிந்து பிறருக்கும் போதனை செய்து கூறமுடியும். ஆனால் இவ்வுலகத்தில் சாதாரண மனிதர்கள் (வரலாற்றில் அரசர்கள் பேரரசர்கள் விதிவிலக்கு) எத்தனைபேர் பிறந்தார்கள் பின்னர் இறந்தார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது கணக்கிடவும் முடியாது. 1.துறந்தார் பெருமை:- இவ்வுலகில் தோன்றிய அரும்பெரும் ஞானிகள் சான்றோர்கள் சித்தர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து தனது சுகம் துக்கங்களை துறந்து வாழ்ந்து, உலக மக்களுக்காக பல ஆண்டுகள் தவமிருந்து கற்றுத் தெளிந்து விட்டுச்சென்ற போதனைகள் நூல்கள் என்றும் இன்றும் சரி அதைத்தான் நாம் படித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கிறோம் என்றால் மிகையாகாது. இதுதான் பிறந்தவர்களின் பெருமையாகும். 

 2.துணைக்கூறின்:- ஆதிகாலத்தில் இயற்றிய அனைத்து நூல்களும் முக்கியமாக வானியல் சாஸ்திரம் வைத்தியம் சோதிடம் இலக்கியம் கலைகள் அனைத்தும் இவ்வுலக மக்களுக்கு துணையாக இருந்து அதை படித்து தெளிந்து நாமும் சிறந்த ஞானியாகவும் சான்றோனாகவும் மாறுவதற்கு காரணமாக இருப்பது இவர்களின் துணை மூலம் தியானம் செய்து சிந்தித்து அவர்கள் நூல்கள் மூலம் கிடைக்கும் ஞானமே ஆகும். 

 3. வையத்து இறந்தாரை:- இவ் உலகம் தோன்றியது முதல் கோடான கோடி உயிர்கள் மனிதர்கள் பிறந்தார்கள் வளர்ந்தார்கள், பின்னர் இவ்வுலகை விட்டு இறந்து மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் இன்றளவும் உலகம் எப்படி தோன்றியது என ஆராய்ந்து பல ஆயிரக்கணக்கான நூல்களையும் தத்துவங்களையும் பொது மறைகளையும் நூல்களாக எழுதி விட்டுச் சென்ற ஞானிகளின் பெயர் இன்றளவும் உலக மக்களால் நினைத்து உச்சரிக்கப்பட்டு அவர்களது போதனைகளை அறிந்து படித்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வுலக மக்களுக்கும் பயனுள்ளதாக யார் அதையே அனைவருக்கும் போதித்துக் வந்தால் அதுவே மனிதனாக பிறந்ததற்கு ஒரு நல்ல உபயோகமாக இருக்கும் என்றால் மிகையாகாது. 

 4.எண்ணிக்கொண் டற்று:- இவ்வுலகம் தோன்றியது முதல் கணக்கிலடங்காத கோடான கோடி பேர் எத்தனை பேர் பிறந்து இறந்தார்கள் என்று யாராலும் எண்ணி கணக்கு சொல்லிவிட முடியாது. ஆனால் ஞானிகளை எண்ணி கணக்கிட்டு அவர்கள் விட்டுச் சென்ற நூல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. உட்கருத்து....தோன்றிர் புகழோடு தோன்றுக

சனி, 1 பிப்ரவரி, 2025

திருமூலர் சூனிய சம்பாஷணை




திருமந்திரம்.2868 திருமூலரின் சூனிய சம்பாஷணை


. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.



” இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது” இதன் பொருள் ஓரளவுக்கு சொல்ல முடிந்தால் இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு விவசாய நிகழ்வுகளை குறித்து ஒப்பீடு செய்து திருகுறள் திருமந்திரம் போன்ற உயர் அறம் மறைநூல்களும் உபதேசம் செய்வதை கொண்டு விவசாயம் ஞானம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதை அறிந்து கொள்ளலாம் 


 குரு அருளால் தெறிந்ததை பகிர்ந்து கொள்கிறோம் இதில் ஆயாசம் இருப்பினும் தெறிவிக்காலாம் பதிவு எல்லாம் குரு பரம்பரையின் அடிநாதம் இதற்கு சகல உரிமைகளும் குருபாதங்களுக்கே சமர்ப்பணம்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

வசந்த பஞ்சமி

வணக்கம் 02.02.2025 வசந்த பஞ்சமி இது மங்களம் தருகின்ற வசந்த காலத்தை வரவேற்பு செய்யும் நன்னாள் தைதிங்களில் பூசணி பரங்கி செடிகள் காலையில் மஞ்சள் நிற பூ பூத்து காய்க்கும் பீர்க்கங் செடிகள் மாலையில் பூத்து பனிகாலத்தில் இவைகள் காய்க்க தொடங்கும் மஞ்சள் கிழங்ககள் அறுவடை முடியும் பாடுபட்ட வெள்ளாமை நெல்மணி குவியலாக கிடக்கும் நன்கு விளைந்த நெல்மணி கதிர்கள் தலை சாய்ந்து தங்கம் நிறம் கொண்டு எங்கும் மஞ்சளாக தங்க நிறமாக காட்சி தருவதை தொல்குடிகள் தங்கள் மகிழ்ச்சி கொண்டாட்டமாய் பூமா தேவி சரஸ்வதி புவனேஸ்வரி க்கு பொங்கலிட்டு மகிழ்வர் சிறு குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஈரம் தரும் வாலை சரஸ்வதியை போற்றுவதும் வீதிகளில் மஞ்சள் நீரை ஊற்றி களித்து மகிழ்வர் இது காணும் பொங்கல் முதலே தொடங்கும் கன்னி பொங்கல் என்பதே தொல்குடி வழக்காடல் லசந்த பஞ்சமி வராகி தேவியின் சூழ்ச்சம வழிபாடு இந்த பூமியை தாங்கும் வராக துணை ஆனதனால் நமது முன்னோர்கள் மஞ்சள் நீராட்டலை கடவுளுக்கும் கன்னியர் சடங்கிலும் செய்தார்கள் வராகி வழிபாடு தொல்குடி மக்கள் மிகவும் நுணுக்கமாக கையாண்டு உள்ளனர். முக்கியமாக விவசாய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பூசைகாலத்திலும் மஞ்சளை தொட்டு பூசைகளை தொடங்கி உள்ளனர் வீட்டில் உள்ள நிலைகதவுகளில் மஞ்சள் தடவுவது கன்னியர் பூப்புகாலம் கற்ப காலத்தில் வளையல் காப்பு காலம் குழந்தை பிறந்த பதினாறு நாட்கள் அம்மை போன்ற காலங்களிலும் திருமண சடங்கு எல்லாவற்றிலும் இந்த மஞ்சளை தொட்டு வரும் பழக்கம் உள்ளது ஆக சித்தர்கள் கொண்டு வந்த விசேஷ மஞ்சளை ஒரு வசந்த வரவேற்பு ஒரு மகிழ்ச்சி தரும் காலங்களில் காப்பு செய்து கொண்டது தொல்குடி மரபு மஞ்சள் தங்கத்திற்கு ஈடான பொருள் என கருதியது நம் முன்னோர்கள் மரபு இந்த வசந்த பஞ்சமியில் மஞ்சளை தொட்டு வழிபாடு செய்து நன்மையை வரவேற்போம். : நெல்லும் மஞ்சளும் அறுவடை ஆகும் நாளில் வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு கொஞ்சம் வாங்கி வீடுகளில் வைப்பது ஒரு ஐஸ்வர்யமே தங்கம் வாங்குதை பிரபல படுத்துவார்கள் ஆனால் எல்லோரும் தங்கம் வாங்க இயலாது ஆக எளிமையாக மஞ்சளை கிழங்கு வாங்கி வைக்கலாம் நெல் ஒருபடி முதல் ஒரு மரக்கால் வரை வாங்கி பூஜை அறையில் வைக்கலாம் இது ஒரு உயிர் விதை ஆற்றல் தொல்குடி மக்கள் தங்கள் விவசாயத்திற்கு உரிய விதை நெல்லை காயவைத்து வைக்கோல் கோட்டைகட்டி சாணம் மெழுகி பாது காப்பார்கள் ஆக நித்யமாக தான்யம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும் மஞ்சளை அந்தந்த நேரத்தில் அரைத்து பயன்படுத்துவதே நல்லது அதன் வாசனையே மருத்துவ குணங்கள் உடையது அதுபோல் குளியலுக்கும் உரசி தேய்து குளித்து வருவதே நல்ல பலன் ஆக கடைகளில் கலப்பட மஞ்சள் பொடியை தவிர்த்து மஞ்சள் பொடியை கைபாகமாக செய்வது நல்லது மஞ்சள் கிழங்கு வகையை சார்ந்தது இதை பதியம் இட்டு வளர்க்கமுடியும் மஞ்சளை சித்தர்கள் உலகத்திலிருந்து கொண்டு வந்து இங்கு பதியம் இட்டார்கள் என்று குருமரபு கூறுகிறது வாழை மஞ்சள் கருணை கிழங்கு இன்னும் பிற உயர்ந்த கிழங்கு வகைகளை சித்தர்கள் கொண்டு வந்து பதியம் இட்டனர் என்பதே குரு மரபு செய்தி நமக்கு பயன் படும் என்று ஆதி சித்தர்கள் தொல்குடி மக்கள் கொண்டு வந்த கிழங்கு மற்றும் உண்ணும் உணவு விதைகளை சேகரிக்க மறந்து போனதும் அவலமே வழிபாடு ஒரு இயற்கை பாதுகாப்பு நன்றி நவில்தல் பெரியோர்கள் மரபை பேணுதல் அவர்கள் காட்டிய வழியில் ஆயிரமாயிரம் ரகசியம் உள் பொதிந்து இருக்கும் ஆக தொல்குடி மரபை உள்வாங்கி பயன் பெருவோம் யார் விதைகளை தந்தவரோ அதை விளைவித்து உணவாக்கி தந்தவரோ அவர்களுக்கு வணக்கங்கள் யார் கிழங்குகளையும் மூலிகைகளையும் கொண்டு வந்து இட்டு வளர்த்து காத்து நமக்களித்தனரோ அவர்களுக்கு வணக்கங்கள் பூமியிலும் விதைகளிலும் ஈரத்தையும் சத்துக்களை தந்து வீரியமாய் முளைக்கும் அறிவை தந்த அந்த தெய்வங்களுக்கு வணக்கங்கள் மலையில் பெய்யும் மழை கடலில் கலப்பதை ஆறு வெட்டி வாய்க்கால் வெட்டி பள்ளத்தில் நீரை நிறுத்தி வரப்பு கட்டி வேளாண்மை அறிவை தந்த வேந்தனுக்கும் தொல்குடி மக்களுக்கு வணக்கங்கள் வசந்த காலத்தில் மஞ்சளும் வெள்ளையும் பல வர்ணமாக பூத்து குளுங்கும் செடிகொடிகளுக்கும் பனி நிறைந்த வயல் வனத்திற்கும் வணக்கங்கள் இப்படி வசந்த காலத்தில் மனம் திறந்த வணக்கம் செய்வோம் மனதில் இலேசானவர்கள் ஆகுவோம்

பத்ர பூசை. இறைவனுக்குஇலை அர்ச்சனை

இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால், அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்

1. முல்லை இலை பலன்: அறம் வளரும். 
 
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும். 

 3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ    

 4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது 

 5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம். 

 6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும். 

 7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும். 

 9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும். 

 10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும். 

 11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 

12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும். 

 13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும். 

 14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும். 

 15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும். 

 16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும். 

 17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும். 

 18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 

 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

 20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

 21. தவனம் இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் அதாவது அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்னியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கும் படி செய்தது பஞ்சபூத குணங்களை அடைவதற்கு இயற்கை இறை வழிபாடு மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

பூதகணங்கள்






 ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இருந்தாலும் சிலருக்கு ஒரே மாதிரியான பீடிப்புகள் இருக்கும். அதன் பின்னணியை ஆராயும் போது இறையருளால் பூதகணங்களை பற்றிய ஒரு அறிமுகத்தை அகத்தியர் மற்றும் இடியாப்ப சித்தர் ஆசியால் கிடைக்க பெற்றது இந்த பூதகணங்கள் ஒருவரை பீடிக்கும் போது அவர்கள் அந்த பூத கணங்களின் ஆசைகளை தங்கள் ஆசைகளாக கொள்கிறார்கள் என்கிறது நிகண்டு சிவனுக்கும் வாலை மனோண்பணிக்கும் அங்காளிக்கு மட்டுமே கட்டுபடும் பூதங்களை வாலை தாய் வீட்டில் இவ்வகை பூதங்களை அதன் சேட்டை தீர்ந்து விலகி நின்று ஆதரவை தரும் விதமாகவே இருபெரும் சிவ சக்தியின் அம்சமாக சிவனையும் அங்காளி உடனான சக்திகளை குருவருள் வருவித்தது இங்கு தன்னிச்சையாக இயங்கும் பூதங்களை கட்டுபடுத்தி சிவ சக்தி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனால் நன்மையை அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நடக்கின்றது ஆக ஒருவர் செயலுக்கு அவரே கூட காரணமாக இருப்பதில்லை. அவர்களை பீட வாகனமாக பயன்படுத்தி இந்த பூதங்கள் இயங்கும் இது அந்த நபருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜாதகத்திலும் இதை கணிக்க முடியாது...... ஆக இந்த பூதங்களை கட்டுபடுத்திட வாலை ஆசி செய்யட்டும் வாலை வழிபாட்டு நோக்கங்கள் மக்களை ஆட்டி படைக்கும் மது மற்றும் பிற இடையூறு தரும் பூதங்களை மனித இனம் புரியாத இருப்பதாலே அனேக இயற்கை விதிமீறல் இருக்கிறது இதற்கு ஒரு தனி வழியாக சித்த சார்பாக சிவன் அங்காளி மூலம் கட்டுபடுத்தி பூதங்களை நல்வழிக்கு பயன்படுத்தி டும் முறையால் உலகில் மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் இது ஒரு போராட்டம் இதற்கு பெரிய சக்தி உடைய தெய்வங்களே குருமார்கள் துணையாக இருக்கும்.

முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தருகிறது எனப் பார்ப்போம்.


 1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும்.

 2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும். 

 3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல்.

 4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.

 5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும். 

 6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும்.

 7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும். 

 8. சித்த பூதம் - ஞானமளிக்கும். 

 9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும். 

 10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும். 

 11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும். 

 12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 

 13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும். 

 14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 

 15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும். 

 16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும். 

 17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 

 18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும். 

 19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும். 

20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும். 

 21. குபேர பூதம் - தன விருத்தி. 

 22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும். 

 23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும். 

 24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை. 

 25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும். 

 26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும். 

 27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும். 

 28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம். 

 29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல். 

 30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம். 

 31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல். 

 32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை. 

 33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.

இது ரகசியமான விஷயம் இதனை பகிர்தல் கூடாது. 

 பாடல் எண் : 02
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திருவெண்காடு அடை நெஞ்சே.

பாடல் விளக்கம்‬:
நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலை வீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமை பங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.


                     சங்கிலி பூதம் மரசிற்பம்



## 🌿 பூதகணங்கள் பூஜை விபரம்

### 1. **பூஜை செய்யும் நாள்**

* பெரும்பாலும் **செவ்வாய் கிழமை** அல்லது **சதுர்த்தி திதி** சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
* யாகங்கள், பெரிய விழாக்கள், சிவாலயக் கும்பாபிஷேகம் போன்ற சமயங்களில் கணபூஜை வழிமுறையும் நடத்தப்படும்.

### 2. **பூஜை இடம்**

* சிவாலயத்தில் நந்தி அருகே, கோபுர வாசலில் அல்லது தனி ஆலயத்தில்.
* சில ஊர்களில் "பூதகண சந்நதி" காணப்படும்.

### 3. **அவசிய பொருட்கள்**

* மஞ்சள், குங்குமம், சந்தனம்
* பூக்கள் (அரளி, செம்பருத்தி, வில்வம்)
* தூர்வை, கருக்காப்பு, கற்பூரம்
* நெய்வேதியம்: சுண்டல், வெல்லப்பொங்கல், அரிசி, கிழங்கு வகைகள்

### 4. **பூஜை முறை**

1. **தியானம் & சங்கல்பம்** – இறைவனை நினைத்து பூதகணங்களின் அருளைப் பெறும் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
2. **ஆவாஹனம்** – மந்திரங்களின் மூலம் பூதகணங்களை அழைக்கிறார்கள்.

   * “ஓம் பூதகணாதிபதயே நம:”
   * “ஓம் கணநாயகாய நம:” போன்ற மந்திரங்கள் உச்சரிக்கப்படும்.
3. **அர்ச்சனை** – வில்வம், பூக்கள், தூர்வை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
4. **நெய்வேதியம்** – சுண்டல், கிழங்கு வகைகள், வெல்லப்பொங்கல் சமர்ப்பிக்கப்படும்.
5. **தீபாராதனை** – கற்பூரம் காட்டி, பூஜை நிறைவு செய்யப்படுகிறது.

### 5. **நம்பிக்கை**

* பூதகணங்களை வணங்கினால்:

  * சில **உடல் மற்றும் மன நோய்களிலிருந்து** நிவாரணம் கிடைக்கும்.
  * தீய சக்திகள் நீங்கி **வாழ்க்கையில் முன்னேற்றம்** பெறுவதாக நம்பிக்கை.
  * யாகங்கள், பெருவிழாக்கள் தடையின்றி நிறைவடையும்.

---
பூதகணங்களுக்கு சிறப்பான தனி **ஆகம முறைபடி செய்யப்படும் மந்திரங்கள்** உள்ளன. பொதுவாக சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் செயற்படுவதாகக் கருதப்படுவதால், அவற்றின் வழிபாட்டிலும் **சிவமந்திரங்கள்** அல்லது **கணபதி/பூதநாதர் தொடர்பான மந்திரங்கள்** பயன்படுத்தப்படுகின்றன.

### பொதுவாக உச்சரிக்கப்படும் மந்திரங்கள் :

🔸 **பூதகணங்களை வணங்கும் மந்திரம்**

```
ॐ நமோ பூதகணாதிபதயே  
சிவசேவகாய நம: ||
```

**(ஓம் நமோ பூதகணாதிபதயே, சிவசேவகாய நம:)**

🔸 **சிவபெருமானின் மந்திரம்** (பூதகணங்களுக்கு அதிபதி என்பதால்)

```
ॐ நம: சிவாய ||
```

🔸 **விநாயகர் மந்திரம்** (பூதகணங்களுக்கு தலைவராக கருதப்படுவதால்)

```
ॐ கணாதிபதயே நம: ||
ॐ விநாயகாய நம: ||
```

🔸 **பூஜையில் சொல்லப்படும் சுருக்க மந்திரம்**

```
பூதகணபூஜாம் கிருஹாண
சிவபக்தாநாம் ஹிதகரா: ||
```


👉 பொதுவாக, பூதகணங்களின் அருளைப் பெற **“ஓம் நம: சிவாய”** என்ற பஞ்சாட்சர மந்திரம் அல்லது **கணபதி மந்திரம்** போதுமானதாகக் கருதப்படுகிறது.
👉 குறிப்பிட்ட கோவில் மரபுகளில் (சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற சிவாலயங்களில்) பூதகணங்களுக்கு தனிப்பட்ட ஸ்தோத்திரங்கள்/அர்ச்சனை மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



**பூதகண காயத்ரி மந்திரம்**

 பொதுவாக சிவபெருமானின் பின்வந்த சக்திகளான பூதகணங்களைத் துதிப்பதற்காக ஜபிக்கப்படுகிறது. இதற்கான காயத்ரி மந்திரம் இவ்வாறு உள்ளது:


**மந்திரம் (வடமொழி)*

```
ஓம் பூதகணாய வித்மஹே  
வீரபக்ஷாய தீமஹி  
தன்னோ கணபதி: ப்ரசோதயாத் ॥
```


**தமிழாக்கம்:**
ஓம்! பூதகணங்களை அறிந்துகொள்வோமாக.
வீரமான இறைவனின் பக்கம் உள்ளவரை தியானிப்போமாக.
அந்த கணபதி எங்களைத் தூண்டி வழிநடத்தட்டும்.

 இந்த மந்திரத்தை **108 முறை ஜபிக்கலாம்**. குறிப்பாக *புரட்டாசி மாதம், சதுர்த்தி, பிரதோஷம்* போன்ற சிவபெருமானுக்கான நாள்களில் ஜபித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.



## 🌸 **பூதகண திருப்புகழ்** 🌸

*(தலப்பெயர்: திருப்பூதவனம்)

வருணமகா சித்தலிங்கம்

**1**
பூதகணமொடு வந்தினம்,
பொற்கொடிமேல் பறந்தினம்,
ஆதிபெருமான் அருளினால்,
ஆடிப் பாடி மகிழ்ந்தினம்.

**2**
கொண்டினம் கணமெல்லாம்,
கோடி ரூபம் வெளிப்பட,
அண்டமெலாம் காப்பவர்,
அரனைத் துதி செய்யினம்.

**3**
வண்டினம் மலர்மிசைத்,
தண்புகழ் சடைமிசை,
தொண்டினம் நிறைந்தநாம்,
சோதி சிவனை வணங்கினம்.

**4**
ஆடினம் அமரர்சுற்று,
அங்கணமொடு விளங்கினம்,
சூடினம் சடைமுடியில்,
சோதி நிலவு தழுவினம்.

**5**
மண்டினம் உலகினிலே,
மக்கள்துயரைக் களைந்தினம்,
கண்டினம் கருணைவேள்வி,
காப்பதரனைக் கொண்டினம்.

**6**
தீயினம் காற்றினமாய்,
தேவரோடு கலந்து நம்,
பாயினம் உலகமெல்லாம்,
பாலினமென இனிமினம்.

**7**
ஓடினம் உறவினனாய்,
ஓங்கி நிறைந்த பெருமானை,
நாடினம் நவமலர்கள்,
நான்முகனும் புகழ்ந்தினம்.

**8**
வேடினம் பலதரித்த,
விரித்த முகங்கள் பலரென,
கூடினம் அடி பணிந்தே,
கோடியினும் புகழ்ந்தினம்.

**9**
தூடினம் பவமகிழ,
சோதி பரமனைச் சூழ்ந்தினம்,
ஏடினம் உபசரிப்போய்,
எம்மை நலமாக்கினம்.

**10**
பாடினம் அரனைப் போற்றி,
பண்புடை பூதகணங்களாம்,
நாடினம் உயிர்க் கருணை,
நலமுடன் வாழ்கின்றோம்.

---






 வாலை தாய் திருவடிகளே போற்றி

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

நில அளவுகள்

 ஒரு ஏக்கருக்கு \(43,560\) சதுர அடிகள் அல்லது \(4047\) சதுர மீட்டர்கள் ஆகும். \(100\) குழிகள் சேர்ந்தது ஒரு மா (\(100\) குழிகள் = \(1\) மா) ...