சனி, 1 பிப்ரவரி, 2025
வாலைதாய் அம்மானை
: தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலார்காண் அம்மானை
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை?
தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை!
.மூவருக்கும் முன்பிறந்த மூத்தவளாம் பராசக்தி
முத்தி தரும் தாயவட்கு பேருமென்ன அம்மானை? பேரு என்ன அம்மானை?
2.முந்தி ஜெகம் பிறந்த மனோன்மணி தாயவளின் மகளாய் வந்தவள் பேர் வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை
3.மாதா குமரியிவள் மகிழ்ந்தமர்ந்த தாய் வீட்டில் மாதவங்கள் சித்திக்கும் வாலை அருள் அம்மானை
வாலையருள் அம்மானை
.சத்திய பேருருவாம் சித்தர்களின் தாய் வாலை
சித்தி என்ன அம்மானை
சித்தி என்ன அம்மானை
2.சிரித்து புரமெரித்தாள் சின்ன கன்னி ஆக வந்து
சென்ம வினையறுப்பா வாலைகன்னி அம்மானை வாலைகன்னி அம்மானை
3.சிங்க வாகினியாய் மும்மலத்தை வேறருத்து சின்மய ரூபம் காட்டும் சித்தகத்தி அம்மானை
சித்தகத்தி அம்மானை
: 1.மூன்று சத்தி ஓருவாய் முளைத்தெழுந்த வாலைக்கு நாதமென்ன அம்மானை நாதமென்ன அம்மானை
2.ஓமெனவும் ஆமெனவும் ஊமை எழுத்துடனே ஆமென்று அழைப்பதுவே அன்னை நாதம்அம்மானை
அன்னை நாதம் அம்மானை
3.முச்சத்தி ஆனவட்கு முப்பீஜம் பிரணவமும்
மகாமந்திரமே அம்மானை
மகா மந்திரமே அம்மானை
1.கன்னியாக நின்றவளை குவலயத்தில் சித்தர் எல்லாம் தாயாக ஏற்றதொரு தன்மை என்ன அம்மானை
தன்மை என்ன அம்மானை
2.கருபிறந்த கர்மத்தை கட்டறுத்து நின்றவளை கண்டவராம் சித்தர்களின் கன்னி வாலை அம்மானை
கன்னி வாலை அம்மானை
3.காலமெல்லாம் அறிந்தவளை காலைனையும் உதைத்தவளை சித்தர்கள் கழல்பணிந்தார் அம்மானை
கழல் பணிந்தார் அம்மானை
1.ஏடேந்தும் பாரதியாள் தத்துவமாய் நின்றதனால் வாலைக்கு ஆதி பீஜம் ஐம் என்பார் அம்மானை
ஐம் என்பார் அம்மானை
2.சிரித்து புரமெரித்த வாலை திரிபுரசுந்தரிக்கு
கிலியும் ஈராம் பீஜமென்பார் அம்மானை
ஈராம் பீஜமென்பார் அம்மானை
3.அல்லி மலர் தானமர்ந்த வாலை மனோன்மணிக்கு சவ்வுமே திரி பீஜம் அம்மானை
சவ்வுமே திருஅம்மானை
: 1.ஐயம் திரிபு நீக்கும் ஆயி மகமாயி வாலை அமர்ந்த இடம் பேருமென்ன அம்மானை
பேருமென்ன அம்மானை
2.ஆதியந்த சோதிவீடு அருந்தவத்தார் கூடும் வீடு எங்கு இருக்கும் அம்மானை
எங்கு இருக்கும் அம்மானை
3.கோட்டை கட்டி நின்றவீடு கோடி சித்தர் கூடும் வீடு
உச்சிலே ஜோதி மேரு ஒளி வீசும் தாயீ வீடு அம்மானை
தாயி வீடு அம்மானை
1.மாற்றி பிறக்க செய்யும் மாதா வாலை கன்னிகையை சார்ந்தவர்க்கு என்னபயன் அம்மானை என்னபயன் அம்மானை
2.மாளா பிறவி தொடர்ந்துழன்று மறலிவாய் வீழாமல் மானுடர் கரை சேர வழி செய்வாள் அம்மானை
வழி செய்வாள் அம்மானை
3.ஊத்தை சடலமதில் உள்ளார்ந்த ஜோதி வாலை உள்ளமர்ந்து ஞானம் சொல்லி உயர்த்துவாள் அம்மானை
உயர்த்துவாள் அம்மானை
1.தேமல் உடலழகி தேன்மொழிச்சி வாலைகன்னிய தொடர என்ன பயன் அம்மானை
தொடர என்ன பயன் அம்மானை
2.முந்தை பிறவியதில் விட்டகுறை தொட்டகுறை வாசனை காரணமே அம்மானை வாசனை
காரணமே அம்மானை
3.விதியில் இல்லாவிடில் தாயை மதி காண ஒன்னாது விதி சதி செய்யாது காத்தருள்வாள் அம்மானை
காத்தருள்வாள் அம்மானை
: சிறுபிள்ளை ஆனவளை சித்தர்கள் தொழுது நிற்கும் சித்தம் என்ன அம்மானை சித்தம் என்ன அம்மானை
சிதறும் மனம் ஒருமித்து சீவகலை பெற்றாளும் சதாகதியாய் சுழுமுனை தாயை சார்ந்த நெறி அம்மானை
சார்ந்த நெறி அம்மானை
குளத்தில் நிறைந்த பாசி நீரை மறைக்கும் கும்பத்தை உள்ளமிழ்த்த குளபாசி விலகும் போல கும்பக வாலை தாய் அம்மானை
வாலை தாய் அம்மானை
1.ஜோதி மணிவிளக்காம் வாலை சிரசதிலே சூரிய சந்திரரை சூடியதேன் அம்மானை
சூடியதேன் அம்மானை
2. வாசி வடிவமவள் வாமி சுழுமுனையே இடக்கலை பிங்களையாம் ரவி மதிசுடர் அம்மானை. ரவிமதி சுடர் அம்மானை
3. முச்சுடர் ஆனவளாம் முப்புடம் செய்பளாம் ஞான த்தை முழுமையாக்கும் வாலைதாய் அம்மானை
முழுமையாக்கும் வாலை தாய் அம்மானை
: வாலை தாயவளை வரித்துமே பூசிக்க வருபவர் யார் அம்மானை
வருபவர் யார் அம்மானை
தாமரை தாது தேனை உண்ண தேடி வரும் தேன் குருவி போல் தானுணர்வாய் கூடுவார்கள் அம்மானை
கூடுவார்கள் அம்மானை
தேனிருக்கும் இடத்தையே தேனீக்கள் தானறியும் முன்னை வாசனையால் முயன்று வருவார் அம்மானை
முயன்று வருவார் அம்மானை
வல்லமை காரியான வாலை கன்னி தாயவளை வழிபடும் முறைகள் என்ன அம்மானை
முறைகள் என்ன அம்மானை
சிந்து கவிகள் பாடி சிறுகையால் கொம்மி தட்டி பாடி பரவிடவே வாலைதாய் மகிழ்வாள் அம்மானை
வாலை தாய்மகிழ்வாள் அம்மானை
மனதை ஒப்படைக்க மமகாரம் அண்டாது தன்னை அறிவதர்க்கு தாய் தயை செய்வாள் அம்மான
தயை செய்வாள் அம்மானை
: சிறுபிள்ளையாக வந்து சிரித்து விளையாடும் சின்மயத்தை காண்பரிதோ அம்மானை
காண்பரிதோ அம்மானை
சிந்தனையால் நினையாத சடத்தவர்க்கு தூரமவள் சிந்தனை செய்தோர்க்கு சிறுகன்னி மடியமர்வாள் அம்மானை
மடியமர்வாள் அம்மானை
ஒற்றை சடை போட்டு ஒய்யார நடைநடந்து தாம்பூல வாயழகி தான் வருவாள் அம்மானை
தான் வருவாள் அம்மானை
:
கருத்த நாகமதை ஆபணமாய் பூண்டவளை காண்பரிதோ அம்மானை
காண்பரிதோ அம்மானை
அன்னைஎன்று அழைத்தவுடன் ஆனந்தமாய் ஓடிவரும் அருள்வடிவம் தாய்வாலை அம்மானை
தாய்வாலை அம்மானை
பணிந்தரை நிமிரவைக்கும் பராபரை வாலை தாய் பக்திக்கு இணங்கிடுவாள் அம்மானை
இணங்கிடுவாள் அம்மானை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமூலர் சூனிய சம்பாஷணை
பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக