🔶 சுவாச காச நிவாரண சூரணம் – தயாரிப்பு முறை சித்தர்கள் முறை நாட்டு வைத்தியம்
தேவையான பொருட்கள் (சம எடை):
-
தாளிசபத்திரி
-
சீரகம்
-
சுக்கு
-
மிளகு
-
சித்திரத்தை
-
சிறுநாகப்பூ
-
கிராம்பு (பூ நீக்கி)
-
லவங்கப்பட்டை
-
ஓமம்
-
கருஞ்சீரகம்
-
தான்றிக்காய் (கொட்டை நீக்கி)
-
பெருநாகப்பூ
-
கடுக்காய் (கொட்டை நீக்கி)
-
ஏலக்காய்
-
ஜாதிக்காய்
சுத்திகரிப்பு & வறுத்தல்:
-
சுக்கு, சித்திரத்தை மேல்தோல் சீவி சுத்தம் செய்ய வேண்டும்.
-
கிராம்பு பூவை நீக்க வேண்டும்.
-
தான்றிக்காய், கடுக்காய் கொட்டை நீக்க வேண்டும்.
-
மற்ற பொருட்களை மிதமான தீயில் இளவறுப்பாக (slight roast) வறுக்க வேண்டும்.
தயாரிப்பு:
-
எல்லா பொருட்களையும் சேர்த்து மிக நுண்ணிய பொடியாக அரைத்து சூரணம் செய்ய வேண்டும்.
-
கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
🔶 உபயோக முறை:
-
ஒரு வேளை மருந்து – தேனில் கலந்து கொடுக்கலாம்.
-
அதிக கபம் இருந்தால்: ஒரு துளி பச்சை கற்பூரம் + பனங்கருப்பட்டி சேர்த்துக் கொடுக்கலாம்.
-
கஷாயம் வேண்டுமெனில்: வெட்டிவேரை கஷாயம் செய்து அதில் பனங்கருப்பட்டி சேர்த்து கொடுக்கலாம்.
-
சூடு அதிகமில்லை, கடும் இருமல் அடங்கும்.
-
சுடுசாதத்தில் பிசைந்து சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம்.
🔶 பயன்:
-
வரட்டு இருமல்
-
கபம் அதிகம்
-
சளி தொற்று
-
சுவாசக் குழாய் தொந்தரவு
🔶 கவனிக்க வேண்டியவை:
-
எல்லா பொருட்களும் சம எடை இருக்க வேண்டும்.
-
மருந்து தயாரிக்கும் போது முருகனை வேண்டி தவமாக செய்ய வேண்டும்.
-
மருந்து செய்யும் போது கூட்டம் வைக்கக் கூடாது.
-
மதிப்பு தராதவர்களிடம் மருந்து கொடுக்கக் கூடாது.
-
பிணியாளரின் அறிகுறிகளை கவனித்து படிப்படியாக மருந்து கொடுக்க வேண்டும்.
-
கருஞ்சீரகம் இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
🔶 கூடுதல் வாழ்க்கை முறைகள்:
-
குழந்தைகளுக்கு கபம் அதிகமாக வரும் போது மெத்தை, தலையணைகளை அதிக நாள் பயன்படுத்தக்கூடாது.
-
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவை சூடு செய்து கொடுக்கக் கூடாது.
-
பனிக்காலத்தில் குழந்தைகளை தூரப் பயணம் செய்ய விடக் கூடாது.
-
வெள்ளை பருத்தித்துணியில் வடிகட்டிய கொதித்த தண்ணீரை அடிக்கடி குடிக்க கொடுக்க வேண்டும்.
-
பூண்டு, மிளகு ரசம் அடிக்கடி கொடுக்கலாம்.
-
பலூன் ஊதச் செய்யலாம் – நுரையீரல் விரிவடையும்.
-
சிறு நடை, சிறு ஓட்டம், பந்தாட்டம் (வாலிபால், பூப்பந்து) – நுரையீரல் சுவாசம் சிறப்பாகும்.
🔶 பொறுப்புத்துறப்பு:
-
இது ஒரு பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவக் குறிப்பாகும்.
-
தேர்ந்த வைத்தியர் மேற்பார்வையில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
-
பகிர்வு நோக்கம்: சித்தர் தொல்குடி மக்களின் பாரம்பரிய அறிவு பரவ வேண்டும் என்பதற்காக.
கந்தாசரணம் – சுபம்
அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக