.
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
1.
ப்ராத: ஸ்மராமி லலிதாவதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம் ।
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் ॥
🔸 விளக்கம்:
காலை வேளையில், தாமரைப்பூ போல் அழகான லலிதாம்பிகையின் முகத்தை நான் தியானிக்கிறேன்.
அவளின் உதடுகள் பிம்பிப்பழம் போன்ற சிவப்பாகவும், பெரிய முத்து போன்ற மூக்குத்தி மிளிரவும், நீண்ட கண்கள் மாணிக்கக் குண்டலங்களால் ஒளிரவும் செய்கின்றன. அவள் முகம் புன்முறுவலுடன், நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் காட்சி தருகிறது.
2.
ப்ராதர் பஜாமி லலிதாபுஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம் ।
மாணிக்யஹேம வல்யாங்கத சோபமாநாம்
புண்ட்ரேஷுசாபகுஸுமேஷுதனுஃ ப்ரணீதாம் ॥
🔸 விளக்கம்:
காலை நேரத்தில், லலிதாம்பிகையின் கைகளைக் கண்டு வணங்குகிறேன்.
அவளின் விரல்கள் துளிர் போன்ற மென்மையானவை, சிவப்பு மோதிரம் மிளிர்கிறது. மாணிக்கம் பதித்த தங்க வளையல்கள், தோள்வளைகள் அவளை அலங்கரிக்கின்றன. அந்த கைகளில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் உள்ளன.
3.
ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தம்
பக்தேஷ்டதாந நிரதம் பவசிந்துபோதம் ।
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குசத்வஜஸுதர்சன லாஞ்சநாட்யம் ॥
🔸 விளக்கம்:
காலை வேளையில், லலிதாம்பிகையின் திருவடிகளை வணங்குகிறேன்.
அவள் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள். பிறவி சமுத்திரத்தை கடக்கத் தந்தைபோல் துணைபுரிகிறாள். பிரம்மா முதலிய தேவர்கள் அவளை வணங்குகிறார்கள். தாமரை, அங்குசம், கொடி, சுதர்சன சக்கரம் போன்ற சின்னங்கள் அவளது திருவடிகளை அலங்கரிக்கின்றன.
4.
ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணாநவத்யாம் ।
விஸ்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேஸ்வரீம் நிகமவாங்க்மநஸாநிதூராம் ॥
🔸 விளக்கம்:
காலை வேளையில், பரசிவ சக்தியான லலிதாம்பிகையை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.
அவள் உபநிஷத்துகள் கூறும் மகிமையுடையவள். குறையற்ற கருணை கொண்டவள். உலகத்தை படைப்பவளும், காப்பவளும், அழிப்பவளும் ஆவாள். வேதங்களுக்கும், வார்த்தைகளுக்கும், மனதிற்கும் எட்டாத தெய்வீக சக்தி அவளே.
5.
ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம
காமேஸ்வரீதி கமலேதி மஹேஸ்வரீதி ।
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேஸ்வரீதி ॥
🔸 விளக்கம்:
காலை வேளையில், லலிதாம்பிகையின் புண்ணியமான நாமங்களை உச்சரிக்கிறேன்.
அவள் காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீசாம்பவி, உலகத்தின் தாயான பரமேஸ்வரி, வாக்தேவி (சரஸ்வதி), த்ரிபுரேஸ்வரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
6.
ய: ஸ்லோகபஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதிப்ரபாதே ।
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நா
வித்யாம் ஸ்ரீயம் விமலஸௌக்யமநந்தகீர்திம் ॥
🔸 விளக்கம்:
இந்த ஐந்து ஸ்லோகங்களையும் காலையில் படிக்கும் பக்தருக்கு, லலிதாம்பிகை மகிழ்ச்சியுடன் அருள் புரிவாள்.
அவர்களுக்கு கல்வி, செல்வம், குறைவற்ற சுகம், அழியா புகழ் ஆகிய அனைத்தையும் அளிப்பாள்
காப்பு |
ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயகவாரணமே |
1 வைரம் |
கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் பயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
2 நீலம் |
மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
3 முத்து |
முத்தே வரும்முத் தொழிலாற் றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறியநான் தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேரு ததிக் கிணைவாழ்வடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
4 பவளம் |
அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம்பவளம் பொழி பாரோ தேம் பொழிலாமிது செய்தவள் யாரோ எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள் மந்திர வேத மயப்பொருளானாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
5 மாணிக்கம் |
காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாப் கலையானவளே பூணக் கிடையாப் பொலிவானவளே புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும்நின் துதியும் நவிலாதவரை நாடா தவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
6 மரகதம் |
மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதிலயமே இசையே சரணம் அரஹர சிவஎன்றடியவர் குழும அவரருள் பெறஅருளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
7 கோமேதகம் |
பூமேவியநான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர்கோ கிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
8 பதுமராகம் |
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விலாஸ வியாபினி அம்ப சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே |
9 வைடூரியம் |
வலையொத்தவினை கலையொத் தமனம் மருளப் பறையாறொலியொத் தவிதால் நிலையற் றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற் றசைவாற்றனுபூதி பெரும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத் துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே |
10 பலஸ்துதி |
எவர்எத் தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வாரவரே |
லலிதா திரிபுர சுந்தரி வாழ்வில் நலம் அருள் புறிபவள். தாயை பொருனுணர்ந்து வழிபட்டு நலம் அடைவோம்
அடியேன்
இராமய்யா. தாமரைச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக