புதன், 29 அக்டோபர், 2025

விளக்கு ஏற்றும் தத்துவம்

       ஓம் வாலை பரமேஸ்வரியே போற்றி


விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே. திருமூலர் திருமந்திரம்


”அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்பது வள்ளலார் தமது இறுதியான பேருபதேசத்தில் வெளிப்படுத்திய மஹா மந்திரமாகும். 

தீபங்கள் 16 வகைப்படும். அவை…

தூபம்
தீபம்
அலங்கார தீபம்
நாகதீபம்
விருஷ தீபம்
புருஷா மிருக தீபம்
சூலதீபம்
கமடதி (ஆமை) தீபம்
கஜ (யானை) தீபம்
வியக்ர (புலி) தீபம்
சிம்ஹ தீபம்
துவஜ (பொடி) தீபம்
மயூர (மயில்)தீபம்
பூரண கும்ப (5 தட்டு) தீபம்
நட்சத்திர தீபம்
மேரு தீபம்


விளக்கேற்றும் முன் சொல்லும் மந்திரம் :

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத: |
ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே ||

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


நாம் ஏன் வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுகின்றோம் ? எந்த ஒரு விளக்கின் ஒளியும் இருளை அகற்றுகின்றது, வெளிச்சத்தைத் தருகின்றது. அதை போலவேதான் வீட்டில் பூஜை அறையில் ஏற்றும் விளக்கும் ஒருவர் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டை அகற்றி அந்த வீட்டில் உள்ளவர்களது வாழ்க்கையில் ஏற்படும் துயரம் மற்றும் துன்பங்கள் எனும் இருட்டு பகுதி அகல வழி வகுக்கின்றது. முதலில் விளக்கு ஏற்றுவது எப்படி துவங்கியது, அதன் பயன், தத்துவம் என்ன எனும் அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

விளக்கின் ஸ்வாலை எப்பொழுதும் மேல் நோக்கியே எரியும் 
தனக்கு மேலான இறைவன் உண்டுஎன்போது ஆகாய பெருவெளியை நோக்கி எரிந்து  தத்துவம் சொல்லும்

மேல் நோக்கி எரிந்து விண்ணிலே சகல ஆற்றலும் உள்ளது என்று அறிவிக்கும்

ஆண் பெண் அலி உருவம் என்ற வரம்பில்லாத இறைவனின் அத்தனை குணத்தையும் வெளிப்படுத்தும் அற்புத தத்துவம் விளக்கும் தீபமும் ஆகும்

அகல் மண் தத்துவம் பிரமன்
எண்ணெய் நீர் தத்துவம் விஷ்ணு
எரியும் தீபம் நெருப்பு தத்துவம் ருத்ரன்

தீபம் ருத்ரன் சிவன் அதிலிருந்து பிரகாசிக்கும் ஒளி பராசக்தி

பராசக்தியின் மூலமாகவே சிவனை அடைய முடியும் என்பதே தத்துவம்





எண்ணெய் விளக்கு ஏற்றும் பழக்கம் தோன்றிய வரலாறு

பிரும்மன் இந்த அகண்டத்தைப் படைத்தபோது வாழ்வின் ஆதாரத்துக்காக பஞ்ச (ஐந்து) பூத சக்திகளான நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் மற்றும் வாயு என்பவற்றைப் படைத்தார். நீரும், நிலமும் கீழ் இருக்க ஆகாயம் மற்றும் வாயு மேலே இருக்க, நெருப்பு இரு இடங்களிலும் இருக்க அவை அனைத்தையும் இணைக்கும் ஒரே சக்திகளாக சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் அமைந்து இருந்தன.

பிரம்மனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர் இனங்களைத் தவிர கண்களுக்குத் தெரியாத ஜீவ சக்திகளையும் படைக்க அவை தம்மை சிறு சக்தி வாய்ந்த அணுக்களாக மாற்றிக் கொண்டு சந்திர சூரிய ஒளி மூலம் பூமிக்கு சென்று அங்கு தமக்கு பிடித்த இடங்களில் வாழத் துவங்கின. அந்த ஜீவ சக்திகளில் தெய்வீக சக்தி அணுக்களும் இருந்தன. அனைத்துமே இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. நல்ல எண்ணங்களைத் தரும் தரும் ஜீவ சக்திகள் எனவும், தீய எண்ணங்களைக் கொண்ட ஜீவ சக்திகள் எனவும் பிரிக்கப்பட்டன. தீமை தரும் எதிர்மறை சக்திகள் (Negative) இருட்டிலே வாழ ஆசை கொண்டன. நன்மை தரும் ஜீவசக்திகள் எனப்பட்ட நேர்மறை சக்திகள் (Positive) வெளிச்சத்தில் வாழ்ந்தன. எங்கெல்லாம் நேர்மறை சக்திகள் அதிகம் இருந்தனவோ, அங்கெல்லாம் அமைதியும், நல்ல எண்ணங்களும் நிலவ, எங்கெல்லாம் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தனவோ, அங்கெல்லாம் இனம்புரியாத குழப்பங்களும் அமைதி இன்மையும் படர்ந்திருந்தன. அவற்றில் மூன்றாவதாக செயல் இன்றி இருந்த தெய்வீக சக்தி உயிர்களும் அடக்கம். அவை ஏன் படைக்கப்பட்டன?

நன்மை தரும் ஜீவசக்திகள் மனிதர்களின் எண்ணங்களில் நல்ல மனநிலையை உருவாக்க, தீய ஜீவசக்திகளோ எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இருந்த மனிதர்களின் நல்ல எண்ணங்களை கெடுத்து தீய எண்ணங்கள் உருவாக முயன்று வந்தன. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையே ஓயாமல் நடைபெறும் யுத்த பூமிதான் மனிதர்களின் இல்லங்கள் ஆகும். யாருடைய கை ஓங்கி இருந்ததோ அதற்கேற்ப அந்த இல்லங்களில் ஒற்றுமை, மன அமைதி மற்றும் மகிழ்ச்சியோ, துன்பங்களோ நிலவின. இப்படியாக ஒவ்வொரு இல்லங்களின் சூழ்நிலையிலும் அந்த ஜீவசக்திகள் நன்மை தரும் அணுக்களாகவும், தீமை தரும் அணுக்களாகவும் வாழ்ந்து வரலாயின. அவற்றின் இடையே எதன் ஆதிக்கம் அதிகமாகின்றதோ அந்த சூழ்நிலைக்கேற்ப அந்தந்த குடும்பங்களின் வாழ்க்கை முறையும் அமைந்து இருக்கும் என்பதை பிரும்மன் அடிப்படை தத்துவமாக வைத்தார்.

பல்வேறு உயிரினங்கள், நேர்மறை மற்றும் எதிர்மறை ஜீவ சக்திகளுடன் அகண்டத்தைப் படைத்த பிரும்மன், மன மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலையை உருவாக்க, எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்தை அடக்கி நேர்மறை சக்திகளுடைய ஆதிக்கத்தை அதிகரிக்க இன்னொரு உபாயத்தையும் செய்து வைத்து இருந்தார். இருட்டிலே வாழ்ந்துகொண்டு மனிதர்களின் வாழ்வில் இருட்டை ஏற்படுத்திக் கொண்டு இருந்த எதிர்மறை சக்திகளை துரத்தி அடித்து சாந்தமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் இருட்டை விலக்கும் வெறும் விளக்கு ஒளி மட்டும் போதாது, அதையும் மீறி அவற்றைத் துரத்த அதிக வலிமை நேர்மறை சக்திகளுக்கு தேவையாக இருந்தது.

அந்த மார்கத்தை வீடுகளில் எப்படி ஏற்படுத்தித் தர இயலும்? அந்த ரகசியத்தை அவரே படைத்திருந்த ரிஷி, முனிவர்களுக்கு போதனை செய்து இருந்தார். அதில் எளிய வழியானது குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் விளக்குத் திரியின் உதவியோடு தோற்றுவிக்கப்படும் அசாதாரண சக்தி கொண்ட ஒரு குறிப்பிட்ட தன்மையிலான தெய்வீக ஒளி ஆகும். அந்த குறிப்பிட்ட தெய்வீக ஒளி அலை செயல்படாமல் இருந்த தெய்வீக சக்தி உயிர் அணுக்களை தட்டி எழுப்பும் வல்லமை படைத்தது. அவற்றின் அளவுகோல் என்ன என்பதே பிரும்ம ரகசியம். அந்த தன்மையை சாதாரண விளக்கு ஒளிகளால் தர இயலாது. வீடுகளின் வெற்றிடங்களில் உறங்கிய நிலையில் அமர்ந்து இருக்கும் மூன்றாவது தெய்வீக ஜீவஅணுக்கள் எழுப்பப்பட்டால் அவை நல்ல எண்ணங்களைக் கொண்ட அணுக்களுக்கு கூடுதல் பலம் தரும். தீய அணுக்களை எதிர்த்து யுத்தம் செய்து அவற்றை வெளியேற்ற இயலும். இதுதான் அந்த ரகசியம் ஆகும்.

ஒரு எண்ணெய் விளக்கை குறிப்பிட்ட திரி போட்டு ஏற்றுவதில் மூலம் அந்த தன்மையை எப்படி ஏற்படுத்தித் தர இயலும் என்ற கேள்வி எழலாம். எண்ணெய் விளக்கை ஒரு குறிப்பிட்ட திரியை வைத்து எரியவிடுவதின் மூலம் மட்டுமே தெய்வீக சக்திகளை தட்டி எழுப்பும் அலைகளை வெளிப்படுத்த முடியும் என்பதல்ல. அதுவே மூல இயக்கம் ஆகும். அதோடு இன்னொரு சக்தியும் சேர்ந்தால் மட்டுமே அந்த இயக்கம் முழுமை அடைய முடியும். அதுதான் அதில் அடங்கி உள்ள இன்னொரு ரகசியம். விளக்கை ஏற்றிய பின் நாம் தெய்வத்தை வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கும்போது அந்த எண்ணங்களும், மந்திரங்களும் ஒரு குறிப்பிட்ட அலைகளை நம் உடலில் இருந்து உருவாக்கி, அதை வெளியேற்ற, அந்த அலைகள் அந்த எண்ணெய் விளக்கின் ஒளியில் சங்கமிக்கின்றன. இப்படியாக குறிப்பிட்ட விளக்குத் திரி மற்றும் எண்ணை எனும் பொருட்களின் மூலம் வெளிப்படும் சிறிய தீயுடன் பிரார்த்தனைகளால் வெளிப்படும் எண்ண அலைகளுடன் சேர்ந்து கொண்டு நம் எண்ணங்களுக்கு விளங்காத வகையில் விளக்கு ஒளியின் வெப்பத் தன்மையை மாற்றி அமைத்து அதன் பின் வேறு ஒரு மென்மையான அதிர்வலையை உருவாக்கி அந்த தீயில் இருந்து வெளிப்படுத்தும். அந்த வெப்பத் தன்மை அசாதாரணமானது, அமைதியானது, நமக்கு விளங்காதது.

எண்ணெய் விளக்கின் தீப ஒளி அந்த குறிப்பிட்ட மூன்றாவது அதிர்வலைகளை வெளிப்படுத்தும்போது, அந்த அதிர்வலைகள் உறங்கி கொண்டு இருக்கும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்புகின்றன. தட்டி எழுப்பப்படும் தெய்வ ஜீவ சக்திகள், தீமைகளை தரும் உயிர் அணுக்களுடன் நடைபெறும் யுத்தத்தில் நன்மை தரும் அணுக்களுக்கு உதவி செய்து தீமை தரும் அணுக்களை விரட்டி அடிக்கின்றன. பிரம்மனிடம் இருந்து கற்றறிந்திருந்த இந்த ரகசியத்தை அந்த ரிஷிகளும், முனிவர்களும் உலக நன்மைகளுக்காக மெல்ல மெல்ல பரப்பினார்கள். இதனால்தான் வீடுகளில் விடியற்காலையும், மாலையிலும் எண்ணெய் விளக்கை ஏற்றி வைக்கும் பழக்கம் துவங்கியது. அப்படி செய்வதின் மூலம் நல்ல எண்ணங்களைத் தரும் ஜீவ சக்திகள் நிறைந்த இடமாக ஒரு இல்லத்தை மாற்றி அமைக்கலாம் என்பதை உணர வைத்தார்கள்.


அதனால்தான் அடிப்படை காரணங்களை விலாவாரியாக விளக்கி கூறாமல் ‘வீட்டிலே இரு வேளைகளிலும் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து இரண்டு வரிகளாவது ஸ்தோத்திரம் கூறு. அது சௌபாக்கியத்தை தரும்’ என்று பொதுவாக அறிவுறுத்துவார்கள். தீமைகளை தரவல்ல ஜீவ அணுக்கள் இருட்டிலேயே உலவிக் கொண்டு இருக்கும் என்பதினால் இருட்டை விலக்கும் ஒளியும் தேவை, தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பவல்ல அதிர்வுகளும் தேவை ஆகியது. இதன் வெளிப்பாடே வீட்டின் பூஜை அறையிலோ, பூஜை அறை இல்லாத வீட்டின் ஒரு இடத்திலோ விடிகாலை மற்றும் மாலை நேரத்தில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து குறைந்தது இரண்டு நிமிடங்களாவது தெய்வத்தை பிரார்த்திக்கும் பழக்க வழக்கங்கள்.


எண்ணெய் விளக்கு : தீப ஒளியின் மகிமைகள்

எந்த வீடுகளில் தொடர்ந்து தினம் தினம் எண்ணெய் விளக்கு ஏற்றப்படுகின்றதோ, அங்கெல்லாம் குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் விளக்குத் திரியுடன் ஏற்றப்படும் விளக்கின் தீப ஒளியில் இருந்து வெளிப்படும் நன்மை தரும் அணுக்களுக்கு உதவிடும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருக்கும். அப்போது தீமைகளை செய்யும் ஜீவஅணுக்கள் (எதிர்மறை சக்திகள்-Negative) அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, நன்மைகளை தரும் ஜீவஅணுக்கள் (நேர்மறை சக்திகள்- Positive) ஆதிக்கம் பெறுகின்றன. நமது கண்களுக்கு புலப்படாத வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த நிகழ்வுகளினால் மன அமைதி தரும் ரம்யமான சூழ்நிலை அந்த வீட்டில் அமைகின்றது. இப்படியாக மேலும் மேலும் அந்த வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரித்துக் கொண்டே செல்கையில் அங்குள்ளவர்கள் அந்த சூழ்நிலையின் காற்றை ஸ்வாசிக்கையில் அவர்களது உடலிலும் அவை புகுந்து கொள்ளும். இப்படியாக உடலில் புகுந்து கொள்ளும் நேர்மறை சக்திகள் அவர்களது ரத்தத்தில் கலந்து மூளையை சென்றடையும். அப்போது அவர்கள் எண்ணம் தூய்மைப்படும். நேர்மறை சக்திகள் அவர்களது எண்ணங்களை தெளிவாக்குகின்றது. அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களால் எந்த சிக்கல்களையும் திறமையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. கர்ம வினைகளினாலும், செய்த பாவ புண்ணியங்களினாலும் ஏற்படும் நிகழ்வுகளை, விதியின் விளைவுகளை எண்ணெய் தீபம் ஏற்றுவதில் மூலம் தடுக்க முடியாது என்றாலும், அந்த நிலைகளை திறமையுடன், மன உறுதியுடன், மன அமைதியுடன் எதிர்கொண்டு அவற்றின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் நிலையை இது ஏற்படுத்தித் தருகின்றது.


இப்படியாக நல்ல விளைவுகளை தரும் நம் எண்ணங்களுக்கு விளங்காத அமைதியான இந்த பழக்கம் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் அமைந்திருக்கவில்லை. நேர்மறை மற்றும் எதிர்மறை எனும் சக்திகளைக் குறித்து விஞ்ஞான பூர்வமாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட நல்ல பலன் தரும் பழக்கத்தை விஞ்ஞான சாதனங்கள் இல்லாத பண்டையாக காலத்தில் வாழ்ந்திருந்த மூதையோர்களால் எப்படி கண்டறிந்திருக்க முடியும் என்பது வியப்பான செய்தியே.

எண்ணெய் விளக்கு : தீப ஒளியின் செயல்கள்

பலரது வீடுகளிலும் பூஜை அறையில் உள்ள பல்வேறு உலோகங்களிலான தெய்வ விக்கிரஹங்கள், மரசட்டங்கள் போட்ட தெய்வப் படங்கள், யந்திரங்கள் மற்றும் கற்களிலான சாலிகிராமம், லிங்கம் போன்ற பிற பொருட்கள் உள்ளதைக் காணலாம். அவை சாதாரண கற்கள் அல்ல என்பது வேறு விஷயம். பூஜை அறையில் அவ்வப்போது பூஜிக்கும்போது ஓதப்படும் மந்திர ஒலியினால் வெளிப்படும் மந்திர அதிர்வுகளை அந்த விக்கிரகம் தன்னுள் இழுத்து வைத்துக் கொள்கின்றது என்பது அந்த உலோகங்களின் தன்மை ஆகும். ஆனால் அனைத்து உலோகங்களும் இந்த தன்மை கிடையாது. ஒரு சில உலோகங்கள் மட்டுமே அந்த தன்மைக்கு கொண்டவையாக அமைந்து உள்ளன. அதனால்தான் அந்த காலங்களில் பூஜை அறைகளில் இருந்த தெய்வ விக்கிரகங்கள் குறிப்பிட்ட உலோகங்களினால் மட்டுமே செய்யப்பட்டவையாக இருந்துள்ளன, தெய்வப் படங்களும் குறிப்பிட்ட மரச்சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடாத தக்கது. அவற்றில் உள்ளடங்கிய ரகசிய தன்மைகளை புரிந்து கொள்ளாமல், பெரியோர்கள் கூறுகிறார்கள் என்பதினால் அவற்றை அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். பூஜை அறையில் பூஜிக்கும் வெளிப்படும் அதிர்வலைகள் அந்த உலோகத்தில் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டதும், மெல்ல மெல்ல அந்த உலோகத்தின் அடிப்படைத் தன்மை நமக்கு புரியாத நிலையில் மாறி விடுகின்றது. இந்த நிலையில் எண்ணெய் விளக்கின் தீப ஒளி மற்றும் பிரார்த்தனைகள் மூலம் எழும் எண்ண அலைகள் என மூன்று சேர்ந்து ஏற்கனவே அடிப்படை உலோகத்தின் தன்மை மாறி இருந்த விக்ரஹத்தின் உள்ளே புகுந்து கொள்ளும்போது, அவை அனைத்தும் சேர்ந்து இன்னொரு தெய்வீக அலையை வெளிப்படுத்துகின்றது. அதுவும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்பும் வல்லமைப் படைத்த அதிர்வலைகளாக அமைகின்றன. அவைகளும் நேர்மறை சக்திகளுக்கு உதவி செய்து எதிர்மறை விளைவுகளைத் தரும் அணுக்களை விரட்டி அடிக்கின்றன.


இப்படியாக தொடர்ந்து ஏற்றப்படும் எண்ணெய் விளக்கின் ஒளி மற்றும் மந்திர மற்றும் பிரார்த்தனை உச்சாடனைகள் மூலம் வெளியேறும் அதிர்வுகள், உலோக விக்கிரகங்கள் மூலம் வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் என அனைத்தும் சேர்ந்துஅந்த வீட்டில் உள்ள தீமை செய்யும் எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும். உலோக விக்கிரங்கள் மட்டும் அல்ல பூஜை அறையில் உள்ள சாலிக்கிராமக் கற்கள், ஸ்படிகக் கற்கள், நவரத்தினங்களிலான தெய்வ சிலைகள் மற்றும் தெய்வ உருவங்களை உள்ளடக்கிய விசேஷமான மரச் சட்டங்கள் போன்ற அனைத்துமே உலோக சிலைகளை போலவே தத்தம் அடிப்படை தன்மையை மாற்றிக் கொண்டு, எண்ணெய் விளக்கின் தீப ஒளி மற்றும் மந்திர / பிரார்த்தனை உச்சாடனைகள் மூலம் வெளியேறும் அலைகளில் இணைந்து கொண்டு எதிர்மறைசக்திகளை தாக்கி அழிக்கும் சக்தியை மேலும் பெருக்கிக் கொள்ளும்.

இவற்றைத் தவிர பூஜை அறையில் வைக்கப்படும் குங்குமம், மஞ்சள் பொடிகள், சந்தனம் போன்ற அனைத்திலும் மேலே கூறப்பட்ட நிலையில் நமக்குத் தெரியாத தன்மை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்க அவையும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகளை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.


நம் எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிசய, அமானுஷ்ய நிகழ்வுகள் அனைத்துமே நான்கு பொருட்களின் அதிர்வலைகள் மூலமே நடைபெறுகின்றன என்பது சற்றே அதிசயமாக உள்ளது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பதை போலவே குறிப்பிட்ட பூஜை அறையில் ஏற்றி வைக்கப்படும் தீபத்தின் எண்ணெய், திரிகள், விகிரஹங்கள், பிற பொருட்கள் மற்றும் பிரார்த்தனை அலைகள் என அனைத்தும் ஒன்றிணையும்போது மட்டுமே இந்த நிகழ்வுகள் நடைபெறும் என்பதாக ஆன்மீக மகான்கள் கூறுகின்றார்கள். இதில் இன்னொரு அதிசயமான உண்மை என்ன என்றால் நாள் முழுவதும் எண்ணெய் விளக்கு எரிந்தாலும், இந்த குறிப்பிட்ட தன்மையை முதல் காலைப் பொழுது வரையிலும் , முதல் மாலைப் பொழுது வரையிலும் ஏற்றி வைக்கப்படும் எண்ணெய் விளக்கு தீப ஒளியினால் மட்டுமே தர இயல்கிறது என்பதேயாகும். அதன் காரணம் அந்த நேரத்தில் வெளிப்படும் சூரிய ஒளி மற்றும் சந்திர ஒளியினால் மட்டுமே அந்த மாற்றத்தைத் தரும் தன்மையை ஜீவசக்திகளுக்கு தர இயலும் என்பதாக பிரும்ம நியதி உள்ளதாகக் கூறுகின்றார்கள்.


அதே நேரத்தில் அறையில் ஏற்றி வைக்கப்படும் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை அந்த நேர்மறை அணுக்களை கிரகித்துக் கொண்டு வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று பரப்புகிறது. அந்த ஊதுபத்தியின் மணத்தை வீட்டினர் ஸ்வாசித்து உள்ளிழுக்கயில் அவர்கள் உடலில் நேர்மறை அணுக்களின் ஆதிக்கம் அதிகரிக்க அவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற எந்த சிக்கல் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெறுகின்றார்கள்.


இதுவே பூஜை அறையில் விடியற்காலை மற்றும் மாலைப் பொழுதில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கத்தின் அடிப்படை தத்துவம் ஆகும்

எண்ணெய் விளக்கு : நல்ல பலன்களைத் தரும் பொருட்கள்

பண்டைய காலத்தில் அனைத்துப் பொருட்களின் விலைகளுமே மிகக் குறைவாக இருந்ததினால் பூஜை அறையில் விளக்கேற்ற பசுவின் மூலம் கிடைத்த நெய்யையே விளக்கில் பயன்படுத்தினார்கள். பசுவின் நெய் கொண்டு எண்ணெய் விளக்கை ஏற்றி வைக்கையில் குடும்ப மகிழ்ச்சி பெருகி வளம் மிக்க வாழ்க்கை அமைவது மட்டும் அல்லாமல் அதிக நோய்கள் அற்ற வாழ்க்கை அமைந்திருக்கும் என்பார்கள்.


எந்தெந்த எண்ணெய்கள் விளக்கு ஏற்றுவதற்கு சிறந்தவை என்பதின் பட்டியலை வரிசைகிரமமாக கீழே தந்துள்ளேன்.


1. பசு நெய்

2. மற்ற பிராணிகள் மூலம் பெறப்படும் தூய நெய்

3. நல்லெண்ணெய்

4. ஆமணக்கு எண்ணெய்

5. விளக்கெண்ணெய்

பூஜை அறைகளில் தீப விளக்கு ஏற்ற சிறந்ததாக வேப்பெண்ணை மற்றும் தேங்காய் எண்ணை உட்பட பல்வேறு எண்ணெய் வகைகளைக் கூறி எந்த எண்ணையை பயன்படுத்தினால் எந்த நன்மைகளை தரும் என்பதாக கூறுகிறார்கள் என்றாலும் அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பொறுப்பாகும். எனக்கு தெரிந்தவரை பண்டை காலத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மேலே கூறப்பட்டு உள்ள ஐந்து மட்டுமே.


எண்ணெய் விளக்கு : விளக்கேற்றும் திசைகள்

விளக்குகளை வடக்கு, மேற்கு, கிழக்கு போன்ற பக்கங்களை நோக்கி இருக்குமாறு வைக்கலாம். ஆனால் தெற்கு நோக்கி விளக்கை வைக்கலாகாது. திசையின் குழப்பத்தை தவிர்க்க மேல்நோக்கி எரியும் தீப விளக்கை பயன்படுத்துவது நல்லது. ஏன் எனில் மேல் பகுதியில்தான் தெய்வங்களின் இல்லங்கள் உள்ளன. எந்த திசையில் விளக்கை ஏற்றி வைத்தால், என்ன பலன் கிடைக்கும் என்பது கீழாய் தரப்பட்டு உள்ளது..

1. வடக்குத்திசை – செல்வம் தழைக்கவும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும் இந்த திசையை நோக்கி தீபத்தை ஏற்றுவதே சிறந்தது.

2. கிழக்குத்திசை – மன அமைதி கிடைக்க மற்றும் அடிக்கடி தோன்றும் நோய்கள் குறைய

3. மேற்குத்திசை – கடன்கள் குறையவும், எதிரிகள் அடங்கவும்.

ஒரு சிலர் மூன்று எண்ணெய் விளக்குகளை – இரு பக்கத்திலும் இரண்டு மற்றும் மத்தியில் ஒன்று – ஏற்றி வைப்பார்கள். அது உண்மையில் மெத்த நன்மையைத் தரும். ஆனால் அந்த மூன்று விளக்குகளையும் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு என மூன்று திசைகளையும் நோக்கி வைத்து இருக்க வேண்டும். அதை போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையை நோக்கி விளக்குகளை மாற்றி மாற்றி வைத்து பிரார்த்தித்தால் அதுவும் சிறந்ததே. எந்த காலத்திலும் தெற்கு நோக்கி விளக்குகளை ஏற்றக் கூடாது.


நல்ல பலன் தரும் விளக்குத்திரி மற்றும் பிற பொருட்கள்

பஞ்சுத் திரி, வாழை மட்டை திரி, தாமரைத் தண்டின் திரி, பல்வேறு மரப்பட்டைகளின் திரிகள் மற்றும் பல்வேறு வண்ணத்து துணிகளின் நூல் இழைகளை திரிகளாக பயன்படுத்துமாறு பண்டிதர்கள் கூறினாலும், பண்டைக் காலத்திலும் ஆலயங்களிலும் பல நூலிழைகளைக் கொண்ட பஞ்சு திரியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். ஆகவே வேறு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில குறிப்பிட்ட திரி வகைகள் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக தினமும் ஒரு வேளையாவது எண்ணெய் விளக்கேற்ற பஞ்சு திரியை பயன்படுத்துவதே சிறந்தது எனக் கூறப்படுகின்றது.


அடுத்து விளக்கு ஏற்ற எந்த வகையான உலோக விளக்கை பயன்படுத்தலாம் என்பது கேள்வி. தங்கம், வெள்ளி , தாமிரம், ஸ்டீல் (எஃகிரும்பு) மற்றும் ஈயம் போன்றவற்றை கொண்டு தயாரித்த விளக்கு (ஐம்பொன் என்பார்கள்). அதை பயன் படுத்தலாம். அல்லது பித்தளை, தங்கம், வெள்ளி போன்றவற்றிலான விளக்குகள் அல்லது மண் விளக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றாலும் வெறும் எஃகிரும்பினால் (stainless steel) தயாரித்த விளக்கை பயன்படுத்தக் கூடாது. ஏன் எனில் அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

சாதாரணமாக ஒரு முகம் கொண்ட விளக்கையே அனைத்து இல்லங்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பண்டிதர்கள் சிவ சக்தியை வெளிப்படுத்தும் இரண்டு முக விளக்கை பயன்படுத்தயுமாறும் கூறுகின்றார்கள். பொதுவாக அனைத்து நாட்களிலும் ஒரு முக விளக்கையும், விசேஷ தினங்களிலும் பண்டிகை தினங்களிலும் ஒன்று முதல் ஒன்பது முகம் கொண்ட விளக்கை ஏற்றலாம் என்பதே நல்லது ஆகும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள், லட்சுமி மற்றும் பல குபேர விளக்குகளையும் சேர்த்து ஏற்றினால் பலன் அதிகம் என்பார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ஒன்றுக்கும் அதிகமான அளவில் விளக்குகளை ஏற்றி வைத்தால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது மாயை என்பதாகவே நன்கு கற்று அறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஒரே நாளில் எத்தனை விளக்குகளை ஏற்றி வைத்தாலும் அவை அனைத்தும் சேர்ந்து வெளிப்படுத்தும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் வெளிப்படும் அதிர்வலைகளின் அளவில்தான் இருக்கும் என்பது பிரும்ம நியதியாகும். அதே நேரத்தில் தினம் தினம் ஏற்றி வைக்கப்படும் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு தன் தீப ஒளி மூலம் வெளிப்படுத்தும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் அழியாமல் இருக்கும் வகையில் அவற்றை வளர்த்துக் கொண்டே இருக்கும்.


ஆகவே எத்தனை விளக்கை ஏற்றி வைத்தாலும் அவற்றில் இருந்து எழும் தீப ஒளி ஒரே ஒரு விளக்கை ஏற்றி வைப்பதின் மூலம் கிடைக்கும் பலன் என்னவோ அதே அளவில்தான் இருக்கும். அதை போலவேதான் கடைகளில் கிடைக்கும் லட்சுமி மற்றும் குபேர தெய்வங்கள் பொரித்த விளக்குகள் அதிக நன்மைகளைத் தரப்போவது இல்லை. அது மனதுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம், பூஜை அறையில் அழகு சேர்க்கலாம், மனதுக்கு ரம்மியமாக இருக்கலாம் ஆனால் அவை தரும் பலன்களும் ஒரே ஒரு எண்ணெய் விளக்கை ஆத்மார்த்தமாக ஏற்றி வைத்தால் கிடைக்கும் பலனைப் போலவேதான் இருக்கும். அதே சமயத்தில் பூஜைகளையும், யாகங்களையும் செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் சக்திகளை ஏற்றி வைத்து தரப்படும் லட்சுமி மற்றும் குபேர தெய்வங்கள் பொரித்த விளக்குகள் நல்ல பலன்களைத் தரலாம். தினமும் இருவேளை ஆத்மார்த்தமாக ஏற்றி வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்படும் எண்ணெய் விளக்கின் தீப ஒளி வீட்டு சூழ்நிலையை அமைதிமயமானதாக மாற்றி அமைத்து அந்த வீட்டினரின் வாழ்க்கையில் வளத்தை கொடுத்து குடும்ப ஒற்றுமையையும் நிலைக்க வைத்திருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்வார்கள். நமக்குத் தேவை தினமும் இரு வேளையிலும் பூஜை அறையில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்தால் நல்லவை நடக்கும் என்பதை முழுமையாக நம்புவதே


விளக்கை சாந்தி செய்வது என்பது, அதை அணைக்கும் முறையைக் குறிக்கிறது. விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது; மாறாக, திரியின் அடிப்பகுதியை பூ அல்லது வேறு குச்சி கொண்டு மெதுவாக அழுத்தி, விளக்கு எரிவதை நிறுத்தும் வகையில் அணைக்க வேண்டும். இது விளக்கை புனிதமாக, சரியாக அணைக்கும் முறையாகக் கருதப்படுகிறது, மேலும் இது தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் கருதப்படுகிறது. 

விளக்கை அணைக்கும் முறைகள்

சரியான முறை: பூ, அரிசி அல்லது சிறப்பு குச்சி கொண்டு திரியின் அடிப்பகுதியை மெதுவாக அழுத்தி அணைக்க வேண்டும்.பால் மற்றும் பன்னீரால் பூவில் நனைத்து விளக்கினை சாந்தி செய்வதும் ஒரு நல்முறையாம்

தவறான முறை: விளக்கை வாயால் ஊதி அணைப்பது சாஸ்திரப்படி தவறானது.

எண்ணெய் தீர்ந்து போவதால் அணைப்பது: எண்ணெய் தீர்ந்து தானாக விளக்கு அணைவதையும் சிலர் ஒரு முறையாகக் கருதுகின்றனர், ஆனால் இது பூஜையின் போது விளக்கு அணைவதை  குறைவான புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பூஜைக்குப் பிறகு: பூஜையின் போது பயன்படுத்திய அதே பூ அல்லது குச்சி கொண்டு விளக்கை அணைப்பது சிறந்தது.

குளிர வைக்கும் முறை: விளக்கை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை மெதுவாக இழுக்க வேண்டும். இதை "ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று கூறி செய்யலாம். 

கவனிக்க வேண்டியவை

விளக்கு பூஜை செய்யும்போது, விளக்கு அதிக காற்று மூலம் அணைந்தால் அபசகுணமில்லை. ஆயினும் பூஜை முடியும் வரை தீபத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டும்

விளக்கு எரிந்து சிறிது நேரம் கழித்து அணையும் வரை காத்திருக்க வேண்டும்.

விளக்கை அணைக்கும் போது, அதை கவனமாக அணைக்க வேண்டும். 


திருமுறைகளில் விளக்கீடு / தீப வழிபாடு


 சிவலிங்கமே ஜோதி உருவம், ஆகையால் தீப வழிபாடு - விளக்கு ஏற்றி வணங்குதல் திருமுறைகளில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. தீபம் ஏற்றாது சிவா வழிபாடு செய்வதில்லை. ஜோதியே சிவம், சிவமே ஜோதி. திருக்கார்த்திகை தீபமாகத் திருவண்ணாமலையில் உயரும் ஜோதியே இங்கு நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் ஒளிர்கிறது. திருமுறைகளில் விளக்கேற்றுதல் பற்றிய தொகுப்பு இது. 

கோயில் ஒளி வளர் விளக்கே

1. ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!

சித்தத்துள் தித்திக்கும் தேனே!

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!

அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே.


தெளிவுரை : ஒளிமிகும் விளக்கே ! அழிவில்லாத ஒப்பற்ற பொருளே ! சென்று பற்றும் சுட்டறிவும் ஆய்வும் கடந்து நின்று சிவஞானத்தால் அறியப்படும் மேலான பேரறிவே ! ஒளி பொருந்திய பளிங்கின் தோற்றத்தை உடைய திரட்சியான மாணிக்க மலையே ! மெய்யன் பரது மனத்தின்கண் தித்திக்கும் தேனே ! அன்பு பெருகும் மெய்யடியாரது மனத்தின்கண் பேரானந்தத்தை விளைவிக்கும் கனியே ! தில்லை அம்பலத்தையே நடனம் புரியும் சபையாகக் கொண்டு அங்குச் சிதாகாசத்தில் ஆடும் ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வீக நடனத்தை விரும்பிச் செய்யும் உன்னை, அடியவனாகிய யான் புகழ்ந்து உரைக்குமாறு நீ உரைத்தருள்வாயாக.


2. இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்

இருட்பிழம்(பு) அறஎறிந்(து) எழுந்த

சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்

தூயநற் சோதியுள் சோதீ !

அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !

அயனொடு மாலறி யாமைப்

படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்

தொண்டனேன் பணியுமா பணியே.


தெளிவுரை : பிறவித் துன்பத்தைத் தொலைத்து என்னைத் தடுத்தாட் கொண்டருளி, என் மனத்தினுள் இருந்த அஞ்ஞானமாகிய மிக்க இருளை வேரறக் களைந்து சுடர் விட்டு எழுந்த ஒளி பொருந்திய மாணிக்கத் தீபத்தினுள்ளே ஒளி வீசுகின்ற தூய்மையான அழகிய ஒளியினுள்ளே ஒளி வடிவாய் விளங்குபவனே. வலிமை பொருந்திய இடபத்தை வாகனமாக உடையவனே ! பொன்னம்பலத்தில் நின்று நடனம் ஆடுபவனே ! பிரமனும் திருமாலும் அறிய முடியாதவாறு மிக்க ஒளியை வீசிப் பரவி நின்றவனாகிய உன்னை, அடியவனாகிய யான் வணங்கும் வண்ணம் நீ திருவருள் புரிவாயாக.

சிவ பதிகங்கள்

 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.  

விண் களார்தொழும் விளக்கினைத் துளக்கிலா             விகிர்தனை விழவாரும்            மண்க ளார்துதித் தன்பரா யின்புறும்             வள்ளலை மருவித்தம்            கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்             துறைதரு கற்பகத்தைப்            பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்             பழியிலர் புகழாமே.  

மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.   

கதியொன்றும் அறியாதே கண்ணழலத்  தலைபறித்துக் கையில் உண்டுபதியொன்று நெடுவீதிப் பலர்காண  நகைநாணா துழிதர் வேற்குமதிதந்த ஆருரில் வார்தேனை  வாய்மடுத்துப் பருகி உய்யும்விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க  மின்மினித்தீக் காய்ந்த வாறே.  

இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.  

மதியங் கண்ணி ஞாயிற்றை  மயக்கந் தீர்க்கும் மருந்தினைஅதிகை மூதூர் அரசினை  ஐயா றமர்ந்த ஐயனைவிதியைப் புகழை வானோர்கள்  வேண்டித் தேடும் விளக்கினைநெதியை ஞானக் கொழுந்தினை  நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.  

 புறம்ப யத்தெம் முத்தினைப்  புகலூர் இலங்கு பொன்னினைஉறந்தை யோங்கு சிராப்பள்ளி  உலகம் விளக்கு ஞாயிற்றைக்கறங்கு மருவிக் கழுக்குன்றிற்  காண்பார் காணுங் கண்ணானைஅறஞ்சூழ் அதிகை வீரட்டத்  தரிமான் ஏற்றை அடைந்தேனே. 


நொய்யவர் விழுமி யாரும்  நூலினுண் ணெறியைக் காட்டும்மெய்யவர் பொய்யு மில்லார்  உடலெனும் இடிஞ்சில் தன்னில்நெய்யமர் திரியு மாகி  நெஞ்சத்துள் விளக்கு மாகிச்செய்யவர் கரிய கண்டர்  திருச்செம்பொன் பள்ளி யாரே.  

பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.  

பெரும்புலர் காலை மூழ்கிப்  பித்தற்குப் பத்த ராகிஅரும்பொடு மலர்கள் கொண்டாங்  கார்வத்தை யுள்ளே வைத்துவிரும்பிநல் விளக்குத் தூபம்  விதியினால் இடவல் லார்க்குக்கரும்பினிற் கட்டி போல்வார்  கடவூர்வீ ரட்ட னாரே.  

தானத்தைச் செய்து வாழ்வான்  சலத்துளே அழுந்து கின்றீர்வானத்தை வணங்க வேண்டில்  வம்மின்கள் வல்லீ ராகில்ஞானத்தை விளக்கை ஏற்றி  நாடியுள் விரவ வல்லார்ஊனத்தை ஒழிப்பர் போலும்  ஒற்றியூ ருடைய கோவே. 

மெய்யுளே விளக்கை ஏற்றி  வேண்டள வுயரத் தூண்டிஉய்வதோர் உபாயம் பற்றி  உகக்கின்றேன் உகவா வண்ணம்ஐவரை அகத்தே வைத்தீர்  அவர்களே வலியர் சாலச்செய்வதொன் றறிய மாட்டேன்  திருப்புக லூர னீரே.  

நீதியால் நினைப்பு ளானை  நினைப்பவர் மனத்து ளானைச்சாதியைச் சங்க வெண்ணீற்  றண்ணலை விண்ணில் வானோர்சோதியைத் துளக்க மில்லா  விளக்கினை அளக்க லாகாஆதியை நினைந்த நெஞ்சம்  அழகிதா நினைந்த வாறே.    

விளக்கினாற் பெற்ற இன்பம்  மெழுக்கினாற் பதிற்றி யாகுந்துளக்கில்நன் மலர்தொ டுத்தால்  தூயவிண் ணேற லாகும்விளக்கிட்டார் பேறு சொல்லின்  மெய்ஞ்ஞெறி ஞான மாகும்அளப்பில கீதஞ் சொன்னார்க்  கடிகள்தாம் அருளு மாறே.  

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற  தில்லைச்சிற் றம்பலவன்மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்  கண்டு மகிழ்ந்துநிற்கநெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த  நீல மணிமிடற்றான்கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்  கண்கொண்டு காண்பதென்னே.  

கொடிகொள் விதானங் கவரி  பறைசங்கங் கைவிளக்கோடிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்  எய்தியும் ஊனமில்லாஅடிகளும் ஆரூர் அகத்தின  ராயினும் அந்தவளப்பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு  நந்தி புறப்படிலே.   

தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனைவேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே. 

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினைமண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப்பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலிஅண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.  

வாம தேவன் வளநகர் வைகலுங்காம மொன்றில ராய்க்கை விளக்கொடுதாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.  

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானைஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை அருமறையோ டாறங்க மாயி னானைச்சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்கபெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.   

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்  சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்  படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டுவந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்  மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப்  புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.  

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்காண்டற் கரிய கடவுள் கண்டாய்கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் றானே.  

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்  காபாலி கண்டாய் திகழுஞ் சோதிமெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்  மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்  பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்   மறைக்காட் டுறையும் மணாளன் றானே.  

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்வெண்காடன் கண்டாய் வினைகள் போகமம்ம ரறுக்கு மருந்து கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் றானே. 

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானைவிளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதிஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னைஓதாதே வேத முணர்ந்தான் றன்னைஅப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னைஅமுதுண்டார் உலந்தாலு முலவா தானைஅப்புறுத்த நீரகத்தே அழலா னானைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சேபரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசாதேசத் தொளிவிளக்கே தேவ தேவேதிருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கிநித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்றுஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.  


பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னைவேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னைமெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்போதியலும் பொழிலாரூர் மூலட் டானம் புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்ஆதியனை அரநெறியி லப்பன் றன்னைஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.  

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் காணார் பொறியழலாய் நின்றான் றன்னைஉள்ளானை யொன்றல்லா உருவி னானைஉலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்தவெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்வெண்காடு மேவிய விகிர்த னாரே.   

 ஓசை ஒலியெலா மானாய் நீயேஉலகுக் கொருவனாய் நின்றாய் நீயேவாச மலரெலா மானாய் நீயேமலையான் மருகனாய் நின்றாய் நீயேபேசப் பெரிது மினியாய் நீயேபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயேதேச விளக்கெலா மானாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.  

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயேநோவாமே நோக்கருள வல்லாய் நீயேகாப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயேகாமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயேஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயேஅடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயேதீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

 கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயேகடல்வரைவான் ஆகாய மானாய் நீயேதனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயேமனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயேமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேசினத்திருந்த திருநீல கண்டன் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

வானுற்ற மாமலைக ளானாய் நீயேவடகயிலை மன்னி யிருந்தாய் நீயேஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயேஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயேஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயேஅடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயேதேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயேபெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயேஉண்ணா வருநஞ்ச முண்டாய் நீயேஊழி முதல்வனாய் நின்றாய் நீயேகண்ணா யுலகெலாங் காத்தாய் நீயேகழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்ணார் மழுவாட் படையாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயேஉற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயேகற்றிருந்த கலைஞான மானாய் நீயேகற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயேபெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயேபிரானா யடியென்மேல் வைத்தாய் நீயேசெற்றிருந்த திருநீல கண்டன் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

எல்லா வுலகமு மானாய் நீயேஏகம்ப மேவி யிருந்தாய் நீயேநல்லாரை நன்மை யறிவாய் நீயேஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயேபொல்லா வினைக ளறுப்பாய் நீயேபுகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேசெல்வாய செல்வந் தருவாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயேஅளவில் பெருமை யுடையாய் நீயேபூவினில் நாற்றமாய் நின்றாய் நீயேபோர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயேநாவில் நடுவுரையாய் நின்றாய் நீயேநண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயேதேவ ரறியாத தேவன் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயேஏகம்ப மேய இறைவன் நீயேவண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயேவாரா வுலகருள வல்லாய் நீயேதொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயேதூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயேவிண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயேகண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயேகாலங்கள் ஊழியாய் நின்றாய் நீயேதொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயேதூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.   

ஆரு மறியா இடத்தாய் நீயேஆகாயந் தேரூர வல்லாய் நீயேபேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத் திறுத்தாய் நீயேஊரும் புரமூன்று மட்டாய் நீயேஒண்டா மரையானும் மாலுங் கூடித்தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயேதிருவையா றகலாத செம்பொற் சோதீ.    

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றிமாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றிபொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றிபோகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றிமெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றிமிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றிகைசேர் அனலேந்தி யாடீ போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி.  

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றிபுண்ணியனே நண்ண லரியாய் போற்றிஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றிஎண்ணா யிரநூறு பேராய் போற்றிநாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றிநான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றிகாற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. 

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.  

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.  

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னிஇருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசிஅருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னைஅங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.  

பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளேமெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.  

தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனேபாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேயஆண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.  


நாதனை நாதமிகுத் தோசைய தானவனை ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரைமாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத் தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.  

சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தைபாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியாநீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.  

வேண்டும் வேண்டும் மெய்யடியா  ருள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தேதூண்டா விளக்கின் சுடரனையாய்  தொண்டனேற்கும் உண்டாங்கொல்வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க  அன்பே மேவுதலே.  

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்  பற்றுமா றடியனேற் கருளிப்பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து  பூங்கழல் காட்டிய பொருளேதேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ   செல்வமே சிவபெருமானேஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்  எங்கெழுந் தருளுவ தினியே.  

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவேபூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின்றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலேதூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே.   08.கோவை.244      

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.  

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்தசுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூயநற் சோதியுள் சோதீ !அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப்படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே.  

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலைமற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்தகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே.  

மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள் மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும்பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்தஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.  

தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும்கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண்தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு செபவடம் சாட்டியக் குடியார்இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.  

ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர்கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர்தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்பவருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடைமருதே.  

முத்து வயிரமணி  மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல்  தூண்டு விளக்கேய்ப்பஎத்திசையும் வானவர்கள்  ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே  ஆடரங்கம் ஆயிற்றே.

  அடியார் பரவும் அமரர் பிரானைமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்படியால் அருளும் பரம்பரன் எந்தைவிடியா விளக்கென்று மேவிநின் றேனே.  

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பில் கயிலை வழியில்வந் தேனே.  

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடரறி யாரே.  

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீயகடந்தோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே  

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்மூல விளக்கொளி முன்னே யுடையவர்கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்குமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே  

பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில்ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்காலைக்குச் சங்கு கதிரவன் தானே  

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியேபொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.  


 விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பில் கயிலை வழியில்வந் தேனே.  

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

  தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீயகடந்தோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே  

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்மூல விளக்கொளி முன்னே யுடையவர்கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்குமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே  

பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில்ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்காலைக்குச் சங்கு கதிரவன் தானே  

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியேபொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.  

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிடநின்றிடும் மேலை விளக்கொளி தானே.  

விளக்கொளி சௌமுத லெளவது ஈறாவிளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்விளக்கொளி யாகிய மின்கொடி யாளைவிளக்கொளி யாக விளங்கிடு நீயே.  

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.  

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்திஅருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.  

புண்ணியன் எந்தை புனிதன் இணையடிநண்ணி விளக்கென ஞானம் விளைந்ததுமண்ணவ ராவதும் வானவர் ஆவதும்அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.  

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்விடியாமை காக்கும் விளக்கது வாமே.  

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.  

    விளக்கினை யேற்றி வெளியை அறிமின்விளக்கினை முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.  

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.  

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்தான விளக்கொளி யாம்மூல சாதனத்துஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்குஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.   

மாய விளக்கது நின்று மறைந்திடும்தூய விளக்கது நின்று சுடர்விடும்காய விளக்கது நின்று கனன்றிடும்சேய விளக்கினைத் தேடுகின் றேனே.  

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றுநடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.  

மன்று நிறைந்தது மாபர மாயதுநின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்கன்று நினைந்தெழு தாயென வந்தபின்குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டிவிளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்குவிளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.  

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.  

 மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்றுதூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணிமாண்டான் ஒருவன்கை வந்தது தானே.  

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.  

சொல்லும் பொருளுமே  தூத்திரியும் நெய்யுமாநல்லிடிஞ்சில் என்னுடைய  நாவாகச் -சொல்லரியவெண்பா விளக்கா  வியன்கயிலை மேலிருந்தபெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.  

நல்லன விரைமலர்  நறும்புகை விளக்கவிசொல்லின பரிசிற்  சுருங்கலன் பூவும்பட்ட மாலையும் … 

நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கேநானுடைய குன்றமே  நான்மறையாய் - நானுடையகாடுடையாய் காலங்கள்  ஆனாய் கனலாடும்காடுடையாய் காலமா னாய்.  அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்துன்ப இருளைத் துரந்து முன்புறம்… 

கண்ணின் றொளிருங்  கருமணியின் உள்ளொளிபோல்உண்ணின் றொளிரும்  ஒளிவிளக்கென் - றெண்ணிப்புகலிப் பெருமானைப்  புண்ணியனைப் போற்றில்அகலுமே பாசவிருள் அன்று.  விளக்கும் ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூரே

வேத மறிக்கரத் தாரூர்  அரற்கு விளக்குநெய்யைத்தீது செறிஅமண் கையர்அட்  டாவிடத் தெண்புனலால்ஏத முறுக அருகரென்  றன்று விளக்கெரித்தான்நாதன் எழில்ஏமப் பேறூர்  அதிபன் நமிநந்தியே.  

கம்பக் கரிக்கும் சிலந்திக்கும்  நல்கிய கண்ணுதலோன்உம்பர்க்கு நாதற் கொளிவிளக்  கேற்றற் குடல்இலனாய்க்கும்பத் தயிலம்விற் றுஞ்செக்  குழன்றும்கொள் கூலியினால்நம்பற் கெரித்த கலிஒற்றி  மாநகர்ச் சக்கிரியே.  

நன்னக ராய இருக்குவே  ளூர்தனில் நல்குவராய்ப்பொன்னக ராயநற் றில்லை  புகுந்து புலீச்சரத்துமன்னவ ராய அரற்குநற்  புல்லால் விளக்கெரித்தான்கன்னவில் தோள்எந்தை தந்தை  பிரான்எம் கணம்புல்லனே.  

பந்தார் அணிவிரல் பங்கயக்  கொங்கைப் பவளச்செவ்வாய்க்கொந்தார் நறுங்குழல் கோமள  வல்லியைக் கூறருஞ்சீர்நந்தா விளக்கினைக் கண்டது  நானெப் பொழுதும்முன்னும்சந்தா ரகலத் தருகா  சனிதன் தடவரையே.  

ஞானச் சுடர்விளக்கை  நற்றவத்தோர் கற்பகத்தைமான மறையவற்றின்  வான்பொருளை…. 

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு  பெருங் கொடி நெருங்கத் தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும் நீள் இலைய கதலிகளும் நிறைந்த  பசும் பொற்ற சும்பும் ஒளி நெடு மணிவிளக்கும் உயர்  வாயில் தொறும் நிரைத்தார்.  

ஓவிய நான் முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் மேவிய தன் வருத்தமுற  விதித்ததொரு மணி விளக்கோ மூவுலகின் பயனாகி முன்  நின்றது என நினைந்து நாவலர் காவலர் நின்றார்  நடு நின்றார் படைமதனார்.  

செந்தழல் ஒளியில் பொங்கும்  தீப மா மரங்களாலும் மந்திகள் முழையில் வைத்த  மணி விளக்கு ஒளிகளாலும் ஐந்தும் ஆறடக்கி உள்ளார்  அரும் பெரும் சோதியாலும் எந்தையார் திருக்காளத்தி மலையினில்  இரவு ஒன்று இல்லை.  

தூண்டு தவ விளக்கு அனையார்  சுடர் ஒளியைத் தொழுது என்னைஆண்டு அருளும் நீராகில்  அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினைப் பர சமயக்  குழி நின்றும் எடுத்து ஆள வேண்டும் எனப் பல  முறையும் விண்ணப்பம் செய்தனரால்.  

காண்டலே கருத்தாய் நினைந்து  என்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி  முன் நின்று துதித்து உருகி ஈண்டு மணிக் கோயில் சூழ  வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள்  திருவாயில் புறத்து அணைந்தார்.  

மாட வீதி அலங்கரித்து மறையோர்  வாயின் மணி விளக்கு நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து  நிறை பொன் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர்  பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த  கோயில் வாயில் சென்று அணைந்தார்.  

முருகலர் சோலை மூதூர்  அதன் முதல் வணிகரோடும்இரு நிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்பொரு கடல் கலங்கள் போக்கும்  புகழினான் மனைவி தன்பால்பெருகொளி விளக்குப் போல் ஓர்  பெண்கொடி அரிதில் பெற்றான்.  

புகழ்ந்த கோமயத்து நீரால்  பூமியைப் பொலிய நீவித்திகழ்ந்த வான் சுதையும் போக்கிச்  சிறப்புடைத் தீபம் ஏற்றிநிகழ்ந்த அக் கதலி நீண்ட  குருத்தினை விரித்து நீரால்மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்  பெற மரபின் வைத்தார்  

எழுந்த பொழுது பகல் பொழுது  அங்கு இறங்கு மாலை எய்துதலும்செழுந்தண் பதியினிடை அப்பால் செல்லில்  செல்லும் பொழுது என்னஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு  நெய் வேண்டி உள் புகலும்அழிந்த நிலைமை அமணர் மனை  ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்.  

கையில் விளங்கும் கனல் உடையார்  தமக்கு விளக்கு மிகை காணும்நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்  ஆகில் நீரை முகந்து எரித்தல்செய்யும் என்று திருத் தொண்டர்க்கு  உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப் பொய்யும் மெய்யும் ஆம் என்னும்  பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.  

 அருகர் மதியாது உரைத்த உரை  ஆற்றார் ஆகி அப்பொழுதேபெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து  போந்து பிறை அணிந்தமுருகு விரியும் மலர்க் கொன்றை  முடியார் கோயில் முன் எய்திஉருகும் அன்பர் பணிந்து விழ  ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.  

 வந்த கவலை மாற்றும் இனி  மாறா விளக்குப் பணி மாறஇந்த மருங்கில் குளத்து நீர்  முகந்து கொடுவந்து ஏற்றும் எனஅந்தி மதியம் அணிந்த பிரான்  அருளால் எழுந்த மொழி கேளாச்சிந்தை மகிழ்ந்து நமிநந்தி  அடிகள் செய்வது அறிந்திலரால்.  

சென்னி மிசை நீர் தரித்த பிரான்  அருளே சிந்தை செய்து எழுவார்நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர்  நாமம் நவின்று ஏத்திஅந்நீர் முகந்து கொண்டு ஏறி  அப்பர் கோயில் அடைந்து அகலுள்முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும்  திரி மேல் நீர் வார்த்தார்.  

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்  சுடர் விட்டு எழுந்தது அது நோக்கிஆதி முதல்வர் அரநெறியார் கோயில்  அடைய விளக்கு ஏற்றிஏதம் நினைந்த அருகந்தர்  எதிரே முதிரும் களிப்பினுடன்நாதர் அருளால் திரு விளக்கு  நீரால் எரித்தார் நாடு அறிய.  

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும்  அளவும் நின்று எரியக்குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள  வேண்டும் நீர் வார்த்துமறையின் பொருளை அருச்சிக்கும்  மனையின் நியதி வழுவாமல்உறையும் பதியின் அவ்விரவே  அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார்.  

வந்து வணங்கி அரநெறியார் மகிழும்  கோயில் வலம் கொண்டுசிந்தை மகிழப் பணிந்தெழுந்து  புறம்பும் உள்ளும் திருப்பணிகள்முந்த முயன்று பகல் எல்லாம்  முறையே செய்து மறையவனார்அந்தி அமையத்து அரிய விளக்கு  எங்கும் ஏற்றி அடி பணிவார்.  

 மா மறை விழுக்குல  மடந்தையர்கள் தம்மில்தாம் உறு மகிழ்ச்சியொடு  சாயல் மயில் என்னத்தூ மணி விளக்கொடு  சுடர்க் குழைகள் மின்னக்காமர் திரு மாளிகை  கவின் பொலிவு செய்வார்.  

மங்கல தூர் இயந்து வைப்பார் மறைச்  சாமம் பாடுவார் மருங்கு வேதிப்பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண  கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்அங்கு அவர்கள் மனத்து எழுந்த  அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்தங்கு திரு மலி வீதிச் சண்பை  நகர் வலம் செய்து சாரும் காலை.  

உடைய பிள்ளையார் வரும்  எல்லை உள்ள அப்பதியோர் புடை இரண்டினும் கொடியொடு  பூந்துகில் விதானம் நடை செய் காவணம் தோரணம்  பூகம் நல் கதலி மிடையும் மாலைகள் நிறை  குடம் விளக்கொடு நிரைத்தார்.  

  மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்  மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் நிறை குடமும் மணி விளக்கும் முதலாய்  உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று  ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்துப் புக்கார்  முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்.  

மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம்  நாட்டும் மணி நீர் வாசத் தூ நறும் பூரண கும்பம் சோதி  மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் ஏனை அணி பிறவும் எலாம் எழில்  பெருக இயற்றும் என ஏவித் தானும் வானவர் நாயகர் மகனார் வருமுன்பு  தொழுது அணைந்தான் மழவர் கோமான்.  

மாலை சூழ் புறம் கடைகளின்  மணி நிரை விளக்கின் கோல நீள் சுடர்  ஒளியுடன் கோத்திடை தூக்கும் நீல மா மணி நிழல்  பொர நிறம்புகர் படுக்கும் பால வாயின பவள  வேதிகை மலர்ப் பந்தர்.  

   மலர் மாரி பொழிந்து இழிய  மங்கல வாழ்த்து இனிது இசைப்ப அலர் வாசப் புனல் குடங்கள்  அணி விளக்குத் தூபமுடன் நிலை நீடு தோரணங்கள் நிரைத்து  அடியார் எதிர் கொள்ளக் கலை மாலை மதிச் சடையார்  இடம் பலவும் கை தொழுவார்.  

பானல் வயல் தமிழ் நாடு  பழி நாடும்படி பரந்த மானம் இலா அமண் என்னும்  வல் இருள் போய் மாய்வதனுக்கு ஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம்  எலாம் கொண்டதொரு ஞான மணி விளக்கு எழுந்து  வருவது என நலம் படைப்ப.  

நறவம் ஆர் பொழில் புகலியில்  நண்ணிய திருஞான சம்பந்தர் விறலியாருடன் நீலகண்டப் பெரும்  பாணர்க்கு மிக நல்கி உறையுளாம் அவர் மாளிகை செல  விடுத்து உள் அணைதரும் போதில் அறலின் நேர் குழலார் மணி விளக்கு  எடுத்து எதிர்கொள அணைவுற்றார்.  

தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்த  திருவோத்தூரில் திருத் தொண்டர் தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம்  அங்கு அணையக் களி சிறந்து மேவும் கதலி தோரணங்கள் விளக்கு  நிரைத்து நிறை குடமும் பூவும் பொரியும் சுண்ணமும் முன்  கொண்டு போற்றி எதிர் கொண்டார்.  

கொடி நிரைத்த வீதியில்  கோலவே திகைப்புறம் கடி கொள் மாலை மொய்த்த  பந்தர் கந்த நீர்த் தசும்புடன் மடிவில் பொன் விளக்கு எடுத்து  மாதர் மைந்தர் மல்குவார் படி விளக்கும் அன்பரும்  பரந்த பண்பில் ஈண்டுவார்.  

ஒப்பரிய பேர் உவகை  ஓங்கி எழும் உள்ளத்தால் அப்பு நிறை குடம் விளக்கு  மறுகு எல்லாம் அணி பெருக்கிச் செப்பரிய ஆர்வம் மிகு  பெரும் சுற்றத்தொடும் சென்றே எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது  அங்கு எதிர் கொண்டார்.  

செல்வம் மலி திருப்புகலி செழும்  திரு வீதிகள் எல்லாம் மல்கு நிறை குடம் விளக்கு  மகர தோரணம் நிரைத்தே எல்லையிலா ஒளி முத்து  மாலைகள் எங்கணும் நாற்றி அல்கு பெரும் திரு ஓங்க  அணி சிறக்க அலங்கரித்தார்.  

மன்றல் வினைத் திரு முளை நாள்  தொடங்கி வரும் நாள் எல்லாம் முன்றில் தொறும் வீதி தொறும்  முக நெடுவாயிகள் தோறும் நின்று ஒளிரும் மணி  விளக்கு நிறைவாசப் பொற்குடங்கள் துன்று சுடர்த் தாமங்கள்  தூபங்கள் துதைவித்தார்.  

செம் பொனின் பரிகலத்தினில்  செந்நெல் வெண்பரப்பின் வம்பு அணிந்த நீள் மாலை  சூழ் மருங்குற அமைத்த அம் பொன் வாச நீர்ப் பொற்  குடம் அரசு இலை தருப்பை பம்பு நீள்சுடர் மணி விளக்கு  ஒளிர் தரும் பரப்பில்.  

மறைக்குல மனையின் வாழ்க்கை  மங்கல மகளிர் எல்லாம் நிரைத்த நீர்ப் பொற் குடங்கள்  நிரை மணி விளக்குத் தூபம் நறைக் குல மலர் சூழ் மாலை  நறுஞ் சுடர் முளைப் பொற் பாண்டில் உறைப் பொலி கலவை ஏந்தி  உடன் எதிர் ஏற்று நின்றார்.  

ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு  அருளிக் கருணை யினால்நீண்ட கங்குல் யாமத்து நீங்கி  வானில் நிறை மதியம்தீண்டு கன்னி மாடத்துச் சென்று  திகழ் சங்கிலி யாராம்தூண்டு சோதி விளக்கு அனையார்  தம்பால் கனவில் தோன்றினார்.  

பின்னும் பின்னல் முடியார் முன்  பெருக நாணித் தொழுது உரைப்பார்மன்னும் திருவா ரூரின் கண்  அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவதுஎன்னும் தன்மை அரிந்து அருளும்  எம் பிராட்டி திருமுலை தோய்மின்னும் புரிநூல் அணி மார்பீர்  என்றார் குன்றா விளக்கு அனையார்.  

இவ்வகை இவர் வந்து எய்த  எய்திய விருப் பினோடும்மை வளர் நெடுங் கணாரும்  மாளிகை அடைய மன்னும்செய்வினை அலங்காரத்துச் சிறப்பு  அணி பலவும் செய்துநெய்வளர் விளக்குத் தூபம் நிறை  குடம் நிரைத்துப் பின்னும்.  

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்  தம் கழல் விளக்கிஆய புனிதப் புனல் தங்கள்  தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்மேய இல்லம் எம்மருங்கும் வீசி  விரை மென்மலர்ச் சாந்தம்ஏயும் தூப தீபங்கள் முதல்  பூசனை செய்து இறைஞ்சுவார்.  

அங்கண் அருள் பெற்று எழுவாரைக்  கொண்டு புறம் போந்து ஆரூரர்நங்கை பரவையார் திருமாளிகையில்  நண்ண நன்னுதலார்பொங்கு விளக்கு நிறை குடமும்  பூ மாலைகளும் புகை அகிலும்எங்கும் மடவார் எடுத்து ஏத்த  அணைந்து தாமும் எதிர் கொண்டார்.  

தாண்டு புரவிச் சேரர் குலப்  பெருமாள் தமக்குத் திரு அமுதுதூண்டும் சோதி விளக்கு அனையார்  அமைக்கத் துணைவர் சொல்லுதலும்வேண்டும் பரிசு வெவ்வேறு  விதத்துக் கறியும் போனகமும்ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு  எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.  

 பரவியே பரவையார் பரிவு  உடனே பணிந்து ஏத்திவிரவிய போனகங்கறிகள் விதம்  பலவாகச் சமைத்துப்பரிகலமும் பாவாடை பகல்  விளக்கும் உடன் அமைத்துத்திரு அமுது செய்வித்தார்  திருந்திய தேன் மொழியினார்.  

நல்ல நந்தவனப் பணி செய்பவர்  நறுந்துணர் மலர் கொய்வோர்பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்  திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்  திரு மெழுக்கு அமைப்போர்கள் எல்லையில் விளக்கு எரிப்பவர்  திரு முறை எழுதுவோர் வாசிப்போர்.  

அளவில் பெரும் புகழ் நகரம்  அதனில் அணிமணி விளக்கும்இள வெயிலின் சுடர்படலை  இரவு ஒழிய எறிப்பனவாய்க்கிளர் ஒளி சேர் நெடு வானப்  பேர்யாற்றுக் கொடு கெழுவும்வளர் ஒளி மாளிகை நிரைகள்  மருங்கு உடைய மறுகு எல்லாம். 

எல்லையில் பல் கோடி  தனத்து இறைவராய் இப்படித்தாம்செல்வ நெறிப் பயன்  அறிந்து திருஒற்றியூர் அமர்ந்தகொல்லை மழவிடையார் தம்  கோயிலின் உள்ளும் புறம்பும்அல்லும் நெடும் பகலும் இடும்  திருவிளக்கின் அணி விளைத்தார்.  

எண்ணில் திரு விளக்கு நெடு  நாள் எல்லாம் எரித்து வரப்புண்ணிய மெய்த் தொண்டர்  செயல் புலப்படுப்பார் அருளாலேஉண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும்  வினைச் செயல் ஓவிமண்ணில் அவர் இருவினை  போல் மாண்டது மாட்சிமைத்தாக.  

திருமலி செல்வத்துழனி தேய்ந்து  அழிந்த பின்னையுந்தம்பெருமை நிலைத் திருப்  பணியில் பேராத பேராளர்வருமரபில் உள்ளோர் பால்  எண்ணெய் மாறிக் கொணர்ந்துதரும் இயல்பில் கூலியினால்  தமது திருப்பணி செய்வார்.  

வளம் உடையார் பால் எண்ணெய்  கொடுபோய் மாறிக் கூலிகொள முயலும் செய்கையும் மற்று  அவர் கொடாமையின் மாறத்தளருமனம் உடையவர் தாம்  சக்கர எந்திரம் புரியும்களனில் வரும் பணி  செய்து பெறுங்கூலி காதலித்தார். 

செக்கு நிறை எள் ஆட்டிப்  பதம் அறிந்து தில தயிலம்பக்கம் எழ மிக உழந்தும்  பாண்டில் வரும் எருது உய்த்தும்தக்க தொழில் பெறும் கூலி  தாம் கொண்டு தாழாமைமிக்க திரு விளக்கு  இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.  

மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக்  கொண்டு வள நகரில்தனம் அளிப்பார் தமை எங்கும்  கிடையாமல் தளர்வு எய்திச் சின விடையார் திருக் கோயில்  திரு விளக்குப் பணிமுட்டக்கன வினும் முன்பு  அறியாதார் கையறவால் எய்தினார்.

பணி கொள்ளும் படம்  பக்க நாயகர்தம் கோயிலினுள்அணி கொள்ளும் திருவிளக்குப்  பணிமாறும் அமையத்தில்மணி வண்ணச் சுடர் விளக்கு  மாளில் யான் மாள்வன் எனத்துணிவுள்ளங் கொள நினைந்து அவ்  வினை முடிக்கத் தொடங்குவார்.  

திரு விளக்குத் திரி இட்டு அங்கு  அகல் பரப்பிச் செயல் நிரம்பஒருவிய எண்ணெய்க்கு ஈடா  உடல் உதிரம் கொடுநிறைக்கக்கருவியினால் மிடறு அரிய  அக்கையைக் கண் நுதலார்பெருகு திருக் கருணையுடன்  நேர்வந்து பிடித்தருளி.  

தேவர் பிரான் திருவிளக்குச் செயல்  முட்ட மிடறு அரிந்துமேவரிய வினை முடித்தார் கழல்  வணங்கி வியன் உலகில்யாவர் எனாது அரன் அடியார்  தமை இகழ்ந்து பேசினரைநாவரியும் சத்தியார் திருத்தொண்டின்  நலம் உரைப்பாம்.  12.051.17 

தாவாத பெருஞ் செல்வம் தலை  நின்ற பயன் இது என்றுஓவாத ஒளிவிளக்குச் சிவன்  கோயிலுள் எரித்துநாவாரப் பரவுவார் நல்குரவு  வந்து எய்தத்தேவதி தேவர்பிரான் திருத்தில்லை  சென்று அடைந்தார்.  

  தில்லை நகர் மணி  மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்அல்கிய அன்புடன் இறைஞ்சி  அமர்கின்றார் புரம் எரித்தவில்லியார் திருப் புலீச் சரத்தின்  கண் விளக்கு எரிக்கஇல்லிடை உள்ளன மாறி  எரித்துவரும் அந்நாளில்.  

ஆய செயல் மாண்டதற்பின் அயல்  அவர் பால் இரப்பஞ்சிகாய முயற்சியில் அரிந்த கணம்  புல்லுக் கொடு வந்துமேய விலைக்குக் கொடுத்து  விலைப் பொருளால் நெய்மாறித்தூயதிரு விளக்கு எரித்தார்  துளக்கறு மெய்த் தொண்டனார்.  

இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து  வர அங்கு ஒரு நாள்மெய் வருந்தி அரிந்து  எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்எவ்விடத்தும் விலை போகாது  ஒழியவும் இப்பணி ஒழியார்அவ்வரிபுல் லினைமாட்டி அணி  விளக்காயிட எரிப்பார்.  

முன்பு திருவிளக்கு எரிக்கும்  முறையாமம் குறையாமல்மென் புல்லும் விளக்கு  எரிக்கப் போதாமை மெய்யானஅன்பு புரிவார் அடுத்த  விளக்குத் தம் திருமுடியைஎன்புருக மடுத்து எரித்தார்  இருவினையின் தொடக்கு எரித்தார்.  

தங்கள் பிரான் திரு உள்ளம்  செய்து தலைத் திருவிளக்குப்பொங்கிய அன்புடன் எரித்த  பொருவில் திருத்தொண்டருக்குமங்கலமாம் பெரும் கருணை  வைத்து அருளச் சிவலோகத்துஎங்கள் பிரான் கணம் புல்லர்  இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்.  

மூரியார் கலி உலகின்  முடி இட்ட திருவிளக்குப்பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார்  தம் கழல் பேணிவேரியார் மலர்ச் சோலை  விளங்கு திருக்கடவூரில்காரியார் தாம் செய்த  திருத்தொண்டு கட்டுரைப்பாம். 

மறவாமையான் அமைத்த  மனக்கோயிலுள் இருத்திஉறவாதிதனை உணரும் ஒளி  விளக்குச் சுடர் ஏற்றிஇறவாத ஆனந்தம் எனும்  திருமஞ்சனம் ஆட்டிஅறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து  அர்ச்சனை செய்வார். 



 பாரதி கவிதை

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

ஆழ்வார்கள் மொழியில்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.

விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்

          காலதீபிகம் அஸ்ட்ரோ சர்வீஸ்


           ஓம் சற்குரு அகத்தீசாய நமக

அடியேன்

இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விளக்கு ஏற்றும் தத்துவம்

       ஓம் வாலை பரமேஸ்வரியே போற்றி விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்க...